Sunday, February 24, 2008

பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி முடிவுகள்

31 comments:
 
புகைப்பட வலைஞர்களுக்கு என் முதல் வணக்கம்னேன்!

போன பதிவில் முதல் 10 படங்களை தேர்ந்தெடுத்த கதையை சீவியார் ரெம்ப சின்சியரா சொல்லியிருந்தாரு. அதுல நான் தன்மையா இதமா பேசுனதா பில்டப்பு வேற! ( உண்மை என்னன்னா இப்பவெல்லாம் வாழ்க்கைல எந்த சூடான வி(தண்டா)வாதம்னாலும் காதல் பட ஒத்தக்கை சித்தப்புதான் என் ரோல்மாடல்! :) ) அதை முழுசா படிச்சிட்டு எனக்கே பயந்தான். எங்கே இந்த முறை ஆளைவைச்சு தூக்கிருவாரோன்னு. ஆனால் நம்ப ஜீரா மூலம் ஏற்கனவே தம்பி ரொம்ப சாந்தமான ஆளு... அடிதடி வம்புக்கெல்லாம் போகமாட்டாருங்கற ஒரு நல்லெண்ண சர்ட்டிபிக்கேட்டு கிடைச்சதால் மீண்டும் அவருகூட சந்தோசமா களமிறங்கிட்டேன்.

60 பதிவர்கள், 120 படங்கள் ஆகவே இது கடினமான பணி எனக்கு அப்படின்னெல்லாம் சொல்ல மாட்டேன். பிடிச்ச வேலைய பார்க்கறதுக்கு என்னத்த கடினம்? ஆகவே அனைத்து படங்களையும் மொத்தமா ஆல்பத்துல போட்டு ஓடவிட்டு ஆராய்சி செஞ்சு செலக்ட் செய்யற வேலை ரொம்ப சொகமாகவும் ஜபர்தஸ்தாகவும் இருந்துச்சு.. :) என்ன ஒரே ஒரு சின்ன மனக்குறை என்றால் பெரும்பாலான பதிவர்கள் வட்டத்தைதேடி வட்டத்தை just like that வட்டமாகவே காட்ட முயன்றதுதான். நாமெல்லாம் வலைப்பதிவர்கள் இல்லையா? நமக்கெல்லாம் கற்பனையூற்று கண் காது மூக்குன்னு நவதுவாரங்களிலும் பீறிடும் திறமை படைச்சவங்க இல்லையா? ஒரு பொருளை படைச்சவனே ஒரு கோணத்தில் பார்த்திருக்க நாம் பலநூறு கோணங்களில் கற்பனைக்கெட்டா ஞானவெளியில் பார்த்து பிரித்து மேய்ந்து பட்டையை கிளப்பும் வலை-அகஆராய்ச்சியாளர்கள் அல்லவா? எதுக்கு சுத்தி வளைச்சு பேசிக்கினு?! நாமெல்லாம் வலையுலகத்தில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை அல்லவா?! அப்படி இருந்துகிட்டு இப்படி வட்டத்தை வெறும் வட்டமாகவே மட்டும் பார்க்காம அதன் அனைத்து பரிமானங்களையும் தோண்டித் தேடிப்பார்க்க பெரும்பாண்மையானவர்கள் தவறிட்டாங்களோன்னு ஒரு எண்ணம் எழுந்தது உண்மை. உலகத்தின் மிசச்சிறந்த புகைப்படங்கள் எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறப்பாக 100% எடுக்கப்பட்டவை அல்ல! பார்க்கும் கோணமும், அதன் மூலம் வெளிப்படுத்த விரும்பும் கருத்துமே அப்படங்களை மிகச்சிறந்தவைகளாக தூக்கி நிறுத்தியிருக்கிறது என்பதென் எண்ணம்!


CVR அமெரிக்க டைம்ல இருக்கறதால பெரும்பாலும் எங்க இந்த புகைப்பட ஆராய்ச்சி பொங்கலு நான் ஆபிஸ்ல இருக்கறப்பதான் நடந்தது ( பக்கத்து மர டப்பால இருந்து எட்டிப்பார்த்த நண்பரு: என்னய்யா... படம், லைட்டிங், கம்போசிங்னு பேச்சு ஓவரா இருக்கு? எங்கனா கோடம்பாக்கத்து குருவி சிக்கிருச்சா?! அப்ப நீ நெசமாவே வேலைய விட்டுட்டு போயிருவியா? :) )

டாப் 10ல பெரும்பாலும் நாங்க பெருசா அடிச்சுக்கலை. படங்களை விலக்குவதற்கு எங்களுக்குத் தெரிந்த அறிவுக்கு எட்டிய மிகச் சிறுசிறு குறைகளையே காரணங்களாக சொல்லிக்க வேண்டி வந்தது. என்ன செய்ய? இருக்கறது 3 இடம்தான் இல்லையா?


மூன்றாமிடம்: கார்த்திகேயன் ஷண்முகம்

வட்டம் என்ற போட்டித்தலைப்புக்கான இதைவிட சிறந்த முறையில் பொருந்தும் படங்கள் எதுவும் மாட்டவில்லை! கேனின் உள்வட்டமும் வெளிவட்டமும் சரியான முறையில் காம்பஸை வைத்து வரைஞ்சாப்புல அசத்தலான கோணம். கோணம் சற்றே மாறியிருந்தாலும் ஒரு சாதாரணப்படமாக மாறியிருக்கும் என்பது என் எண்ணம். அது மட்டுமின்றி இரண்டு வட்டங்களுக்கு இடையேயான எழுத்துக்கள் மங்கலான ஷேடோவில் மிக ரிச்சாக தெரிவதும் ஒரு சிறப்பு. அதேபோல கேனின் மேற்புறம் பிரதிபலிக்கும் வெளிச்சம் இது மெட்டல் பரப்பு என்பதால் கூடுதல் சிறப்பாக அமைந்து விட்டது. வேறொரு பரப்பில் இதே பிரதிபளிப்பு நெகடிவாக அமைந்திருக்கும். அடிப்பாகம் தெரியும் நிழல் மட்டும் சற்றே கவனத்தை கலைப்பதாக உள்ளது. இருந்தாலும் ராஜசேகரின் "இதுதாண்டா போலீஸ்" மாதிரி இந்தப்படம் "இதுதாண்டா வட்டம்!" வகை!


இரண்டாமிடம்: பிரபாகரன்

வட்டத்தை வெறும் வட்டமாக பார்க்காமல் அதனின் மற்றொரு பரிமானத்தை அழகுணர்ச்சியோடும் தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறப்பாக காட்டக்கூடியாதாக இருப்பதனால் இதனை தேர்ந்தெடுத்தோம். சிக்கென்று ஒரு சில்-அவுட். வண்ணங்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படு இயல்பான கொட்டாவியாக இருந்தாலும் தம்பியின் பல்வரிசை மட்டுமே சற்றே பயமுறுத்துகிறது! :)

சூரியனுக்கே தம்பியின் கொட்டாவி மூலம் டார்ச்லைட்டு காட்டியிருக்கிறார் நம்ப பிரபாகரன்!


முதலிடம்: குட்டிபாலு

சொல்வதற்கு ஒன்றுமில்லை. டாப் 10ல் நானும் சீவியாரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் முக்கியமாக அடிச்சுக்காமல் ஏகமனதாக தேர்ந்தெடுத்த ஒரே படம் இது. படத்தின் அமைப்பு, வெளிச்சம், வண்ணங்கள் என எதிலும் சோடைபோகாமல் உள்ளது உள்ளபடியே பளிச்சென்று ஒரு படம்.

குறையொன்றுமில்லை குட்டிபாலு கண்ணா! :) அசத்தல்!இவைகள் போக சிறப்புகவனம் பெற்ற ஒரு படம் என்று சொன்னால் அது PeeVee அவர்களுடைய பூமார்க்கெட் படம். அருமையான அட்டகாசமான வட்டங்களின் மூலம் வாழ்க்கையை சொல்லிக்காட்டும் படம். படத்தின் கம்போசிசன் என்ன? வெளிச்சமும் நிழலும் கலந்து விளையாடும் இயற்க்கை லைட்டிங் என்ன? வட்டங்கள் மனதில் தூண்டும் சிந்தனைகள் என்ன? அடடா! ஆனால் எனக்கும் நம்ப சீவியாருக்கும்தான் இந்த படத்தின்மூலம் பெரிய வாக்குவாதம். அரைமணி நேரமாகப்பேசியும் ஒருவரும் ஒத்தகருத்தை எட்ட முடியவில்லை. இத்தனை சிறப்புகள் இருந்தும் வட்டம் என்ற தலைப்புக்கு மிகச்சரியாக பொருந்தவில்லை என்ற எண்ணத்தால் தேர்ந்திடுக்க இயலவில்லை. இருந்தாலும் ஒன்று. இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


பங்கேற்ற அனைவருக்கும் இந்த சுகமான வேலையைச்செய்ய வாய்ப்பளித்த PITக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றவர்கள் அடுத்த போட்டிக்கு மீண்டும் உங்க புகைப்படப்பொட்டியை தயாராக்குமாறு நட்புடன் சின்ன வேண்டுகோள்.

அன்புடன்,

இளவஞ்சி...

31 comments:

 1. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சின்னபையன் கொட்டாவி விடும் போட்டோ ரொம்ப அருமை.

  ReplyDelete
 2. vaazthukkal to winners.

  kalakkitteenga, vazhakkam pola.

  ReplyDelete
 3. கார்த்திக்கின் படத்தில் உள்ள நிழல் எனக்கு பெரிதாக திசைதிருப்ப்புவதாக தெரியவில்லை,மாறாக அதை அவர் முழுவதுமாக படம் பிடித்திருந்தது படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குவதாக இருந்தது என்று எனக்கு தோன்றியது!!

  மற்றபடி எனக்கு தோன்றிய அனைத்தும் அண்ணாச்சியே சொல்லி விட்டார்!!

  இன்னொரு முறை ஒரு சிறப்பான போட்டியையும்,தலைசிறந்த படங்களையும் பார்த்த நிறைவு!!
  கலந்துக்கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!
  எப்பவும் போல கலக்கிட்டீங்க மக்கா!!

  வாழ்த்துக்கள்!!! :-)

  ReplyDelete
 4. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 5. //அது PeeVee அவர்களுடைய பூமார்க்கெட் படம்//
  vAthi, naanum ithaithaan ethir paarthein.

  ReplyDelete
 6. ஸ்ரீராம்February 24, 2008 at 10:56 AM

  நான் குசும்பனின் படத்தை முதல் மூன்றில் எதிர்பார்த்தேன். ஒரு செமை செமை. அப்படி ஒரு லைட்டிங். அட்டகாசமான ஒரு படம் அது.

  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து. முதல் நான்கு படங்களின் வரிசை மட்டும் மாறி இருந்தது என் கணிப்பில்.

  120 படங்களில் மூன்று தேர்ந்தெடுப்பது கடினம்.
  அடுத்த முறை இன்னும் அதிக படங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்

  ReplyDelete
 8. வெற்றிப் படங்களுக்கு வாழ்த்துக்கள்.அடுத்த பாடம் என்னங்க?

  ReplyDelete
 9. //என்ன ஒரே ஒரு சின்ன மனக்குறை என்றால் பெரும்பாலான பதிவர்கள் வட்டத்தைதேடி வட்டத்தை just like that வட்டமாகவே காட்ட முயன்றதுதான்.//

  உண்மைதாங்க. என்ன ப்ரச்சனைன்னா வித்தியாசமான படமெடுக்கும்வாய்ப்பு வீட்டுக்கு வெளியில்தான் கிடைக்கிறது. வீட்டுகுள்ளாறன்னா நல்லா சவுகர்யமா நின்னு நிதானமா படம் புடிச்சுடரோம்.

  கடைசில எல்லா படத்தையும் பாத்தா வீட்ல எடுத்த படத்தில்தான் குவாலிட்டி அமையுது.

  // உலகத்தின் மிசச்சிறந்த புகைப்படங்கள் எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறப்பாக 100% எடுக்கப்பட்டவை அல்ல! பார்க்கும் கோணமும், அதன் மூலம் வெளிப்படுத்த விரும்பும் கருத்துமே அப்படங்களை மிகச்சிறந்தவைகளாக தூக்கி நிறுத்தியிருக்கிறது//

  இது அந்த இடத்தில் தோணாமல் போய்விடுகிறது

  நான் அநியாயத்துக்கு ஒரு வவ்வால் கண்ணை படம் எடுக்க முயற்சி பண்ணுனேன் வட்டத்துக்கு

  http://nandhu1.blogspot.com/2008/02/blog-post.html

  ஆனா இந்த மாச போட்டி செம கலக்கல். அருமையான படங்கள் ஏகப்பட்டது

  வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  நடுவர்களுக்கும்.

  ReplyDelete
 10. கலக்கல்! வாழ்த்து :)

  ReplyDelete
 11. வெற்றி பெற்றவர்களுக்கு குட்டீஸ் சார்பாக வாழ்த்துக்கள். போட்டில கலந்துகிட்டவங்களுக்கும் வாழ்த்துக்கள். என்னோட மொட்ட தல நல்லாஇருக்குன்னு வாழ்தினவங்களுக்கு நன்னி...அடுத்த மாசம் சந்திப்போம்...

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் அனைவருக்கும். முதல் பரிசு வாங்கின படம் என்னுடைய favorite , முதல் பத்து படங்களும் அழகா இருந்ததால முதல் மூன்று தேர்வு செய்வது கடினமா இருக்கும்னு நினைச்சேன், அழகான தேர்வு, மிக அழகான விளக்கம்.

  Pee Vee - அந்த படம் பார்த்ததும் பிடிச்சு போச்சு , ஆன நீங்க சொன்ன காரணத்திற்க்காக நிராகரிக்கப்படும்னு யூகித்தேன்.

  ReplyDelete
 13. it was a thrilling experience to take part in contest like this .hearty congratulation to the three winners .

  ReplyDelete
 14. வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  வெற்றி பெறாதவர்களுக்கு...அடுத்தவாட்டி கலக்கீருவம் மக்கா...

  ReplyDelete
 15. முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கும் நடுவர்களுக்கும்
  அன்பான வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 16. சூப்பரு...
  வெற்றி பெற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. குட்டிபாலு போன மாசமே கவனத்தை ஈர்த்து இந்த மாசம் எல்லாரையும் ஈர்த்துட்டார்.

  அழகான புகைப்படங்கள்.

  வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  தமிழில் புகைப்படக் கலையின் வாசகர், பங்கெடுப்பாளர்கள் வட்டம் பிரபஞ்சம் போன்று விரிந்து பெரிதாவது மகிழ்ச்சி.

  நன்றி.

  ReplyDelete
 18. பங்கேற்றவர்களுக்கும், வென்றவர்களுக்கும், நடுவர்களுக்கும்
  அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  நடுவர்களுக்கும்.

  ReplyDelete
 20. Nanri Nanri Nanri.. Mikka magizhchi... Judges paavam pa.. Kashtamana vellai thaaan.. Kuttipayan with Suriyan and PeeVees flower market was my fav, glad the judges too liked it. :)

  Participate panna anaivarukkum vazhthukal.. Spl Wishes for the other winners too..

  ReplyDelete
 21. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!
  நடுவர்கள் மற்றும் போட்டியில் கலந்துகிட்டவங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. இப்பல்லாம் உங்கள இப்பிடிப் பதிவுல பாத்தாத்தான் உண்டு போல. :)

  // ஆனால் நம்ப ஜீரா மூலம் ஏற்கனவே தம்பி ரொம்ப சாந்தமான ஆளு //

  ம்ம்ம்... நான் சாந்தா சொரூபின்னு சொன்னத நீங்க சாந்த சொருபீன்னு நெனச்சிட்டீங்க போல. எப்படியோ முழுசாத் தப்பிச்சு முடிவு சொல்லீட்டீங்க. :)

  படங்கள் எல்லாமே அருமை. அந்தப் பூக்கூடையும் அருமை. என்னைக் கேட்டா அதுவும் பொருந்து வருதுன்னுதான் தோணுது. வட்டம் இருக்கனும்னு விதி. ஆனா வேறெதும் இருக்கக்கூடாதுன்னு விதி இருக்குதுங்களா? இல்லைல்ல. அந்தப் படத்தோட சிறப்பு என்னன்னா...சுத்தி என்னென்ன இருந்தாலும் அந்த வண்ணவட்டங்கள் தங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திக்கிருதுக.

  ReplyDelete
 23. வெற்றி பெற்ற முதல் படமும், Pee Veeயின் படமும் என் மனம் கவர்ந்த படங்கள்! பிரபாகரன் படத்துல இருக்க சிறுவனை பார்க்கும் போது தாரே ஜமீன் பர் இஷான் மாதிரியே இருக்கு! வெற்றி பெறாத அனைவருக்கும் வாழ்த்துக்கள்;)

  ReplyDelete
 24. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. thank you all to select my photo "LAZY MORNING"( my sone mani narayanan yawans)for the second place and thanks once again for all your comments on the photo..

  s.prabhakaran

  ReplyDelete
 26. For the ever first time, I saw so many high quality pics on a single plate. Nice going. Congrats for the winners!
  Great show

  ~Truth

  ReplyDelete
 27. Hats off to the winners. It should have been a tough time for the judges to choose best 3 among lot of good pictures.

  ReplyDelete
 28. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  குட்டிபாலு முதல் பரிசு வாங்கியதில் அளவற்ற மகிழ்ச்சி. என் பேரை காப்பாத்திட்ட நட்டு.:))

  சும்மாவா... 2007ல் ஃப்ளிக்கரில் தேர்ந்தெடுக்கப் பட்ட 365 சிறந்த படங்களில் குட்டியோட படமும் ஒன்று. பெரிய புகைப் பட வல்லுநர் ஆச்சே. சபாஷ் கண்ணா. :))

  ReplyDelete
 29. அனைவர்களின் வாழ்துகளூக்கு நன்றி

  One more thing as CVR said is correct I took a photo without shadow but its not good compare to with shadow

  karthik

  ReplyDelete
 30. ivvagaiyana valaithatlam iyanguvathu kuriththu mahzhichi... aanal innum thelivu thevai.......

  ReplyDelete
 31. @sharavanan
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்!

  எதில் தெளிவில்லை என்று சுட்டிக்காட்டினால் சரி செய்துக்கொள்ள வசதியாக இருக்கும்!!
  நன்றி!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff