Monday, November 12, 2007

நல்ல படம் எடுக்க ஒரு அட்வைஸு

9 comments:
 
PITன் (Photography-in-Tamil.blogspot.com aka தமிழில் புகைப்படக் கலை) நவம்பர் மாதப் போட்டிக்கு 'சாலைகள்'னு தலைப்பு. (இதுவரை அனுப்பாதவங்க, படத்தை அனுப்ப மறந்துடாதீங்க. உடனே க்ளிக்கி அனுப்புங்க).

என் சமீபத்திய 'ஆன்மீக' ட்ரிப்பின் போது க்ளிக்கிய சில சாலைகளின் பகிர்வை பதியலாம்னு தோணிச்சு. ஊர் சுத்தும்போது, எந்த சாலையைப் பார்த்தாலும், PITன் போட்டி நெனப்புதான் வந்தது.

புது காமிராவும் கைவசம் இருந்ததால் (Canon Rebel XTI - நல்ல காமிரா, $666 - ஆனா, கூட ஒரு $400 போட்டீங்கன்னா Nikon D80 கெடைக்கும். அது இத்த விட ஜூப்பரா இருக்கு), க்ளிக்கித் தள்ள வசதியா இருந்தது.

PITக்காக பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே, ஏதாவது ஒரு ஐடியா அள்ளி விடலாம்னு யோசிச்சேன். ஒண்ணும் பெருசா தோணல. சமீபத்திய ட்ரிப்பில் உணர்ந்த ஒரு உணர்தலை இங்கே பகிர்கிறேன் ;)

அதாவது, படம் எடுக்க நல்ல கேமரா மட்டும் போதாது, சிறந்த கலைப் பார்வை வேணும். ஒரு காட்சியப் பாத்தா, அத எப்படி படமாக்கினா நல்லா இருக்கும்னு மனசுல படம் போட்டு பாக்கத் தெரியணும்.

பழகப் பழக அந்த கலைப் பார்வை வளர்ந்து கொண்டே வரும்.

சில நேரங்கள்ள, கண்ணுக்கு முன்னாடி, ரொம்ப அழகான காட்சி இருக்கும், ஆனா, அத க்ளிக்கி ப்ரிண்டு போட்டு பாத்தா, நீங்க அனுபவிச்ச அந்த அழகு படத்துல வந்திருக்காது.
பல நேரங்களில் இதற்கான காரணம், உங்க கண் உங்களுக்குக் காட்டும் காட்சியை, காமிரா லென்ஸ் அப்படியே முழுசாக தராததுதான்.

கண்ணு 180 டிக்ரி (ரைட்டா?) சுத்தளவுல எல்லாத்தையும் பாக்கும். அந்த சுத்தளவுல இருக்கரதெல்லாம் உங்க சாதா காமிரால அப்படியே ஒரு க்ளிக்குல பதிய முடியாது.

அதனால ஒரு மேட்டர பாக்கும்போது, அது அழகா இருந்தா, அதுல எது உங்க வெறும் கண்ணுக்கு அழகா தெரியுதோ, அந்த மேட்டர் காமிராவின் view-finderல வருதான்னு பாருங்க.

உதாரணத்துக்கு, ஒரு தென்னந்தோப்ப பாக்கும்போது, தென்னை மரங்கள் வளைவாக இருப்பதும், அதற்கு மேல் வானம் நீலமாக இருப்பதும், கீழே பச்சை கலர்ல புல்லும் இருக்குன்னு வச்சுக்கங்க. உங்க கண்ணுக்கு இது எல்லாமே தெரிவதால், காட்சில ஒரு பன்ச் இருக்கும், மனசுக்கும் புடிக்கும்.

இத க்ளிக்கும் போது, காமிராவின் பார்வையில் (உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்து) மரம் பாதிதான் தெரியும், சில சமயம் வானம் தெரியாமலிருக்கும், புல்லும் தெரியாது. கண்ணில் பார்ப்பதை, காமிராவில் எடுக்கணும்னா, கொஞ்சம் தள்ளி பின்னாடி போய் ஒரு சுவர் மேல் ஏறி எடுக்க வேண்டி இருக்கலாம், இல்லன்னா தரையில மல்லாக்க படுத்து எடுத்தா கிட்டத்தட்ட நீங்க நெனைக்கரது வரும்.

சும்மா, நிந்த எடத்துல, க்ளிக்கினீங்கன்னா, நல்ல படம் வரவேண்டிய இடத்தில், சுமார் ரகம் தான் வரும்.

so, அட்வைஸ் என்னன்னா, நல்ல படம் எடுப்பதர்க்கு, கொஞ்சம் சிரமப் படணும் - Don't Compromise on what you can fit into the view finder.

எப்படி எடுத்தா நல்லா இருக்கும்னு நெனைக்கறீங்களோ, அப்படியெடுக்க கொஞ்சம் முயற்சி செஞ்சு எடுங்க. கீழப் படுத்தோ, அந்தரத்துல தொங்கியோ, நடு ரோட்டுல நின்னோ, தண்ணில நனஞ்சோ - எப்படியோ. Don't Compromise. நல்ல காட்சிகள் அடிக்கடி வராது. வரும்போது, அத விடக்கூடாது, சரியான angleல, க்ளிக்கித் தள்ளோணும்.

சரிதானபா?
சரி, இனி கீழே என் சமீபத்திய க்ளிக்குகளில் சில சாலைகள்.


1)


2)


3)


4)


5)


6)



எந்த ஊர்னு சொல்லுங்க பாக்கலாம். :)

டிப்பு வேணுமா? கொஞ்ச தூரத்துல ஒரு கடற்கரை ஓர பழைய கோட்டை இருக்கு. பம்பாய் பாட்டு ஒண்ணு இங்கதான் எடுத்தாங்க.

நன்றி!

-சர்வேசன்

9 comments:

  1. சூப்பரு போஸ்ட் சர்வேசன்!
    நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் ஒவ்வொன்னும் நூத்துக்கு நூறு உண்மை!!நானும் பல சமயங்களில் இதை உணர்ந்திருக்கிறேன்.
    படங்கள் எல்லாவற்றிலும் வழிநடத்தும் கோடுகளின் பயன்பாடு நன்றாக வந்திருக்கிறது.
    கடைசி இரண்டு படங்கள் தான் பெரிதாக சிறப்பு எதுவும் இல்லாதது போன்று ஒரு உணர்வு
    May be its just me!! :-)

    Great post!! Kudos!! :-)

    ReplyDelete
  2. CVR,
    //கடைசி இரண்டு படங்கள் தான் பெரிதாக சிறப்பு எதுவும் இல்லாதது போன்று ஒரு உணர்வு
    //

    :) forgot to mention -- all the scenes were of breath taking beauty. but, not all the pics did justice to the scenery, especially the last 2 pics.
    something was missing - may be the correct exposure.

    for the naked eye, the road in the last 2 pics (they are the same) was awesome. i wish i could have slept there for some time among the trees ;)

    ReplyDelete
  3. உங்கள் படைப்புகளை அமீரகத்திலிருந்து பார்க்க முடிவதில்லை. உங்கள் தளம் தடை செய்யப்பட்டுள்ளது என பதில் வருகிறது. வேறு ஏதாவது வழி உண்டா? தகவலளிப்பின் நன்றாக இருக்கும்

    சிவா.

    ReplyDelete
  4. படங்கள பார்த்ததுமே அது கண்டிப்பா மல்லு தேசம்ன்னு தெரிஞ்சுடுச்சி! பெக்கல் போர்ட் ஒ.கே பட் அது என்னாது கோவில் அதுவும் ரொம்ப பிரச்சனையான கோவில்ல்னுதான் தெரியலை!

    ReplyDelete
  5. Siva,
    try this

    http://www.pkblogs.com/photography-in-tamil

    ReplyDelete
  6. ஆயில்யன், நெத்தியடி அடிக்கறீங்க :)

    பேக்கல் ஃபோர்ட்டே தான்.

    கோயில் - குருவாயூர் :)

    ReplyDelete
  7. survs, correcta sonneenga.
    kal'eye' mukkiyam.

    ReplyDelete
  8. But, if you wish to shoot when you are in water, ensure that the camera is well safe from water, else get a use and throw camera. This is always better to lose a camera worth £650.

    ~Truth

    ReplyDelete
  9. Keeping in line with underwater photography,here are couple of links that one might want to see!! :-)

    http://digital-photography-school.com/blog/15-inspiring-under-water-images/

    http://digital-photography-school.com/forum/showthread.php?t=6201&highlight=underwater

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff