Wednesday, January 27, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?... பாகம் -2.. எத்தனை மெகாபிக்சல்ஸ் வாங்கலாம்??

13 comments:
 
நாம் முதன் முதலில் கேமரா வாங்கும் போது எவ்வளவு megapixels கொண்ட கேமரா வாங்கினால் நல்லது என்று முடிவெடுக்க சற்று சிரமப்பட நேரிடலாம்.. உங்களுக்கு தெரிந்ததவரிடம் 6 mp உள்ள கேமரா இருக்கும்,அதனால் அதை விட இன்னொரு மடங்கு அதிகமான 12mp கேமரா வாங்கினால் அவர் வைத்திருப்பதை விட டபுள் குவாலிட்டி இருக்கும் என்று நீங்கள் 12 MP கேமரா வாங்க நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு... MEGA PIXELS பற்றி கொஞ்சம் பார்ப்போம் . MEGA PIXELS என்பது MILLION PIXELS என்றும் அர்த்தம் ஆகும்..ஒரு கேமரா 6MP என்றால்,6 மில்லியன்(60லட்சம்) புள்ளிகள்/பிக்சல்கள் வரை அந்த கேமராவின் சென்சாருக்குள் பதிவு பன்னும் என்று அர்த்தம். உன்மையில் picture qualityக்கும் mega pixelsக்கும் சம்பந்தம் மிக குறைவே.. ஒரு படத்தை இரு வேறு pixelகளால்(6MP மற்றும் 12MP) படம் எடுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு வரை(8 * 12 இன்ச்) பிரிண்ட் போட்டு பார்த்தால் ஒரு வித்தியாசமும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது.. பொதுவாக ஒரு நல்ல குவாலிட்டி உள்ள 6*4 inch சைஸ் print போடுவதற்கு வெறும் 2 mega pixel கேமராக்களே போதும். இந்த சைஸில்(6*4) ப்ரிண்ட் போடுவதற்கு 2 mega pixel இருந்தாலும் ஒன்று தான்,24 mega pixel இருந்தாலும் ஒன்று தான். ப்ரிண்ட் சைஸ் மிக பெரியதாக போடுவதற்கு மட்டுமே அதிகமான mega pixels தேவைப்படும்..அதுவும் ஒரு நல்ல குவாலிட்டி உள்ள 6 mega pixel கேமராவிலேயே நாம் அழகாக 16*20 இன்ச் சைஸ் வரை எளிதாக போடலாம்.. 6 MP யின் டபுள் size என்பது 12 MP என்று நாம் நினைப்போம்..உன்மையில் அது தவறு.. உதாரனமாக 6MP என்பது, horizontal * vertical ஆக இரண்டாக பிரித்து 3000pixels * 2000pixels = 6000000pixels(6MP) என்று தான் அளவிடப்படும்.. எனவே இதன் இரண்டு மடங்கு என்பது 6000 * 4000 = 24MP என்பதே சரியாகும்.. 6mpயின் இரு மடங்கு என்பது 6mp * 2 times= 12mp என்று சொல்வது தவறாகும்... ஆகையால் 6MP க்கும் 12MPக்கும் மிக பெரிய வித்தியாசம் எதுவும் நாம் பயன்படுத்தும் நடைமுறையில் கண்டு பிடிக்க முடியாது..எனவே ஒரு கேமரா வாங்கும் போது 6 முதல் 10 MP என்பதே நம் நடைமுறை பயன்பாட்டிற்க்கு போதும்.. ஒரு சிலர் சிறிய சைஸ் ப்ரிண்ட் கூட போட மாட்டார்கள்..அவர்கள் computerல் மட்டுமே பார்க்க பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இன்னும் குறைவான MP யே போதும்.. ஒரு 14 inch computer moniter ல் முழு அளவில் பார்ப்பதற்கு 2 MP என்பதே அதிகம். 21 இன்ச் மானிடரில் பார்ப்பதற்கு 4mp என்பதே போதும். ஏனென்றால் ஒரு நல்ல computer moniter என்பது 100 PPI/DPI யால் அளவிட படுகிற்து.. அல்லது ஒரு படத்தை computerல் பார்க்க 100PPI இருந்தால் போதும். PPI/DPI என்றால் என்ன? PPI என்றால் pixels per inch, DPI என்றால் dots per inch என்பதின் சுருக்கம்..இரண்டும் ஒன்று தான். அதாவது நாம் computerல் பார்ப்பதற்கு,பிரிண்ட் போட்டு பார்ப்பதற்கு,high quality மாத இதழ்களில் வெளிவருவதற்கு ஒரு இன்ச் சதுர அளவிற்கு குறைந்தபட்சம் தேவைப்படும் pixel மற்றும் dots(print resolution) அளவு என்பதாகும். இதை நாம் ஒரு படம் எடுத்து EXIFல் பார்த்தால் எத்தனை DPI உள்ளது என்று தெரியும் .. இது சில சமயம் 92dpi,300dpi என்று settingsற்கு தகுந்த மாதிரி மாறி இருக்க வாய்ப்புண்டு PPI/DPI எதற்கு? ஒரு 6 mp கேமராவில் படம் எடுத்தால்,அந்த படத்தில் 60 லட்சம் pixelகள்(6MP) இருக்கும். உதாரணமாக ஒரு 12 inch X 8 inch சைஸ் கொண்ட 14 இன்ச் computer மானிட்டரில் பார்க்கும் போது ஒரு இன்ச் சதுர அளவிற்கு குறைந்த பட்சம் 100 பிக்சல்கள்(100 PPI) இருந்தால் போதும். அதாவது 12 X 8(14inch monitor)ல் 12இன்ச்X 100pixels =1200 pixels 8இன்ச்X100pixels= 800 pixels மொத்தமாக 1200 X 800 = 9,60,000(0.96mp) பிக்சல்கள் இருந்தால் 14இன்ச் மானிட்டருக்கு போதும். ஆனால் நம்மிடம் 60 லட்சம்(6MP) பிக்சல்கள் உள்ளது. இதை வைத்து நாம் கிட்டதட்ட 20 X 30 இன்ச் சைஸ் வரை கொண்ட மானிடரில் கூட பார்க்கலாம் ஆனால்,100 pixels per inch இருந்தால் computer moniterக்கு மட்டும் தான் குறைந்தபட்சம் போதும் என்பது ஒரு கணக்கு.. இதுவே, நார்மல் குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு குறைந்தபட்சம் 150 PPI யும், நல்ல குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு குறந்தபட்சம் 200-250 PPI யும், magazine களில் ப்ரிண்ட் செய்வதற்கு குறைந்தபட்சம் 300PPI யும், தேவைப்படும். இதனால் நம் தேவைக்கேற்ப PPI or DPI calculationஐ gimp softwareல் அல்லது photoshopல் உள்ள print resolutionல் நாம் பார்த்து நமக்கு தேவையான பிர்ண்ட் சைஸை மாற்றிக்கொள்ளலாம்,தெரிந்து கொள்ளலாம் . PPI ஐ அதிகமாக்கினால் ப்ரிண்டின் அளவு குறைய தொடங்கும், ஆனால் நாம் எடுத்த இமேஜ் resolution(MP) என்பது குறையாது. PPI/DPI என்பதை வைத்து நம்மிடம் இருக்கும் pixelsன் அளவில் எந்த அளவு வரை பிரிண்ட் போடலாம் என்பதை தெரிந்து கொள்ள உதவும். உதாரணமாக, 6 MP கேமராவில் . EXIFல்100 PPI என்று இருந்தால், அதில் 20 * 30 இன்ச் வரை ப்ரிண்ட் சைஸ் வரை போடலாம் என்று calculationல் இருக்கும். இதுவே நல்ல குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு 200PPI தேவைப்படுவதால், நாம் PPIஐ settingsல் அதிகபடுத்தவேண்டும்..அப்படி அதிகபடுத்தும் போது automaticஆக அதிகபட்ச பிரிண்ட் சைஸ் அளவு 10 * 15 இன்ச் என்று குறையதொடங்கும். இதே 200DPI அளவில் இந்த அளவுக்கும் மேல் ப்ரிண்ட் போட வேண்டுமென்றால் PPI யின் அளவை குறைத்தால் தான் முடியும்..அப்படி குறைக்கும் போது பிரிண்ட் குவாலிட்டி கொஞ்சம் கொஞ்சமாக PPIயின் அளவுகேற்ப குறைய தொடங்கும்.இந்த மாதிரி நேரத்தில் தான் அதிக pixels தேவைப்படும்.. இது megapixelsன் அளவுகளுக்கேற்ப மாறுபடும். . கீழே உள்ள TABLE CHARTல் இதை பார்க்கலாம்.. FOR HIGH QUALITY PUBLISHING AND ADVERTISING

Print size (இன்ச்)

Print resolution

Image resolution

போதுமான MP

4 X 6

300 DPI

1800 X 1200

2.1 MP

5 X 7

300 DPI

2100 X 1800

3.2 MP

6 X 8

300 DPI

2400 X 1800

4.3 MP

8 X 12

300 DPI

3600 X 2400

8.6 MP

16 X 20

300 DPI

6000 X 4800

28.8 MP

FOR HIGH QUALITY PRINTING

4 X 6

240 DPI

1440 X 960

1.4 MP

5 X 7

240 DPI

1680 X 1200

2.0 MP

6 X 8

240 DPI

1920 X 1440

2.8 MP

8 X 12

240 DPI

2880 X 1920

5.5 MP

16 X 20

240 DPI

4800 X 3840

18.2 MP

FOR COMPUTER MONITOR AND GENERAL PHOTO PRINTING

8 X 12

100 DPI

1200 X 800

0.96 MP

16 X 20

100 DPI

2000 X 1600

3.2 MP

20 X 30

100 DPI

3000 X 2000

6.0 MP

24 X 36

100 DPI

3600 X 2400

8.64 MP

இதை தவிர இந்த calculationஐ gimp,photoshop போன்ற photo editing softwareகளில் உள்ள print resolution செட்டப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் அதிக pixels என்பது தேவையில்லை என்று அர்த்தம் இல்லை..பிக்சல்ஸ்களால் சில நன்மைகளும் உண்டு,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.. அது வரைக்கும் போயிட்டு வாரனுங்.. -கருவாயன்.

13 comments:

  1. மிக அருமையாக சூத்திரங்கயைம் அதன் தேவை மற்றும் பயன்பாடுகளையும் மிக மிக தெளிவாக விளக்கினீர்கள்... அப்படியே அலைபேசியில் உள்ள கேமராவுக்கும் டிஜிட்டல் கேமராவுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லுங்களேன்...

    மெகா பிக்சலும் அதன் வகைகளும் அதற்கு விரிவான விளக்கங்களும் அருமை

    படத்தின் பிரிண்ட் அளவுகளுக்கான அட்டவணை மிகவும் உபயோகமாக இருந்தது...

    நன்றி மிக்க நன்றி...


    நன்றி மிக்க நன்றி...

    ReplyDelete
  2. நன்றி கமலக்கண்ணன்...

    ”’அப்படியே அலைபேசியில் உள்ள கேமராவுக்கும் டிஜிட்டல் கேமராவுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லுங்களேன்...”’

    இனி வரும் பகுதியில் இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    -கருவாயன்

    ReplyDelete
  3. படத்தை புத்தகத்தில் போட நேரும்போது போதுமான ரெஸல்யூஷன் இல்லைன்னு சொல்றாங்களே. அது என்ன ஏதுன்னு கொஞ்சம் விளக்குங்களேன். அப்படியே நாம் எடுக்கும் படங்களுக்கு 'ரெஸல்யூஷன்' கண்டுபிடிப்பது எப்படி?

    ReplyDelete
  4. @துளசி கோபால்..
    ரெஸல்யூஷன் என்ன இருந்தது என்று தெரிந்தால் தான் மிக சரியாக சொல்ல முடியும். உங்கள் படத்தில் உள்ள resolutionஐ தெரிந்து கொள்ள propertiesஐ க்ளிக் பன்னவும்,அதில் summary என்று இருக்கும்,அதில் பார்த்தால் width,height என்ற இடத்தில் ஒரு அளவு இருக்கும் அதுவே அந்த படத்தின் இமேஜ் resolution.

    அந்த resolutionஐ தெரிந்து கொள்ளவும்,பிறகு இந்த பதிவில் போட்டிருக்கும் table chartல் முதல் tableல் உள்ள image resolution வைத்து உங்கள் படத்தின் resolutionஐ compare செய்து பார்க்கவும்..கொஞ்சம் முன்னபின்ன வந்தாலும் பரவாயில்லை ..பின் அதற்கு நேரா உள்ள print sizeல் பார்த்தால் அதில் உள்ள அளவு வரை படத்தை புத்தகத்தில் பதிக்கலாம்.

    -கருவாயன்

    ReplyDelete
  5. நன்றிப்பா.

    ஆமாம்.... இந்த ரெஸல்யூஷனை அதிகப்படுத்தணுமுன்னா என்ன செய்யணும்? கெமெராவில் இதுக்கு தனி செட்டிங்ஸ் உண்டா?

    நம்ம படம் 96 ன்னு சொல்லுது. சுருங்கியது 360 இருக்கணுமுன்னு பப்ளிஷர் சொன்னதா நினைவு.

    ReplyDelete
  6. @துளசி கோபால்
    நீங்கள் 96 என்று சொல்லியிருப்பது print resolution,இது வேறு..
    இமேஜ் resolution என்பது வேறு..இதை தான் mega pixel என்று சொல்வார்கள்.

    ப்ரிண்ட் resolution என்பது நாம் ப்ரிண்ட் போடுவதற்கு ஒரு இன்ச் சதுரத்திற்கு தேவைப்படும் அளவு ஆகும்..96 என்று இருந்தால் computerல் பார்பதற்க்கு போதும்,இந்த அளவையும்,image resolutionஐயும் வைத்து தான் நாம் எவ்வளவு தூரம் ப்ரிண்ட் போட முடியும் என்பதை அளவிடமுடியும்..

    இது போக,உங்கள் image resolutionஐ பார்க்கவும்.உதாரணமாக 2000 X 3000,அல்லது width-3000,height-2000 என்று பார்க்கலாம்.இதை நாம் அதிகப்படுத்தவே முடியாது.இதை சரியாக பார்க்கவும்.

    ஆனால் 96 என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் print resolutionஐ மாற்றலாம்.ப்ரிண்ட் resolution மாற்றுவது என்பது நமது image resolutionகேற்ப பரிண்ட் போடும் அளவை கணக்கிட மட்டும் தான்
    அப்படி ப்ரிண்ட் resolution மாற்றும் போது நமது image resolution மாறாது.

    இதை நீங்கள் GIMP photo editing softwareல் உள்ள print resolution செட்டப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    -கருவாயன்.

    ReplyDelete
  7. இந்த விளக்கத்துக்கும் நன்றி. மாதிரிக்கு ஒரு படத்தைச் சோதிச்சதில்

    width 3648 pixel

    height 2736 pixel

    horizantal & vertical resolution 96 dpi

    இப்படி இருக்கு. இதை கருப்பு வெள்ளை ப்ரிண்டில் புத்தகத்துலே போடமுடியுமா? கருப்பு வெள்ளை என்பதால் ரெஸல்யூஷன் குறைவாக இருந்தால் ஸ்மட்ஜ் ஆகிருமுன்னு சொல்றாங்க.

    இந்தப் படத்தை PIT க்கு மெயிலில் அனுப்பிவைத்தால் அது புத்தகப்ப்ரிண்டுக்குச் சரிவருமான்னு சொல்லமுடியுமா?

    இது ஒரு மாதிரிப் படம்தான்.
    மீண்டும் மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கணும்.

    வகுப்பில் கவனமா இருக்கேன், சந்தேகம் வந்தால் கேக்கணும் என்பதை நிரூபிச்சுட்டேன்:-)))

    ReplyDelete
  8. @துளசி கோபால்..

    ~’மீண்டும் மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கணும்~’
    நீங்கள் இந்த மாதிரி சொல்வது தான் எங்களுக்கு தொந்தரவு. நாங்கள்(pit) எல்லோரும் யாராவது கேள்வி கேட்கமாட்டாங்களான்னு ஒரு வெறியோட இருக்கின்றோம்.அதனால கேள்விகளை கேளுங்க,கேளுங்க,கேட்டுக்கிட்டே இருங்க.

    நீங்கள் தெரிவித்துள்ள இமேஜ் resolutionன் அளவு,

    width 3648 pixel
    height 2736 pixel, 3648 X 2736 =9980928 (9.98MP)
    எனவே நீங்கள் எடுத்துள்ளது கிட்டதட்ட 10 MP resolution உள்ளது. இதை நீங்கள் என்ன பன்னினாலும் அதிகபடுத்த முடியாது.வேண்டுமானால் குறைத்து கொள்ளலாம்.

    horizantal & vertical resolution 96 dpi என்று நீங்கள் சொல்லியிருப்பது print resolution.
    இந்த 96 என்பது computerல் பார்ப்பதற்கு ஒரு inch சதுர அளவிற்கு தேவைப்படும் குறைந்தபட்ச பிக்சல்/புள்ளிகள் அளவு ஆகும்.ஆனால் உங்களிடம் உள்ள படத்தில் 9980928 புள்ளிகள்/பிக்சல்கள் இருக்கின்றது.இந்த பிக்சல்களை வைத்து நீங்கள் ஒரு இன்ச் சதுரத்திற்கு 96 போதும் என்று கணக்கு போட்டால்,கிட்ட்தட்ட 24 X 36 இன்ச் சைஸ் வரை எளிதாக smudge இல்லாமல் computerல் பார்க்கலாம்.

    ஆனால் புத்தகத்தில் ப்ரிண்ட் போடுவதற்கு ஒரு இன்ச் சதுர அளவுக்கு குறைந்தபட்சம் 300 புள்ளிகள்/பிக்சல்கள் தேவைப்படும்.இதனால் நீங்கள் வைத்துள்ள 9980928 பிக்சல்களில் ஒரு இன்ச் சதுரத்திற்கு 300 புள்ளிகள் என்று கணக்கு போட்டால் 8 X 12 இன்ச் சைஸ் வரை தாராளமாக புத்தகத்தில் பிரிண்ட் போடலாம். 300 புள்ளிகள் பத்தாது என்றால் பிரிண்ட் சைஸ் குறைத்து போடலாம்,,

    horizantal & vertical resolution 96 dpi.. இதை அதிகப்படுத்தி பார்த்தால் ப்ரிண்ட் சைஸ் குறைவதை கிம்ப் போன்ற photo editing softwareல் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். கிம்ப் உங்களிடம் இருக்கின்றதா??

    இமேஜ் resolution மிகவும் குறைந்து இருந்தால் 900 X 1000 கீழ் இருந்தால் புத்தகத்தில் ப்ரிண்ட் போடுவது கடினம் தான்..ஆனால் உங்களிடம் தான் இமேஜ் resolution அதிகமாகவே இருக்கின்றது..அதனால் கண்டிப்பாக புத்தகத்தில் பிரிண்ட் போடலாம்..ஆனால் படம் தெளிவாக இருக்க வேண்டும்..

    -கருவாயன்.

    ReplyDelete
  9. பதிவு அருமை, நன்றி. நன்றஅக புரிந்தது, comment பகுதியல் இன்னும் நன்றஅக புரிந்தது.

    ReplyDelete
  10. sir, i am happy to see such a wonderful website. sir, i dont have to praise u. u have been doing a great job for our tamil community. keep going on............

    ReplyDelete
  11. Hi friends நான் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,
    என்னுடைய சந்தேகங்கள் எனித்தீர்ந்து விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
    எனக்கு புகைப்படம் என்ன என்ன வகைகளில் எடுக்கலாம் என கூற முடியுமா?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff