Sunday, March 6, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா , பாகம் - 17... INTERCHANGABLE LENS கேமராக்கள் -- MIRROR LESS கேமராக்களின் நன்மைகள், குறைகள்..

1 comment:
 

அன்பு நண்பர்களே.

இதற்கு முன்னர் பகுதிகளில்,


1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக இருக்கின்றன .

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

3. DSLR நன்மைகள் , குறைகள்

4. MIRROR LESS கேமராக்கள்..

ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..

இந்த பகுதியில் mirror less கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்..


நன்மைகள்:
DSLR உடன் ஒப்பிடும் போது:

  • கேமரா body ன் அளவுகளும் , லென்ஸின் அளவுகளும் குறிப்பிடும்படியான அளவுக்கு சிறியது.. எடையும் கம்மி.
  • சிறிய சைஸ் கேமராவிற்குள்ளேயே, DSLR ல் பயன்படுத்தப்படும் ஒரே அளவிலான சென்சார்கள்.
  • flange focal distance குறைவாக இருப்பதால் wide angle லென்ஸ்களை மிக சிறியதாகவும்,விலை குறைவாகவும் தயாரிப்பது மிக எளிதாகின்றது..
  • வெறும் adopterஐ மட்டும் பயன்படுத்தி எந்த வகை ப்ராண்ட் லென்ஸ்களையும் பயன்படுத்தி படமெடுக்கலாம்.. ஆனால் இவ்வகையில் manual focus மட்டுமே வழி..
  • இதில் mirror இல்லாததால் DSLR ல் shutter release செய்யும் போது ஏற்படும் சத்தம் மற்றும் அதிர்வுகள் இந்த கேமராக்களில் இல்லை.. இதனால் ஒரு சில மேக்ரோ படம் எடுப்பதற்கு பயன்படும்..
  • live view ல் படமெடுக்கும் போது DSLR ஐ விட mirror less கேமராவில் நல்ல வேகம் மற்றும் smooth ஆக இருக்கும்..
  • வீடியோ எடுக்கும் போதும் auto focus தொடர்ச்சியாக ஆகும் நன்மை உண்டு.. இதனால் வீடியோ மிகவும் சிறப்பாக இருக்கும்..இது DSLR வீடியோவை விட நல்ல வேகம்.

நன்மைகள்: சிறிய கேமராக்களுடன் ஒப்பிடும் போது:


  • சிறிய கேமராக்களை விட வேகமான focus
  • குறைவான shutter lag ..
  • சென்சார் சிறிய கேமராக்களை விட பல மடங்கு பெரியதாகும்.. இதனால் கண்டிப்பாக IMAGE QUALITY நன்றாக இருக்கும்.. அதிக பிக்ஸல்களும் பயன்படுத்தலாம்..
  • ஒரு சில கேமராக்களில் EVF (electronic view finder) உண்டு.. அருமையான EVF.. நல்ல தெளிவாக இருக்கும்.. ப்ரொஸ்யூமர் கேமராக்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது ஏற்படும் சிரமம் இதில் இருக்காது..
  • NOISE கம்மி... இதனால் ISO 800 வரையில் தைரியமாக பயன்படுத்தலாம்...
  • க்ரிப் நன்றாக இருக்கும்.. ஆடாமல் டைட்டாக பிடித்து படம் எடுக்கலாம்.

குறைகள்: DSLR உடன் ஒப்பிடும் போது:

  • லென்ஸ் சாய்ஸ் என்பது சற்று குறைவு தான்..ஒரு குறிப்பிட்ட லென்ஸ் வகைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன..ஆனால் ஒரு சில sports மற்றும் SPECIAL வேக லென்ஸ்களை தவிர நார்மல் படம் எடுப்பதற்கு லென்ஸ்கள் வந்துவிட்டன..
  • contrast detect auto focus என்பதால் ஃபோகஸ் வேகம் சற்று குறைவு.. DSLR ல் இருப்பது போல் auto focus ற்கு என்று தனியாக சென்சார் கிடையாது..
  • பலர் விரும்பும் மிக முக்கிய அம்சமான optical view finder என்பது வாய்ப்பே இல்லை.. live view அல்லது electronic view finder தான் படம் எடுப்பதற்கு வழி..
  • DSLR அளவுக்கு க்ரிப் இருக்காது..
  • பேட்டரி DSLR உடன் ஒப்பிடும் போது mirror less கேமராவில் சீக்கிரம் தீர்ந்துவிடும். ஏனென்றால் LCD finder அல்லது EVF இந்த இரண்டும் , தவிர மற்ற விசயங்கள் அனைத்தும் electronics சமாச்சாரம் என்பதால் விரைவில் பேட்டரி தீர்ந்து விடும்..


குறைகள்: சிறிய கேமராக்களுடன் ஒப்பிடும் போது:

  • அளவில் சற்று பெரியது.. பாக்கெட்டில் வைக்க முடியாது..
  • ஒரே லென்ஸில் பெரிய zoom அளவுகள் கிடையாது..அதாவது 28-500mm , 28-800mmஎன்று இந்த மாதிரி.. ஆனால் 28-300mm (35mm format) வரையில் இப்போதைக்கு ஒரே லென்ஸில் கிடைக்கின்றன..இதுவே அதிகம்,போதும்..
  • ஒரு சில EVF வைக்கப்பட்ட கேமராக்கள் மட்டும் கிட்டதட்ட 75% DSLR மாதிரியே பெரிதாக இருக்கின்றன..
  • லென்ஸை அடிக்கடி மாற்றினால், சென்சாரில் DUST எளிதாக படியும் வாய்ப்பு அதிகம்.


தகவல்கள்:

  • தற்போதைக்கு third party lens கம்பெனியான SIGMA வும் இதற்கான லென்ஸ் தயாரிப்புகளை ஆரம்பித்து விட்டன என்பது ஒரு நல்ல செய்தியாகும்.. இதனால் விலை குறைவான லென்ஸ்களையும் வாங்கலாம்..
  • இன்றைய நிலவரப்படி NIKON மற்றும் CANON கம்பெனிகள் இரண்டும் இன்னும் நுழையவில்லை.. ஆனால் மிக விரைவில் எதிர்பார்க்கலாம்..
  • இப்போதைய நிலவரப்படி இதன் விலை சற்று அதிகமே..
  • சிறியதாக கேமரா வேண்டும் என்றால் மட்டும் இவ்வகை கேமராக்களை வாங்கவும்.. மற்றபடி அளவு உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் DSLR ஐயே வாங்கவும்.. விலையும் கிட்டதட்ட ஒன்று தான்..
  • அதே சமயம் வீடியோவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவ்வகை கேமராக்களை வாங்கலாம்

இவ்வகை கேமராக்கள்,

  • இரண்டு வடிவங்களில் வருகின்றன ,
1.எந்த view finderம் இல்லாமல் (optical மற்றும் electronic) ஒரு வகையும்,

sony NEX3 ,
sony NEX5 ,
panasonic GF1 ,
panasonic GF2 ,
olympus E-PL1 ,
olympus E-PL2,
olympus E-P2 ,
samsung NX 100)


2. EVF வைத்து ஒரு வகையும்.. இது கிட்டதட்ட 75% DSLR மாதிரியே இருக்கும்.

samsung NX10 ,
samsung NX-11 ,
panasonic G1 , G2 , G10 ,
panasonic GH1 ,GH2 .


  • இரண்டு சென்சார்களில் வருகின்றன...
1. APS-C size சென்சார்( sony மற்றும் samsung)

2. four-third சென்சார்(panasonic மற்றும் olympus) இது APS-C sensorஐ விட சிறியதாகும். இதை தான் micro four third sensor என்று கூறுகின்றனர்..



அடுத்த பகுதியில் இன்னும் பிற INTERCHANGABLE LENS கேமராக்களை பற்றி பார்ப்போம்.


நன்றி
கருவாயன்

1 comment:

  1. தெளிவான விளக்கங்கள்! நன்றி!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff