Thursday, March 1, 2012

மனிதனும் மிருகமும் கருப்பு வெள்ளையில் - மார்ச் - 2012

15 comments:
 
வணக்கம் மக்களே,
ரொம்ப நாளாச்சுங்க உங்களை இங்க சந்திச்சு. நேத்து ஒரு நண்பர் கிட்ட பேசிட்டு இருக்கும் போது கருப்பு வெள்ளையில் படம் எடுக்கறது பத்தி சில குறிப்புகள் கேட்டாருங்க. சரி தெரிஞ்சத சொல்லி வச்சேன். அவரு கிட்ட சொன்னத உங்க கிட்டயும் சொல்றேன். சரிங்களா ?

1 - உங்க கிட்ட இருக்கிற கேமரால கருப்பு வெள்ளை மோட் இருந்தாலும், கலர்ல முதல்ல போட்டோ எடுத்துக்கோங்க. பின்னாடி அதை கருப்பு வெள்ளைக்கு மாத்திடுங்க. கேமரால நேரடியா கருப்பு வெள்ளையில எடுக்கலாம் தான். ஆனா அது "Pre-Processed" ஆ இருக்கறதால அதிகம் ப்ராஸஸ் பண்ண முடியாது. கலர்ல எடுத்து மாத்தும் போது தேவையான "Editing" சுதந்திரம் கிடைக்கும்

2 - போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் கலரை கண்ணுல இருந்து மறைச்சுட்டு, இது கருப்பு வெள்ளையில் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க. ஏன்னா எல்லா வண்ணப் புகைப்படங்களுமே கருப்பு வெள்ளையில் மாத்தும் போது அழகா இருக்கனுங்கற அவசியம் இல்லை

3 - ஐ.எஸ்.ஓ செட்டிங் எவ்வளவு குறைவா வச்சு எடுக்க முடியுமோ அவ்வளவு குறைவா வச்சு எடுங்க. நிறைய டீடெயில்ஸ் கிடைக்கும். "ISO Noise " சேர்த்தா நல்லா இருக்கும்னு நினைச்சீங்கன்னா அதை போஸ்ட் ப்ராசசிங்க செய்யுங்க. ரிசல்ட் அருமையா இருக்கும்.


4 - "RAW" மோட் உங்க கேமரால இருந்தால் அதை உபயோகப் படுத்திக்கோங்க. சப்ஜெக்ட் மீதான டீடெயிலிங்க்கு அது நிறைய உதவும். உதாரணத்துக்கு கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.

(Photo courtesy : http://www.digital-photography-school.com/wp-content/uploads/2007/02/black-and-white-tips.jpg )

5 - வழக்கமான ஒண்ணு தான். காலை மாலை வேளைகளில் புகைப்படம் எடுப்பது நல்லது. உங்களோட கற்பனைக் குதிரையத் தட்டி விடுங்க. தறிகெட்டு ஓடட்டும்.


சில எடுத்துக் காட்டுப் படங்கள்.


படம் : சுரேஷ் பாபு (எ) கருவாயன்.
படம் : சுரேஷ் பாபு (எ) கருவாயன்.



படம் : இராமலக்ஷ்மி



படம் : இராமலக்ஷ்மி


படம் : இராமலக்ஷ்மி

படம் : இராமலக்ஷ்மி


படம் : இராமலக்ஷ்மி

படம் : MQN


படம் : MQN




இனிமே... மக்களே உங்க சமத்து!.


விதிமுறைகள் இங்கே

கடைசித் தேதி: மார்ச் - 20.

ஜமாய்ங்க!

*****

முக்கிய அறிவிப்பு: [4 மார்ச் 2012]

நண்பர்களே, படங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் ஐடியில் மாற்றம் அறிவித்திருக்கிறோம். விதிமுறைப் பதிவிலும் கீழ்வருமாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது:

படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com .
  • இதுவரையிலும், அதாவது இன்று 4 மார்ச் 2012 வரை ஏற்கனவே பழைய ஐடிக்கு அனுப்பி விட்டிருந்தவர்களின் படங்கள் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுவிடும்.
  • பலர் File size பெரிய அளவில் இருக்குமாறு படங்களை அனுப்புகிறீர்கள். அவை போட்டி ஆல்பத்தில் சேருவதில் சிரமம் ஏற்படுகிறது. 1024x768 எனும் அளவில் படங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது.


***




15 comments:

  1. மிரட்டலாயிருக்கு முதல் படம்.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அனைத்து படங்களும் அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. one doubt! பறபன,ஊர்வன ,நீந்துவன பயன்படுத்தலாமா ?

    ReplyDelete
  4. @ Varun Shankar,

    வலது மேல்பக்கம் இம்மாதப் போட்டிப் படங்கள் கொண்ட பிகாஸா ஆல்பத்தின் ஸ்லைட் ஷோ உள்ளது.

    ReplyDelete
  5. படத்தை அனுப்பி விட்டேனே.. மீண்டும் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  6. தமிழ் வாசகன்March 9, 2012 at 4:24 PM

    அனைவருக்கும் வணக்கம்
    தமிழில் புகைப்பட கலை பற்றிய அருமையான வலைப்பூ. இங்குள்ள தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. விரைவில் அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்ள உள்ளேன். மிக்க நன்றி

    ReplyDelete
  7. @ sathi,

    நிலத்தில் வாழும் ஊர்வன அனுப்பலாம். பறப்பன, நீந்துவன தவிர்க்கவும்.

    -----------------------

    மேலும் சில மாதிரிப் படங்களும் குறிப்புகளும் இங்கே.

    ReplyDelete
  8. நன்றி.. உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது . interesting ! குறிப்பாக "Gray" பற்றிய விளக்கம்.

    ReplyDelete
  9. மனிதனும் மிருகமும் கருப்பு வெள்ளையில் - மார்ச் - 2012 PIT போட்டிக்கான எனது புகை படத்தை அனுப்பியுள்ளேன்.
    ----------------
    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. I don't know how to reduce my file size. can you please tell me how it should be done? Thanx

    ReplyDelete
  11. போட்டிக்கு புகைபடம் அனுபியுள்ளேன் ..புது email id என்பதால் சற்று சந்தேகமாகவே அனுபியிள்ளேன் .
    நன்றி .

    ReplyDelete
  12. @ Gowri,
    இதை பல மென்பொருட்கள் வாயிலாகச் செய்யலாம். எளிதாக ஒரு வழி மட்டும் குறிப்பிடுகிறேன். Irfanview மென்பொருளை கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட படத்தை அதில் திறந்து image----resize/resample தெரிவு செய்தால் திறக்கிற பெட்டியின் வலப்பக்கம் New Size எனக் கிடைக்கிற ஆப்ஷனில் 1024x768 pixels என்பதை தெரிவு செய்து ok சொல்லி படத்தை சேமியுங்கள்.

    ReplyDelete
  13. Thank you very much!!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff