ஒளி குறித்த தகவல்களைத் தொடர் கட்டுரையாக வழங்கி வரும் திவாஜி அடுத்து வரவிருக்கும் காரமுந்திரி-பாகம் 9-ல் சொல்கிறார்:
“உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா? தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார்? அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும். அது ஒரு போட்டோவா இந்த காட்சியை பிடிச்சாத்தான் தெரியும்.”
கட்டுரையில் இக் காட்சியை விளக்க உதாரணப் படம் தேவைப்படுகிறது. அதை வழங்கப் போவது நீங்களே. “பிட் குடும்பத்தில் திறமைசாலிகள் பலர் இருக்கையில் எதற்கு இணையத்திலிருந்து மாதிரிப்படம் எடுக்க வேண்டும்? இதை ஒரு போட்டியாக அறிவிக்கலாமே” என்றார் திவாஜி.
அவர் சொல்வதும் சரிதானே? கேமராவுடன் கிளம்புங்கள் கடைவீதிக்கு அல்லது கடைவீதிக்குச் செல்லும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் கேமராவை:)!
ரங்கமணி தங்கமணிதான் படத்தில் இடம்பெற வேண்டுமென்பதில்லை. காட்சி அமைப்பை உள்வாங்கி எந்தக் கதாபாத்திரங்களை வைத்து வேண்டுமானாலும், எந்த சூழலைப் பின்னணியாகக் கொண்டும் எடுக்கலாம். ஏனெனில் காலேஜ் பொண்ணை மாடல் செய்யக் கேட்டு தர்ம அடி வாங்கத் தான் தயாராக இல்லை என அங்கலாய்த்தார் பிட் குழும உறுப்பினர்களில் ஒருவர்:)!
காட்சியை உள்வாங்க சில உதாரணப் படங்கள்:
மாதிரிக்காக தந்திருக்கிறோம் என்றாலும் வெளிக்காட்சியின் பிரதிபலிப்பு இப்படத்தில் அதிக அளவில் இல்லை.
கண்ணாடிக்கு உள் இருக்கும் காட்சி, பிரதிபலிப்பு இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவையாக போட்டிப் படங்கள் இருக்க வேண்டும். சரியான உதாரணம் கீழ் வருவது: கற்பனைக்கு ஏது எல்லை? மூக்குக் கண்ணாடியில் கூட சிக்கலாம் போட்டிக்கான காட்சி:)!
சிறந்த படம் கட்டுரையில் இடம் பெறும். அதை எடுத்த அனுபவத்தை முதல் பரிசு பெற்றவர் விருப்பமானால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அப்பகிர்வு தனிப்பதிவாக PiT தளத்தில் வெளியிடப்பட்டுக் கெளரவிக்கப்படும். இரண்டாம், மூன்றாம் இடங்களுக்குத் தேர்வாகின்ற படங்கள் இன்னொரு பதிவாக வெளியாகும்.
படங்களை photos.in.tamil@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி விட்டு இப்பதிவின் பின்னூட்டத்திலும் தெரிவித்திடுங்கள்.நடுவராக திவாஜி செயலாற்றுவார்.
முடிவு தேதி 5 மார்ச் 2012.
***
படம் 1, நன்றி National Geographic Photography Contest Winners 2011 from http://www.boston.com/
படம் 2, நன்றி Wikipedia: Window reflection of Barack Obama in the Oval Office.jpg
இதுவரையிலும் போட்டிக்கு வந்த படங்கள்:
நல்ல வேலை வெச்சு இருக்கிறாங்கோ ரா.ல! :-))
ReplyDeletenice concept...
ReplyDeleteநானும் ஒரு படம் அனுப்பிருக்கிறேன்.அது போட்டிக்கு பொருத்தமான்னு தெரியலை.வழக்கம் போல் ஓரு படம் தானா?எத்தனை படம் வேண்டுமானாலும் அனுப்பலாமா?
ReplyDelete@ Asia Omar,
ReplyDeleteஇந்தப் போட்டிக்கு ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்:)! ஆனால் முதல் மூன்றினுள் ஒருவரது ஒருபடமே தேர்வாகும்.
நிறைய நல்ல படங்கள் வருமாயின் தனிக்கவனம் பெறுபவையாக ஒரு பதிவாக வெளியிடும் எண்ணம் உள்ளது.
இரண்டு படங்கள் அனுப்பியுள்ளேன்...பார்த்ததும் பதில் அனுப்பவும்...நன்றி
ReplyDelete@ Sudhakar M, தங்கள் படம் கிடைத்தன.
ReplyDelete@ ஆசியா உமர், உங்கள் படங்களும்.
I sent mine..
ReplyDelete@ AjinHari,
ReplyDeleteபடம் கிடைத்தது.
இரண்டு படங்கள் அனுப்பி இருக்கிறேன். ட்ரையல் பேசிஸ்:)விண்டோ ஷாப்பிங் ரொம்ப்ப் பிடித்த விஷயம். அதனால் பார்த்ததெல்லாம் படம் எடுத்துவிடுவேன். எது சரியாக இருக்கிறதோ தெரியவில்லை. உங்கள் கணிப்புக்கு விடுகிறேன்.
ReplyDeleteவாய்ப்பு கொடுத்த தம்பி வாசுதேவனுக்கு மிகவும் நன்றி.
@ வல்லிசிம்ஹன்,
ReplyDeleteஉங்கள் படங்கள் மூன்றும் கிடைத்தன வல்லிம்மா.
___________________
விரைவில் படங்களை இந்தப் பதிவினுள்ளேயே பிகாசா ஸ்லைட் ஷோவாகத் தந்துவிட உள்ளோம், அனுப்பப்பட்ட படங்கள் வந்து சேர்ந்ததை உறுதிப் படுத்த.
நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteநானும் படம் அனுப்பிருக்கிறேன்.
ReplyDeleteநானும் ஒரு படம் அனுப்பிட்டேன். நல்லாப் பாத்துக்கோங்க. நானும் ரவுடிதான்! நானும் ரவுடிதான்!!:))
ReplyDelete@ sathi, யோசிப்பவர்,
ReplyDeleteபடங்கள் கிடைத்தன:)!
போட்டிக்கு வந்த படங்களின் பிகாஸா ஆல்பம் பதிவில் இணைக்கப்பட்டு விட்டது. படம் அனுப்பியவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
ReplyDeleteநன்றி..
ReplyDeleteமேலும் இரண்டு படங்கள் அனுப்பியிருக்கிறேன்.
ReplyDeletephotos epdi anuppurathu..
ReplyDelete@ adhicbe,
ReplyDelete/படங்களை photos.in.tamil@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு இப்பதிவின் பின்னூட்டத்திலும் தெரிவித்திடுங்கள்./
பதிவில் சொல்லியிருப்பதேதான்:). அனுப்பிட்டு இங்கேயும் ஒரு கமெண்ட் போடுங்க. பிகாஸா ஆல்பத்தில் இணைத்திடுவோம்.
கண்ணாடி பேழை போட்டிக்கு என் 2 படங்களை அனுப்பி உள்ளேன்! போன போட்டிக்கு படம் அனுப்பிட்டு பின்னூட்டம் அனுப்ப மறந்திட்டேன்..அதனால மிஸ் ஆயிடுச்சு! அதான் இந்த முறை ஈமெயில் அனுப்பின கையோட இங்க எழுதிட்டேன்!!
ReplyDeleteநன்றி
I am also sent photos for this contest
ReplyDeleteI am also sent photos for this contest (Mutha)
ReplyDeleteSent 2 more ..
ReplyDeleteகண்ணாடி பேழை போட்டிக்கு என் 2 படங்களை அனுப்பி உள்ளேன்..பார்த்ததும் பதில் அனுப்பவும்...நன்றி
ReplyDeletei have sent one picture (swarnarajan.jpg) for the competition.
ReplyDeleteமற்றும் ஒரு புகைப்படம் அனுப்பிஉள்ளேன் .
ReplyDeleteநன்றி..
This comment has been removed by the author.
ReplyDeleteஒளி பாடத்திற்கான 2-in-1 சவால் போட்டிக்கு எனது படத்தை அனுப்பி விட்டேன்.
ReplyDeleteஒளி பாடத்திற்கான 2-in-1 சவால் போட்டிக்கு எனது 2-வது படத்தை அனுப்பி விட்டேன்.
ReplyDeletesent one picture...varun(கண்ணாடிப் பேழை).jpg
ReplyDeleteஒளி பாடத்திற்கான 2-in-1 சவால் போட்டிக்கு எனது 3-வது படத்தை அனுப்பி விட்டேன்.
ReplyDeleteஒளி பாடத்திற்கான 2-in-1 சவால் போட்டிக்கு எனது 3-வது படத்தை அனுப்பி விட்டேன்.
ReplyDeleteஇதுவரை அனுப்பியவர்களின் படங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. யாருடையாவது விட்டுப் போயிருந்தால் மட்டும் தெரிவிக்கவும். நேற்றுடன் படங்கள் அனுப்புவதற்கான காலம் முடிவடைந்தது.
ReplyDeletethanks.
ReplyDeleteபடங்களுக்கு பின்னூட்டம் எழுதுவது எப்படி என்று தயவு செய்து கூறவும். நான் இத்தளத்திற்கு புதியவன். நன்றி
ReplyDelete