Friday, March 30, 2012

சுற்றுலா வளர்ச்சிக்கு உதவணுமா உங்கள் படங்கள்? - மற்றும் பெண்களுக்கான Eva '12 போட்டித் தகவல்

1 comment:
 
அடிக்கடி சுற்றுலா செல்பவர்களா நீங்கள்? உங்கள் படங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ வேண்டுமா? உதவி செய்யக் காத்திருக்கும் தளமே http://www.picsean.com/. சென்ற வருடம் இந்தத் தளம் Flickr (mail) வழியாகத் தொடர்பு கொண்டு, கீழுள்ள படத்தை என்னிடம் விரும்பிக் கேட்டு வாங்கி Make My Trip.com_யிடம் விற்றுக் கொடுத்தது.

டிஸ்கவர் இன்டியா, மிஸ்டிகல் கேரளா, பேரடைஸ் காலிங் எனத் தனது ‘பல’ பேக்கேஜ் டூர்களுக்காக மேக் மை ட்ரிப் டாட் காம் எனது இந்தப் படத்தினைப் பயன்படுத்தி வருகிறது:

சரி, அவர்களுக்குத் தேவையானதை மட்டுமேதான் நாம் கொடுக்க வேண்டுமா? அவர்களின் தேவையை எப்படி அறிவது? எடுத்த எந்தப்படங்களையும் கொடுக்கலாமா? எனும் கேள்விகள் உங்களில் பலருக்கு வரக்கூடும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

Picsean தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு நம் படங்களைச் சமர்ப்பித்து வரலாம். தேவையைச் சொல்லி எனது படத்தை வாங்கியிருந்தாலும் தொடர்ந்து எனது படங்களை தங்கள் தளத்தில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டிருந்தது பிக்ஸியன். சமீபத்தில் மீண்டும் கர்நாடக, தமிழக கோவில் படங்கள் சிலவற்றை அங்கு பதிந்து வைத்தேன். படம் எடுத்த இடம், விவரங்கள் ஆகியவற்றையும் கூடவே அளித்திடல் நன்று. Landscape image எனில் அகலமும், Portrait image எனில் உயரமும் [அதாவது உயர அகலத்தில் எது அதிகமோ அது] 2200 பிக்ஸல் இருக்குமாறும்; dpi 300 இருக்குமாறும் படங்களை அங்கு வலையேற்ற வேண்டும்.

நம் படங்களுக்கானத் தேவையை அவர்களாகக் கண்டறிந்தோ அல்லது தேவைப்படுகிறவருக்கோ விற்றுத் தருகிறார்கள். இணையதள உபயோகத்திற்கு 10$ எனில் அச்சுப் பத்திரிகைகளின் அரைப் பக்க உபயோகத்துக்கு 50$ முழுப்பக்கத்துக்கு 100$ என்பதாகத் தெரிவித்திருந்தார்கள். பணத்தை நமது paypal கணக்குக்குச் செலுத்தி விடுகிறார்கள். முகப்புத்தகத்தில் http://www.facebook.com/picsean இவர்களைத் தொடர்வதும் அவ்வப்போதைய தேவைகள்,போட்டிகளை அறிய உதவும்.

ஆல்பத்தில் உறங்கும் உங்கள் பயணப் படங்கள் பலரும் பார்க்கும் வகையில் பயனாக இது ஒரு நல்ல வாய்ப்பு.



பெண்களுக்கு மட்டுமே ஆன புகைப்படப் போட்டி
:

இந்தத் தளத்தில்அறிவிப்பாகியிருக்கும் EVA '12 புகைப்படப் போட்டியில் விருப்பமானவர் கலந்து கொள்ளுங்கள். நாளை மார்ச் 31ஆம் தேதியே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

1 comment:

  1. மிக அற்புதமான முயற்சி, வாழ்த்துக்கள்....!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff