Thursday, February 2, 2012

பிப்ரவரி 2012 - போட்டி அறிவிப்பு

42 comments:
 
சௌக்கியமா நண்பர்களே? பிப்ரவரி மாத போட்டிக்கு ரெடிதானே?போட்டிக்கு வரும் படங்களை பார்ப்தில் இருக்கும் சுவாரஸ்யத்தை போலவே, ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு ஆராய்வதில் இருக்கு.

கிட்டத்தட்ட, எல்லா மாதிரியான தலைப்பையும் பிட்டில் அரங்கேற்றியாச்சு.

ஒரு ஆல்பத்தில் படங்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு விதமான படமும் ஒவ்வொரு விதமான ரசனையை வெளிப்படுத்தும். Landscape மாதிரியான படங்களைப் பார்க்குமபோது, படத்தில் பல விதமான விஷயங்கள் பொதிந்து இருக்கும். நிறங்களும், வெளிச்சத்தின் அழகும், காடு மலைகளும், காண்பதற்க்கு ரம்யமாகவே இருக்கும். ஆனா, பார்வையாளன், உன்னிப்பாய் ஆராய படத்தில் ப்ரத்யேகமாய் ஒன்றும் இருக்காது.
பார்வையாளனுக்கும், படத்துக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்காது. பொத்தாம் பொதுவா மேலோட்டமா பாத்துட்டு உச்சு கொட்டிட்டு அடுத்த படத்துக்கு போயிருவான்.

அதுவே, புகைப்படம் ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை அருகாமையில் சென்று, அந்த சப்ஜெக்ட்டின் நுணுக்கங்களைக் காட்டினால், பார்வையாளனுக்கு படத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படும்.


குழந்தையின் முகமோ, கைகளோ, பூக்களின் மேலிருக்கும் வண்டோ, பறவையின் கூரிய பார்வையோ, பெண்களின் புருவமோ, மீசைக்காரரின் வசீகரச் சிரிப்போ, பாட்டியின் சுருங்கிய விரல்களோ, மீனோ, மானோ, பளீர் தக்காளியோ, சில்லென்ற கோக் பாட்டிலோ, ஃபுல் மீல்ஸோ, எதுவாக இருந்தாலும், அருகாமையில் சென்று அதன் விவரங்களைப் பதிந்தால், அந்தப் புகைப்படத்துக்கு ஒரு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்.

புரிஞ்சுடுச்சு இல்ல?

பிப்ரவரிக்கான தலைப்பு - அண்மைக் காட்சி (Close-Up)

(இயன்றவரை 'மேக்ரோ'வைத் தவிருங்கள்)

விதிமுறைகள் இங்கே

கடைசித் தேதி: பிப்ரவரி 20.

ஜமாய்ங்க!

சில மாதிரிகள்:

Surveysan
Parrot

Anton:

Three-Spot Grass Yellow (Eurema blanda)

Nathas:

Goosling

surveysan

Dahlia

Ramalakshmi:


கார்த்திகை முழுநிலவு / Full Moon, Dec 2011

Anton:
Spin


Ramalakshmi:
மூக்கும் முழியுமாய்../ Blue-and-yellow Macaw (Ara ararauna)


Jeeves:
neighbour's son.





42 comments:

  1. சர்வேசன்

    தலைப்பை அண்மை அப்படின்னு மாத்துங்களேன். அருகில் என்று சொல்வதற்கு அருகாமை என்ற சொல் எப்படி புழக்கத்தில் வந்ததெனத் தெரியவில்லை

    போதாமை - போதாமல் ஆவது
    விழையாமை - விழையாமல் இருப்பது

    இப்படிப் பார்த்தோமானால் அருகாமை என்றால் அருகிப் போகாமல் இருப்பது என்று சொல்லலாம். ஆனால் அருகில் என்றாலோ அண்மை என்றாலோ வரும் பொருளில் அருகாமை என்பது தவறு.

    புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட அருகாமை என்று எழுதுகிறார்கள். அதனால் அப்படி எழுதினால் ஒரு இலக்கியத்தரம் இருப்பதாக வேறு ஒரு எண்ணம் இருக்கிறது.

    ஆனால் இது தவறான பயன்பாடு. அருகாமை தவிர்த்து அண்மை என எழுதுதல் நலம். அருகாமையில் தவிர்த்து அருகில் அண்மையில் என எழுதுதல் நலம்.

    ReplyDelete
  2. @ இலவசக்கொத்தனார்,

    ‘அண்மைக் காட்சி’ என மாற்றி விட்டோம். நன்றி!

    ReplyDelete
  3. I have sent my photography for Feb-2012 contest

    ReplyDelete
  4. நானும் பங்கேற்றிருக்கிறேன்.

    அக்காவின் பேரன், 4 மாத ,குட்டி ஷரன் பல் தேய்க்கும் போது எடுத்தேன் .

    ReplyDelete
  5. நானும் படம் அனுப்பி இருக்கேன் Bavan.jpg :-))

    ReplyDelete
  6. i have sent a picture

    ReplyDelete
  7. i have sent my picture for February 2012 contest..........ramalakshmi subbarao

    ReplyDelete
  8. i hv sent a picture
    ramalashmi subbarao

    ReplyDelete
  9. நானும் ஒரு புகைப்படம் அனுப்பி இருக்கிறேன்...

    தொடர்ந்து நல்ல போட்டிகளை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

    கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  10. படங்கள் எல்லாம் படு பயங்கரமா இருக்கு ...இந்த மாதத்திற்கான புகைப்படம் தயாராகிவிட்டது என்றாலும் ..மிகவும் அருமை யான போட்டி தலைப்பு ...இதை ஒரு சாக்காய் வைத்து கொண்டு ...இன்னும் சில படங்களை முயற்சித்து பார்க்கலாம் என ஆவலாக உள்ளது ...all the best freinds

    ReplyDelete
  11. போட்டிக்கான எனது படத்தை அனுப்பி உள்ளேன் ...

    ReplyDelete
  12. I sent a photo too, sanchayan.jpg

    ReplyDelete
  13. நானும் புகைப்படத்தை அனுப்பிவிட்டேன்...

    ReplyDelete
  14. நானும் புகைப்படத்தை அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  15. நானும் ரொம்ப நாளாய் பங்கேற்க முயற்ச்சித்து..எப்படி அனுப்புவது என திரு.கருவாயன் அவர்களிடம் கேட்டு இம்மாதத்திற்கான எனது படத்தை அனுப்பிவிட்டேன்..பங்கேற்றதே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது..நன்றி..

    ReplyDelete
  16. போட்டிக்கு எனது படத்தை அனுப்பியுள்ளேன் ..நன்றி

    ReplyDelete
  17. போட்டிக்கான எனது படத்தை அனுப்பி உள்ளேன்...WILLI'G.jpg

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. I sent my first photo ashikrafi.jpg

    ReplyDelete
  20. எனக்கு தெரிந்த வரையில் அருகண்மை,பெ.- மிக நெருங்கிய என்னும்
    பொருளுடையதாகும்.
    அண்மை - ஊர் தொலைவிலில்லை என்று குறிப்பதாகும்-அருகண்மையில்தானிருக்கிறது
    என்று விடை வந்தால் மிகமிக நெருங்கிய பக்கத்தில்தான் உள்ளது என்பதே அதன்
    பொருள்.
    அதாவது அருகு அல்லது அண்மை என்றாலே நெருங்கிய பக்கம் என்ற பொருள்.
    அருகண்மை என்பது அருகாண்மை - அருகாமை எனபது வழுச்சொல்லாகும்
    ஆகவே நெருங்கிய-பக்கத்தில் என்பதற்கு அணமையில் என்றும் சேய்மையில்
    என்பதற்கு
    தொலைவில் உள்ளதற்கும் பயன்படுத்துகிறோம்.வழக்கில் பெரும்பாலும் கிட்ட
    அல்லது பக்கத்தில் என்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளதுபோல் ஈழத்தவர்கள்
    இடையில் கிட்டடியில்
    என்ற வழக்கில் உள்ளது..
    இவண்
    ஆம்பூர் பெ.மணியரசன்

    ReplyDelete
  21. PADAM ANUPPIYACHU..MIRATTURAINGA..AZAGAAI IRUKKUTHU PAYAMA IRUKKU..

    ReplyDelete
  22. அப்படி இப்படின்னு மொத தடவையா நானும் ஒண்ணு அனுப்பியிருக்கேன்..

    ReplyDelete
  23. I have sent my photo MadhuArun.jpg :)

    ReplyDelete
  24. I've sent my picture for the contest - Susi.jpg
    Thank you.

    ReplyDelete
  25. I've sent my photograph twice to pit.(16th and 18th Feb 2012). But it's still not added to the site. Any problems? Today's the last day. what should i do?

    ReplyDelete
  26. if you are sending bigger size photo, picasa will reject it. please resize it and send it. may be 800x600 should be the right size.

    ReplyDelete
  27. @ Gowri,

    Photos.in.tamil ஐடிக்கு நீங்கள் 2 முறை அனுப்பியிருந்த மடல்களைக் கவனித்தேன். உங்கள் படம் கிட்டத்தட்ட 4MB இருப்பதே படம் ஆல்பத்தில் அப்லோட் ஆகாததற்குக் காரணம். அளவைக் குறைத்து இன்றைக்குள் ஆல்பத்தில் இடம்பெறச் செய்கிறேன். இனி வரும் நாட்களில் 1024x768 அளவுக்கு மேல் படம் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதை அடுத்த போட்டி அறிவிப்பிலும் முக்கிய விதியாகக் கொடுக்க உள்ளோம். ஏனெனில் சிலர் 8MB வரையுள்ள படங்களை அனுப்பியுள்ளார்கள்!!

    ReplyDelete
  28. நானும் இன்று அனுப்பியிருக்கிறேன்,asiya.jpg.

    ReplyDelete
  29. "வறுமையின் நிழல்கள் ...." ஒரு படம் அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  30. My Photo MadhuArun.jpg is not available in the album :(

    ReplyDelete
  31. Sorry!!! In future, I'll make sure, my photos get re sized. Thank you for adding my photo this month.

    ReplyDelete
  32. @ Arun,

    தங்கள் படம் சேர்க்கப்பட்டு விட்டது.

    ReplyDelete
  33. இத்துடன் போட்டி நேரம் முடிகிறது. இனி வரும் படங்கள் போட்டிக்கு சேர்க்கப்பட மாட்டா.

    ஒருசிலரது படங்கள் பிகாஸா ஆல்பத்தில் சேரவில்லை எனத் தெரிய வந்த போது Photos.in.tamil ஐடியிலிருந்து அவை மீட்கப்பட்டு விட்டன.

    எவரது படமேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  34. mam , my friend (Jeyavelu.jpg) sent photo to the contest on 19-02-2012.still not included in album.

    ReplyDelete
  35. @ sathi,

    சேர்த்தாயிற்று. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  36. picasa லிங்க் அனுப்புங்க... ??

    ReplyDelete
  37. @ ஜெட்லி..,

    ஸ்லைட் ஷோவாக போட்டிப் படங்களின் பிகாஸா ஆல்பம் வலது மேல் மூலையில் உள்ளதே! திறப்பதில் ஏதும் பிரச்சனையா?

    லிங்க்: https://picasaweb.google.com/103548421425694563768/CloseUpFeb2012#

    ReplyDelete
  38. example padankal ovvanrum athunai alaguuuuuu

    ReplyDelete
  39. got it...net slow vaa irukku athaan pirachanai...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff