Thursday, September 11, 2008

சட்டம் என் கையில்/புகைப்படத்தில்

5 comments:
 
காப்புரிமை பற்றி போன முறை பார்த்தாகிவிட்டது, அடுத்து சட்டம் தான்.


ஒரு எளிய சட்டம்( Frame/Border) பிக்காஸாவில் செய்வது பற்றிய எடுத்துக்காட்டு இந்த இடுகையில்.

படத்தை பிக்காஸாவில் திறந்து. Collage பொத்தானை ஒரு அமுக்கு அமுக்கவும்.




Settings பகுதியில் Picture Pile தேர்ந்து எடுங்கள். இனி பிண்ணனி வண்ணத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.




நான் உதாரணதிற்கு வெள்ளை வண்ணத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.



படத்தின் மேல் எலிக்குட்டியை அமுக்கி, உங்களுக்குத் தேவையான கோணத்தில், அளவில் படத்தை பெரிதாய்/சிறியதாய் மாற்றிக் கொள்ளுங்கள்



Create collage அமுக்கும் முன், மேலும் சில தெரிவுகள் செய்துக் கொள்ளலாம். உதாரணதிற்கு Drop shadows, Borders-> None



பிகாஸா படத்தின் மீது வேலை செய்து,




Collages என்ற அடவைக்குள்(directory) அடைத்துவிடும்.


இனி உங்களுக்குத் தேவையான பிற்சேர்க்கைகளையும் இதில் செய்யலாம். நான் உதாரணதிற்கு எனது பெயரை சேர்த்துக் கொண்டேன்.



( Watermark பற்றிய முழு விவரம் இந்த இடுகையில் )



Export அமுக்கி, படத்தை சேமித்துக்கொள்ளலாம்.


இனி வலையேற்ற வேண்டியதுதான் பாக்கி.




எனக்கு ஒரு வண்ண சட்டம் பத்தாது என்கிறீர்களா, இப்போது உருவாக்கிய படத்தை கொண்டு முதலில் இருந்து மீண்டும் ஆட்டையை தொடங்க வேண்டியதுதான். கருப்பு மற்றும் வெள்ளை வண்ண இரட்டை சட்டம் தயார்.



5 comments:

  1. எளிய அருமையான விளக்கங்கள். நன்றி :)

    ReplyDelete
  2. /////
    எளிய அருமையான விளக்கங்கள். நன்றி :)
    ///////


    ரிப்பீட்டேய்...........

    ReplyDelete
  3. hum!
    பிகாஸா 2 லேயே இருக்கேன். லீனக்ஸ் ல அதுதான் கிடைக்குது. எனிவே பாடத்துக்கு நன்றி!
    அப்புறம் mouse ஐ சொடுக்கி ன்னு எழுதலாம்.

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்.நன்றி

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff