Monday, April 12, 2010

சின்னஞ்சிறு உலகம் ( extension tube, diopter ) - வழிமுறைகள் பகுதி 2

5 comments:
 
வணக்கம் மக்கா, மேக்ரோ படங்கள் எடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தொடரை ஆரம்பிச்சுட்டு அதை கண்டுக்காம விட்டதுக்கு என்னை மன்னிச்சுருங்க. அந்த தொடரை தூசி தட்டி மறுபடியும் ஆரம்பிச்சாச்சு. இந்த பதிவுல, Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்) மற்றும் Extension Tubes(எக்ஸ்டன்சன் டுயுப்) ஆகிய வழிமுறைகளின் எடுத்துக்காட்டுகளை பார்ப்போம். Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்): கீழே உள்ள படம் 70-300mm லென்சின் உதவியுடன் எடுக்கப்பட்டது. இந்த நெருக்கத்தில் தான் 7௦-3௦௦mm லென்சில் எடுக்க முடிந்தது. பின்னர் 5T க்ளோஸ் அப் லென்சினை 7௦-3௦௦mm லென்சில் பொருத்தி எடுக்கப்பட்ட படம் கீழே. 70-300mm லென்சின் முன்பகுதி (க்ளோஸ் அப் லென்ஸ் பொருத்துவதற்கு முன்னாள்) 5T க்ளோஸ் அப் லென்ஸ் 70-300mm லென்சின் முன்பகுதி (க்ளோஸ் அப் லென்ஸ் பொருத்திய பின்) SLR காமிராக்களில் மட்டும் அல்ல, சில Canon, Nikon, Panasonic Prosumer வகை காமிராக்களில்(eg Canon G10/G11, Canon S5 IS, Nikon Coolpix 5400, Lumix G1 etc) க்ளோஸ் அப் லென்சினை பொருத்தலாம். அதற்க்கு லென்ஸ் adapter வேண்டும். Prosumer காமிராக்களில் "Raynox DCR-250", "Raynox DCR 150" போன்ற க்ளோஸ் அப் லென்ஸ்களை பயன் படுத்தலாம். Extension Tubes(எக்ஸ்டன்சன் டுயுப்): கீழே உள்ள படமும் 70-300mm லென்சினை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த லென்சில் Kenko 20mm Extension tube பொருத்தி எடுக்கப்பட்ட படம் கீழே. Kenko 20mm Extension tube 70-300mm லென்சில் Kenko 20mm Extension tube பொருத்தப்பட்ட பின் இந்த எக்ஸ்டென்சன் டுயுப்கள் பல அளவில் கிடக்கும் (12mm, 20mm, 36mm etc). இவற்றை ஒன்றாக கூட சேர்த்து மாட்டலாம். லென்சின் இறுதி முனைக்கும், காமிரா சென்சாருக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க, மேக்ரோ அளவும் பெரிதாகும். எக்ஸ்டன்சன் டுயுப் பயன் படுத்திய போது இந்த இடைவெளி அதிகரித்ததால் பூக்கள் பெரிதாக சென்சாரில் படம் பிடிக்கப்பட்டது. போன பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் - //1:1 மேக்ரோவில் எக்ஸ்டென்சன் ட்யூப் யூஸ் பண்ணும்போது எந்த அளவு படத்தில் டீடெய்ல்ஸ் மாறாமல் வருகிறது?. // எக்ஸ்டென்சன் டுய்பில் எந்த கண்ணாடியும் இல்லாததால் படத்தின் க்ளாரிட்டி கம்மி ஆகாது :) //பொதுவாக எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் செமி மேக்ரோ லென்சுக்குத்தான் செட்டாகுமா அல்லது 1:1 மேக்ரோ லென்சுக்கும் செட்டாகுதா?// எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் எல்லா வகையான லென்ஸ்களிலும் பயன் படுத்தலாம். //டெலிகன்வர்ட்டரில் 2Xஐ விட 1.4X ல் குவாலிட்டி வருவது போல எக்ஸ்டென்ஷன் ட்யூப்பில் எது நல்லா இருக்கும்? // இடைவெளி அதிகம் ஆக ஆக வியு பைண்டர்ல காட்சி கொஞ்சம் இருட்டா தெரியும் (ஒளி கம்மியா சென்சார்ல பட்ரதால). மத்தபடி பிரச்சனை ஒன்னும் இல்லை. உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மேலே கூறப்பட்ட வழிமுறைகள் பற்றி உங்களுக்கு மேலும் விபரம் தெரிஞ்சா அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!!!

5 comments:

  1. ந‌ல்ல‌ விள‌க்க‌ம்.இந்த‌ அள‌வுக்கு அருகாமையில் போக‌வில்லை.

    ReplyDelete
  2. good, i have d300s i like to take pakka macro pictures which lence is best? and cost?

    ReplyDelete
  3. @valliappan...

    ``i have 18 to 150mm nikon lence only`` உங்களிடம் இருப்பது 18-105mm ஆக தான் இருக்கும் 18-150mm என்று இருக்காது..

    macro lens என்றால் பல வகை உள்ளது.. குறைவான விலைக்கு என்றால்

    1.TOKINA 100MM F2.8
    2.TAMRON 90MM F2.8
    இவ்விரண்டும் கிட்டதட்ட ரூ.20000ற்கு க்ரே மார்க்கெட்டில் கிடைக்கும்.

    இது போக sigma 105mm macro lens உள்ளது.. இதுவும் கிட்டதட்ட அதே விலை அல்லது கொஞ்சம் கூடுதலாக வரும்..

    அடுத்து,
    1.nikon 105mm f2.8
    2.nikon 105mm f2.8 VR AFS
    இவ்விரண்டில் முதலில் சொன்னது பழைய மாடல்,இது 25000-27000ற்கு கிடைக்கும்..
    இரண்டாவது மாடல் லேட்டஸ்ட் மாடல் ஆகும்,இது கிட்டதட்ட 42000 ற்கு கிடைக்கும்..

    மேலே சொன்ன விலையெல்லாம் க்ரே மார்க்கெட் விலையாகும்.

    அடுத்து,
    1.sigma 150mm f2.8 macro
    2.sigma 180mm f2.8 macro

    இவ்விரண்டில் , முதல் மாடல் ரூ.45000-50000 வரை கிடைக்கும்..
    இரண்டாவது மாடல் 60000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்..

    இதில் மேலே சொன்ன அனைத்து மாடல்களும் macro lens தான்.. இவற்றில் உங்களுக்கு எந்த focal length பிடிக்குமோ,அதை வாங்கிக்கொள்ளலாம்..

    ஒவ்வொன்றும் ஒவ்வொறு நன்மைகள்.

    இவற்றில் உங்களுக்கு பட்ஜெட் o.k. என்றால் நிக்கான் 105mm VR AFS மாடலை வாங்குங்கள்..மிகவும் அருமையானது..

    இல்லையென்றால் tokina 100mm அல்லது tamron 90mm லென்ஸ் இவற்றில் எது வேண்டுமானாலும் வாங்கலாம்..

    picture sharpness என்று பார்த்தால் இவ்விரண்டும் nikonஐ match செய்யும்.. ஆனால் auto focus சில சமயம் கொஞ்சம் slow வாக இருக்கும்..

    -கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff