Monday, March 26, 2012

கருப்பு வெள்ளை - முதல் பத்து + 2 - மார்ச் 2012

5 comments:
 
கலர் படத்தை desaturate பண்ணா கருப்பு வெள்ளை படம். இதுல என்ன பெரிய சவால்? இப்படியாகத்தான் ஆரம்பித்தது நண்பர்களின் கேள்வி.

வண்ணப் படத்தில் நீங்கள் சொல்லவரும் காட்சிகளில் கருத்துகளை வண்ணம் நீர்க்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. Focus of attraction Moves as per the color. கருப்பு வெள்ளையில் அந்த பிரச்சினை இன்றி நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்ல முடியும். மேலும் முகபாவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அதிக அழுத்தம் கருப்பு வெள்ளைப் படங்களால் தர முடியும்.

ஆனால் வெறுமனே Desaturate செய்தால் போதுமா ? போதாது என்கிறது வந்துள்ள படங்கள்.

கருப்பு, வெள்ளை, சாம்பல் ( Gray ) இவற்றின் கலவை தான் அல்லவா இந்த கருப்புவெள்ளை படங்கள். வெறுமே படங்களை எடுத்துக் கொண்டு வெறுமனே கருப்பு வெள்ளைக்கு மாற்றுவது will not suffice to enable needed punch in the photo. தேவையான இடத்தில் கருப்பு/வெள்ளை/சாம்பல் சரியான அளவில் இருக்க வேண்டும். தேவையான இடங்களில் Shades சரியாக அமையாமல் போனால், சரியான ஷார்ப்னெஸ் கிடைக்காமல் போனால், அவை பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற கணக்கில் போய்விடும்.

பல பேர் நல்ல படங்கள் எடுக்கிறீர்கள். இதில் ஆரம்பம் தொட்டே தொடர்ந்து பங்கு பெறும் பலரும் ஒரு சிறிய விஷயங்களில் கோட்டை விடுகிறீர்கள். துலக்கத் துலக்க பித்தளையும் தங்கமாகும். அது போல நம் புகைப்படங்களில் எங்கே தவறுகள் செய்கிறோம் என்று கவனித்து அதை சரி செய்தால் போதும். மிக அழகிய புகைப்படக் கலைஞராக உங்களை அது மாற்றிவிடும்.

கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் நன்றாக வந்திருக்கும் என்று நினைத்த படங்களை ஆல்பத்திலேயே எடிட் செய்து போட்டிருக்கிறேன்.

மற்றுமொரு வேண்டுகோள். போட்டி பதிவில் சொன்னது போல தயவு செய்து 1024x768 அளவுக்கு படம் அனுப்புங்கள். அதை விட அதிகம் வேண்டாமே ப்ளீஸ்.

சரி இப்போது முதல் பத்தில் வந்த படங்களை பார்ப்போம். ( Not in any order )


செல்வா :


வருண் :


தாமோதர் சந்த்ரு :


நித்தி கிளிக்ஸ்:


சவுந்தரராஜன் ஜீவரத்னம் :



சக்திவேலன் :


சத்தியா :



தருமி :



சிகாமணி :




கவிதா :




கலியபெருமாள் :


முதன் முறையாகப் போட்டியில் கலந்து கொள்கிறார். விதிமுறையை சரிவரக் கவனியாமல் இரண்டாவது என்ட்ரியாக அனுப்பியிருந்த படம். இருப்பினும் படம் சிறப்பாக இருந்தபடியால் ஊக்கம் அளிக்கும் விதத்தில் முதல் சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறது.

ஜெரால்ட் :




முதல் மூன்றுக்கான அடுத்த பதிவு விரைவில்...

5 comments:

  1. நல்ல தேர்வு..நடுவர் அவர்களுக்கு நன்றி..தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...என்னுடைய படத்தை முதல் சுற்றிற்கு தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கு நன்றிகள் பல...

    //மற்றுமொரு வேண்டுகோள். போட்டி பதிவில் சொன்னது போல தயவு செய்து 1024x768 அளவுக்கு படம் அனுப்புங்கள். அதை விட அதிகம் வேண்டாமே ப்ளீஸ்.//


    அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள அளவிற்க்கு மிகாமல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  2. Can you please give your professional comments about my photograph? It would help me a lot to learn and improve...

    ReplyDelete
  3. nice nativity selection.superb.
    actually for this மனிதனும் மிருகமும் கருப்பு வெள்ளையில் contest challenges was not only changing color to B&w. real challenge was find out the man and animal-together.it was very difficult. but every contest not only the contest for beginners like as me-it's kind of workshop.lot of new thing learning in every contest.Great!!!

    ReplyDelete
  4. அத்தனை படங்களும் அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff