Friday, October 30, 2009

2009 நவம்பர் மாத போட்டி அறிவிப்பு..

20 comments:
 
அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே ப்ளாக்கால பெருங்குடி மக்களே..வணக்கம் . மொத தடவ உங்களையெல்லாம் போட்டியாளரா இல்லாம நடுவரா சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் ..கிட்டத்தட்ட ஒரு வருசமா போட்டோவ மட்டும் அனுப்பிட்டு, மற்ற போட்டோவை எல்லாம் ஒழுங்கா பார்க்காம , ரிசல்ட்ஐ மட்டும் பார்த்துகிட்டு,நம்ம போட்டோ வெற்றி பெறலைன்னா , ரொம்ப ஈசியா நடுவர கண்டபடி திட்டிட்டு போயிடுவேன்.. ஆனா அது எவ்வளவு தப்புன்னு இப்ப தான் ரொம்ப நல்லாவே உறைக்குது .. நமக்குன்னு ஒரு பொறுப்பு வரும் போது தான் நடுவரா இருக்கிறது எவ்வளவு சிரமம்ன்னு நல்லாவே புரியுது அதுக்கு பரிகாரமா தான் இந்த மாசம் நானும் திட்டு வாங்கலாம்ன்னு வந்திருக்கேன்... பொதுவா நம்ம எல்லோருக்கும் மறக்க முடியாத நாட்கள்,அழகான நாட்கள், அப்படின்னா உடனே நமது மழலை பருவம் தான் கண்டிப்பா தோணும்.. வெயில் படத்துல வர மாதிரி கண்டபடி நண்பர்களோடு சுற்றி திரிந்த அந்த நாட்களை எவ்வளவு தான் பெரிய ஆளா இருந்தாலும் கண்டிப்பா மறக்கவே முடியாது.. நாம பண்ணின சேட்டைகள்,குறும்புகள் பத்தி இன்னிக்கு நெனச்சாலும் பேசிக்கிட்டே இருக்கலாம். இப்போ இருக்கிற இருக்கமான சூழ்நிலைகள்ல, கொஞ்சம் தெரியாத்தனமா பார்க்காம போய்ட்டா கூட அதையே மனசுல வெச்சுக்கிட்டு கண்டபடி கற்பனை பண்ணி கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து தெரு சண்ட வரைக்கும் போனதுண்டு.. ஆனா இந்த சின்ன பசங்கல்லாம் ,ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிக்கிட்டு அடுத்த பத்தாவது நிமிசமே சிரிச்சு சந்தோசமா பழசையெல்லாம் மறந்துட்டு தோல் மேல கை போட்டுக்கிட்டு சந்தோசமா நாட்களை `இப்படி தாண்டா வாழனும்ன்னு` நமக்கு புரிய வெப்பாங்க .. நாம பல படங்கள்ல பார்த்திருப்போம் ,ரெண்டு குடும்பம் தீராத பகையோட இருக்கும் , அந்தந்த வீட்டு குழந்தைங்க கொஞ்சம் கொஞ்சமா குறும்பு பண்ணி, குடும்பத்த சேர்த்து வைக்கும்.. அதுக்கு சமீபத்திய உதாரணம் `பசங்க` படம். அவங்க தான் இந்த மாச தலைப்பு, பசங்கன்னு வெச்சா பொண்ணுங்க கோவிச்சுக்குவாங்க, அதனால,இந்த மாச தலைப்பு `வாண்டுகள்` வாண்டுகள்,சில சாம்பிள் படங்கள்.. குறும்பு, (கருவாயன்) அச்சம், (கருவாயன்) விளையாட்டு, (கருவாயன்) சிரிப்பு, (கருவாயன்) நக்கல், (கருவாயன்) பாசம், (கருவாயன்) குதூகலம், (கருவாயன்) வெட்கம் (கருவாயன்) மகிழ்ச்சி, (கருவாயன்) வாண்டுகளின் சிரிப்பு,கோபம்,கேலி,கிண்டல்,குறும்பு,நக்கல்,சோகம்,இன்னும் என்னென்லாம் முடியுமோ அத்தனையும் படம் பிடித்து அசத்துங்க.. இதுக்கு ஒரே ஒரு புது விதிமுறை தான், ஒன்றுக்கும் மேற்பட்ட வாண்டுகள் தான் இருக்கனும்..கண்டிப்பாக ஒரு குழந்தை மட்டும் இருக்க கூடாது. ஒரு சில ஆலோசனைகள்,கட்டாயம் கிடையாது... 1. முடிந்த அளவு வாண்டுகள் மீதே கவனம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். 2. தேதிகள் போட்டோவில் பதிவு ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 3. முடிந்த அளவு flash இல்லாமல் படம் பிடிக்கவும்.. 4. முடிந்த அளவு இயற்கையாக இருக்கட்டும்.அப்போ தான் படம் சிறப்பாக வரும். 5. முடிந்த அளவு வெளியே போய் எடுத்தால் ரொம்ப நல்லா வரும்,flashம் தேவை இருக்காது. போட்டிக்கான மாதாந்திர விதிமுறைகள் ஆகவே உங்கள் பொன்னான படங்களை `வாண்டுகள்`சின்னத்தில் கள்ள ஓட்டு போடாமல் வாக்களிக்குமாறு பனிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி,வணக்கம் கருவாயன்.

20 comments:

  1. ஆஹா சூப்பரூ டைட்டில்

    வாண்டுகள் அலைமோத போகுது :))))

    ReplyDelete
  2. வாண்டுகள் போட்டோவுல எங்கே எங்க நிலாக்குட்டி ??? :)))

    ReplyDelete
  3. நல்ல தலைப்பு சற்றே சிரமாமன வேலை என்றாலும் முடிந்தது குதுகலமாய் இருக்கும் என்பது உண்மையே... ம் சீக்கிரம் எடுக்க வேண்டும்...

    முதன் முறையாக நடுவராக பங்கேற்கும் கருவாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. //தோல் மேல கை போட்டுக்கிட்டு...//

    எப்படி எப்படி எப்படி???????

    தோள் மேல

    இப்படிக்கு டீச்சர்:-)

    ReplyDelete
  5. 1973 i took a snap with vaandoos.my relatives kids .i must get permission from those vaandoos who are all 35+ now.

    ReplyDelete
  6. வாண்டு(கள்) தலைப்பு அற்புதம். ஆனா வாண்டுகளோட பெற்றோர் வாண்டுகளோட படத்தை இணையத்தில் இட ஒத்துக்கனும். சிக்கலே இங்க தான் :-((. என்னால ஆன முயற்சி பண்ணி பார்க்குறேன்.

    ReplyDelete
  7. நல்ல தலைப்பு தான், வீட்டுல வாண்டுகள் இருக்கிறவங்களுக்கு. எனக்கு கஷ்டம் இம்முறை. இந்த ஊருல குழந்தைங்கள்ல ஃபோட்டோ புடிச்சா தப்பு. அவங்களுக்குத் தெரியாம எடுக்கணும். இது எவ்வளவு சாத்தியம்னு தெரியல. முயற்சி பண்றேன், ஆனா அநேகமா முதல் முறையா போட்டியில கலந்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ரை பண்ணுங்க. I think i will miss this time. :-(

    ReplyDelete
  8. என்ணனே இப்படி பண்ணிட்டீங்க... தலைப்பு அருமையா இருக்கு... இது நம்ப ஊரில சாத்தியம், ஆனா நான் இருக்கிற நாட்டில இப்படி படம் பிடிச்சா, புள்ள புடிக்கிறவன் என்று உள்ள தூக்கி போட்டிருவாய்ங்க... இருந்தாலும் ரஸ்க் ஸாரீ ரிஸ்க் ஸாரீ ட்ரை பண்ணி பார்க்கிறேன்... :)

    ReplyDelete
  9. //அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ரை பண்ணுங்க. I think i will miss this time. :-( //

    வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  10. Truth, Priyadarshan, குறும்பன்,

    point taken.

    //இதுக்கு ஒரே ஒரு புது விதிமுறை தான், ஒன்றுக்கும் மேற்பட்ட வாண்டுகள் தான் இருக்கனும்..கண்டிப்பாக ஒரு குழந்தை மட்டும் இருக்க கூடாது.//

    கும்பலா ஓடர பயலுவள எடுத்துப் போடலாமோ? பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகள் பரவசமுடனே தின்றது ஓடரது ஆடரது?

    பி.கு: மாட்னீங்கன்னா, கொம்பேனி பொறுப்புலேது ;)

    ReplyDelete
  11. //
    Truth said...
    நல்ல தலைப்பு தான், வீட்டுல வாண்டுகள் இருக்கிறவங்களுக்கு. எனக்கு கஷ்டம் இம்முறை. இந்த ஊருல குழந்தைங்கள்ல ஃபோட்டோ புடிச்சா தப்பு. அவங்களுக்குத் தெரியாம எடுக்கணும். இது எவ்வளவு சாத்தியம்னு தெரியல. முயற்சி பண்றேன், ஆனா அநேகமா முதல் முறையா போட்டியில கலந்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ரை பண்ணுங்க. I think i will miss this time. :-(
    //
    சேம் ப்ளட்

    ReplyDelete
  12. கொஞ்சம் கடினமான தலைப்புதான். ஏன்னென்றால் குழந்தைகளை சாப்பிட வைக்கவே போதும் போதும் என்றாகிவிடுகிறது. போட்டா என்றால், சரி முயற்சி செய்து பார்ப்போம்...

    ReplyDelete
  13. 8-ம் தேதி அனுபிச்ச படம், இன்னும் வரலயே ......
    பிட் கவனிக்கவும்.

    ReplyDelete
  14. இன்று படப் போட்டிக்காக பழைய படம் கிட்டத்தட்ட34 வருடங்களுக்கு முன் எடுத்தது. சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  15. Nagappan, ஆல்பத்தில் இல்லைன்னா, இதுவரை எங்க கைக்கு வரலன்னு அர்த்தம். இப்பதான், இதுவரை வந்ததையெல்லாம் இணைத்தேன்.

    தயவுசெய்து, இன்னொருமுறை அனுப்பவும். நன்றீஸ்.

    ReplyDelete
  16. நன்றி , ஆல்பத்துல ரெண்டு படமும் வந்திருச்சு

    ReplyDelete
  17. என்னோட வாண்டுகள் இங்க இறக்கி வெச்சிருக்கேன்.

    ReplyDelete
  18. போட்டிக்கான தேதி முடிவடைகிறது..இனி வரும் புகைப்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது..

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff