வணக்கம் நண்பர்களே,
இதற்கு முந்தைய பகுதிகள்,
1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1..
2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2.. கேமராக்களை எப்படி பிடிப்பது?
படம் எடுப்பதற்கு முன் நாம் கேமராவில் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய செட்டிங்ஸ் சரியான exposure அமைப்பது தான்..
இந்த ஒன்றை மட்டும் (கேமராவில்) நாம் முக்கியமாக கவனித்தாலே ஒரு நல்ல படத்திற்கு கிட்டதட்ட போதுமானது.. இன்னும் சில settingsகளுக்கும் பங்கு உண்டு..இதில் exposure முக்கியமானது என்பதால் முதலில் அதை பற்றி பார்ப்போம்..
ஏனென்றால் exposure settings தான் அனைவருக்கும் பொதுவானது..
இதை எல்லோரும் ஒரே மாதிரி சரியாக தான் அமைக்க வேண்டும்.
மற்ற settings எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.. அது அவரவர் கிரியேட்டிவிட்டியில் தான் உள்ளது...
Exposure என்றால் என்ன?
Exposure என்றால் வெளிச்சத்தை நாம் லென்ஸ் வழியாக சென்சாருக்குள் அனுமதிக்கும் அளவாகும்.
இது அதிகமாகவும் இருக்கும் , குறைவாகவும் இருக்கும்,சரியாகவும் இருக்கும்.. எல்லாம் நம் கையில் தான்...
வெளிச்சம் அதிகமாக இருந்தால் highlights அதிகமாகி விடும் இதனால் படங்கள் வெளுத்துபோய் details இருக்காது..
அதே சமயம் வெளிச்சம் குறைவாக அமைத்தால் shadows அதிகமாகி படம் இருட்டாகி விடும்.. noise அதிகமாகி விடும்..
அவ்வாறு இல்லாமல் சரியான முறையில் வெளிச்சம்(exposure) அமைத்தால் தான் படம் நன்றாக இருக்கும்.. சரியான வெளிச்சத்தை அமைக்காவிட்டால் படங்களில் துல்லியம் இருக்காது.
இதை நாம் எப்படி அமைக்கலாம் என்றால்,
ஓன்று, சரியான வெளிச்சத்தை அனைத்து இடங்களிலும் கேமராவே பார்த்துக்கொள்ளும்.. (auto mode மற்றும் scene modes)
மற்றொன்று, வெளிச்சத்தின் சூழ்நிலைக்கேற்ப நாமே மாற்றிக்கொள்வது..
( programme , manual , shutterspeed , aperture mode)
இதை எப்படி மாற்றுவது?
ஒரு சில சிறிய கேமராக்களை தவிர இந்த மாதிரி mode dial
அல்லது ஒரு சில சிறிய கேமராவின் மெனுவிற்குள்
சென்று exposure ஐ மாற்றிக்கொள்ளக்கூடிய வழிகள் கொடுத்திருப்பார்கள்..
படம் படமாக கொடுத்திருப்பார்களே , அது தான்...
என்ன.. இத்தனை உள்ளது என்று பயப்பட தேவையில்லை..
பலர் இதை மாற்றுவதால் படத்தின் தரம் கூடும் என்று தவறாக நினைக்கின்றனர்..
அப்படியெல்லாம் கிடையாது..
இவைகளை எல்லாம் மாற்றி படம் எடுப்பதால் வெளிச்சம்(exposure) மட்டும் மாறுமே தவிர , படத்தின் குவாலிட்டி இல்லை..
இவையெல்லாம் செய்வது ஒரே ஒரு வேலை தான்.. அது தான் exposure..
ஒரு சில விலை குறைவான கேமராக்களில் manual exposure mode எதுவும் இல்லாமல் வெறும் auto mode மற்றும் scene modes மட்டும் கொடுத்திருப்பார்கள்..
அந்த மாதிரி கேமராக்களில் நாம் எதுவும் செய்ய முடியாது ,அனைத்தும் கேமரா தான் சரி பார்க்கும்.. நம்மால் exposure ஐ விருப்பத்திற்கேற்ப மாற்ற இயலாது..
சரி, எல்லாம் கேமராவே பார்த்துக்கொள்கின்றதே பின் நாம் ஏன் exposure ஐ மாற்ற வேண்டும்?
அது ஏனென்றால், சில நேரங்களில் கேமரா, வெளிச்சத்தை சரியாக கணிக்காது..
பொதுவாக பலர் எதற்கு வம்பு என்று auto mode மற்றும் பல preset scene mode களில் மட்டுமே (விதவிதமா படம் போட்டிருக்குமே) படம் எடுப்பார்கள்..
இது ஒரு சில சிக்கலான வெளிச்சங்களில் உதவாது..
உதாரணமாக, இந்த படத்தில், சப்ஜெக்ட் இருக்கும் இடம் நிழலும் , பேக்கிரவுண்டில் நல்ல வெளிச்சமும் என இரு வித வெளிச்சங்கள் இருக்கின்றதல்லவா..
இதனால் கேமரா என்ன செய்யும் என்றால் ,அதன் advantage ஆக எங்கே வெளிச்சம் அதிகமாக இருக்கின்றதோ அந்த வெளிச்சத்தை அளவாக(exposure) தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.. இதனால் படம் மேலே உள்ளது மாதிரி சில சமயம் சொதப்பலாக வர வாய்ப்பு உண்டு..
அதேசமயம், பல நேரங்களில் தானாக safety க்காக in built flash போட்டுக்கொள்ளும்...
ஏன் ஃப்ளாஷ் போட்டால் நல்லது தானே? என்றால் அது எல்லா சமயங்களிலும் அப்படி கிடையாது..
பொதுவாக பலர் படம் விழுந்தால் போதும் என்று flash பயன்படுத்தி தான் படமெடுக்கின்றார்கள்..
கேமராக்களில் வரும் built in flash என்பது ஓரளவு தான் சக்தி வாய்ந்தது,அதே சமயம் நேருக்கு நேராக (direct flash) தான் இயங்கும்.
பல நேரங்களில், direct flash என்பது ரொம்பவே harsh ஆக தான் இருக்கும்..அதே சமயம் பல சிறிய கேமராக்களை பயன்படுத்தும் போது flash பவர் என்பது பத்தாது...
உதாரணமாக இந்த படத்தை பார்த்தால் flash னால் harsh ஆக இருப்பது தெரியும்..
( படம் : கருவாயன்)
இதனால் கிரியேட்டிவான ,வித்தியாச ஒளியமைப்பு என்பது auto mode ல் சில சமயம் வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது..
பொதுவாக நாம் in built flash பயன்படுத்தாமல் படம் எடுக்கும் போது ஒரு ரியாலிட்டி இருக்கும்..
இந்த படத்தை பார்த்தால் தெரியும்..
(படம் : கருவாயன்)
அது சில நேரங்களில் auto mode போட்டு எடுக்கும் போது வாய்ப்பு குறைவு.
அந்த மாதிரி ரியாலிட்டியான நல்ல படங்கள் வேண்டும் என்றால் அதற்கு auto mode ஐ தவிர வேறு வழிகளில் நாமே exposure ஐ அமைக்க முயற்சிக்க வேண்டும்..
அதே சமயம் வெளிச்சம் மிகவும் குறைவான நேரங்களில் flash இல்லாமல் படம் எடுப்பது சாத்தியமில்லை என்பதையும் நினைவில் வைக்கவும்.. மேலும் ஒரு சில நேரங்களில் வெளிச்சம் இருந்தாலும் flash பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கின்றது.. அதை பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்..
இவ்விரண்டு காரணங்களை தவிர இன்னும் பிற settings களும் நாம் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றம் செய்ய பழக வேண்டும்.. இதெல்லாம் auto mode ல் சாத்தியம் இல்லை..
ம்ஹூம் அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது, அதுக்கு நிறைய செட்டிங்ஸ் எல்லாம் அடிக்கடி மாற்றனுமே.. என்றெல்லாம் நாம் பயப்படத்தேவையில்லை..
அதற்கு auto mode மாதிரியே உள்ள ஒரு எளிதான வழி programme mode தான்..
இது மிகவும் எளிது..
என்ன , படம் மட்டும் ஆடாமல் எடுத்து பழக வேண்டும்.. அவ்வளவு தான்..
அது என்ன ,அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி அடுத்த பகுதியில் பார்க்காலாம்..
சந்தேகங்கள் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
நன்றி
கருவாயன்.
Subscribe to:
Post Comments (Atom)
அடுத்த பாகத்தை சீக்கிரம் போடவும்..
ReplyDeleteWaiting..
Next Eppa Boss ?????????????
ReplyDelete@வெங்கட் & ashokpriyan.... மிக விரைவில்..
ReplyDeleteஅடுத்து இன்னும் அதிகமாக....
ReplyDeleteநன்றி பாஸ்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
பதிவு ரொம்ப நல்ல புரிந்தது சார்.இன்னும் பல விஷயங்களை தரனும் நீக்க
ReplyDeleteHi! sir, please tell about the white balance, how do i set custom white balance in snap & video recording, all cameraman use thermacol sheet in front of camera while set the white balance, why? give your details sir, it wil help full.
ReplyDeleteExposure பற்றின எனது குழப்பங்களை மிக நன்றாகவே தீர்த்துவிட்டீர்கள்.. மிக்க நன்றி....
ReplyDelete