Sunday, March 13, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம் - 18.. INTERCHANGABLE LENS கேமராக்கள்.... SLT கேமராக்கள்

7 comments:
 

அன்பு நண்பர்களே...

இதற்கு முன்னர் பகுதிகளில் interchangable lens கேமராக்களில் DSLR , MIRRORLESS CAMERA ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..


1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக இருக்கின்றன .

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

3. DSLR நன்மைகள் , குறைகள்

4. MIRROR LESS கேமராக்கள்..

5. MIRROR LESS கேமராக்களின் நன்மைகள் , குறைகள்..


இப்பகுதியில் மற்றொரு புதிய வரவான interchangable lens கேமராவை பற்றி பார்ப்போம்...


SLT கேமரா





SLT என்றால் single lens translucent கேமரா...

இது கிட்டதட்ட DSLR மாதிரியான கேமரா தான்.. ஆனால் DSLR ஐ விட சின்ன சைஸ்..

ஆனால் SLR (single lens reflex) கிடையாது.. இது ஒரு EVF (Electronic View Finder) கேமரா..

இவ்வகை SLT கேமராக்கள் என்பது பாதி DSLR ம் , பாதி mirror less ம் கலந்தது என்று கூறலாம்..

இது கிட்டதட்ட mirror less கேமராக்களுக்கும் ,DSLR கேமராக்களுக்கும் நடுவிலான ஒரு கேமரா என்றும் சொல்லலாம்...








நாம் ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்தோம்,பொதுவாக ஒரு mirror less கேமராவில், DSLRல் இருப்பது போல் இரண்டு விசயங்கள் கிடையாது..

ஒன்று pentaprism.. இதை பயன்படுத்தி லென்ஸ் வழியாக வரும் ஒளியினை நாம் அப்படியே கண்ணாடியில் பார்ப்பது போல் optical view finder பார்ப்பதற்காக அமைக்கப்படும் ஒரு வகை mirror ஆகும்..


மற்றொன்று auto focus சென்சார், இது லென்ஸ் வழியாக வரும் ஒளியினை அப்படியே (opticalஆக) ஒரு பகுதியை autofocus ற்கு என்று தனியாக உள்ள auto focus சென்சாரை பயன்படுத்துவார்கள்.. இதை தான் phase detection auto focus என்று கூறுவார்கள்..


கேமராவின் அளவு,எடை ஆகியவற்றை குறைப்பதற்காக,மேலே சொன்ன இரண்டு விசயங்கள் இல்லாததால், mirror less கேமராக்களில் இரண்டு முக்கிய விசயங்கள் பயன்படுத்த முடியாது.. அது என்னவென்றால்,


1. optical view finder. இதற்கு பதிலாக தான் mirror less கேமராக்களில் , live view பயன்படுத்தியோ அல்லது electronic view finderஐ பயன்படுத்தியோ தான் படம் எடுக்க முடியும்.. இது முழுக்க முழுக்க electronics ஆகும்..


2. phase detection auto focus. இதற்கு பதிலாக contrast detect auto focus என்கின்ற முறையை பயன்படுத்தி தான் படம் எடுக்க முடியும்..இதுவும் முழுக்க electronics சமாச்சாரம் தான்..


இந்த contrast detect auto focus முறை என்பது, ஒளியானது சென்சாருக்கு வந்த பிறகு, சிறு processing ஆன பிறகு தான் auto focus ஆகும். இது முழுக்க முழுக்க electronics ஆகும்..


இதனால் DSLRன் phase detection auto focus உடன் ஒப்பிடும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு mirror less கேமராவில் பயன்படுத்தப்படும் auto focus வேகம் கண்டிப்பாக குறைவான வேகத்தில் தான் இருக்கும்..

இதனால் ஒரு சில வாடிக்கையாளர்கள், சிறிய சைஸ் கேமராக்களில், குறிப்பாக mirror less கேமராக்களில் வேகமாக autofocus ஐ பயன்படுத்த முடியாது.

சரி,இதற்கு என்ன வழி?? mirro box வைத்தால் அளவும், எடையும் கண்டிப்பாக கூடி விடும்.. அதற்கு DSLR ஐயே வாங்கிக்கொண்டு போகலாமே??

கேமராவும் DSLRஐ விட சிறியதாக இருக்க வேண்டும் அதே சமயம் autofocus ம் நன்றாக இருக்க வேண்டும்..

இதற்கு ஒரு சிறு வழி கண்டுபிடித்தார்கள்.. அது என்னவென்றால், இவ்வகை SLT கேமராக்கள்..

சரி, இதன் சிறப்பு என்ன ?

இதில் சிறப்பு என்னவென்றால்,

mirror less கேமராக்களை போல் இவ்வகை SLT கேமராக்களில் mirror box மற்றும் pentaprisam கிடையாது..

DSLR ல் optical view finder மற்றும் phase detection autofocus ற்காக mirror box ஐ பயன்படுத்துவார்கள்...

ஆனால் அதற்கு பதிலாக , SLT கேமராக்களில் beam splitter என்கிற ஒரு வகை ஒளி பிளப்பான் mirror ஐ மட்டும் பயன்படுத்துகின்றனர்..

இது என்ன செய்யும் என்றால், லென்ஸ் வழியாக வரும் ஒளியின் பெரும்பாலான பகுதியை நேரடியாக படம் பிடிக்கும் சென்சாருக்கு அனுப்பும், மீதி ஒளியை beam splitter உதவியுடன் refelect செய்து phase detection auto focus சென்சாருக்கு பிரித்து அனுப்பும்..

இப்படத்தை பார்த்தால் புரியும்..




இதனால் என்ன நன்மை என்றால்.... கேமராவும் சிறியதாக இருக்கும் அதே சமயம் auto focus ம் DSLR ல் இருப்பது போல் phase detection முறையில் பயன்படுத்தப்படும்..

இதனால் DSLR மாதிரியே வேகமாக auto focus செய்யமுடியும்.. இதனால் ஒரு சில action படங்களையும் எளிதாக auto focus செய்யும் வசதி சிறிய கேமராக்களிலேயே கிடைக்கின்றது..

தகவல்கள்:

  • தற்போதைக்கு sony கம்பெனி மட்டும் SLT கேமராக்களை தாயரித்து வருகின்றன.. sony a55 , sony a33
  • இதுவும் கிட்டதட்ட 75% DSLR மாதிரி தான் அளவில்,அமைப்பில் இருக்கின்றது..



  • இதன் சென்சாரும் DSLR ல் பயன்படுத்த படும் APS-C சென்சார் வகைகள் தான்..
  • இதன் வீடியோ என்பது மற்ற டிஜிட்டல் கேமராக்களை விட கண்டிப்பாக வேகமாகவும் நல்ல குவாலிட்டியுடனும் இருக்கும்
  • mirror இல்லாததால் இதில் ஒரு விநாடியில் அதிகபட்சம் 10 ஃப்ரேம் வரை படம் எடுக்கலாம்..
  • electronic view finder தான் வழி.. DSLRல் இருப்பது போல் optical view finder வராது..
  • DSLR ல் இருப்பது போல் phase detection auto focusல் படம் எடுக்கலாம்.. DSLR ல் கூட live view ல் phase detection auto focus எடுக்க முடியாது... ஆனால் இவ்வகை SLT கேமராவில் மட்டும் live view ல் கூட வேகமாக phase detection auto focus செய்யலாம்.
  • ஒரு கேமராவுக்குள் நிறைய features , நல்ல தெளிவான EVF , நல்ல வீடியோ,GPS , கொஞ்சம் புது டிஸைன் , இந்த மாதிரி புதுமை விரும்பிகள் வேண்டுமானால் இவ்வகை கேமராக்களை வாங்கலாம்..
  • சைஸ் பிரச்சனையில்லையென்றால் , நல்ல படம் எடுத்தால் போதும் என்று விரும்புகின்றவர்கள் இவ்வகை கேமராக்கள் வாங்கத் தேவையில்லை.. DSLR ஐயே வாங்கலாம்..


DSLR , MIRRORLESS , SLT கேமராக்களின் முக்கிய அம்சங்கள்:

DSLR:

1. mirror box மற்றும் pentaprism உண்டு. இதனால் எடை ,அளவு பெரிது.
2.optical view finder உண்டு.. EVF தேவையில்லை.
3.phase detection auto focus ஆகும்.
4.ஆனால் live view வில் contrast detect auto focus தான் வழி..
5.auto focus ற்கு என்று தனியாக சென்சார் உண்டு..


mirror less கேமராக்கள் :

1. mirror box மற்றும் pentaprism எதுவும் கிடையாது. நேராக சென்சாருக்குள் ஒளி..
2.optical view finder கிடையாது. live view அல்லது EVF தான் படம் எடுப்பதற்கு வழி.
3. contrast detect auto focus மட்டும் தான் வழி.. phase detection auto focus கிடையாது.
4.auto focus ற்கு என்று தனியாக சென்சார் கிடையாது..


SLT கேமராக்கள்:

1.mirror box, pentaprism இரண்டும் கிடையாது..
2.அதற்கு பதிலாக beam splitter பயன் படுத்துகின்றனர்.
3.optical view finder வழியில்லை.. EVF தான் வழி.
4.phase detection auto focus ஐ live view வில் கூட பயன்படுத்தலாம்..
5.auto focus ற்கு என்று தனியாக சென்சார் உண்டு.




மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்...

நன்றி
கருவாயன்

7 comments:

  1. சார் நான் புதியதாக ஸ்டுடியோ ஆரம்பித்து உள்ளேன் ஒரு நல்ல portrait போட்டே எடுக்க manual settings என்ன அளவு வைக்க வேண்டும்..

    ReplyDelete
  2. @anonymous...

    இண்டோர் போர்ட்ராய்ட் படம் எடுப்பதற்கு பல செட்டிங்ஸ் இருக்கின்றன.. இது தனியாக எடுப்பதற்கும் , குழுவாக எடுப்பதற்கும் , முன்னும் பின்னும் நின்று எடுப்பதற்கும் , ஒரே லைனில் நின்று எடுப்பதற்கும்.. இப்படி பல விசயங்கள் தீர்மானிக்கின்றன..

    அதே சமயம் நீங்கள் பயன்படுத்தப்போகும் அம்பெர்லா லைட்ன் என்னிக்கையும் தீர்மானிக்கும்..

    இருந்தாலும் ஒரு பேசிக் செட்டிங்ஸாக ,

    shutter speed 1/125 secs.குறைந்தது இருக்க வேண்டும்... இதற்கு கீழ் குறைக்க வேண்டாம்.

    aperture f/8 அல்லது f/11 வைத்து எடுக்கவும்.. அப்பொழுது தான் படம் முழுவதும் depth நன்றாக கிடைக்கும்..

    white balance என்பது sunlight மோட் வைக்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  3. CAN ANYBODY SUGGEST ME A DIGITAL CAMERA WHICH HAS HIGHER THAN 12 MP AND MORE ZOOM CAPACITY ?
    I HAVE PLAN TO BUY NIKON D 3100 OR D 90. BUT MY FRIEND IS SAYING CANON 500 OES IS BEST THAN NIKON B'CAUSE CAN ANYBODY SUGGEST ME A CAMERA FOR THE ABOVE .I AM A NON PROFESSIONAL BUT LIKE TO TAKE PHOTOS OF IMPORTANT TOURIST SPOTS AND NATURES.SRY FOR WRITING IN ENGLISH I DON HAVE TAMIL FONTS

    ReplyDelete
  4. காமெராவில் அறிமுகமாகும் புதிய டெக்னாலஜி களை உடனுக்குடன் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . இந்தளவிற்கு தமிழில் வேறு யாரும் டெக்னிகல் விசயங்களை கையாண்டு விளக்கம் அளிக்க முற்பட்டதில்லை . இந்த முயற்சி , ஆர்வம் தொடர வாழ்த்துக்கள் . இன்னொரு சுஜாதாவாக உங்களை பார்க்கிறேன்...எழில் மாறன் -பெங்களூர்

    ReplyDelete
  5. @eswaran vinoth...

    இப்போதைக்கு nikon d 3100 நல்ல கேமரா..அதுவே போதும்...

    நீங்கள் non - professional என்பதால் d90 தேவையில்லை... அதே சமயம் ஒரு சில விசயங்களை தவிர d90 மற்றும் d3100 ற்கும் பெரிய வித்தியாசம் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.. எனவே d 3100 என்பதே போதும்... இதனால் நீங்கள் கொஞ்சம் பட்ஜெட் மிச்சம் பன்னலாம்..

    அதே சமயம் canon 500 d நல்ல கேமரா தான் , ஆனால் அது இப்போதைக்கு out dated மாடல் ஆகிவிட்டது.. இதற்கப்புறம் , 550 d வந்து பின் தற்போது 600 d வந்து விட்டது...

    எனவே உங்கள் தேவைக்கு nikon d3100 வாங்கவும்..

    zoom capacity என்பது நீங்கள் லென்ஸிற்கு தனியாக செலவு செய்வதை பொறுத்து மாறுபடும்..

    இப்போதைக்கு 18-55 mm கிட் லென்ஸ் மட்டும் வாங்கி பயன்படுத்தவும்.. பின்னர் அது பத்தவில்லை என்றால் மற்றொரு லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்..

    லென்ஸ்கள் பல வகைகளில் கிடைக்கின்றன...

    -கருவாயன்

    ReplyDelete
  6. // இன்னொரு சுஜாதாவாக உங்களை பார்க்கிறேன்.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  7. UNGAL ANAITHU PATHIVUGLAIYUM EPPDAI ENGU KANBATHU ENRU KOORAVUM PLEASE

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff