Saturday, March 10, 2012

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம்:4.. programme mode மற்றும் exposure compensation

14 comments:
 
வணக்கம் நண்பர்களே..

இதற்கு முந்தைய பகுதிகள்

1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1..
2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2.. கேமராக்களை எப்படி பிடிப்பது?
3. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 3.. Exposure என்றால் என்ன?

பொதுவாக மக்கள், கேமராக்களில் உள்ள settings களை பயன்படுத்தத்தெரியாமல் பயந்து போய் அநேகம் பேர் auto mode பயன்படுத்துகின்றனர்.. ஆனால் இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது..

safety யாக படம் மட்டும் வந்தால் போதும் என்று படமெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் auto mode போதும்..ஆனால் கொஞ்சம் மாற்றி வித்தியாசமாக ஒளிகளில் எடுக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும்..

அவர்களுக்கு மாற்றாக ஒரு எளிய வழி `programme mode`..

PROGRAMME MODE :

இதுவும் auto exposure தான்.. auto mode ல் உள்ளது போல் கேமராவே exposure ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.. ஆனால், வெளிச்சம் தவறாக வந்தால் ,வெளிச்சத்தை நாமே விருப்பம் போல் மாற்றம் செய்யலாம்..auto mode ல் அப்படி மாற்றம் செய்ய முடியாது..

exposure என்பதை இரு விசயங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன..

அவை,
aperture
shutter speed.

(இவைகளை பற்றி விரிவாக பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்..)

அவ்விரண்டையும் வெளிச்சத்திற்கேற்ப நாம் மாற்ற வேண்டும்..
அப்படி மாற்றும் போது settingsற்கு தகுந்தாற்போல் exposure அதிகமாகவோ, குறைவாகவோ ,சரியாகவோ மாறும்.. இதை தான் நாம் manual mode களில் கவனித்து மாற்றம் செய்ய வேண்டும்..

சரி, அது சிரமம், இந்த மாதிரி மாற்றுவதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று நினைத்தால், அதற்கு எளிதான ஒரு மாற்று வழி `programme mode` தான்.

இந்த mode ல் aperture மற்றும் shutter speed இரண்டையும் கேமராவே பார்த்துக்கொள்ளும்.. அதனால் நமக்கு சிரமம் இருக்காது..

சரி, auto mode ம் இதே மாதிரி தானே ? என்றால் அது கிடையாது..

auto mode ஐ பொறுத்தவரையில் நம் கையில் எதுவுமே இல்லை,
பட்டனை அமுக்கி படம் எடுப்பது மட்டும் தான்,

shutter speed , aperture தவிர ,இன்னும் பிற செட்டிங்ஸ்களான,
ISO
white balance
focus point selection
metering
flash control
(இந்த settings களை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பின் வரும் பகுதிகளில் பார்க்கலாம்..)

போன்ற பிற முக்கிய செட்டிங்ஸ்கள் அனைத்தையுமே கேமராவே auto mode ல் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்..

இது சில நேரங்களில் தவறாக வந்துவிடும் வாய்ப்பு உள்ளது என்பதால் semi auto வான programme mode ஒரு எளிய முறையாகும்
..

auto mode ல் வெளிச்சம் தவறாக வந்தால் மாற்றுவது சிரமம்..ஆனால் programme mode ல் தவறாக வந்தால் மாற்றிக்கொள்ளலாம்..

programme mode ல் , aperture மற்றும் shutter speed இவ்விரண்டை மட்டும் கேமரா பார்த்துக்கொள்ளும்..
மற்ற settings அனைத்தும் நம் விருப்பத்திற்கேற்ப நாமே மாற்ற வேண்டும்.. அது பெரிய சிரமம் இல்லை...








மேலே உள்ள படத்தில் இருக்கும் P என்கிற எழுத்து தான் programme mode..

இதில் அமைத்து விட்டு, நாம் செய்ய வேண்டியது படம் எடுப்பது தான்..

மற்றவை எல்லாம் exposure ற்காக நாம் கவனித்து செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்,

அது Exposure compensation...


EXPOSURE COMPENSATION :

இது கிட்டதட்ட அனைத்து கேமராக்களிலும் இந்த மாதிரி கொடுத்திருப்பார்கள்..







ஒரு சில சிறிய கேமராக்களில் (+/-) direct button இருக்காது..
அவர்கள் மெனுவிற்குள் சென்று தான் மாற்றம் செய்யவேண்டும்..


இந்த பட்டனை அமுக்கினால் படம் :2 ல் உள்ளது போல் ஒரு value தெரியும்..

இதில் 0 என்று வைத்துக்கொண்டு படமெடுத்து பார்க்கவும்... அப்படி எடுத்த பின்

இதை நாம் சரியாக வெளிச்சத்திற்கு தகுந்த மாதிரி இதை மட்டும் + 0 - என்று நமது விருப்பதிற்கேற்ப மாற்றி கொண்டால் போதும்..

மற்றவை எல்லாம் படத்தை ஆடாமல் எடுத்தால் போதும்..


Exposure compensation ஐ எப்படி பயன்படுத்துவது?


உங்கள் கேமராவில் programme mode பட்டனை போட்டுக்கொள்ளுங்கள்..

பின்பு, படத்தை எடுக்கவும் , பின் LCD யில் பார்க்கவும்..

படம் சரியான வெளிச்சத்தில் வந்தால் , உதாரணத்திற்கு இந்த படம்...(இதை programme mode ல் எடுத்தது )


மீண்டும் நாம் ஒன்றும் செய்ய தேவையில்லை.. அவ்வளவு தான் ..

வெளிச்சம் குறைவாகவோ, அதிகமாகவோ வந்தால் மட்டும் exposure compensation ஐ மாற்றி பயன்படுத்தினால் போதும்..

அப்படி இதை பயன்படுத்தும் போது கேமராவில் கீழே படத்தில் (படம்1 & 2) உள்ள மாதிரி (+ 0 -) என்று ஒரு value கொடுக்கப்பட்டிருக்கும்..

இதில் 0 என்பது சரியான அளவு வெளிச்சம் , + என்பது அதிக வெளிச்சம் , - என்பது குறைவான வெளிச்சம் என்று கருதப்படுகின்றது..

இது ஒரு அளவு , அவ்வளவு தான். இது வெளிச்சத்திற்கு தகுந்தாற் போல் மாறுபடும்..

சில நேரங்களில் + அல்லது - எனபது கூட 0 வை விட சரியான வெளிச்சமாக இருக்கும்..


over exposure:





படம் இந்த மாதிரி அதிக வெளிச்சத்தில்(over exposure) வந்தால், நாம் வெளிச்சத்தை குறைக்கவேண்டும் இல்லையா..

கேமராவில் (+ / -) என்று இருக்கும் exposure compensation பட்டனை அமுக்கினால் கீழே உள்ளது போல் தெரியும்.. இது கேமராவுக்கு கேமரா மாறுபடும்...


DSLR கேமராக்களில்:

(படம் :1 )

சிறிய வகை கேமராக்களில்:
(படம் : 2)




பின்பு ,( - )பகுதிக்கு நாம் அளவை குறைக்க வேண்டும்.. தேவைக்கேற்ப ஒவ்வொரு பாயிண்டாக குறைக்கலாம்..

நமக்கு எந்த - value ல் வெளிச்சம் சரியாக வருகின்றதோ அதை வைத்துக்கொள்ளலாம்..

Over exposure ன் தேவைகள் :

அதே சமயம், இந்த over exposure ம் ஒரு சில நேரங்களில் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்...

அது இந்த படங்களை பார்த்தால் புரியும்..


இந்த படத்தை 0 exposure compensation ல் வைத்து எடுக்கப்பட்டது..

ஆனால் இரு வித வெளிச்சங்களினால் படம் under exposure ஆகிவிட்டது..
இந்த மாதிரி இரு வித வெளிச்சங்களில் ,படம் சில சமயம் சப்ஜெக்ட் இருட்டாக தான் வரும்..

இந்த மாதிரி படங்களை ஃப்ளாஷ் இல்லாமல் எடுக்க வேண்டுமென்றால் , தேவைக்கேற்ப exposure ஐ + செய்தால் கீழே உள்ள படம் போன்று நமக்கு வெளிச்சம் கிடைக்கும்..

இந்த படம் + 1.0 value வில் எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த மாதிரி நேரங்களில் over exposure என்பது தேவையாக இருக்கின்றது..




under exposure:

படம் இந்த மாதிரி குறைவான வெளிச்சத்தில் அமைந்தால் ,



+ பகுதிக்கு நாம் அளவை அதிகரிக்க வேண்டும்.




அவ்வளவு தான் நாம் செய்ய வேண்டியது..

Under exposure ன் தேவைகள் :

ஒரு சில சமயம் under exposure ஐ சரியாக பயன்படுத்தினால் ஒரு க்ரியேட்டிவிட்டியான லைட்டிங்குடன் படம் கிடைக்கும்..

உதாரணத்திற்கு இந்த படங்கள்.

இந்த படம் programme mode , exposure compensation 0 exposureல் வைத்து எடுக்கப்பட்ட படம்.. ஜன்னல் அருகே வந்த வெளிச்சத்தில் எடுத்தது.. exposure compensation அளவு 0 என்பது சரியான அளவாக சொல்லப்பட்டாலும் , இந்த இடத்திற்கு அதிகம் என்பது படத்தை பார்த்தால் புரியும்...



அதே இடத்தில் -0.7 அளவு குறைத்து எடுத்தது கீழே உள்ள படம்.. exposure compensation value ஆனது under exposure ஆக இருந்தாலும் இந்த இடத்திற்கு இது தான் வெளிச்சம் சரியாக இருக்கின்றது அல்லவா..




அதே மாதிரி கீழே உள்ள இம்மாதிரியான silhouette படங்களை எடுக்க வேண்டுமென்றாலும் சில சமயம் under expose செய்து தான் எடுக்க வேண்டும்..

உதாரணமாக, இப்படம் +0.3 exposure ல் எடுத்தது..வெளிச்சம் சரியாக இருந்தாலும் படம் சாதாரணமாக தெரிகின்றது அல்லவா..



அதே இடத்தில் under expose செய்து எடுக்கப்பட்ட படம் இது..(கொஞ்சம் processingம் செய்யப்பட்டுள்ளது) படம் ஸிலுயெட்(silhouette) ஆகி பார்ப்பதற்கு ஈர்பதாக இருக்கும்..






அதே சமயம் dark and bright படங்களை எடுக்கும் போதோ, வெள்ளை subject ஐ எடுக்கும் போதோ 0 value வில் எடுத்தால் dark இடம் நன்றாக வந்தாலும் சில சமயம் ஓவர் வெளிச்சம் bright இடங்களில் வந்துவிடும் ஆபத்து உள்ளது...

அந்த மாதிரி இடங்களில் under expose சரியாக வரும்..

உதாரணமாக இந்த மாதிரி dark and bright படம்.. இப்படம் -1.3 அளவு குறைத்து எடுக்கப்பட்டதால் இந்த effect கிடைத்துள்ளது...


Add Image
Remove Formatting from selection
(படங்கள் : கருவாயன்)

இவ்வாறு exposure compensation ஐ மாற்றி மாற்றி எடுத்து பழகினால் , நமக்கு எது சரியான வெளிச்சம் என்று எளிதாக கேமராவில் பழகிவிடும்.. பிறகு இதை பயன்படுத்துவது எளிதாகி விடும்..

கவனிக்க வேண்டியவை:
  • + 0 - value வில் இது தான் சரியான அளவு என்றெல்லாம் கிடையாது.. +1.0,-1.0,+0.7.-0.3 இப்படி எப்படி வேண்டுமானாலும் இடத்திற்கு தகுந்தாற்போல் இருக்கலாம்.. பார்ப்பதற்கு எந்த value சரியோ,அதை தேர்ந்தெடுக்கலாம்..

  • இந்த மாதிரி exposure compensation ஐ மாற்றும் போது exposure(aperture , shutter speed) அளவு மாறும்...


  • இதை தான் manual mode ல் தனித்தனியாக மாற்றுவோம்.. ஆனால் programme mode ல் (+ 0 -) பட்டனை பயன்படுத்தி எளிதாக மாற்றுகின்றோம்.. அவ்வளவு தான்..


  • இவையெல்லாம் தெளிவாக எடுப்பதற்கு கண்டிப்பாக வெளிச்சம் வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.. வெளிச்சம் இல்லையென்றால் வேறு வழியே இல்லை flash போட்டுத்தான் ஆகவேண்டும்..இல்லை, natural light ல் தான் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக வெளிச்சம் வேண்டும்.. இல்லையென்றால் வேலைக்காவாது..


  • flash இல்லாத, இயற்கையான வெளிச்சத்தில் படம் வேண்டும் என்றால் கண்டிப்பாக shutter speed என்பது குறைந்தது 1/30 secs ஆவது இருக்க வேண்டும்..இதற்கும் மேல் எவ்வளவு இருக்கின்றதோ அவ்வளவு நல்லது.. இதற்கு கீழ் எவவளவு இருந்தாலும் , இதே mode ஐ பயன்படுத்தி flash மட்டும் on செய்து படமெடுக்கவும்...இதை படம் எடுக்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டும்..இந்த படத்தை பார்த்தால் புரியும்..
  • இல்லையென்றால் flash இல்லாமல் எப்படி எடுத்தாலும் படம் blur ஆக தான் வரும்.. இது கேமரா LCD யில் சில சமயம் கண்டுபிடிக்க முடியாது.. எனவே கவனம் தேவை..

  • பெரும்பாலோனோர் வீட்டிற்குள்ளேயே படம் எடுக்கின்றனர்.. என்ன தான் tube light எல்லாம் போட்டு வெளிச்சத்தை கூட்டினாலும் ,அவர்களுக்கு வீட்டிற்குள் வெளிச்சம் கிடைக்கவே கிடைக்காது.. அப்படி படம் எடுக்கும் போது கண்டிப்பாக படம் blur ஆக தான் வரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை..அதாவது INDOORல் படம் எடுக்கும் போது இந்த மாதிரி எடுக்கும் போது எச்சரிக்கையாக எடுக்க வேண்டும்.. fast lens ஐ தவிர வேறு லென்ஸ்களை பயன்படுத்தும் போது ரிஸ்க் வேண்டாம்..

  • எனவே வீட்டை விட்டு வெளியே வாருங்கள் , வெளிச்சத்தில் படமெடுங்கள்.. வீட்டிற்குள்ளேயே தான் வேண்டும் என்றால் சிறிய கேமராக்களில் flash இல்லாமல் எடுப்பது சிரமமே..


சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ..

மேலே சொன்னதெல்லாம் குழப்பமாக,புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கின்றதா ? அப்படியென்றால் இதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்..

programme mode போட்டுக்கொள்ளுங்கள்...
exposure compensation ஐ பயன்படுத்தி + அல்லது 0 அல்லது - இந்த value வில் உங்களுக்கு எது பிடித்த மாதிரி படம் வருகின்றதோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் ,
அவ்வளவு தான்...



சரி, இந்த programme mode நல்லது என்றால் மற்ற mode கள் எல்லாம் நல்லது இல்லையா? சிலர் manual mode தான் சிறந்தது என்று கூறுகின்றார்களே? பிறகு எதற்கு அத்தைனை mode கள் கேமராக்களில் கொடுத்துள்ளார்கள்? போன்ற கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் விளக்கமாக பார்ப்போம்..

நன்றி
கருவாயன்

14 comments:

  1. அருமையாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள்.நல்லாவே புரிந்தது.உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் தக்க படங்கலுடன் எடுத்து காட்டுடன் விளக்குகிரீகள் இது மாதிரி வேறுயாராலும் இலவசமாக சொல்லி தர முடியாது.உஙக்ள் அனைத்து உறுப்பினருக்கும் எனது பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமை சார்... இதை இவ்வளவு எளிதாக யாரலும் விளக்க முடியாது என நினைக்கிறேன்...! உங்களது பதிவுகள் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துவருகிறது...

    ReplyDelete
  3. கைய குடுங்க சார்... பல நாள் குழப்பத்தை சில நிமிடங்களில் தீர்த்து விட்டீர்கள்...சூப்பர்...

    ReplyDelete
  4. நல்லது செய்து விட்டீர், எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது...

    .நன்றி

    ReplyDelete
  5. Sir thanks Very informative post
    and try to post about silhouette photography
    AgriMarruthu
    Coimabtore
    (I am a new user for Fuji HS20)

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  7. நன்றி சுரேஷ். தொடர்ந்து எழுதுங்கள். இந்தமுறை ரொம்ப விளக்கமாக புரியும்படி எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  8. நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...!!!
    நல்ல பயனுள்ள பதிவு.வாழ்த்துகள!

    ReplyDelete
  9. நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. எளிமையாகவும் இருக்கிறது. நன்றி..!!!

    ReplyDelete
  10. Could you please explain about Rarindra Effect in next posts. I saw some photos in web and it looks awesome.

    Please see the links below:
    http://digital-photography-school.com/forum/post-processing-printing/56170-rarindra-effect-help-please.html

    http://photo.net/photos/rarindra

    ReplyDelete
  11. மிக அருமை....மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நன்றி...பதிவுகளை தொடருங்கள்...
    அருமையான விளக்கங்கள் ....

    ReplyDelete
  12. You are great sir... AM getting very clear...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff