Tuesday, February 19, 2008

Metering modes - ஒரு அறிமுகம்

8 comments:
 
புகைப்படக்கலை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே பார்க்கும் போது இந்த metering mode எனும் சொல்லை அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்.அதை பற்றி அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும் ,metering mode என்றால் என்ன அதன் பல வகைகள் என்ன என்பதையும் இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை (metering mode) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

தற்போதையக் கேமராக்களில் பலவிதமான சௌகரியங்கள் மற்றும் உபயோகங்கள் வந்துவிட்டன.கேமரா என்பது ஒளியைப் பதியவைக்கும் கருவி என்பதால் எவ்வளவு ஒளியை அனுமதிக்க வேண்டும் என்பதில் தான் படத்தின் தரம் அடங்கியிருக்கிறது (காட்சியமைப்பு,கோணம் போன்றவற்றை இங்கு குழப்பிக்கொள்ளாதீர்கள்).எவ்வளவு ஒளியை பதிந்தால் படம் நன்றாக வரும் என்பதை நிர்ணயிப்பதற்குத்தான் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறைகள் பயன்படுகின்றன.
அதாவது நீங்கள் ஆட்டோமேடிக் மோடில் ஒருக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது அந்த காட்சியைக் கம்போஸ் செய்து விட்டு கேமராவின் பொத்தானை சற்றே அழுத்தினால்,உங்கள் கேமரா படம் பிடிக்க வேண்டிய ஷட்டர் ஸ்பீடு,அபெர்ச்சர் விட்டம் ஆகியவற்றை கணித்து அவற்றை செயல்படுத்தி விடும்.இது எப்படி நடக்கிறது?? நமது காட்சிக்கு இவ்வளவுதான் அபெர்ச்சர் வேண்டும் என்று கேமராவிற்கு எப்படி தெரிகிறது???
அதை செய்வதற்கு தான் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை.நமது காட்சியின் வெவ்வேறு புள்ளிகளில் ஒளியின் அளவை அனுமானித்து அதற்கு ஏற்றார்போல் கேமராவின் ஷட்டர்,அபர்ச்சர்,ISO,whitebalance போன்ற பல விதமான அளவுகோல்களை நிர்ணயிப்பதற்கு இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை பயன்படுகிறது.இதில் உள்ள பல வகைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

Spot metering:
இதில் காட்சியின் நட்டநடுவில் உள்ள ஒளியின் அளவு மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன.படத்தின் நடு புள்ளியில் என்ன காட்சி இருக்கிறதொ அதை பொருத்தே ஒளியின் அளவு கணிக்கப்படும்!! நடு புள்ளியை சுற்றி எவ்வளவு வெளிச்சமாகவே,இருட்டாகவோ இருந்தாலும் அது ஒளிக்கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நம் focus முழுவதுமாக அமைய வேண்டும் என்று விரும்பினால் இந்த வகையான ஒளிக்கணிப்பை பயன்படுத்தலாம்.

Part்ial metering:
இது spot metering போன்றே தான் என்றாலும் spot metering-ஐ விட சற்றே அதிக பகுதிகளை ஒளிக்கணிப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.அதாவது காட்சியின் நடுப்புள்ளியை மற்றும் பார்க்காமல் அதை சுற்றி கொஞ்சம் காட்சிப்பரப்பை இந்த ஒளிக்கணிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும(மொத்தக்காட்சியில் 10-15%)்!! partial metering வகை ஒளிக்கணிப்பு பெரும்பாலும் Canon கேமராக்களில் காணப்பெறலாம்.கருப்பொருளின் மீது மட்டுமே கவனம் விழுமாறு high contrast படங்கள் எடுக்க விரும்பினால் இந்த இரண்டு வகை ஒளிக்கணிப்பு அளவுகோல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை நடுவில் உள்ள பொருட்களை மட்டுமே பளிச்சென காட்டும் என்றாலும் உங்கள் சௌகரியத்திற்கேற்ப focus lock செய்துவிட்ட பின் உங்கள் படத்தை recompose செய்துக்கொள்ளலாம்.
அதாவது முதலில் உங்கள் படம் எடுக்க நீங்கள் கேமாரவில் பொத்தானை பாதி அழுத்திய பின் கேமராவை நகர்த்தி உங்களுக்கு வேண்டிய இடத்தில் உங்கள் கருப்பொருளை பொருத்திக்கொள்ளலாம்.
இதுக்கு மேலே புரியலன்னா இந்த பதிவை படிங்க.குறிப்பா பதிவின் கடைசி பகுதியை! :-)

Center weighted average metering:
இது மிக பரவலாக பயன்படுத்தப்படும் ஒளிக்கணிப்பு அளவுகோல். பல point and shoot கேமராக்களில் அளவுகோல்கள் மாற்றும் வசதி இருக்காது. அப்படிப்பட்ட கேமராக்களில் default-ஆக இந்த ஒளிக்கணிப்பு தான் உருவாக்கப்பட்டிருக்கும். அதுவுமில்லாமல் சாதாரணமாக SLR கேமராக்களில் கூட இந்த வகை ஒளிக்கணிப்பு தான் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும்.
இது காட்சியின் பெரும்பான்மையான பகுதிகளை கருத்தில் கொண்டு கணிக்கப்படும் ஒரு அளவுகோல்.ஓரங்களில் இருக்கும் பகுதிகளை தவிர்த்து,நடுவில் இரூந்து ஆரம்பித்து 60-இல் இருந்து 80 சதவிகிதம் வரை காட்சியின் எல்லா பகுதிகளும் இந்த கணிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Evaluative metering:
இந்த வகையான அளவுகோலுக்கு Multizone metering,Honeycomb metering,segment metering,esp(electro selective pattern) என்று பல பெயர்கள் உண்டு.Nikon வகை கேமராக்களில் இந்த வகையான ஒளிக்கணிப்பை Matrix metering என்று கூறுவார்கள்.மற்ற முறைகளை போல இல்லாமல் இது சற்றே வித்தியாசமான ஒளிக்கணிப்பு . காட்சியில் உள்ள பல்வேறு பொருட்களை கொண்டு ஒரு விதமான விசேஷ நெறிமுறை (algorithm) கொண்டு கேமரா காட்சியில் உள்ள முக்கியமான புள்ளிகளையும் அதற்கு வேண்டிய சரியான exposure-ஐயும் கணித்து விடும். அந்த நெறிமுறை என்ன என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும்.அதாவது Canon-இன் algorithm மற்றும் Nikon-இன் algorithm இரண்டும் வித்தியாசமாக இருக்கும்.
மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நெறிமுறை என்ன என்பதை பரம ரகசியமாக வைத்திருப்பார்கள்
என்ன ஏது என்று தெரியாமல் மந்திரம் போல் காட்சியில்் உள்ள முக்கியமான புள்ளிகளும் அதற்கான focus-உம் கேமராவினால் கணிக்கப்படுவதால் இந்த முறை அனுமானிக்க முடியாத வழிமுறை(unpredictable) என்று சிலர் இதை உபயோகப்படுத்த முனைவதில்லை.

என்ன மக்களே Metering என்றால் என்ன என்றும் ,சில முக்கியமான metering modes பற்றியும் தெரிந்துக்கொண்டீர்களா??
உங்கள் கருத்துக்கள்,சந்தேகங்களை பின்னூட்டமிடுங்கள்! கலந்தாலோசிக்கலாம்!!

சரி இப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்!
இன்னொரு சவாரஸ்யமான புகைப்படக்கலை சார்ந்த தலைப்புடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்!!

வரட்டா?? :-)


References:
http://en.wikipedia.org/wiki/Metering_mode
http://www.dpreview.com/learn/?/Glossary/Exposure/Metering_01.htm
http://photonotes.org/cgi-bin/entry.pl?id=Evaluativemetering
http://digital-photography-school.com/blog/introduction-to-metering-modes/

8 comments:

  1. முக்கியமான விஷயம், இது கருப்பொருளின் மீது படியும் வெளிச்சத்தின் அளவு இல்லை, கேமராமீது பிரதிபலிக்கும் வெளிச்சம். மிகச் சரியான வெளிச்ச அள்வு வேண்டுமெனில் Light Meter உபயோகிக்க வேண்டும்

    ReplyDelete
  2. Technically it is not the incident light.. as an& said.. but we dont need such nuances of metering for AREA based metering techniques and hence loved this article! Cheers anand and CVR for giving thrust to education. Thanx guys!

    ReplyDelete
  3. ஆர்வக்கோளாறுல DSLR/P&S வாங்கிட்டு, அதுல என்ன இருக்குனே தெரியாத என்னை மாதிரி உள்ளவங்களுக்கு இது ஒரு நல்ல பதிவு. இப்படி பல Metering Mode இருக்குதுன்னு இப்போ தான் தெரியும். நன்றி CVR. இந்த Metering Mode எல்லாம் முயற்சி பண்ணி பாக்குறேன். :)

    ReplyDelete
  4. தூள்!

    personally, நான் இந்த மீட்டரிங் எல்லாம் கண்டுக்கரதே இல்ல; ( அதனாலதான் படங்களில் பஞ்ச் இல்லியோ :) )

    good work!

    ReplyDelete
  5. தூள்!

    personally, நான் இந்த மீட்டரிங் எல்லாம் கண்டுக்கரதே இல்ல; ( அதனாலதான் படங்களில் பஞ்ச் இல்லியோ :) )

    good work!

    ReplyDelete
  6. அருமையான பதிவு CVR

    ReplyDelete
  7. Extra விளக்கம் கொடுத்த ஆனந்துக்கும் நன்றி...

    ReplyDelete
  8. தலைவா ஒரு டவுட்டு,நான் கேனான்7d கேமரா பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்,முன்பெல்லாம் ஒரு படத்த எடுத்து போட்டோசாப்பில் ஒப்பன் பன்னா ரெசல்யூசன் 300 இருக்கும்,இப்ப எடுக்கற எல்லா படமும் 72 ரெசல்யூசன் மட்டுமே இருக்கிறது ,நான் லார்ஸ் பைல்லயும் எடுத்தாளும் அப்படியே வருகிறது என்னா செய்யலாம்,??

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff