Thursday, March 22, 2012

சவால் போட்டியில் வென்றவர்கள்

8 comments:
 
சிறப்புக் கவனம்:
# தமிழ்த் தேனீ
நல்லாவே வந்திருக்கு....சாதாரணமா பிரதிபலிப்பே நல்லாத் தெரியும் என்கிற வரிகளை நினைச்சுப்பாருங்க! அதற்கு சிறப்பான உதாரணம்.

# சதீஷ் குமார்

இரண்டில எது.. ஏன்.. நல்லா தெரியும்ன்னு விளக்கக்கூடிய படமா அமைஞ்சு போச்சு! உள்ளே இருக்கிற / ரிஃப்ளெக்ட் ஆகிற இரண்டுமே பளிச்சுன்னு அமைஞ்சிருக்கு! காருக்கு வெளியே இருக்கிறவரால விழுகிற நிழல்ல உள்ளே இருக்கிறவர் தெரியறார். வெளியே இருக்கிறவர் முகம் சரியா தெரியாதது ஒரு குறை!

மூன்றாவது இடம்:
# யோசிப்பவர்

சொல்ல வந்த கான்செப்டை கரெக்டா காட்டின முதல் படம். பச்சை வயலையும் பார்க்கலாம், ரிப்லெக்ஷனையும் பார்க்கலாம்! பார்வை குவிப்பை பொறுத்து!

இரண்டாம் இடம்:
# ரம்யா சந்திரகாந்தன்


அறையின் உள்ளேயும் தூண்கள் இருக்க, வெளியிலிருக்கும் தூண்களின் பிம்பங்கள் பிரமாதப்படுத்துகின்றன படத்தை. இதுவும் சரி, அடுத்து வரும் படமும் சரி, கண்ணாடி எங்கேன்னு யோசிக்க வேண்டி இருக்கு. எது நிஜம் எது பொய்ன்னு ஒரு மயக்கம் வருமே அந்த மாதிரி!

முதலிடம்:
# முத்துகுமார்

இது ரெஸ்டாரண்டுக்கு உள்ளேந்து எடுத்ததா? கொடுத்த வரிகளுக்கும் இது மிகச்சரியா இருக்கு! [“உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா? தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார்? அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும். அது ஒரு போட்டோவா இந்த காட்சியை பிடிச்சாத்தான் தெரியும்.”]


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

முதல் பரிசு பெற்ற முத்துக்குமார் விருப்பமானால் படத்தை எடுத்த அனுபவத்தை photos.in.tamil@gmail.com-க்கு அனுப்பலாம். அது தனிப்பதிவாக வெளியிடப்படும். முத்துக்குமாரின் படத்துடன் விரைவில் காரமுந்திரியைக் கொறிக்கத் தொடங்குவோம்!
***


-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

8 comments:

  1. வாழ்த்துகள்!
    ஏன் ரம்யாவும் எழுதலாமே!
    எல்லாருமே அதற்கான பிகாஸா பேஜில கமென்டாவும் எழுதலாம்.

    ReplyDelete
  2. வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்..மிக சரியான தேர்வு ...

    ReplyDelete
  4. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வழ்த்துக்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்ற புகைப்படக் காரர்களுக்கும்

    நான் அனுப்பிய புகைப்படத்துக்கு சிறப்புக் கவனம் அளித்த நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்


    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  8. யோசிப்பவர் படம் மிகப்பிரமாதம்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff