Thursday, March 29, 2012

சவால் போட்டியில் வென்ற முத்துக்குமாரின் பகிர்வு

7 comments:
 
முதலிடத்திற்கு எனது படத்தை தேர்வு செய்தமைக்கு நன்றிகள்! புகைப்படம் எடுத்த அனுபவத்திற்கு முன்னால் PIT குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். புகைப்படக் கலை பற்றி அறிய இணையத்தில் நிறைய ஆங்கிலத் தளங்கள் இருந்த போதிலும் சில தொழில்நுட்பங்களை விளங்கிக் கொள்ளவதில் சிரமம் இருந்தது. தமிழில் இதை விளக்கினால் நன்றாகப் புரியும் என்ற தேடலில் கிடைத்த தோழமைதான் PIT. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

PITஐ எனக்கு அறிமுகப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர் சதீஷ்க்கு நன்றிகள்.

"கண்ணாடிப் பேழை" சவால் போட்டிக்கான தலைப்பை பார்த்ததுல இருந்து ஒரு கண்ணாடியை விட்டு வைக்கலை. Indoorல எடுத்த பல படங்கள்ல நல்ல பிரதிபலிப்பு தெரிஞ்சதுனா உள்ளே இருக்கும் பொருட்கள் சரியா தெரியலை. அதனால இந்த தலைப்புக்கு அவுட்டோர் காட்சிதான் சரியா இருக்கும்னு போனப்பதான் இந்த காட்சி கண்ல பட்டது:

சிங்கப்பூரின் ராஃபெல்ஸ் சிட்டியில் அமைந்திருக்கும் "Popeyes" ரெஸ்டாரண்டின் பின் வாசலின் வெளியே நின்று எடுத்த படம். இங்கு முதலில் படம் எடுத்த போது மாலை 6 மணி. ஆனால் அஸ்தமிக்கும் சூரிய வெளிச்சம் கண்ணாடியில் பிரதிபலித்து உள்ளிருக்கும் காட்சியின் தெளிவை மறைத்து விட்டது. எந்தவித இணைப்பும் இல்லாமல் படர்ந்திருக்கும் கண்ணாடியின் பிரதிபலிப்பை விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே காத்திருந்து இரவு 7:15 க்கு எடுத்த படம்தான் இது. சிங்கப்பூரில் இரவு 7 மணிவரை சூரிய வெளிச்சம் இருக்கும். அந்த மாலை நேரத்து நீலநிற வெளிச்சம் கண்ணாடியில் வெளிப்புற காட்சி பிரதிபலிப்பிற்கு அருமையாக உதவ உட்புறகாட்சிக்கு ரெஸ்டாரண்ட்டின் ஆரஞ்சு வண்ண விளக்குகள் துணைபுரிந்தன.

படத்தை crop செய்வதற்கு மட்டுமே photo editor உபயோகித்தேன் மற்றபடிஎந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிறச்சேர்க்கை முழுக்க முழுக்க சூரியன் மற்றும் நியான் விளக்கின் ஒளிக் கலவைதான்.

காரமுந்திரியின் முந்தய எட்டு பாகங்களும் ஒளி பற்றி அறிய மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒன்பதாம் பாகத்திற்காக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

நன்றிகளுடன்,
முத்துக்குமார்.







வாழ்த்துகள் முத்துக்குமார்!

விரைவில் இரண்டாம் பரிசு பெற்ற ரம்யா சந்திரகாந்தனின் பகிர்வும் வெளியாகும்.

-PiT




தொடர்புடைய பதிவுகள்:
1. கடைவீதியில் ஓர் கண்ணாடிப்பேழை - 'ஒளி' பாடத்திற்கு ஒரு போட்டி

2. ‘கண்ணாடிப் பேழை’ சவால் போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து

3. சவால் போட்டியில் வென்றவர்கள்

7 comments:

  1. அருமை.அருமை.அழகான பொருத்தமான படம்.

    ReplyDelete
  2. சாதாரணமா போட்டியில் வெல்லும் படங்கள் நேரம் கொடுத்து உழைக்கிறவங்க படங்களாவே இருக்கு! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அருமையான உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .சில படங்கள் விளக்கம் வேண்டியிருக்கும் .சில தன்னை பற்றி தானே சொல்லும் .அது உங்களுடையது .அருமை

    ReplyDelete
  4. வாய்ப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. பிரம்மிப்பை ஏற்படுத்தும் படங்கள்..வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff