Monday, October 15, 2012

தேவையற்றத் தேதி முத்திரையை அகற்றிட..

6 comments:
 
பிட் அன்பர்களுக்கு வணக்கம்,

பொதுவாக நாம் எடுக்கும் புகைப்படங்களில் நமது ஞாபகத்திற்காக தேதி மற்றும் ஆண்டினை படத்தில் தெரியுமாறு கேமராவில் செட் செய்திருப்போம். அவ்வாறாக செட் செய்யப்பட்டு எடுக்கும் படங்களில் Date Stamp விழுந்திருக்கும். சிலவேளைகளில் இதனை நாம் யாருக்காவதோ அல்லது இணையத்திலோ பகிரும்போது இந்த Date Stamp நீக்கிவிட்டு பகிர்ந்தால் நன்றாக இருக்குமோ என நினைக்கும் அன்பர்களுக்காக இக்கட்டுரையை சமர்பிக்கிறேன்.

 பொதுவாக போட்டோஷாப் பயனாளர்களாக இருந்தால் இந்த Date Stamp ஐ பலவகைகளில் நீக்கலாம்(content-aware fill,Spot healing brush,patch tool,clonning tool etc). அதேபோலவே கிம்ப் பயனாளர்களும் Resynthesizer என்ற ஒரு இலவச நீட்சி மூலமாக நீக்கலாம். இந்த நீட்சியைப்பற்றி பிட் தளத்தில் ஏற்கனவே இந்த பதிவில் திரு.ஆனந்த் வினாயகம் குறிப்பிட்டுள்ளனர்.

Resynthesizer என்ற நீட்சியை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளவும். பின்னர் ஏதாவது ஒரு compression tool கொண்டு இதனை extract செய்து கொள்ளவும். extract செய்யப்பட்ட போல்டரில் lib மற்றும் share என இரு போல்டர்கள் இருக்கும். இதில் lib என்ற போல்டரில் இருக்கும் Resynth.exe பைலை காப்பி செய்து கொள்ளவும். இனி உங்களது கிம்ப் இன்ஸ்டாலேஷன் போல்டருக்கு செல்லவும். C:\Program Files\GIMP 2\lib\gimp\2.0\pulg-ins சென்று காப்பி செய்த Resynth.exe யை பேஸ்ட் செய்திடவும்.

இப்போது மீண்டும் நீங்கள் பதிவிறக்கம் செய்து பின்னர் extract செய்யப்பட்ட போல்டரில் இருக்கும் share போல்டரில் இருக்கும் smart-enlarge.scm, smart-remove.scm இரண்டு ஸ்கிரிப்ட் பைல்களையும் காப்பி செய்து C:\Program Files\GIMP 2\share\gimp\2.0\scripts இல் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

அவ்வளவுதான் Resynthesizer என்ற நீட்சியை நாம் கிம்பில் பதிந்துவிட்டோம்.

இனி, தேதி நீக்கப்படவேண்டிய படத்தை கிம்பில் திறந்துகொள்ளவும். ஏதாவது ஒரு செலக்ஷன் டூலைக்கொண்டு உங்களது தேதியை தேர்வு செய்துகொள்ளவும்.

இப்போது Fliter>Enhance> சென்று Heal Selection ஐ தேர்வு செய்யவும்.இப்போது தோன்றும் விண்டோவில் Default value ஆக 50 இருக்கும் இந்த மதிப்பு உங்களது புகைபடத்தின் தன்மையை வைத்து கொடுக்கப்படவேண்டியதாகும்.

ஆகவே முதலில் 50 இல் முயற்சி செய்யவும் ரிசல்ட் திருப்திகரமாக இருந்தால் அப்படியே விட்டுவிடவும். இல்லையென்றால் அதிகபடியான மதிப்பு கொடுத்து முயற்சிக்கவும். அவ்வளவுதான் உங்களது தேதி நீக்கப்பட்டிருப்பதை காணலாம்.

குறிப்பு : என்னுடைய சில நண்பர்கள் இந்த நீட்சி கிம்பில் (GIMP 2.8 on windows 7 64bit edition) திறக்கவில்லை என்று கூறினார்கள்.காரணம் நீங்கள் கிம்பை உங்களது கணினியில் நிறுவும்போது custom installation அல்லது Full installation முறையில் Python Scripting,Support for old plug-ins ஆகியவற்றை தேர்வு செய்திருந்திருந்தால் மட்டுமே இந்த நீட்சியானது வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


-நித்தி ஆனந்த்

6 comments:

  1. பயன் தரும் தகவல்...

    நன்றி...

    ReplyDelete
  2. பலருக்கும் பயன் தரக் கூடிய பகிர்வு.

    நன்றி, நித்தி ஆனந்த்!

    ReplyDelete
  3. இனிய வணக்கங்களுடன் சிவஹரி,

    தங்களின் இந்த வலைப்பூவானது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

    மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_25.html

    நன்றி,
    சிவஹரி

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  5. You may use INPAINT as a stand alone program to hide unwanted elements in your photos.

    Raju

    (How to type in Tamil in this blog?)_

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff