வணக்கம் மக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
காலம் ரொம்ப வேகமா ஓடுதுங்க!! நாம் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத வேகத்தில் பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும்,மைல் கல்களையும்,முக்கியமில்லா மௌனங்களையும் நம் பக்கம் வீசிக்கொண்டே செல்கிறது.என்றாவது ஒருநாள் சற்றே தலை உயர்த்திப்பார்த்தால் நாம் கடந்து வந்த தூரத்தை நம்மாலேயே நம்ப முடியவில்லை...
இப்போ எதுக்கு இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா?? நம்ம பதிவுல முதல் போட்டி ஜூலை 2007-இல் தொடங்கிவைக்கப்பட்டது!! எப்படி போச்சுன்னே தெரியல ஆனா அதுக்குள்ள கிடு கிடுவென்று ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது பாருங்களேன்...
இந்த ஒரு வருடத்தில் நாம் எத்தனை படங்களை பார்த்து ரசித்திருப்போம்,எத்தனை பேர்களை தெரிந்துக்கொண்டு நண்பர்களாக்கிக்கொண்டிருப்போம்,எத்தனை விஷயங்களை கற்றுக்கொண்டிருப்போம்..என்னால் பட்டியலிடக்கூட முடியவில்லை.இந்த போட்டிக்காகவே தமிழ்ப்பதிவை தொடக்கியவர்கள் பலர்.இந்தப்போட்டிகளினால் ஆர்வமேற்பட்டு எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கும் அளவுக்கு புகைப்படக்கலை மோகம் தொற்றிக்கொண்ட கதைகளும் உண்டு.தன்னிடம் ஒளிந்திருக்கும் குறிப்பிடத்தக்க திறமை வெளிவருவது கண்டு அதில் மேலும் ஆர்வம் செலுத்தி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக கலைப்படைப்புகளை அடுக்கிக்கொண்டு செல்பவர்களை பார்த்தால் மிகவும் சந்தோஷமாகிறது.
இந்த போட்டிகளில் பங்கேற்பவர்கள் மட்டுமில்லாமல் பார்வையாளர்களும், நடுவர்களும் கூட ஒவ்வொரு மாதமும் நிறைய விஷயங்களை அறிந்துக்கொண்டார்கள்,தெரிந்துக்கொண்டார்கள்,நட்புகளை வளர்த்து மகிழ்ந்துக்கொண்டார்கள்.
இப்படி இந்த போட்டியைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் நான் நிறுத்தவே மாட்டேன்,அதனால் விஷயத்திற்கு வருவோம்.
இப்படி நாம் அனைவரும் பெருமைகொள்ளும் பிட் மாதாந்திர போட்டியின் முதல் வருட நிறைவை ஒட்டி தமிழில் புகைப்படக்கலை ஒரு சிறப்பு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த தடவை போட்டி இரண்டு கட்டமாக இரண்டு மாதங்களுக்கு நடக்க போகிறது.
முதல் சுற்றின் முடிவு இந்த மாதமும் இரண்டாவது சுற்றின் முடிவு அடுத்த மாதமும் வரும்.
சரி முதல் சுற்றுக்கும் இரண்டாவது சுற்றுக்கும் என்ன வித்தியாசம்???
வழக்கமா எல்லோரும் சொல்ற புகார் என்னன்னா,சில பேர் மட்டும் எப்பவும் நல்ல படங்களாக எடுத்து முதல் நிலைக்கு வந்துடறாங்க.அவங்க கிட்ட எஸ்.எல்.ஆர் கேமரா எல்லாம் இருக்கு,இதனால போட்டியில ஒரு சமநிலையே இல்ல,அப்படின்னு சொல்லி கேட்டிருக்கேன்.
ஆனா இந்த போட்டியின் முதல் சுற்றில் நீங்கள் இந்த புகாரை தெரிவிக்க முடியாது!!
ஏண் தெரியுமா??
முதல் சுற்றில் இதுவரை போட்டியில் வென்றவர்கள் பங்கேற்க முடியாது.
ஆமாம்!! இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் யாரேனும் முதல் மூன்று இடங்களில் வந்திருந்தால் அவர்களின் படங்கள் முதல் சுற்றில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அப்படி போடு அறுவால!! அப்புறம்????
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஐந்து போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறுவார்கள்.இந்தச்சுற்றில் இதுவரை எங்கள் போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்களும் கலந்துக்கொள்வார்கள்.அதாவது முதல் சுற்றில் சேர்த்துக்கொள்ளப்படாதவர்கள்
அட்ரா அட்ரா ... .
இரண்டாவது சுற்றில் போட்டியாளர்களை தேர்வு செய்யப்போவது நடுவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் தான்.
ஆமா!! இரண்டாவது சுற்றில் பங்கு பெறும் படங்களில் வாக்கெடுப்பு எடுக்கப்படும்.அதில் வரும் முடிவும் நடுவர்கள் எடுக்கும் முடிவுகளின் 50-50 கலவைதான் வெற்றி பெற்றவர்களை தீர்மானிக்கும்.
சூப்பரு!! சீக்கிரம் தலைப்பை சொல்லுங்கன்னு கேக்கறீங்களா?? இங்கிட்டு தான் அடுத்த சிறப்பு! முதல் சுற்று போட்டிக்கு தலைப்பு ஏதும் கிடையாது!!
ஆமாம்!! உங்க கலைத்திறனையும் கற்பனையும் கட்டவிழ்த்துவிட்டு நல்லா ஆற அமர யோசித்து உங்க திருப்திக்கு ஏற்றார்போல் படம் பிடித்து அனுப்புங்கள்!!
அப்போ இரண்டாவது சுற்றுக்கு???
அதை இரண்டாவது சுற்று அறிவிக்கும்போது சொல்றோமே..
சரியா??
அதெல்லாம் சரி!!! அப்போ பரிசு ஏதாவது இருக்கா???
பொறுமை எருமையிலும் பெரிது......
இதுக்கு மேல இப்போதைக்கு நான் ஒன்னும் சொல்லல!! :P
சரி போட்டிக்கான தேதிகளை ஒரு சுத்து பாத்துரலாமா??
ஆகஸ்டு 1 -15 - முதல் சுற்று போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் தேதி
ஆகஸ்டு 15 - 25 - முதல் சுற்று படங்கள் தேர்வு,முடிவுகள் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்
ஆகஸ்டு 25 - செப்டெம்பர் 15 - இரண்டாம் சுற்று போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் தேதி
செப்டெம்பர் 15 - 25 - இரண்டாம் சுற்று படங்கள் தேர்வு,முடிவுகள் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்.பார்வையாளர்கள் செப்டெம்பர் 20ஆம் தேதி வரை தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
சரிங்களா?? வாங்க போட்டியின் நடுவர்கள் யார் யார் என்று பார்த்து விடலாம்
நடுவர்கள் - ஜீவ்ஸ்,CVR,சர்வேசன்,ஆனந்த்,தீபா(சிறப்பு போட்டியாச்சே,அதான் எல்லோரும் கோதால குதிச்சிரலாம்னு.. ஹி ஹி)
நான் முன்பே சொன்னது போல முதல் சுற்றில் நடுவர்களின் தேர்வு மட்டுமே இருக்கும் ஆனால் இரண்டாவது சுற்றில் நடுவர்களோடு பார்வையாளர்களின் தேர்வும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படும்!!
ஆங்!!சொல்ல மறந்துட்டேன்!! முதல் சுற்றில் பிட் போட்டியில் இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்துக்கொள்ளக்கூடாது என்று சொன்னேன் அல்லவா.அவர்கள் யார் யார் என்று பார்த்துவிடலாமா?? :-)
July 2007
ஜெயகாந்தன்
தீபா
இளவஞ்சி
August 2007
சத்யா
நாதன்
ஒப்பாரி
Sep 2007
இம்சை
சுந்தர்
யாத்ரீகன்
ஒப்பாரி
Oct 2007
ஆதி
விழியன்
சுந்தர்
ஒப்பாரி
Nov 2007
ஸ்ரீகாந்த்
உண்மை
சிவசங்கரி
ஜவஹர்
Dec 2007
ஒப்பாரி
பிரியா
நந்து
Jan 2008
ஒப்பாரி
லக்ஷ்மணராஜா
நாதஸ்
Feb 2008
கார்த்திகேயன்
பிரபாகரன்
குட்டிபாலு
Mar 2008
கௌசிகன்
நாதஸ்
peeveeads
Apr 2008
கைப்புள்ள
நிலாக்காலம்
கோமா
அமல்
May 2008
பாபு
நெல்லை சிவா
நாதஸ்
June 2008
Sathiya
Srikanth
வாசி
Jul 2008
ஷிஜு
பாரிஸ் திவா
MQN
இப்போதைக்கு அவ்வளவு தாங்க!! எப்போதும் போல இந்த தடவையும் ஒரு கோலாகலமான புகைப்படத்திருவிழாவாக இந்த போட்டி அமையும் என்று நம்புகிறேன்
நல்லா அடிச்சு ஆடுங்க மக்களே!!
வாழ்த்துக்கள்!!!!!
இதுவரை வந்துள்ள படங்களின் அணிவகுப்பு!
பி.கு:வழக்கம்போல் பிட் குழுமத்தின் தற்போதைய ஆசிரியர்களின் படங்கள் தேர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளபட மாட்டாது.
Thursday, July 31, 2008
PiT மெகா போட்டி அறிவிப்பு
Saturday, July 26, 2008
ஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்
ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே.
மூன்றாம் இடம் - ஷிஜூ
சிறப்பு கவனம் பெற்ற படங்கள்:
ஒப்பாரி
போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனம்
Tuesday, July 22, 2008
July 2008 . முதல் பத்து.
இந்த மாததிற்கான முதல் பத்து.
முடிவுகள் விரைவில். பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.
7.) கையேடு
10.) நெல்லை சிவா
12.) பாரிஸ் திவா
41.) ஒப்பாரி
44.) Vidya
56.) Komuty
63.) Amal
Friday, July 18, 2008
ஜூலை மாத போட்டிப் படங்களின் தொகுப்பு
வணக்கம் மக்கா,
இந்த மாசம் "இரவு நேரம்னு" தலைப்பு வச்சுட்டு, இருட்டுல போய் மக்கள் படம் பிடிப்பீங்கலானு சந்தேகம் இருந்துச்சு. ஆனா நீங்க அனைவரும் வழக்கம் போல போட்டு தாக்கிடீங்க. எங்களுக்கு வண்ணமயமான இரவு படத்தொகுப்பு உங்களின் மூலம் கிடைத்துள்ளது.
சரி போட்டி படங்களை பாக்கலாம் வாங்க...
1.) இம்சை
2.) ஜீவ்ஸ்

3.) Venkat
6.) PeeVee

7.) கையேடு
8.) Jackiesekar
9.) பரிசல்காரன்
10.) நெல்லை சிவா

11.) தென்றல்
12.) பாரிஸ் திவா

13.) தமிழ் பிரியன்

14.) நானானி

15.) இலக்குவண்

16.) `மழை` ஷ்ரேயா

17.) RPG
18.) உமா

20.) கைப்புள்ள

23.) MQN

28.) வாசி
29.) துளசி கோபால்30.) KewlDude
31.) எம்.ரிஷான் ஷெரீப்
32.) ஸ்ரீதர்

33.) Saravanakumaran

35 Sury
36.) Sugavasi
40.) கப்பி

41.) ஒப்பாரி

44.) Vidya
45.) Surya

47.) Balaaji N
49. Anand

50.) Geetha

51.) Premji

53.) Ila

54.) வல்லிசிம்ஹன்

55.) Jawahar
56.) Komuty
57.) நந்து f/o நிலா

58.) Seenu

59.) பெருசு

60.) சந்திரன்
62.) Athi

63.) Amal

65.) Baranee

விரைவில் போட்டி முடிவுகளோடு சந்திக்கிறோம். :)
Saturday, July 12, 2008
ஒளி விளையாட்டு
ஒளியின் திசை, அளவு, இடம், நிறம் பொருத்துதான் காட்சியின் அழகும், தெளிவும் அதிகமாகவும்,குறையவும் செய்கிறது. ஒளியை பிற்தயரிப்பில் கட்டுப்படுத்தும் ஒரு எளிய முறையை பார்க்கலாம்.
இந்தப் படத்தில் கோபுரத்தின் பின்னிருத்து சூரியன் ஒளித்தால் எப்படி இருக்கும் என்று முயற்சி செய்துப் பார்க்கலாம்.
(படம் உதவி அண்ணன் சீவீஆர் அவர்கள்.)
படத்தை கிம்பில் திறவுங்கள்
முன்ணணி வண்ணமாக 50% பழுப்பை தேர்ந்தெடுங்கள்.
( படத்தில் இருக்கும் அளவிற்கு பதிலாக 7f7f7f யும் தேர்வு செய்யலாம். )
ஒரு புதிய லேயரை உருவாக்குங்கள், முன்ணணி வண்ணத்தில் இந்த புது லேயர் நிறப்பபட்டு இருக்க வேண்டும்.
mode=> Soft Light , தேர்ந்தெடுத்தப்பின் புகைப்படத்தில் எந்த மாறுதலும் தெரியக்கூடாது.
Filters->Light and Shadows-> Lighting Effects ... கிளிக்குங்க்ள்
இங்கேதான் உங்களின் விளையாடுத்திறனை காட்ட வேண்டும்.
தேவையான அள்விற்கு ஒளியை கட்டுப்படுத்த பொத்தான்கள் இங்கே இருக்கு. உதாரணதிற்கு நான் சிலவற்றைத் தேர்ந்து எடுத்து இருக்கிறேன்.


உங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு ஒளியை மாற்றிக் கொள்ளலாம்.
முன்னரே சொன்னமாதிரி பல அளவுகளை மாற்றிப்பாருங்கள், உங்களுக்கு பிடித்தமான விளைவு வரும்வரை!
வேறு Mode, Opacity மாற்றுவதன் மூலம் விளைவுகளை மாற்றலாம். மாற்றிப் பாருங்கள்.

அவ்வளவுத்தான். ஆட்டம் க்ளோஸ். !
Thursday, July 3, 2008
ஏழைகளின் Macro Lense - ஒரு சுலப நுட்பம்!
படம் பிடிப்பதில் உள்ள ஆர்வக் கோளாறினால், சில பல ஆயிரங்களை எடுத்து விட்டு, ஓரளவுக்கு நல்ல DSLR காமிரா வாங்கிடறோம்.
இந்த DSLR கேமராலயும் நல்ல நல்ல படங்களா க்ளிக்கித் தள்ளறோம்.
ஆனா பாருங்க, எந்த அளவுக்கு செலவு பண்றோமோ, அந்த அளவுக்குதான், கேமராவில் வசதிகள் இருக்கும்.
சமீபத்தில் நான் வாங்கின canon rebel xtiல, 18-55mm lense தான் இருக்கு.
தூரத்தில் இருக்கும் பறவையோ, வானத்தில் இருக்கும் நிலாவையோ, பூக்களுக்குள் இருக்கும் மகரந்தத்தையோ இதைக் கொண்டு படம் பிடிக்க முடியாது.
இதுக்கு தனியா ஒரு பெரிய லென்ஸும் (telephoto 70-500mm), ஒரு macro லென்ஸும் வாங்கி வைக்கணும்.
ஆனா, என்ன எடுத்துக்கிட்டா, என்னுடைய 90% படங்கள், 18-55mm கொண்டே எடுத்திடலாம். 10% படங்கள் எடுக்க, என்னாத்துக்கு, தேவையில்லாம பெரிய செலவு செய்யணும்னு, telephoto, macro லென்ஸெல்லாம் வாங்காம காலம் தள்ளியாச்சு.
18-55mm லென்ஸ் வச்சுக்கிட்டு, ஒரு பூவை ஒரு அடி தள்ளி நின்னு, இந்த மாதிரிதான் எடுக்க முடியும்.
இந்தப் படத்தை பாத்த நம்ம ஜீவ்ஸ், என் கிட்ட இந்தப் பூவின் இதழ்களில் படிந்திருக்கும் பனித்துளியின் க்ளோஸ்-அப் இருக்கான்னு கேட்டு, வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சினாரு.
அடடா, அந்த அளவுக்கு கிட்டப் போய் அந்த பனித்துளிய எடுத்தா, ஜம்முனு இருக்குமே, பேசாம மேக்ரோ லென்ஸ் வாங்கிடலாமா இந்த வாரம்னு தீவிரமா யோசிச்சு எங்க குறைந்த விலைக்கு விக்கறான்னு தேட ஆரம்பிச்சேன்.
அந்தத் தேடலின் போதுதான் ஒரு நுட்பம் கண்ணில் பட்டது.
அதாவது, என்ன மாதிரி DSLR கேமரா வச்சிருக்கரவங்க, தனியா macro லென்ஸ் வாங்கமலே, தன்னிடம் இருக்கும் 18-55mm உதவியுடன் macro படங்கள் எடுப்பது எப்படின்னு சொல்லியிருக்காங்க.
முதலில் அதை படிக்கும்போது ஆச்சரியமா இருந்தது, ஏதோ ஏப்ரல்-1 மேட்டர் மாதிரி. ஆனா, இன்னிக்கு அதை முயற்சி செய்து படங்கள் க்ளிக்கியபோது, பெரிய ஆச்சரியம் தான் போங்க.
மக்கா, என்னமா ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியமா போயிடுச்சு.
டெகினிக்கு என்னவா? இதோ சொல்லிடறேன் (மூலம் இங்கே)
1) கேமராவ கைல எடுத்து ஆன் பண்ணிக்கங்க
2) கேமராவின் டயலை 'பூ' modeக்கு மாத்துங்க. (இல்லன்னா, உங்க focal lengthஐ manual modeல சின்னதா தேர்ந்தெடுத்துங்கங்க. eg., 5.6)
3) எந்த பொருளை கிட்டப் போய் எடுக்க ஆசப்பட்டீங்களோ, அதை ஃபோக்கஸ் பண்ணிக்கங்க.
4) இப்ப, உங்க லென்ஸ கழட்டுங்க. (அட, ஆமாங்க, மெய்யாலுமேதான் சொல்றேன்)
5) லென்ஸை தலைகீழ திருப்பி, இந்தப் பக்கத்தை, கேமராவின் பாடியோட ஒட்டிப் பிடிங்க ( இது சரியா பொருந்தாது, அதனால, ஜாக்கிரதையா கையால் அழுத்திப் பிடிக்கணும். உள்ள வெளிச்சம் போகாத மாதிரி)
6) இப்ப, பொருளை நோக்கி கேமராவை பிடித்து, கொஞ்சம் முன்னும் பின்னும் நகர்ந்து, எடுக்க வேண்டிய படம் ஃபோக்கஸ் ஆகும் வரை முயலவும்.
7) பொருள் பளிச்னு தெரியுதா? டகால்னு படத்தை க்ளிக்குங்க.
8) ஆச்சரியப் படுங்க! :)
ரொம்ப சுலபமான அழகான டெக்னிக்கு இது!
கண்டுபிடித்து சொன்ன மகானுக்கு நன்னி!
இனி, இந்த நுட்பத்தை வைத்துப் பிடித்த படங்கள் சில:
இது,'சாதா' 'பூ' மோடில் எடுத்தது (before):
இது மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:
இந்தப் பூக்களும் மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:

இது எல்லா கேமராலயும் வேலை செய்யுமான்னு தெரியல.Canon rebel xtiல எனக்கு வேலை செஞ்சுது. உங்க கேமராவில் முயன்று பார்த்து, படங்களைப் பதியவும்.
கேமரா லென்ஸை கழற்றிப் பிடிக்கும்போது, ஜாக்கிரதையா கையாளவும். எதையாவது ஒடச்சீங்கன்னா, நான் பொறுப்புலேது :)
அசத்துங்க!
நன்றி!
மூலப் பதிவெழுதிய flickr நண்பருக்கு நன்றிகளைச் சொல்லிடுங்க, இங்க க்ளிக்கி
இதோட அறிவியல் விளக்கம் இங்கே
-சர்வேசன்



















