Tuesday, August 4, 2009

சின்னஞ்சிறு உலகம் - முன்னுரை

28 comments:
 
வணக்கம் மக்கா,

எல்லோரும் எப்படி இருக்கீங்க ? எல்லோரையும் பாத்து ரெம்ப நாள் ஆச்சு. படம் எடுத்தும் நாள் ஆச்சு. ஆணி நெறையன்னு காரணம் சொன்னாலும், சோம்பேறி தனம் தான் முக்கிய காரணம் :D

எதையும் கஷ்டப்பட்டு செய்ய கூடாது, இஷ்டப்பட்டு செய்யனும்னு நம்ம சஞ்சய் ராமசாமி சொல்லி இருக்காக. அதனால எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட பிரிவான மேக்ரோ புகைப்படங்கள் எடுக்க கத்துக்க முடிவு பண்ணி இருக்கிறேன். அப்படியே கற்று கொள்ளும் போது, நான் கற்றவற்றை இங்க சைடு கேப்புல பதிவா போட்டு உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு எண்ணம் :)

நாம் பொதுவா எல்லாவற்றையும் மேலோட்டமா தான் பாப்போம். கொஞ்சம் உற்று நோக்கினால் பல புதிய விஷயம் மற்றும் தகவல்கள் புலப்படும். இந்த உலகத்தில் பல நுட்பமான/அழகான/ விசித்திரமான வடிவங்களும், வண்ணங்களும் உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து நோக்கா விட்டால் அவை நமக்கு புலப்படாது. உதாரணமாக ஒரு நகை வாங்கும் போது, அந்த நகையின் வேலைப்பாடு, வடிவம் மற்றும் இன்ன பிறவற்றை நாம் எவ்வாறு கூர்ந்து ஆராய்வோம். ஆனால் நாம் பயன் படுத்தும் நாணயங்கள், பேனா முதலியவற்றை உற்று பார்த்து இருப்போமா ? தும்பியின் கண் அடுக்குகளை கூர்ந்து பார்த்து இருப்போமா ? நம்மில் பலர் அழகிய மலர்களை கூட உற்று நோக்குவது இல்லை. சின்ன சின்ன பொருட்களிலும், தாவரம் மற்றும் பூச்சி வகைகளிலும் பல வடிவங்களும், வண்ணங்களும் இருக்கின்றன. அந்த அழகை எல்லாம் நம் புகைப்பட பெட்டிக்குள் அடைக்கும் வழிமுறைகள் பற்றிய விளக்கம் அளிக்க எங்களால் முடிந்த சிறிய முயற்சி இந்த தொடர் - "சின்னஞ்சிறு உலகம்".


படக்குறிப்பு -
90mm, f/18, 1/2 விநாடி


இந்த தொடரில் கீழ் கண்ட தலைப்புகளை விரிவாக பாக்க போறோம்.

* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் பற்றிய விளக்கம் மற்றும் இவற்றின் வேற்றுமை

* அடிப்படை/முக்கிய குறிப்புகள்

* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் எடுக்க பல்வேறு வழி முறைகள். (இது பெரிய பகுதி. இதுக்கே பல பாகங்கள் தேவை படும்.)

* களப்பணி குறிப்புகள். (On the Field Tips and Tricks)


படக்குறிப்பு -
90mm, f/5.6, 1/160 விநாடி


முடிஞ்சவரைக்கும் விளக்க படங்களோட இந்த தொடரை எழுதலாம்னு இருக்கிறேன். அப்புறம் இந்த தொடர் குறிப்பா DSLR/SLR பயனாளர்களை கருத்திற் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் இதன் அடிப்படை கொள்கைகள் அனைவரும் பயன் படுத்தலாம். முடிந்தால் பாயிண்ட் அண்ட் சூட் குறிப்புகளையும் சேர்த்து எழுதுறேன்.

ஏதாவது தலைப்பு விடுபட்டு இருந்தா சொல்லுங்க. அதையும் சேர்த்துடுவோம்.

படக்குறிப்பு - 90mm, f/6.3, 1/250 விநாடி


பி.கு. - நெறைய வார்த்தைகள்(குறிப்பா டெக்நிக்கல் வார்த்தைகள் ஹி ஹி ஹி ) ஆங்கில தழுவலாக இருக்கும். அதற்க்கு தூய தமிழ் சொல் தெரிந்தால் சொல்லுங்க. மாத்திடுவோம்.

28 comments:

  1. நல்ல தலைப்பு நாதஸ்
    நிறைய கத்துக்க ஆவலாய் இருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. ஆரம்பமும்.. படமும் அசத்தல்.. காத்திருக்கோம் தல.. ( 90எம் எம் டாம்ரான் லென்ஸோட ;) ))

    ReplyDelete
  3. படங்கள் அருமைங்க!!! என் தளத்தில் உங்கள் பதிவை குறிப்பிடலாமா.. சந்தர்ப்பம் கிடைக்கும்போது.......

    ReplyDelete
  4. நாதாஸ் மேக்ரோல ஃப்ளாஷ் யூஸ் பண்றது பத்தியும் சொல்லி கொடுங்க. அதான் மண்டை காய வைக்குது.

    ReplyDelete
  5. உய்ய்ய்ய்ய்....

    இரண்டாவது படம் அசத்தலோ அசத்தல்... கைவண்ணம் நாதஸ்?

    மற்ற படங்களும் அள்ளுது... உங்க வகுப்பை எதிர்பார்க்கிறோம்.

    :))

    ReplyDelete
  6. நல்ல பதிவு..தொடருங்கள் நாதாஸ் !!

    ReplyDelete
  7. நாதஸ், நீங்க கொடுக்கும் படங்கள் Macro-lens பயன்படுத்தி எடுத்ததா அல்லது zoom-lens பயன்படுத்தி எடுத்ததா என்கிற குறிப்பும் கொடுத்தால் நல்லா இருக்கும். நல்ல தலைப்பு.. கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  8. ஓ மன்னிக்கவும் இரண்டாவது படத்தில் பெயரை இப்பொழுது தான் பார்த்தேன்...

    (அப்புறம் மண்டபத்துல போய் யாரோட போட்டொவையோ வாங்கி வந்தா போடுறோம்... )நற நற

    ReplyDelete
  9. வாழ்க ... எதிர்பார்த்திருந்தது.

    ReplyDelete
  10. Excellent Pics! Keep them coming. :)

    ReplyDelete
  11. அசத்தல் நாதாஸ்! இன்னும் விரிவாக்கியிருக்கலாம். சின்னஞ்சிறு உலகம் என்பதால் சுருக்கி விட்டீர்களோ? :)

    ReplyDelete
  12. ஆஜர்.

    வெறும் க்ளிக் மட்டும்தான் தெரியும். இனிமேல் கொஞ்சம் கத்துக்கிட்டு முயல்வேன்!

    ReplyDelete
  13. நல்ல தலைப்பு இன்னும் விரிவாக அடுத்த பதிவுகளில் விளக்கினால் நன்று. காற்றடிக்கும்போது எப்படி பூக்களை இவ்வளவு அருகில் எடுக்க முடிகிறது? (:

    வாசி

    ReplyDelete
  14. What camera you are using to take macro pics? Are you using any macro-lense and filter?

    ReplyDelete
  15. ஓ.. இப்பிடியெல்லாம் எடுத்தாதான் போட்டோவா.. அப்போ நானெல்லாம் எடுக்கிறது?

    ReplyDelete
  16. படங்கள் ரொம்ப அருமைங்க.

    அப்படியே நல்ல SLR வாங்க (பட்ஜெட் கம்மி தான்)

    அதனை பற்றியும் கொஞ்சம் அறிமுகம் தாறுங்களேன்.

    ReplyDelete
  17. வருகை தந்த அனைவருக்கும் நன்றி !

    @தேவன் மாயம் -
    எங்கள் பதிவுகளை உங்கள் தளத்தில் குறிப்பிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே :)

    @ நந்து -
    எனக்கும் பிளாஷ் பத்தி தெரியாது :( ஆனா என்ன கத்துகிட்டு அதை பத்தியும் எழுதுறேன் :)

    ReplyDelete
  18. உதயபாஸ்கர் -
    சுட்டிக்காட்டியதற்கு நன்றி ! கண்டிப்பா வரும் படங்களில் லென்ஸை பற்றியும் குறிப்பில் போடுறேன்.

    @ வெயிலான் -
    நெறைய விஷயம் ஒரே சமயத்துல சொன்னா கொஞ்சம் சலிப்பு வந்துடும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம சில கருத்துக்கள் மறக்கப்படலாம். கொஞ்சம் கொஞ்சமா நிறைய விளக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம்னு இருக்கேன். :)

    ReplyDelete
  19. @ வாசி -
    நீங்க கேட்ட கேள்வி "களப்பணி குறிப்புகள்" பகுதியில் இடம் பெறுகிறது :)

    @ஜமால் -
    இந்த கேள்விக்கான கலந்துரையாடல் ஏற்கனவே இன்னொரு பதிவுல ஓடிகிட்டு இருக்கு. http://photography-in-tamil.blogspot.com/2009/07/pit.html, இங்கன போய் பின்னூட்ட பகுதியில் பார்தீங்கன்னா உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்னு நினைக்குறேன் :D

    ReplyDelete
  20. ஆகா! வகுப்புகளை வரவேற்கிறேன்!

    ReplyDelete
  21. புகைப்படகலையை பொறுத்த வரை கத்துக்க இன்னும் இன்னும்னு எவ்வளவோ இருக்கு. ஒவ்வொன்றாக எங்களுக்கு அறிமுகப்படுத்திவரும் பிட் குழுவினரின் பனி மிகச்சிறந்தது, நன்றி.
    மேக்ரோ லென்ஸ்தான் இல்லை என்ன செய்யறது???

    ReplyDelete
  22. hoo hooooo... im eagerly waiting...
    photographs are spectacular.

    ReplyDelete
  23. Aahaa.., Arputham..,
    Camera ukku velaium... Brain ukku nalla thiniyum kedaikka pohuthu...

    Puhaippada kalai yennum maram valarkka nalla velaikkarar vanthirukkiraar...
    Yen poontra ilang kantrukale... manathaara meithu kollungal...

    Natri Nathas sir,
    Ungal viyarvaikku, nichayam nalla kalangarkal uruvahuvaarkal.

    Ungal pani thoivintri thodara vaalthukkal

    Vennila Meeran.

    (Tamil font illathathaala, thanglishla kothari iruppoatharkku mannikkavum)

    ReplyDelete
  24. நாதஸ்,

    அசத்தல்.அருமையான தலைப்பு.மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  25. @ ஒப்பாரி
    Raynox DCR 250 - கூகிள்'ல் தேடி பாருங்கள். Ebay'la கிடைக்கும் 30 USD பக்கம் வரும்.
    ஆனா ஒரு சிக்கல், DOF மிக மிக குறைவாக இருக்கும், படம் எடுப்பதும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.

    @ நாதஸ்
    Macro எடுக்கும்போது DOF மிக மிக குறைவான தருணங்களில் எப்படி படம் எடுப்பது. முக்காலி எல்லா இடங்களுக்கும் சரிபடாது.
    உங்கள் ஆலோசனைகள் என்ன?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff