Tuesday, March 6, 2012

மீண்டும் மீண்டும் பிகாஸா

1 comment:
 
பிகாஸா பக்கம் சென்று பல நாளாகிவிட்டது. புதிய பிகாஸா வில்(Ver 3.9)  பல புதிய நல்ல வசதிகள் வந்துள்ளன. சில இங்கே.


  சட்டம் செய்வது பற்றிய முந்தைய பதிவில் பார்த்தை விட இப்ப மிக எளிதாகிவிட்டது.






இந்த இரண்டு முறையில் அழகான செய்துக் கொள்ளலாம்.

Border


Museum Matte





Vignette செய்வது பற்றி நாம் ஏற்கனவே இங்கே பார்த்து இருக்கிறோம். பிகாஸாவில் பல வண்ணதிலும் செய்துக் கொள்ளலாம்.



கருப்பு vignette:


வெள்ளை vignette:



எண் குறிப்பிடப் பட்டு இருக்கும் பொத்தான்களில் ( Sepia , B&W, Warmify)  ஒரு புது வசதி உண்டு. ஒவ்வொரு க்ளிக்கிற்கும் அந்தவிளைவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.



உதாரணதிற்கும். Sepia  ஒரு முறை அமுக்கினால இப்படியும்


முன்று முறை க்ளிகினால் படம் இப்படியாகவும் மாறும்.



SplitTone பற்றியும் நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இது பிகாசாவில் மிக எளிது.


முதல் வண்ணம் படத்தின் நிழற் பகுதிக்கு, இரண்டாவது வண்ணம் படத்தின் வெளிச்சப் பகுதிக்கும்.






இந்த முறையில் வண்ணப் படத்தை கருப்பு வெள்ளைக்கும் மாற்ற நிழற் பகுதிக்கும் கருப்பு வண்ணத்தையும் வெளிச்ச பகுதிக்கு வெள்ளையும் தெரிவு செய்த்டால் படம் இவ்வாறாக மாறும்.



பிகாசாவின் மிக முக்கிய வசதி .Retouch. 



இது கிட்டதட்ட Gimp Clone tool போல உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள மச்சம், பரு சிறு குறைகளை நீக்குவது எளிது.
உதாரணதிற்கு சிம்ரனின் trade mark ஆன மச்சதை எளிதில் நீக்கலாம்.




படத்தை பெரிதுப்படுத்திக் கொள்ளுங்கள். குறை நீக்க வேண்டிய இடத்தி விட் கொஞ்ச்ம பெரிய அளவில் தெரிவு செய்துக்கொண்டு மச்சத்தின் மேல் ஒரு க்ளிக்.


இனி இந்த இடத்தை நிரப்ப வேறு ஒரு பகிதியை தெரிவு செய்ய வேண்டும். எலிக் குட்டியை பக்கத்தில் ஓட விட்டு சரியான் ப்குதி வந்த உடன் இன்னுமொரு க்ளிக். அவ்வளவுதான். மச்சம் மறைந்து விடும். 



இது போல பொட்டையும் நீக்கி விடலாம்.




பொட்டில்லா, மச்சமில்லா ( அழகில்லா ? ) சிமரன்






.


1 comment:

  1. நல்ல பகிர்வு ஆனந்த். கூடுதல் வசதிகள் அசத்தலாக உள்ளன:)!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff