Monday, September 14, 2009

சின்னஞ்சிறு உலகம் - "மேக்ரோ"

5 comments:
 
வணக்கம் மக்கா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நம்மோட புகைப்பட பொட்டியில பலவற்றை படம் பிடிக்குறோம். பெரிய, பெரிய கட்டம் ஆகட்டும், மனிதர்கள் ஆகட்டும், விலங்கு மற்றும் பறவைகள் ஆகட்டும் எல்லாத்தையும் பிடிக்குறோம். இவற்றிற்கும் "மேக்ரோ" புகைப்படங்களுக்கும் என்ன வித்யாசம் ? எளிமையாக சொல்லனும்னா மிக சிறியவற்றை படம் பிடிக்கறது தான் மேக்ரோ. மேக்ரோ புகைப்படத்தின் உண்மையான விளக்கம் என்னவென்றால் "உங்கள் புகைப்பட பேட்டியின் உள்ள சென்சார்/பிலிம் அளவே உள்ளவற்றை புகைப்படமாக பதிவு செய்வது". எடுத்துகாட்டாக உங்க காமிராவின் சென்சார் அளவு 23.6mm x 15.8mm என்று வைத்து கொள்வோம். அதே அளவு உள்ளவற்றை முழுப்படமாக எடுத்தால் அது மேக்ரோ என்றாகிறது. இதை 1:1 மேக்ரோ என்று அழைப்பார்கள்.


இன்னும் புரியாதவர்களுக்கு, கீழே உள்ள படம் 200mm சாதரண லென்ஸ் உதவியுடன் எடுக்கப்பட்டது.




அதே பூ 200mm மேக்ரோ லென்ஸ் உதவியுடன் 1:1 அளவில் எடுக்கப்பட்ட படம் கீழே. இந்த படத்தில் காணப்படும் பூவின் பகுதின் அளவும், என்னுடைய காமிரா சென்சார் அளவும் (23.6mm x 15.8mm) ஒன்று தான்.


இந்த பூவின் உண்மையான அளவை தெரிந்து கொள்ள கீழே உள்ள படம் பயன் படும் என்று நினைக்குறேன்.


படங்களை பார்த்தாச்சா ? முதலில் எழும் கேள்வி என்னவென்றால் மேக்ரோ மற்றும் சாதரண லென்ஸ் இவற்றுக்கிடையில் இவ்வளவு வேற்றுமையா ? அது ஏன் ?

மேக்ரோ மற்றும் சாதரண லென்ஸ் இவை இடையே உள்ள முக்கிய வேற்றுமை "Minimum Focusing Distance". (அதாவது எவ்வளவு அருகில் உங்கள் லென்சினால் போகஸ் செய்ய முடியும் ?). மேக்ரோ லென்சில் இந்த தூரம் மிகவும் குறைவு(என்னுடைய சாதாரன 200mm லென்சின் Minimum Focus Distance 5 அடி, 200mm மேக்ரோ லென்சின் MFD 1.6 அடி). அதனால் உங்கள் காமிரா சென்சாரில் சிறியவற்றை கூட முழுவதும் பரப்பி படம் பிடித்து விடலாம்.

மேலும் மேக்ரோ லென்ஸ் சாதாரன லென்சை விட ஷார்ப்னஸ் மற்றும் தெளிவு அதிகம்.
ஆனால் மேக்ரோ லென்சின் பலகீனம் நம் பர்ஸை பதம் பார்ப்பது :( . பெரும்பாலும் நமக்கு 1:1 அளவில் மேக்ரோ படங்கள் தேவை படாது. 1:2, 1:4 கூட போதும். கீழே உள்ள படம் சாதாரன 200mm லென்ஸ் உதவியுடன் தான் எடுக்கப்பட்டது (ஆனால் வேறு சில வழிமுறைகளை பயன்படுத்தி).


வரும் வாரங்களில் சாதாரன லென்சின் மூலம் மேக்ரோ படம் எடுக்கும் வழிமுறைகளை காண்போம்.

இப்போ சில குறிப்புகளை பாப்போம்.
* பெரும்பாலும் நாம லென்சை சப்ஜெக்டுக்கு அருகில் சென்று படம் பிடிப்பதால் DOF மிகவும் மெலிதாக இருக்கும், அதனால aperature கொஞ்சம் கம்மி பண்ணி வைங்க (f/9, f/16, f/25)

* இப்போ aperature கம்மி பண்றதால ஷட்டர் வேகம் கம்மி ஆகிடும். அதனால முடிஞ்ச வரைக்கும் முக்காலி பயன் படுத்துங்க

* முக்காலி பயன் படுத்த முடியாத நேரங்களில், ISO கூட்டி படம் எடுங்க. அப்போ கொஞ்சம் ஷட்டர் வேகம் அதிகமா இருக்கும்.

* அப்புறம் DOF மெலிதாக இருப்பதால், உங்க சப்ஜடையும், சென்சாரையும் Parallela வச்சுக்கோங்க. அப்பத்தான் உங்க சப்ஜெடின் எல்லா பாகமும் தெளிவா வரும்.

வேறு எதாவது விளக்கம் வேணும்னா பின்னூட்டத்தில் சொல்லுங்க.
நன்றி ! வணக்கம் !

சின்னஞ்சிறு உலகம் - முன்னுரை

5 comments:

  1. அடுத்த போட்டி - macro? super macro?

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது விளக்கம். எளிமையாக புரியும்படி விளக்கியிருப்பது அருமை. அடுத்தப்பாடத்தை ஆவலுடன் எதிர்பார்த்து...

    கமலகண்ணன்.

    ReplyDelete
  3. என்ன லென்ஸ் வச்சிருக்கீங்க நாதஸ்?

    reversal ringதான் போட்டு நான் மேக்ரோ எடுக்கறேன். அபெர்ச்சர் மாத்தரதெல்லாம் கஷ்டமா கீது இப்படி எடுக்கரதால.

    ReplyDelete
  4. வணக்கம் !
    மேக்ரோ -வில் காமிராவை பொருளின் அருகே கொண்டு செல்ல வேண்டுமா ? ஜூம் செய்ய வேண்டுமா ? ஆட்டோ போகஸை டிசேபிள் செய்வது எப்படி ? என் கேமிரா மாடல் sony cyber shot dsc s930. நன்றி !

    ReplyDelete
  5. Thanks. Very useful information. I got a canon 55-250 mm lens. To take macro photos in that what i need to purchase. Or do you know any low cost macro lens.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff