Saturday, February 27, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? - பாகம் -6 / கேமராவின் கண்கள் -- லென்ஸ்..

13 comments:
 
இதற்கு முந்தைய பகுதிகள்....
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??
நாம் கேமரா வாங்கும் போது எவ்வளவு zoom வாங்குவது என்று ஒரு குழப்பம் வருவதுண்டு. அது போல wide zoom,tele zoom,optical zoom,digital zoom.. என்று பல சந்தேகங்கள் வருவதுண்டு.. இதெல்லாம் ஒரு லென்ஸின் பல்வேறு வேலைகள். இதை பற்றி தெரிந்துகொள்வதற்க்கு முன் கேமராவில் உள்ள லென்ஸை பற்றி பார்ப்போம்..

லென்ஸ்

பெண்கள் வீட்டின் கண்கள்.. லென்ஸ்கள் கேமராவின் கண்கள்.. ஒரு லென்ஸ் என்பது தான் கேமராவின் கண்கள் ஆகும்.ஒரு லென்ஸ் தான் சென்சாரில்/ நெகட்டிவில் ஒரு இமேஜை உருவாக்கி தரும்.

நம் பார்வை எவ்வளவு தெளிவாக இருந்தால் நாம் நன்றாக பார்க்கமுடியுமோ, அது போல் தான் கேமராவின் கண்களான லென்ஸும்.
ஒரு லென்ஸின் தரத்தை பொருத்து தான் ஒரு நல்ல குவாலிட்டியான,தெளிவான படம் அமையும்.

லென்ஸின் முக்கிய வேலைகளாக இரண்டை சொல்லலாம் ,

1.FOCAL LENGTH.

2.SPEED.

இவ்விரண்டையும் நாம் அனைத்து லென்ஸ்களிலும் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு லென்ஸில் MM என்று என்களை குறிபிட்டிருந்தால் அது FOCAL LENGTH ன் அளவை குறிக்கும்.

1: என்று குறிப்பிட்டு அதன் பக்கத்தில் எண்கள் இருந்தால்,அது லென்ஸின் வேகத்தின் அளவு ஆகும்.இதை aperture அளவு என்று சொல்வார்கள்..

முதலில் FOCAL LENGTH ன் வேலைகளை பற்றி பார்ப்போம்,
FOCAL LENGTH FOCAL LENGTH என்பது ஒரு சென்சாரில் பதிவாகும் படத்தின் மாறுபட்ட அளவுகளை குறிப்பதாகும்.
இது முற்றிலும் லென்ஸிற்குள் மட்டுமே அளவிடப்படும் ஒரு கணக்காகும். கேமராவுக்கு வெளியில் இருந்து நாம் எடுக்கும் சப்ஜெக்ட் இருக்கும் தூரத்தை வைத்து அளவிடுவதல்ல..
நாம் ஒரு போட்டோ எடுக்கும் போது zoom அளவை மாற்றுவோம் அல்லவா. அப்போது ஒரு லென்ஸின் உள்பகுதியின் நடுவில் இருந்து ஃபோகல் ப்ளேன் வரை , நாம் எடுக்கும் சப்ஜெக்ட் சரியாக ஃபோகஸ் ஆகும் வரை இவ்விரண்டிற்கும் இடையே ஒரு தூர மாற்றம் இருக்கும்.
அப்படி சரியான ஃபோகஸ் பாயிண்டிலிருந்து, நடுவில் இருக்கும் லென்ஸ் வரை உள்ள தூரமே FOCAL LENGTH ஆக அளவிடப்படும்.. இதை மில்லிமீட்டர்(MM) ஆக கணக்கிடுகிறார்கள்.
இதை எப்படி அளவிடுகிறார்கள்?
உதாரணமாக ஒரு சராசரி மனிதனின் பார்வை என்பது 180 டிகிரி வரை அகலமாக பார்க்கலாம்.. அதற்க்கும் கீழ் பார்க்க முடியாது,அதாவது 190,200 டிகிரி என்பது பார்க்க முடியாது. அதாவது நம் பார்வையின் சைடில் இருந்து பின்னால் வரை நம்மால் பார்க்க முடியாது..
நாம் நம் கண்களால் அதிகபட்சம் அகலமாக(180 டிகிரி) பார்க்க முடிகின்ற அளவை, லென்ஸில் 50MM ல்( 35MM ஃபார்மேட் படி) வைத்து எடுத்து பார்த்தால் சரியாக வரும் என்று ஒரு தோராயமாக கணக்கிடபட்டுள்ளது.. அதாவது நாம் பார்க்கின்ற பார்வையின் அளவும் , லென்ஸின் 50mm(35mm format) தரும் படமும் கிட்டதட்ட ஒன்று.
focal length அதிகமாக அதிகமாக படத்தின் அளவு பெரியதாகும், குறைக்கும் போது படம் சிறியதாகும்.
நாம் நார்மலாக பார்க்கும் அளவை (50mm) NORMAL LENS எனவும்,
50MMற்கு கீழ் வரும் 35mm,28mm,24mm etc. என்பதை wide angle lens என்றும், 50mm ற்கும் மேல் வரும் 70mm,105mm,150mm, etc. போன்றவற்றை telephoto lens என்றும் கூறப்படுகின்றன்..
மேலே சொன்னது எல்லாம் 35mm format படி உள்ள அளவாகும்..
சிறிய கேமராக்களில் இதை தான் zoom மாற்றும் இடத்தில்(zoom lever) ஒரு பக்கம் W எனவும் மறுபக்கம் T எனவும் குறிப்பிட்டிருப்பார்கள்.. W என்றால் wide angle ,T என்றால் telephoto என்று அர்த்தமாகும். ஆனால் இந்த வகை கேமராக்களில் எவ்வளவு zoom என்பதை நாம் போட்டோ எடுத்த பின் தான் தெரிந்துகொள்ள முடியும்.
OPTICAL ZOOM என்றால் என்ன?
பொதுவாக நாம் compact size கேமரா வாங்கும் போது 3X optical zoom மற்றும் 4X digital zoom என்றெல்லாம் போட்டிருக்கும். (DSLR கேமராக்களில் எழுதியிருக்காது...)
optical zoom என்பது தூரத்தில் இருக்கும் subjectஐ அருகிலேயே படம் பிடிக்க லென்ஸ் ஐ (optically) முன்னோக்கி செலுத்தி நமக்கு உதவி செய்யும்.. இதனால் நமக்கு படம் குவாலிட்டி மாறாமல்,பிக்சல் மாறாமல் கிடைக்கும்.. optical zoom என்பது தான் real zoom ஆகும்.. இதில் தான் focal length என்பது zoom ற்கேற்ப சரியாக மாறும்.. இதன் அளவு தான் சரியானது..
optical zoomன் அளவுகள் கேமரா வகையை பொறுத்து மாறுபடும். அதிகமான அளவு optical zoom என்றால் தூரத்தில் இருப்பதை இன்னும் எளிதாக படம் பிடிக்க உதவும்..
DIGITAL ZOOM என்றால் என்ன?
digital zoom என்பது நம்மை தூரத்தில் இருப்பவரிடம் optical zoomஐ போல் அழைத்து செல்லாது..அதற்கு பதிலாக optical zoomன் கடைசி zoom அளவு முடிந்த பின்,அதிலிருந்து கேமராவே நாம் பயன்படுத்தும் digital zoomன் அளவிற்கேற்ப கேமராவுக்குள்ளேயே crop செய்து பிறகு டிஜிடலாக enlarge செய்து கொடுக்கும். இதன் விளைவு, குவாலிட்டி மிகவும் குறையும்..,பிக்சலும் குறையும்..
optical zoom ல் படம் பிடித்து,அதன் பிறகு photo editing softwareல் நாம் செய்யும் crop ஐ போன்றதே digital zoom ஆகும்.. photo editingல் crop செய்வதும்,கேமராவில் digital zoom பயன்படுத்துவதும் இரண்டுமே ஒன்று தான்.. digital zoom செய்து படம் பிடிப்பதை விட,optical zoomல் படம் எடுத்து பின் photo editingல் crop செய்வதே சிறந்ததாகும்.ஏனென்றால்,zoom அதிகமாக அதிகமாக நம் கை கொஞ்சம் நடுங்கினாலும் போட்டோ digital zoom ல் மோசமாக தான் வரும்.. எனவே optical zoom எவ்வளவு என்பதை தான் முக்கியமாக பார்க்க வேண்டும்..digital zoom ஐ பற்றி கவலை பட தேவையில்லை..
X என்றால் என்ன அர்த்தம்?

கேமராக்களில் 3X zoom , 15X zoom..என்று போட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்,

சரி X என்றால் என்ன?

பொதுவாக X என்பது எத்தனை முறை(times)என்று அர்த்தம். ஒரு லென்ஸில் 18mm - 55mm போட்டிருந்தால்,லென்ஸ் 18mm zoomல் ஆரம்பிக்கிறது,55mm zoomல் முடிகிறது..

18லிருந்து 3 தடவை பெருக்கினால் 54 வருவதால் இந்த லென்ஸ் 3X zoom என்று கூறப்படுகின்றது. இன்னும் சில உதாரணங்கள்...

  1. 28mm-200mm என்றால் 7X zoom (28mm X 7x=200mm)
  2. 18mm-200mm என்றால் 11X zoom (18mm X 11x=200mm)
  3. 55mm-200mm என்றால் 3.6X zoom
  4. 18mm-85mm என்றால் 4.7X zoom.
  5. 35mm-600mm என்றால் 17X zoom.
  6. 6mm - 24mm என்றால் 4X zoom
இதில் முதல் மூன்றின் அளவும் ஒரே 200mm ல் முடிந்தாலும் X என்பது வெவ்வேறு அளவுகள். அதே மாதிரி 3 மற்றும் 4 ன் அளவை பார்த்தால் இன்னும் நன்றாக புரியும்.. 200mm என்பது அதிகமான zoom ஆக இருந்தாலும் இதை விட குறைவான 85mm என்பது அதிகமான X..

எனவே x ன் அளவை பார்த்து மட்டும் மயங்க வேண்டாம்..எந்த zoom rangeல் ஆரம்பித்து,முடிகிறது என்று தான் கவனித்து பார்க்க வேண்டும்.

முடிந்த அளவு எந்த வகையான brand ஆக இருந்தாலும் 28mm(35mm format அளவின் படி) அல்லது அதற்க்கும் கீழ் உள்ள wide zoom ல் (28mm,24mm etc) ஆரம்பம் ஆகும் zoom அளவையே பார்த்து வாங்கவும்.. மேலும் வேகம் அதிகமாக உள்ள லென்ஸையே பார்த்து வாங்க வேண்டும்.. இது ஏன்,எப்படி என்பதையும், எந்த zoom range முக்கியம் என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. இந்த பகுதி குறித்த சந்தேகங்கள் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. போயிட்டு வாரனுங்.. -கருவாயன்.

13 comments:

  1. நல்ல விளக்கம் நன்றி நண்பா,....
    Portrait படம் எடுக்க எந்த வகை லென்ஸ் சரியாக இருக்கும்? அதன் பற்றிய விளக்கம் கொடுங்களேன்

    ReplyDelete
  2. portrait படங்களை எடுப்பதற்கு 70mm - 120mm(35 mm format) வரையிலான zoom range என்பது சிறப்பாக இருக்கும்..

    portrait படங்களை பொருத்த வரையில் பல வகைகள் உள்ளன.இதை பற்றி விரிவாக ஒரு பதிவு விரைவில் வரும்..

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  3. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  4. //portrait படங்களை பொருத்த வரையில் பல வகைகள் உள்ளன.இதை பற்றி விரிவாக ஒரு பதிவு விரைவில் வரும்..

    நன்றி
    கருவாயன்//
    நன்றி நண்பா,... விரைவில் எதிர்ப்பார்க்கின்றோம்

    ReplyDelete
  5. நல்ல உபயோகமுள்ள பதிவு. என்னுடைய Sony DSC H3 கேமிராவின் லென்ஸில் 3,5-4,4/6,3-63 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சற்று விளக்குங்கள்.

    ReplyDelete
  6. நன்றி தர்மராஜ்...

    உங்கள் கேமராவில் உள்ள 3.5 - 4.4 என்பது உங்கள் லென்ஸின் aperture அளவு ஆகும்.. இதன் அளவை பொருத்து தான் படம் பிடிக்கும் வேகம் அமையும்.. இதன் எண்கள் அளவு குறைய குறைய நாம் வேகமாக படம் முடியும்.இதை பற்றி அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்..

    6.3 - 63 என்பது உங்கள் லென்ஸின் focal length அளவாகும்..அதாவது 6.3mm முதல் 63mm வரை உங்கள் லென்ஸ் zoom செய்யவல்லது.. 6.3mmல் ஆரம்பித்து 63mm ல் முடிவதால் 10X zoom lens அதாவது 6.3mm X 10 முறை = 63mm எனப்படுகின்றது.

    இதன் க்ராப் factor சென்சார் படி, இதன் உன்மையான 35mm format அளவு என்பது 38mm to 380mm ஆகும்.

    அதாவது இந்த கேமராவின் அதிகபட்ச wide angle என்பது 38mm , அதிகபட்ச tele zoom என்பது 380mm ஆகும்.

    -கருவாயன்

    ReplyDelete
  7. நன்றி.....

    ReplyDelete
  8. அருமையான விளக்கம் .... எனக்கு ஒரு சந்தேகம், என்னிடம் canon 18 - 55 மற்றும் 55 - 200 லென்ஸ் உள்ளது. இது இரண்டையும் இன்னைக்க எதாவது interface லென்ஸ் இருக்கா?

    ReplyDelete
  9. நன்றி கபிலன்,

    ’என்னிடம் canon 18 - 55 மற்றும் 55 - 200 லென்ஸ் உள்ளது. இது இரண்டையும் இன்னைக்க எதாவது interface லென்ஸ் இருக்கா?’

    நீங்கள் வைத்திருக்கும் லென்ஸ்களை பொறுத்தவரையில் தனித்தனியாக மட்டும் தான் எடுக்க முடியும். வேறு வழி கிடையாது.. அந்த மாதிரி இனைப்புகள் வந்தாலும் உங்கள் ஸ்லோ லென்ஸில் வைத்து எடுக்க முடியாது..

    -கருவாயன்

    ReplyDelete
  10. அருமையான பதிவு. மிக்க நன்றி

    ReplyDelete
  11. tele zoom means what is the use for this?
    i have d300s, i like to buy macro, which lense shootable for me?
    - valliappan(illakiyam47@hotmail.com)

    ReplyDelete
  12. @valliappan.. தூரத்தில் இருப்பதை, நாம் முன்னே செல்லாமல் ஒரே இடத்தில் இருந்து படம் எடுக்கும் வசதி கொண்ட லென்ஸ் தான் tele zoom lens ஆகும்..

    இப்போ உங்களோட லென்ஸ் என்பது 18-105mm ஆகும்.. இதில் 18mm - 28mm வரை வைத்து எடுத்தால் அது wide angle ,35-50mm வரை எடுக்கும் போது normal lens,60-105,150,200,300,500,600 இப்படி எந்த அளவில் வைத்து எடுக்கும் போது tele zoom லென்ஸ் ஆகும்..

    -கருவாயன்

    ReplyDelete
  13. supera pathivu senchinga.santheegam theernthathu.nandri

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff