Tuesday, February 19, 2008

பிப்ரவரி மாத புகைப்படப் போட்டி - முதல் பத்து படங்கள்

31 comments:
 
போட்டிக்கான படங்களை தொகுக்கும் போதே மண்டை காய போகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.

முதலில் பத்து படங்களை தேர்ந்தெடுக்கலாம்,நான் என்னுடைய தேர்வுகளை அனுப்பி வைக்கிறேன்,நீங்கள் உங்கள் தேர்வுகளை அனுப்புங்கள்,பிறகு கலந்தாலோசித்து பத்து படங்களை முடிவு செய்யலாம் என்று இளவஞ்சி அண்ணாச்சியிடம் பேசி வைத்துக்கொண்டேன்.
நிச்சயமாக எங்கள் இருவரின் தேர்வுகளிலும் ஒரே படங்கள் நிறைய இருக்கும் என்றும் ,மீதி கொஞ்ச நஞ்சம் ஒத்துப்போகவில்லை என்றால் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.
பின் ரவுண்டு கட்டி என்னுடைய தேர்வுகளான 9 படங்களை அனுப்பி வைத்தேன்.
அதற்கு அண்ணாச்சியின் மறுமொழியாக அவரின் தேர்வுகளான 7 படங்களை அனுப்பி வைத்திருந்தார்.அவரின் மடலில் என்ன கூறியிருந்தார் தெரியுமா??
"
CVR,
ஒன்னு மட்டும் உண்மை... உமக்கும் எனக்கும் கொலைவெறி சண்டை நடக்கப்போகுது :)"

அட்ரா அட்ரா!!! அரம்பமே அமர்க்களப்படுதே என்று அவரின் படங்கள் என்னென்ன என்று பார்க்க ஆரம்பித்தேன்.
அடக்கடவுளே என்று ஆனது!! ஏனென்றால் எங்கள் தேர்வுகளில் இரண்டு படங்கள் மட்டுமே ஒத்துப்போய் இருந்தன.

எங்கள் தேர்வுகளை எல்லாம் தனியாக ஒரு ஆல்பத்தில் போட்டு அண்ணாச்சியுடன் தொலைபேசி உரையாடலை ஆரம்பித்தேன்!!! பேச பேச நேரம் போனதே தெரியவில்லை!!!
தலைப்புக்கு பொருத்தம்,கலைத்திறன்,படத்தின் தரம்,படம் எடுக்க எடுத்துக்கொண்ட முயற்சி என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து படங்களை கழித்துக்கொண்டே வந்தோம்!!! படங்கள் குறைய குறைய ஒவ்வொரு படத்துக்கும் நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் அதிகமாகிக்கொண்டே போனது.11- இல் இருந்து 10- க்கு வர நாங்கள் எவ்வளவு நேரம் எடுத்தோம் என்று எங்களுக்குத்தான் தெரியும்!!

கடைசியில் எங்கள் தேர்வுக்குப்பின் எஞ்சிய 10 படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!! கார சாரமாக விவாதங்கள் நடந்தாலும் தன் கருத்துக்களை ஆணித்தரமாகவும் அதே சமயம் எரிச்சல் படாமல் பொறுமையாக எடுத்துச்சொன்ன இளவஞ்சி அண்ணாச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!
இதுக்கே இப்படி ,இன்னும் கடைசி மூன்று படங்கள் தேருவதற்குள் என்னென்னெ ஆகுமோ என்று மனம் பதறினாலும் ,புகைப்படக்கலை குறித்த மிக ஆரோக்கியமான வாதம் செய்த திருப்தி நெஞ்சில் நிறைந்து அடுத்த கலந்துரையாடல் எப்பொழுது வரும் என்று ஒரு வித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது!

சரி சரி என் மொக்கையை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்!!
டாப் 10 உங்கள் பார்வைக்கு!!(எந்த வரிசையிலும் இல்லாமல்)

குசும்பன்:


குட்டிபாலு:


நாதஸ்:


PeeVee:


ரமேஷ்:


உண்மை:


கோமா:


கே4கே:


கார்த்திகேயன் ஷண்முகம்:


பிரபாகரன்:
படங்களை பார்த்தால் தமிழ்ப்பதிவுகள் பற்றி தெரிந்த எல்லோருமே நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம் போல உள்ளது!!
இல்லையா??

முதல் மூன்று இடங்கள் 25 - ஆம் தேதிக்குள் அறிவித்து விடுகிறோம்,அது வரையில் பொறுத்திருங்கள்!! :-)

வரட்டா??

31 comments:

 1. கலக்கலான படங்கள். எல்லாரும் போட்டுத் தாக்கியிருக்காங்க.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. பேசாம பத்துக்கும் கொடுத்திடுங்க... எல்லாமே சூப்பர் :-)

  ReplyDelete
 3. Classy Pictures! Hats off to PIT for pulling the best efforts from bloggers!

  ReplyDelete
 4. பெரிய வேலைதான் நடுவர்களுக்கு. டாப்10ல் வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ஒவ்வொண்ணும் அட்டகாசமாத்தான் இருக்கு. இதுலே நான் என் மனசில் தெரிவு செய்த ஒண்ணும் இருக்குன்றதே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.

  உங்களை இப்படிச் சிண்டைப் பிச்சுக்கவச்ச நம்ம மக்கள்ஸ்க்கு பாராட்டுகள்:-))))

  வெற்றிபெறப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 6. அட.. நம்ம படமும் இருக்கு..

  //புகைப்படக்கலை குறித்த மிக ஆரோக்கியமான வாதம் செய்த திருப்தி நெஞ்சில் நிறைந்து அடுத்த கலந்துரையாடல் எப்பொழுது வரும் என்று ஒரு வித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது!//

  இது சூப்பரு..

  ReplyDelete
 7. இத்தனை கடுமையான போட்டியில் முதல் பத்தில் இடம் பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது...
  தேர்வு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !!!

  முதல் பத்தில் இடம் பெற்ற படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் மிக சிறிய அளவிலேயே வித்யாசம் இருப்பதாக தென்படுகிறது...
  போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !!!

  அடுத்த முறை நடுவர்களுக்கு இன்னும் அதிக சிரமத்தை ( படங்கள் தேர்வு செய்வதில் ) அளிக்குமாறு போட்டியாளர்களுக்கு வேண்டிகொள்கிறேன் ;)

  தங்கள் சொந்த நேரத்தை எங்களுக்காக செலவு செய்து இந்த கடின பணியை செய்யும் நடுவர்களுக்கு எங்களுடைய நன்றி !!!

  ReplyDelete
 8. Excellent work. hats off guys.


  I chose my winner :)

  ReplyDelete
 9. cvr, PIT குழுவினருக்கு,

  என் மனமுவந்த வாழ்த்துகள். ஒவ்வொரு மாதமும் நல்ல நல்ல தலைப்புகளில் போட்டி நடத்தி பதிவர்களின் திறமையை வெளிக்கொணர்கிறீர்கள். இந்தப் போட்டிக்காகவே பதிவு தொடங்கி செயல்பட்டு வரும் பல புதிய பதிவர்களையும் கண்டேன். வெறும் எழுத்துக்கள் நிரம்பிய தமிழ்ப்பதிவுலகில் இந்தப் போட்டிகளால் வெளிவரும் படங்கள் ஒரு ரம்மியமான மாற்றம் !!

  போட்டிக்குத் தேர்வான 10 படங்களும் நன்று. நடுவர்களின் வேலை சிரமம் தான்..

  ReplyDelete
 10. //படம் எடுக்க எடுத்துக்கொண்ட முயற்சி //

  ஆமாங்க இந்த கதையை பிறகு சொல்கிறேன்

  இரும்படிக்கும் இடத்தில் இந்த சிறு ஈ க்கும் இடம் கொடுத்த நடுவர்களுக்கு நன்றி நன்றி:))

  முன்பே அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆகும் என்ற கைப்புள்ளைக்கும், லொடுக்குவுக்கும் ஒரு கிலோ சக்கரை பார்சல்:)

  ReplyDelete
 11. நம்ம படமும் select ஆகி இருக்கு போலேயே..! ரொம்ப நன்றிப்பா..

  ..ramesh

  ReplyDelete
 12. வாழ்த்களுக்கு நன்றி

  ReplyDelete
 13. // படம் எடுக்க எடுத்துக்கொண்ட முயற்சி...

  Yup, that wasn't very easy. Night photography had always been difficult.
  I expected the other photo of Nathas also :). By any chance, will only one pic be selected from one? Just to know.

  But, one cannot stop from appreciating the efforts taken by you ppl, filtering out the top 10. Great show. Nice to see my pic too :)

  Truly,
  Truth

  ReplyDelete
 14. ம். என்னுடைய முதல் முயற்சிக்கு கிடைத்த முதல் மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. பத்துகுள்ளே சென்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அத்தனை படங்களும் அருமை. இதில் எது முதல் என்று தெரிந்துகொள்ள மிகவும் அவலாக இருக்கிறது. இன்னும் 5 நாட்கள் தான் பொறுத்திருப்போம்.

  ReplyDelete
 16. தேர்வு பெற்ற படங்களில் பெரும்பாலான படங்கள் நான் எதிர்பார்த்தவைதான், சில படங்கள் எதிர்பார்க்காதவை. 1, 2, 4, 10 படங்கள் திரும்ப திரும்ப பார்க்க வைக்கின்றன. 120 படங்களில் 10 படங்களை தேர்வு செய்வது மிகப்பெரிய வேலை, அதை இவ்வளவு சீக்கிரமாக தேர்வு செய்து வெளியிட்ட நடுவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அட்..அட..அட.... புள்ளைங்க என்னமா கலக்கி இருக்காங்க. கண்ணு பட்டுடும் போல இருக்கே. :))

  வாழ்த்துக்கள் மாமாஸ்... மச்சான்ஸ்...:)

  ReplyDelete
 18. வாழ்த்துகள்.

  யாருக்குன்னு தயவு செஞ்சு கேட்டுடாதீங்க. யாருக்கு சொல்றதுன்னு குழம்பி போயிருக்கேன். நடுவர்களுக்கா இல்ல தேர்வானவங்களுக்கா ?

  ReplyDelete
 19. பத்து படங்களும் பத்து முத்துக்கள்!!
  வெற்றி பெறப்போகிறவர்களுக்கு என் முன்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 20. முதல் இரண்டு,கடைசி இரண்டு,நடுவில் ஒன்று என 5 பரிசாக்கிடுங்க.வெற்றிப் படங்களுக்கு முன் பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. இந்த குசும்பர் போட்ட ஆன் தி சன் சைட விட வேறு ஒரு படம் கூட மஞ்சள் கலரோட அசலா ஆர்டர் செய்யற மாதிரி இருந்தது.எப்படியோ நாட்டாமை தீர்ப்பு நல்லதாதேன் இருக்கும்.

  ReplyDelete
 22. All are nice. My choice...

  Naathas, Peevee & Prabhakaran. (Not in that order)

  ReplyDelete
 23. apart from objects... kutti Balu's orange is my fav for colours, setting, composition and lighting ... stood apart! yeah the veriety is amazing!

  ReplyDelete
 24. நாலாவது போட்டோ ந்ன்றாக இருக்கிறது.
  1 - 3ல் வரும் என்று நினைக்கிறேன்.
  எல்லாருக்கும் என் பாராட்டுக்கள்.

  சகாதேவன்

  ReplyDelete
 25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  நடுவர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்:

  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வெற்றிபெற்ற படங்களின் நிறைகளையும், தேர்ந்தெடுக்கப்படாத (ஓரளவுக்குத் தேறிய) படங்களின் குறைகளையும் எழுதினீர்கள் என்றால், என்னைப் போன்ற வளரும் (?) கலைஞர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 26. எனக்கு ஒரு யோசனை. படங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால், முதலில் முதல் 20 படங்களையும், பிறகு அதிலிருந்து 10 படங்களையும், கடைசியாக முதல் 3 படங்களையும் தேர்வு செய்தால் என்ன?

  ReplyDelete
 27. // haran said...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  நடுவர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்:

  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வெற்றிபெற்ற படங்களின் நிறைகளையும், தேர்ந்தெடுக்கப்படாத (ஓரளவுக்குத் தேறிய) படங்களின் குறைகளையும் எழுதினீர்கள் என்றால், என்னைப் போன்ற வளரும் (?) கலைஞர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்.//


  போன போட்டியிலே இதை செய்திருந்தார்களே நடுவர்கள். கண்டிப்பாக நிறைகுறை தெரிவிக்கும் பதிவு வெளிவரும். கவலையே படாதீங்க . ( சீவீஆர் நான் சொன்னது சரிதானே )

  ReplyDelete
 28. என் படம் உள்ளே வைக்குமுன் நான் பட்ட பாடு .போட்டி நடத்துனரை நான் படுத்திய பாடு ....எல்லா பாட்டுக்கும் நல்ல பலன் கண்டேன் .பத்துக்குள் ஒன்றானேன்.நன்றி

  ReplyDelete
 29. @ஹரன்
  ஜீவ்ஸ் அண்ணாச்சி சொல்லுறது சரிதான்!
  இந்த போட்டிக்கு வந்த அனைத்து படங்களுக்கும் விமர்சனங்கள் தாங்கி ஒரு பதிவு முடிவுக்குப்பின் வெளியிடப்படும்!
  ஒவ்வொரு முறையும் இது எதிர்ப்பார்க்க முடியாது ,நடுவர்களுக்கு ஏற்கெனவே நிறைய வேலைகள் இருக்கும்,எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதுவது சிரமம் மற்றும் நிறைய நேரம் தேவைப்படும் வேலை!!
  அதனால் இது ஒவ்வொரு நடுவரின் வேலைபளுவையும்,அவருக்கு இருக்கும் கிடக்கும் நேரத்தையும் பொருத்தது!

  வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றி!! :-)

  ReplyDelete
 30. Comgrats to the winners & great work judges.

  ReplyDelete
 31. 10 படங்களும் அருமை. தலைப்பிற்குத் தகுந்த கற்பனையுடன் மற்றும் தரத்துடன் கூடிய படங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகம் எதுவும் இல்லை. மொத்தமாகவே வந்திருக்கும் படங்களின் தரமும் அவர்களின் முயற்சியும் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய ஒன்று. 10 படைப்பாளிகளும் இத்துடன் நிற்காமல் முன்னேறவேண்டும் - வாழ்த்துக்கள்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff