Thursday, September 4, 2008

WaterMark - எப்படி ?

7 comments:
 
பிற்தயாரிப்பில் மிக அதிகமாய் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, இணையத்தில் பொதுப் பார்வைக்கு வைக்கபடும் படத்தில் பெயர்/காப்புரிமை தகவலை (Watermark) எப்படி இணைப்பது என்பது.

பிகாஸா3 இல் இதை எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் தனியா ஒரு படத்துக்கு மட்டும் இணைப்பது எப்படி.

Basic Fixes ->Text பொத்தானை அமுக்கினால், தேவையான் வண்ணத்தில் , அளவில் எழுத்தை தேர்வு செய்துக்கொள்ளலாம்.


அடுத்து உங்களுக்குத் தேவையான தகவலை தட்டச்சிக் கொள்ளலாம். எழுத்தின் அழுத்தம் , .




கோணம்,


மற்றும் இடத்தை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் .






சரி, பல படங்களுக்கு ஒரே பொத்தானில் செய்வது எப்படி ?

தேவையான படங்களை தேர்ந்து எடுத்துக் கொண்டு, Export அமுக்கினால், Add a Watermark என்ற பகுதியில் உங்கள் தகவலை சேர்த்துக் கொள்ள முடியும்.



இதில் உள்ள குறை, உங்களின் தகவலை, படத்தில் வலது மூலையில் மட்டுமே வரவழைக்க முடியும். இது தற்போதைய பீட்டா வடிவதில் இருப்பதால், இந்த வசதி மெருக்கேற்றப்படலாம்.


7 comments:

  1. USEFULL POST SIR,
    THANK YOU !

    ReplyDelete
  2. போட்ட வாட்டர் மார்க்கை அப்பாலிக்கா எடுத்துட முடியுமா?
    இல்ல,, வாட்டர் மார்க் இல்லாம ஒரிஜினலை பத்திரமா வெச்சுக்கிட்டாதான் உண்டா?

    ReplyDelete
  3. பின்னுட்டம் போடலாமுன்னு வந்தா க்ரோம் பற்றி சொல்லவேண்டியதாகி விட்டது.க்ரோமைத் திறந்து பின்னூட்டத்துல தட்டச்சு செஞ்சா எழுத்து பின்னுக்கு பின்னா போகுது.இது எனது கணினியில் மட்டுமா எனத் தெரியவில்லை.நெருப்பு நரி சரியான வரிசையில் போகுது:)

    வாட்டர் மார்க் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. /SurveySan said...

    போட்ட வாட்டர் மார்க்கை அப்பாலிக்கா எடுத்துட முடியுமா?
    இல்ல,, வாட்டர் மார்க் இல்லாம ஒரிஜினலை பத்திரமா வெச்சுக்கிட்டாதான் உண்டா?//

    கருவாடு மீனாகாது, நெய் வெண்ணையாகாது ;)

    ReplyDelete
  5. மிக்க நன்றி !
    Photoshop ல செய்றத விட எளிமையா இருக்கு.

    ReplyDelete
  6. ரத்தன் said...
    //Photoshop ல செய்றத விட எளிமையா இருக்கு//

    உண்மை. மிக எளிமையாக இருக்கிறது.

    //ஒரிஜினலை பத்திரமா வெச்சுக்கிட்டாதான் உண்டா?// என்ற கேள்விக்கு...
    Anonymous said...
    //கருவாடு மீனாகாது, நெய் வெண்ணையாகாது ;)//

    :))))! ஒரிஜனலை பத்திரமா வச்சுக்கிறோம்:).

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff