Tuesday, March 20, 2012

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம் - 5 .. பல்வேறு SCENE MODES

14 comments:
 
வணக்கம் நண்பர்களே..

இதற்கு முந்தைய பகுதிகள்:

1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1..
2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2.. கேமராக்களை எப்படி பிடிப்பது?
3. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 3.. Exposure என்றால் என்ன?
4. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 4.. Exposure compensation..


இந்த பகுதியில்,

Programme mode ல் படம் நன்றாக வரும் என்றால் , எதற்கு manual mode , aperture mode மற்றும் பல்வேறு modeகள் எல்லாம்?

கேமராவில்,

manual mode,
aperture priority mode ,
shutter speed mode ,
programme mode

தவிர கிட்டதட்ட அனைத்துமே pre - programmed தான்..

Exposure ஐ பொறுத்தவரையில் இரண்டு விசயங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன..அவை apeture மற்றும் shutter speed.. இவ்விரண்டையும் மாற்றி மாற்றி வெளிச்சத்திற்கேற்ப அமைப்பது தான் நமது வேலையே...

இதில்,

Manual mode:




பயன்படுத்தும் போது நம்மிடம் shutter speed மற்றும் aperture இவ்விரண்டும் நமது கண்ட்ரோலில் தான் இயங்கும்.. இதில் இரண்டையும் கண்டிப்பாக நாம் தான் வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் மாற்ற வேண்டும்.. இவை தவிர மற்ற அனைத்து செட்டிங்ஸ்களையும் நாமே தான் ஒவ்வொரு தடவையும் மாற்றம் செய்ய வேண்டும்..

சுருக்கமாக சொன்னால் ,இந்த mode ல் கேமரா ஒரு வேலையும் பார்க்காது.. எல்லாமே நாம் தான்..

Programme mode:




என்பது, ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த இரண்டை (aperture மற்றும் shutter speed) மட்டும் கேமராவே பார்த்துக்கொள்ளும்.. மற்ற செட்டிங்ஸ் எல்லாம் நாம் தான் பார்த்து மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும்..



Aperture mode:



இந்த mode பயன்படுத்தினால், aperture ஐ நாம் மாற்றிக்கொள்ளலாம்..shutter speed ஐ கேமராவே பார்த்துக்கொள்ளும்..

நாம் தேர்ந்தெடுக்கும் aperture ற்கு தகுந்தாற்போல் , வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதற்கேற்றார் போல் shutter speed ஐ கேமராவே பார்த்துக்கொள்ளும்.

மற்ற settings அனைத்தும் நாம் தான் பார்க்கவேண்டும்..

Shutter speed mode :



என்பதில் shutter speed ஐ நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்.. aperture ஐ கேமரா பார்த்துக்கொள்ளும்..

அதே சமயம் மற்ற செட்டிங்ஸ் அனைத்தும் நாம் தான் பார்க்க வேண்டும்..

முக்கியமான இந்த (P,A,S,M) mode களை தவிர , இப்பொழுதெல்லாம் பற்பல pre set mode கள் நிறைய இருக்கின்றன... அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

Preset scene modes :

இவைகள் எல்லாம் கிட்டதட்ட auto mode மாதிரி தான்.. எல்லா விசயங்களும் கேமரா தான் தீர்மானிக்கும்..

ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு mode லும் மாறுபட்டு exposure அமைக்கும் ..

இந்த mode கள் எதற்காக என்றால் , பலரும் படம் எடுக்கும் போது auto mode லேயே படமெடுப்பதால் ஒரு சில இடங்களுக்கு அது சொதப்பும்.. கொஞ்சம் மாற்றி எடுக்க ஆசைப்படுபவர்கள், ஒவ்வொரு தடவையும் கவனிக்க தெரியாதவர்களுக்கு உதவவே இந்த pre set scence mode கள் கேமராக்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன..







அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்..

Macro mode:



இந்த மோட் ஐ பயன்படுத்தும் போது நம்மால் ஒரு சப்ஜெக்டிற்கு மிக அருகிலேயே லென்ஸ் ஃபோகஸ் செய்ய முடியும்.

ஒரு சில சிறிய கேமராக்களில் கிட்டதட்ட வெறும் 2mm வரையில் கூட ஃபோகஸ் ஆகும் திறன் உண்டு..

அதே சமயம், அப்படி மிக அருகில் சென்று படம் எடுக்கும் போது வெளிச்சம் தடைபடும் , மேலும் depth of field ம் மிகவும் குறைந்து விடும்.. இதனால் flash தானாக open ஆகிவிடும், f number (aperture) ம் அதிகமாகிவிடும்..

இதை தான் macro mode ல் programme செய்யப்பட்டிருக்கும்..

இந்த விசயங்கள் சிறிய கேமராவிற்கும் , DSLR கேமராவிற்கும் கட்டாயம் மாறுபடும்..

சிறிய கேமராவில் தான் focus மிக அருகில் சென்றாலும் focus ஆகும்.. ஆனால் DSLR கேமராவில் அப்படியில்லை, macro என்பது முற்றிலும் லென்ஸை சார்ந்தது.. இதனால் DSLRல் macro mode பயன்படுத்தும் போது close ஆக ஃபோகஸ் ஆகாது.. மற்ற mode ல் எப்படி focus ஆகின்றதோ அதே மாதிரி தான் focus ஆகும்..

எனவே DSLR ஐ பொறுத்தவரையில் macro mode என்பது ஒரு programmed செட்டிங்ஸ் ..அவ்வளவு தான்
..

Sports mode:




இந்த mode ஐ பயன்படுத்தும் போது , கேமரா முடிந்தளவு அதிக shutter speed ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளும்...

இதனால் action சப்ஜெக்ட் எடுக்கும் போது அதை freeze செய்வதற்கு இந்த வகை mode உதவியாக இருக்கும்..

கவனிக்க,இந்த mode பயன்படுத்தினால் எல்லா படங்களும் freeze ஆகி , ஆடாமல் படம் வந்து விடும் என்று அர்த்தமில்லை.. வெளிச்சம் இல்லையென்றால் எல்லா mode ம் ஒன்று தான்..


Portrait mode:



இந்த mode ஐ பயன்படுத்தி எடுக்கும் போது aperture என்பது maximum ஆக மாறிவிடும்..

ஏனென்றால் portrait எடுக்கும் போது background ல் out of focus வரவேண்டும் என்பதற்காக இம்மாதிரி settings தரப்பட்டிருக்கும்.. அதே சமயம் safety க்காக flash ம் open ஆகிவிடும்..

Landscape mode:



இந்த mode எதற்கு என்றால்.. பொதுவாக நாம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்றால் landscape அழகாக இருப்பதால் படம் எடுப்போம் அல்லவா...

அந்த மாதிரி எடுக்கும் போது படம் முழுக்க corner to corner detail வேண்டும்.. இதனால் கேமராவில் f number(aperture) என்பது அதிகமாக இருக்க வேண்டும்..

அதனால் இந்த மோட் பயன்படுத்தும் போது ஓரளவிற்கு அதிகமான f number ஐயே கேமரா தேர்ந்தெடுத்துக்கொள்ளும்..



இவை தவிர பல்வேறு pre set mode கள் கேமராவுக்கு கேமரா மாறுபட்டு இருக்கும்..ஆனால் இவையெல்லாம் ஒரு feature என்று வியாபார தந்திரத்திற்காக தான் வருகின்றது.. அவ்வளவு தான்.. இவை செய்யும் வேலைகள் எல்லாம் ஒன்று தான்..

இவற்றையெல்லாம் விட்டு விட்டு நாம் முதலில் பார்த்த நான்கை மட்டும் (P,A,S,M) பயன்படுத்தி பழகினால் போதும்...

இன்னும் சொல்லப்போனால் அந்த நான்கில் முக்கியமாக இரண்டை(programme , aperture mode) பயன்படுத்தி பழகினாலே போதும் என்பது எனது கருத்து..



எது சிறந்தது ?


என்னை கேட்டால் இன்றைய டிஜிட்டல் உலகில், நான் எடுக்கின்ற 90% படங்கள் programme mode ல் எடுக்கின்றேன்.. அதிலேயே எனக்கு போதுமானதாக இருக்கின்றது..இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.. ஒரு சில டெக்னிக்கலான படம் எடுக்கும் போது கண்டிப்பாக சில மாற்றங்கள் தேவை..

ஒரு சிலர் manual mode தான் சிறந்தது என்றும் , அதில் படமெடுத்தால் நல்ல தெளிவாக படம் வரும் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் படத்தின் தெளிவிற்கும் இந்த mode களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

இதில் அனைத்திலும் ஒரே விசயம் என்னவென்றால், சரியான வெளிச்சத்தை அமைப்பது தான்..

எந்த mode ல் போட்டு படம் எடுத்தாலும் சரியான வெளிச்சம் அமைத்தால் போதும், படம் எல்லாம் ஒரே குவாலிட்டியில் தான் வரும்..

ஒரு சில சமயம் மட்டும் மாற்றங்கள் தேவைப்படும் , ஏன் என்றால் ஒரு சில கிரிடிக்கலான, இரண்டு வித வெளிச்சங்களில், programme modeஐ பயன்படுத்தும் போது சரியான ஒளியை தராது(exposure compensation ஐ பயன்படுத்தி மாற்றலாம்)..அந்த மாதிரி நேரங்களில் மட்டும் manual mode ஐ பயன்படுத்தி எடுக்கும் போது சரியாக படம் வரும்..

ஆனால் , இதெல்லாம் இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு பெரிய விசயமே இல்லை..

முன்பெல்லாம் நெகட்டிவ் பயன்படுத்திய காலங்களில் நாம் படமெடுத்தவுடனே preview எனப்து இல்லை.. அதனால் நாம் எடுத்த படம் சரியானது தானா என்பதை பார்க்கமுடியாது. அதனால் ரிஸ்க் எடுக்காமல் manual mode ல் படமெடுப்பது என்பது அப்போதைக்கு safety யாக இருந்து வந்தது..

ஆனால் இன்றைக்கு ஒரு படம் எடுத்த உடன் படம் சரியானது தானா என்பது உடனடியாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தவறாக இருந்தால் காசா , பணமா ? எளிதாக வேறொரு செட்டிங்ஸ்ல் மாற்றி இன்னொரு படம் எடுத்தால் போதும்.. அவ்வளவு தான்..

என்ன தான் manual mode சில சமயம் சிறந்ததாக இருந்தாலும், ஒவ்வொரு தடவையும் நாம் இரண்டு செட்டிங்ஸ் (aperture , shutter speed ) ஐ மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. இது சில நேரங்களில் நமக்கு சிரமம் தரும்..

இவற்றுடன் நாம் ஒரு படத்தின் composition ஐயும் சேர்த்து கவனிக்கும் போது சில நடைமுறை சிரமங்கள் ஏற்படுகின்றன..

இதனால்,இன்றை டிஜிட்டல் கேமராவில் programme mode பல நேரங்களில் சிறந்ததாக இருக்கின்றது.. இதில் நாம் எதையும் கவனிக்க வேண்டியது இல்லை.. ஏற்கனவே போன பகுதியில் சொன்ன மாதிரி, படம் எடுத்த பின் பார்க்கவும் , சரியான வெளிச்சம் இல்லை என்றால் + அல்லது 0 அல்லது - எது சரியோ அதை மாற்றி அமைத்து இன்னொன்று எடுத்தால் போதும் அவ்வளவு தான்..

இந்த மோட் ல் படமெடுத்து பழகினால் ஒரு சில நாட்களில் நமக்கு எது சரியானது என்று விரைவில் பழகிவிடும்.. இதனால் நமக்கு படத்தை கம்போஸ் செய்வதற்கு எந்தவித சிரமமும் இருக்காது..

எனவே , நார்மலாக படமெடுப்பதற்கு வேறு மோட்கள் பற்றிய கவலைகள் வேண்டாம்...

ஆனால், ஒரு சில க்ரியேட்டிவாக படம் எடுக்கும் நேரங்களிலும் , முக்கியமாக fast lens பயன்படுத்தும் போதும் நமக்கு programme mode சில இடங்களில் பலன் தராது..

அது என்னவென்றால், நாம் apertureயோ, shutter speed யோ மாற்றி எடுக்க நேரிடும் போது , programme mode ஐ பயன்படுத்தினால் படம் தவறாகிவிட வாய்ப்புண்டு..

அதே சமயம் , programme mode பயன்படுத்தி படமெடுக்கும் போது , aperture ,shutter speed தவிர பல செட்டிங்ஸ்களை நாம் தான் பார்த்து கவனித்து மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

சரி , அப்படி என்ன மாற்றங்கள் எல்லாம் செய்ய வேண்டும் ? aperture என்றால் என்ன? அவற்றை மாற்றுவதால் என்னென்ன பலன்கள்? போன்றவைகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

நன்றி
கருவாயன்.

14 comments:

  1. தெளிவான, பயனுள்ள விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete
  2. போட்டோகிராபி லேசில்லை,ரொம்ப பொறுமை வேணும் போல.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் அனுபவ பகிர்வு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி...

    ReplyDelete
  4. தெளிவான விளக்கங்கள் சுரேஷ் சார்...வாழ்த்துகள்.....

    ஒரு சிறிய விளக்கம் தேவை..என்னுடைய Panasonic fz-38 கேமராவில் இருக்கும் preset மோடில் இயங்கும் அப்பச்சர் மற்றும் ஷட்டர் speed மேனுவலில் செட்செய்யும் போது இயங்க மறுக்கிறது...உதாரணமாக என்னுடைய கேமராவில் sunset என ஒரு preset மோட் இருக்கிறது இதில் நான் சூரியனை படம்பிடிக்கு போது எனது கேமரா f8 மற்றும் 1/1600 ஷட்டர் ஸ்பீடும் ISO100 என தானியங்கியாக படம் எடுக்கிறது exif dataவில் பார்த்தது. ஆனால் இதே settingsஐ நான் மேனுவல் மோடில் எனது அப்பச்சரை f8 1/1600, ISO 100 இல் செட் செய்து எடுக்கையில் சூரியன் தெளிவில்லாமலும் படம் மொத்தமும் கருப்பாக வருகிறது..இதே போன்று சிறிய அளவிலான ஷட்டர் வேகம் வைத்து எடுக்கப்படும் படங்கள் Night photography கள் presetமோடில் எடுக்கும் போது கிடைக்கும் அளவிற்க்கு மேனுவல் மோடில் அதே செட்டிங்குகளை பயன்படுத்தும் போது எடுக்க மறுக்கிறது... இது ஏன் என விளக்க முடியுமா?

    ReplyDelete
  5. @Nithi Clicks... sunset mode ல் படம் எடுகும் போது aperture , shutter speed மட்டுமில்லாமல் முக்கியமான focus pointஐயும் கேமராவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்..அப்படி எடுக்கும் போது ஃபோகஸ் எங்கே இருக்கவேண்டுமோ அங்கே சரியாக ஃபோகஸ் செய்யும்..உதாரணமாக focus point சூரியனுக்கு அமைந்தது என்றால் ஒரு exposure கிடைக்கும்...

    manual mode ல் அப்படியில்லை..focus point ஐயும் நாமே தான் அமைக்க வேண்டும்.. அதே படத்தை எடுக்கும் போது சூரியனுக்கு ஃபோகஸ் இல்லாமல் வேறு எங்காவது ஃபோகஸ் ஆகி இருக்கலாம் என்று நினைக்கின்றேன்..

    அப்படி ஃபோகஸ் மாறும் போது வெவ்வேறு விதமாக தான் exposure அமையும்.. இதனால் தங்கள் படம் இருட்டாக வந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்..

    அதாவது நீங்கள் வேறு இடத்தில் ஃபோகஸ் செய்யப்பட்டதால் 1/1600 shutter speed என்பது தவறாக போய்விட்டது..

    sunset mode ல் எங்கே ஃபோகஸ் செய்யப்பட்டதோ , சரியாக அதே இடத்தில் ஃபோகஸ் point ஐ வைத்து ஃபோகஸ் செய்து, ஒரே aperture & shutter speed வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக ஒரே மாதிரி தான் வரும்..

    அதே சமயம் manual mode பயன்படுத்தும் போது இவ்விரண்டு(aperture & shutter speed) காம்பினேஷனும் சரி தானா என்பதை பார்க்காமல் படம் எடுக்க கூடாது.. அதை கேமராவில் + 0 - scale ஐ பார்த்தால் தெரிந்திருக்கும்..

    -கருவாயன்

    ReplyDelete
  6. P mode o.k . எனது கேமரா வில் P* என்ற mode உள்ளது .ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்
    ? சிறிது விளக்குங்கள் plz

    ReplyDelete
  7. @sathi... P* mode என்பது எனக்கு புதிதாக தெரிகின்றது..

    உங்கள் கேமராவில் P mode இல்லாமல் இந்த P* mode இருந்தால் அது தான் programme mode..

    அப்படி இரண்டும்(P & P* )இருந்தால் ,கேமரா model நம்பரை தெரியப்படுத்தவும்.. பார்க்கலாம்..

    -கருவாயன்

    ReplyDelete
  8. வணக்கம் கருவாயன் சார், துரிதமான பதிலுக்கு நன்றி...விளக்கமாக இருக்கிறது உங்களின் பதில்..அடுத்த முறை கண்டிபாக தங்கள் குறிப்பிட்ட படி போகஸ் பாயின்டை கவனிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  9. @suresh sir.
    sorry sir... nikon d5100.

    M mode, command dial ஐ திருகினால் shutter speed மாறுகிறது .(exposure compensation button ஐ கொண்டு aperature மாற்றமுடிகிறது) .
    A mode , command dial ஐ திருகினால் aperture & shutter speed மாறுகிறது.
    S mode , command dial ஐ திருகினால் shutter speed மாறுகிறது.
    but,
    In P mode ,First P mode வருகிறது மேற்கொண்டு command dail ஐ திருகினால் மற்றும் ஒரு P* என்ற mode வருகிறது .

    ReplyDelete
  10. Sir , In DSLR camera closeup focus(e.g flower) make the picture blurry. tired AUTO and macro mode.. Any ideas??

    ReplyDelete
  11. Sathi:
    நிக்கான் கமெராவில் அதற்கு பெயர் "flexible programme ". பி மோடில் காமிரவே aperture மற்றும் shutter ஸ்பீட் தேர்ந்து எடுத்துக் கொள்ளும். கமெராவை பி மோடில் வைத்து "command டயல்" திருகினால் கேமரா aperture மற்றும் shutter ஸ்பீட் combination மாற்றிவிடும். கமேராவிற்குள் வரும் வெளிச்சம் அளவு மாறது. இது ஒருவகையில் exposure compensation மாதிரி தான். கமெரா ஆபரேஷன் manual பாருங்கள். பெரும்பாலும் p* உபயோகப் படாது அதற்கு பதில் exposure compensation அல்லது manual mode கற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. @meenatchisundaram... மிக்க நன்றி...

    ReplyDelete
  13. @anonymous..எந்த mode ஐ பயன்படுத்தினாலும், subject ற்கு மிக அருகில் ஃபோகஸ் செய்யும் போது , கண்டிப்பாக வெளிச்சம் நிறைய வேண்டும்.. இல்லையென்றால் படம் blurr ஆக தான் வரும்.. அதே சமயம் க்ளோஸ் ஃபோகஸிங் செய்யும் போது சிறிய கை நடுக்கம் கூட படத்தை சொதப்பி விடும்.. அம்மாதிரி நேரங்களில் ஃப்ளாஷ் அல்லது tripod தான் வழி..

    எதற்கும் மீண்டும் முயற்சியுங்கள்..

    -கருவாயன்

    ReplyDelete
  14. waiting for your
    புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 6.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff