Tuesday, March 30, 2010

`ஒன்று` இறுதி சுற்று முடிவுகள்..

31 comments:
 
அன்பு நண்பர்களே.. `ஒன்று` போட்டியின் இறுதி சுற்று முடிவுகள் வருவதற்கு காலதாமதமாகி உங்கள் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டோம்.. வேறு வழியுமில்லை.. இந்த முறை அதிக படங்கள் வந்ததால் அதை 9 நாட்களுக்குள் ஒவ்வொன்றாக பிரித்து செலக்ட் பன்னுவதற்குள் சற்று தாமதமாகிவிட்டது.... சரி,இனி ரிசல்ட் என்னன்னு பார்ப்போம்... முதல் 3 இடத்தை பிடித்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் இரண்டாவது சுற்றிலிருந்து வெளியேறியவர்களின் படங்களை பற்றி பார்ப்போம்... ஆயில்யன் ஒரு சாதாரணமான க்ளிப்பை ஏதோ மாயாஜாலம் பன்னின மாதிரி எடுத்து கலக்கி வெச்சிருக்கீங்க.. ரொம்ப நல்ல வொர்க்.. அது நிக்குதா.. அந்தரத்தில் தொங்குதான்னே தெரியல..ஆனால், 1.இந்த க்ராப் நல்லா இருக்கும்னு தோனுது.. பழைய compositionம் மோசம் இல்லை..அதுவுமில்லாம சப்ஜெக்ட் செண்டரா இருக்குது..அதனால கொஞ்சம் வேற மாதிரி composition இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கின்றேன்.. 2.இந்த இடத்தில் foucs இன்னும் நல்லா வந்திருக்கனும்.. சரி இந்த படத்தை எப்படி எடுத்தீங்க?? நூல்ல கட்டி விட்டு எடுத்தீங்களா?? உங்கள் படத்தை கொஞ்சம் alter செய்தது.. அமல் perfect composition, அருமையாக பறவை இறக்கை விரித்து இருக்கும் படம், இரை தேடுவது போல் நல்ல டைமிங்..ஆனால்.. 1. முகம் இல்லாமல் இருப்பது இந்த படத்திற்கு மைனஸ்.. 2. தண்ணீர் dark - கொஞ்சம் under exposure, பறவை வெளிச்சம் கொஞ்சம் over exposure..(வேறு வழியுமில்லை) 3. டைட் க்ராப் படத்தில் டீடெயில்ஸ் இல்லாமல் இருப்பது கொஞ்சம் நெருடல்..highlights அதிகமாக உள்ளது.. அமல்.. நீங்கள் வைத்திருந்த மற்ற படங்களையும் பார்த்தேன்.. எனக்கு மற்ற படங்கள் பிடித்திருந்தது... இருந்தாலும் நீங்கள் புதிதாக மட்டும் தான் எடுத்து அனுப்புவீர்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்..அதற்கு வாழ்த்துக்கள்.. அப்பொழுது தான் நமக்குன்னு ஒரு புது தேடல் வரும் இல்லீங்களா? நான் இந்த மாதிரி போட்டோ எடுக்கும் வாய்பை ரொம்பவே மிஸ் பன்றேன்.. பூபதி நல்ல மலர் படம்..பேக்கிரவுண்டும் தொந்தரவுகள் அதிகம் இல்லாமல் இந்த தலைப்புக்கு ஓ.கே..ஆனால், 1.மேலே கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம்.composition கொஞ்சம் இடிக்கின்றது.. 2.இந்த மலரின் நடு பாகம் மிக அழகாக இருக்குமே..அதுவும் இருந்தால் படம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்...இதனால் படம் கொஞ்சம் சிம்பிள் டைப் ஆக தோன்றுகிறது..டைட் க்ராப் படத்தில் டீடெயில்ஸ் இல்லாமல் இருப்பது கொஞ்சம் நெருடல்.. உஙக்ள் படத்தை கொஞ்சம் alter செய்தது... கனேஷ் பஞ்சவர்ண கிளி படம் கலர்கலராக அருமை..details ம் ஓ.கே.. பேக்கிரண்டும் நன்றாக இருக்கின்றது..ஆனால், 1.சிவப்பு கலர் saturation ரொம்பவே அதிகம்.. டிஜிட்டலை பொறுத்த வரையில் சிவப்பு கொஞ்சம் இப்படி தான் லொள்ளு பன்னும்.. கலர் correction பன்ன வேண்டும்.. 2.உடம்பு முழுதாக எடுதிருக்கலாம் .. உடம்பு சரி பாதியாக(கால் பகுதி) கட் ஆவது கொஞ்சம் நெருடல்..அப்பொழுது தான் பறவையில் முழு அழகும் தெரியும்.. இல்லையென்றால் முகம் மட்டும் தெளிவாக படம் எடுத்து க்ராப் செய்யலாம்.. அதேசமயம் இந்த க்ராப்பும் குறையில்லை.. 3.இந்த மாதிரி க்ராப் செய்யலாம்.. 4.& 5. இந்த வகைகளில் compose இருந்திருக்கலாம்.. 6. கண் பகுதி நன்றாக வந்துள்ளது.... உஙக்ள் படத்தை கொஞ்சம் alter செய்தது... கெளதம் வெள்ளை கிளி சூப்பர்.. தலைப்புக்கு பொருத்தமான நல்ல படம்.. பேக்கிரவுண்டில் தொந்தரவுகள் பெரிதாக இல்லை.. வெள்ளை கிளியும் highlights அதிகம் தெரியாமல் படம் expose ஆகி உள்ளது..ஆனால்.. 1. இந்த வகையில் composition இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.. 2. வெள்ளை சப்ஜெக்ட்டுக்கு இந்த கலர் கொஞ்சம் இடைஞ்சல்.. இதனால் இந்த படத்தை கொஞ்சம் க்ராப் செய்து black and white ல் மாற்றியிருக்கின்றேன்... KVR செம expression.. என்னமா போஸ் குடுத்திருக்குது இந்த குட்டி..அழகு.. 1.அருமையான போஸ்..பத்திரமா வெச்சுக்கங்க... 2.பேக்கிரவுண்ட் கலர் நன்றாக இருக்கின்றது..ஆனால் இந்த மாதிரி portrait படங்கள் எடுக்கும் போது சப்ஜெக்ட்க்கும்,பேக்கிரவுண்டுக்கும் இடைவெளி இருந்தால் பேக்கிரவுண்ட் முற்றிலும் out of focus ஆகி படம் மிகவும் அருமையாக வரும்.. 3. ஷார்ப்னெஸ் அதிகமாக தெரிகின்றது, contrast ம் அதிகம்.. composition ஓ.கே. இருந்தாலும் பேக்கிரவுண்ட் நேராக இல்லை..கொஞ்சம் சாய்ந்த மாதிரி இருக்கின்றது.. சைடிலிருந்து எடுத்தீர்களா? shutter speed 1/1000sec வரை பயன்படுத்தும் அளவு வெளிச்சம் இருக்கும் போது ISO 1800 என்பது தேவையில்லை..முடிந்த அளவு ISO வை குறைத்தே எடுக்கவும்.. இதனால் கண்டிப்பாக சில நேரங்களில் பிக்சர் குவாலிட்டி வித்தியாசம் இருக்கும்.. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த பட்டாம்பூச்சி subject.. நன்றாக எடுத்துள்ளீர்கள்..அதுவும் பழைய prosumer கேமராவில்... நெல்லங்காட்டில், பட்டாம்பூச்சி நன்றாக ஃபோகஸ் ஆகியுள்ளது.. பட்டாம்பூச்சியை படம் எடுப்பது சாதாரண காரியம் இல்லை,பொறுமையாக எடுத்துள்ளீர்கள் இருந்தாலும், கம்போஸிசன் இன்னும் நன்றாக செய்திருக்கலாம், கொஞ்சம் டைட் க்ராப் சரியாக அமையவில்லை.. மேலும் பேக்கிரவுண்ட் ரொம்பவும் cluttered ஆக இருப்பது சிறப்பாக இல்லை..அதுவுமில்லாமல், 1.expose சரியாக இல்லை.. காரணம் காலை நேர வெயில்.. இந்த மாதிரி நேரங்களில் ரொம்பவும் கவனமாக வெளிச்சத்தை கவனிக்க வேண்டும்.. இல்லையென்றால் பேக்கிரவுண்ட் வெளிச்சம் அதிகமாகவும்,சௌஜெக்ட் வெளிச்சம் குறைவாகவும் தான் வரும்.. இதற்கு ஒரு வழி, வெளிச்சம் பட்டாம் பூச்சியின் மேல் படும் வரை வெயிட் பன்னி தான் எடுக்க வேண்டும்.. இல்லையென்றால் ஃப்ளாஷ் பயன்படுத்த வேண்டும்.. ஆனால் சில சமயம் அது ஒத்து வராது.. 2. நல்ல ஃபோகஸ்.. 3.இந்த முறையில் கம்போஸிசன் இருக்க வேண்டும்.. ரகு முத்துகுமார் பறவை பறப்பதை மிக அழகாக, நல்ல டைமிங்காக,ஷார்ப்பாக,டீடெயிலாக எடுத்துள்ளீர்கள்.. இந்த மாதிரி படங்களை எடுப்பதே கஷ்டம்.. பாராட்டுக்கள். ஆனால், 1.இந்த மாதிரி composition இருந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்..composition தான் இப்படத்திற்கு ஒரு மைனஸ்.. 2.இறக்கை அழகாக உள்ளது.. 3. இப்பகுதி கொஞ்சம் தொந்தரவு(distraction).. அதை சரி செய்யலாம்.. இதை மாற்றி ,கொஞ்சம் க்ராப் செய்து போட்டுள்ளேன்... சத்தியா எறும்பு படம் மிக அழகு,அட்டகாசமான் ஃபோகஸ்,exposure அருமை.. பச்சை கலர் BGயும் அழகு சேர்க்கின்றது.. angleம் different ஆக இருக்கின்றது..இருந்தாலும்.. 1.இந்த பகுதி தேவையில்லை.. ரொம்பவே blur(out of focus) .. 2. dust ஐ remove பன்னாமல் இருப்பது படத்திற்கு சிறிய தொந்தரவு..(இது பெரிய விசயமில்லை) 3.எறும்பு நல்ல ஃபோகஸ் ஆகி உள்ளது.. இருந்தாலும் subject என்பது too center ஆக இருப்பது நமது கண்களை இரண்டாக பிரிக்கும் என்பதால் ஒரு மைனஸ்.. 4 & 5.இந்த வகைகளில் க்ராப் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். விஜயாலயன் காவி கலரில் துறவியின் படம் மிக அழகாக இருக்கின்றது..செலக்ட்டிவ் கலரிங்கும் நன்றாக இருக்கின்றது..இருந்தாலும், 1. செலக்ட்டிவ் கலரிங் ஓ.கே. என்றாலும் கொஞ்சம் artificial effect ஆக சுவர்கள் தெரிகின்றது.. ஒரு வேளை கலரில் இருந்தாலே நன்றாக இருக்கலாம்.. 2.இந்த வகையில் composition இருந்திருக்கலாம்.. ஏனென்றால் கைத்தடி க்ராப் ஆனது சிறிய நெருடல்..அவர் கீழே தலையை குனிந்து இருப்பதால்,இன்னும் கீழே இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.. 3.இந்த படத்தை வைத்து இந்த மாதிரியும் க்ராப் செய்யலாம்.. 4.படத்தில் பேக்கிரவுண்டே ஃப்ரேம் போல் இருக்கின்றது.. இதில், அதிகமான ஃப்ரேம் (4 ஃப்ரேம்) போட்டிருப்பது படத்தை தொந்தரவு செய்கின்றது.. 5. இந்த பகுதி அழகாக இருக்கின்றது.. நடந்து வந்த அடையாளத்தை தெரிவிக்கின்றது அதனால் ரெஸ்ட் எடுப்பது போல் தெரிகின்றது.. செல்லம் இந்த போட்டிக்கு வந்திருந்த விளக்கு படங்களில்.. நீங்கள் எடுத்திருக்கும் இந்த படம் நன்றாக உள்ளது.. நல்ல exposure , தீபமும் ஒவர் லைட்டாக இல்லாமல் நன்றாக வந்துள்ளது.. மண்விளக்கும் அழகு..ஆனால், 1.தீபம் மேல் நோக்கி இருப்பதால்,மேலே இடம் விட்டு இந்த மாதிரி compose இருந்திருக்க வேண்டும்.. 2.இந்த பக்கமும், கீழேயும் கொஞ்சம் இடம் இருக்க வேண்டும். 3. ஃபோகஸ் சரியான இடத்தில் இருந்தாலும்..இன்னும் கொஞ்சம் depth இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்க தோன்றுகிறது.. இருந்தாலும் இதுவே இந்த மாதிரி படங்களுக்கு நன்றாகவே இருக்கின்றது..ஏனென்றால் கொஞ்சம் மாறி போய் தீபத்திற்கு ஃபோகஸ் போயிருந்தால் படம் முற்றிலும் இருட்டாகியிருக்கும்.. 4.இந்த பகுதி இருட்டாக இருப்பதால் கொஞ்சம் க்ராப் செய்திருக்கலாம்.. அடுத்தபடி மூன்றாம் இடத்திற்கு மூன்று படங்கள் போட்டி போடுகின்றன.. அவர்கள், கார்த்திக் , விக்னேஷ் , நிக்கோலஸ்.. இவர்களில், கார்த்திக் படத்தில், படத்தின் சப்ஜெக்ட்டும்,ஷார்ப்பும் சூப்பரோ சூப்பர்..பச்சை கலர் பச்சோந்தி,பிங்க் கலர் வாய திறந்து கொண்டு இருப்பதும் அருமை.. ஆனால்,சென்ற தடவை(வாண்டுகள்) மாதிரியே இந்த முறையும் க்ராப்பில் தான் கோட்டை விட்டுவிட்டீர்கள்.. 1.இந்த முறையில் டைட் க்ராப் செய்யலாம்..டீடெயில்ஸ் நன்றாகவே இருக்கின்றது.. 2.ரொம்பவே நெகட்டிவ் or empty space.. 3.இந்த பகுதி மிகவும் அருமை. 4.இந்த முறையில் கம்போஸ் செய்திருந்தால் நன்றாக இருக்கும்.. வலது புறம் நோக்கி இந்த பச்சோந்தி இருப்பதால் வலது பக்கத்தில் வேண்டுமானால் கொஞ்சம் empty space இருந்தால் தவறில்லை..ஆனால் இடது புறம் தான் empty space இருக்கின்றது ஒரு குறை. 5.இந்த vertical முறையிலும் கம்போஸ் பன்னலாம்.. அந்த காலுக்கு அருகில் வரும் வெளிச்சப் பகுதி சிறு உறுத்தல்.. நீங்கள் அனுப்பிய படத்தை வைத்து இரண்டு முறையில் crop செய்துள்ளேன்... நிக்கோலஸ் படத்தில், செம ஷார்ப் expression படம், perfect focus.. அருமையான bokeh பேக்கிரவுண்ட் மற்றும் exposure..ஆனால், இந்த படத்தில் சப்ஜெக்ட் தரும் expression என்ன என்பது சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. சோகத்தை வெளிப்படுத்தறாங்களா இல்லை சும்மா பேசுறாங்களான்னு புரியவில்லை. அதுவுமில்லாமல்,கழுத்து பகுதி டைட் க்ராப்,பொக்கேவுக்காக கொஞ்சம் அதிகமாக வைடாக க்ராப் செய்திருப்பது சிறிய பலவீனம். 1.இந்த வகையில் கம்போஸ் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 2.அருமையான டீடெய்ல்ஸ். 3.bokeh கலர்ஸ் அருமை.. ஆனால் இவ்வளவு அதிகமாக தேவையில்லை... கொஞ்சம் alter செய்தது.. விக்னேஷ் படத்தில். நமது தேசத்தந்தையை அழகான சிலூயெட்(silhouette) ஆக படம் எடுத்துள்ளார்.. மிகவும் அருமை..அதுவுமில்லாமல் அருமையான ஃப்ரேமிங்(compose)..background hue colours மிகவும் அழகு..இந்த படத்தில், 1.இப்பகுதி அருமையாக இருக்கின்றது. 2.கம்போஸிசனும் அருமை..கலர்களும்(hues) அருமை.. 3.முக்கியமான இப்பகுதி ஷார்ப்பாக இல்லை..ஃபோகஸ் தவறியிருக்கலாம்..கண்டுபிடிப்பதும் கொஞ்சம் சிரமம் தான். 4.இந்த படத்தின் பலவீனமே இந்த extra பகுதி தான்.. முதல் மூன்று இடங்கள்: இவர்கள் மூன்று பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது சற்று சிரமமாகவே இருந்தது..மூன்று படங்களுமே நல்ல படங்களே.. இருந்தாலும், ஒரு படத்திற்கு மிக முக்கியமான கம்போஸிசன் நன்றாக இருப்பதால், மூன்றாம் இடம் பிடிப்பது விக்னேஷ். அடுத்து இறுதியாக அன்பு ஆனந்த் மற்றும் MQN படங்கள்.. இவர்களில் அன்புவின் aerial view படம் அட்டகாசம்.. சுத்தாமான தண்ணீரில் தெரியும் கலர், அட்டகாசமான கம்போஸிசன், படகு,படகின் கயிறு நம் கண்களை அழகாக லீட் செய்வது என்று அனைத்தும் அருமை.. இந்த படத்தை பொறுத்த வரையில் பலவீனம் என்பது பொதுவாக இல்லை... ஆனால் இந்த `ஒன்று` தலைப்பு என்று வரும் போது..சிறு நெருடல்.. படகு மற்றும் கயிறு தான்.. அதே மாதிரி, 1 & 2 இடத்தில் darkening PP செய்திருப்பது கொஞ்சம் இயற்கைதன்மையை(இப்படத்திற்கு) குறைக்கின்றது.. அதே சமயம், 2 இடத்தில் படகும்... 1 இடத்தில் கயிறும் இருந்திருந்தால் இந்த படம் இன்னும் top கம்போஸிசனாக ஆக இருந்திருக்கும் எனவே, இரண்டாம் இடம் பிடிப்பது, S.M.ANBU ANAND முதலிடம் பிடிப்பது MQN வழக்கம் போல இவரு தான் டாப்... இந்த படத்தில் குறை என்பதே கண்டுபிடிக்கமுடியவில்லை... தலைப்புக்கு மிக பொருத்தம்.. புறாவின் சிறகு,கால்கள்.. அழகான வானம், அருமையான ஃபோகஸ் பறவைகளை நிற்கும் போது எடுப்பதே கஷ்டம்.. அதுவும் இவர் புறா பறப்பதை அழகாக ஃபோகஸ் செய்துள்ளார் எனவே MQN முதலிடத்தை பெறுகின்றார்... இந்த போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கும் ஒரு பொதுவான காரணம் என்னவென்றால் அது COMPOSITION தான்.. என்னை பொருத்த வரையில் இந்த தலைப்புக்கு composition என்பது மிக முக்கியம்.. மற்ற படங்களில்(அமல் படத்தை தவிர) எதோ ஒரு சிறிய வகையில் கம்போஸிசன் என்பது பலவீனமாகவே இருந்தது.. இந்த மூன்று பேரின் படங்களையும் வேறு மாதிரி என்னால் கம்போஸ் பன்ன முடியவில்லை.. இதுவே இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.. வெற்றி பெற்ற மூவருக்கும் PITன் வாழ்த்துக்கள்..... மிக விரைவில் அடுத்த போட்டிக்கான தலைப்புடன் வருகின்றோம்... நன்றி கருவாயன்.

31 comments:

  1. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துகள்..உங்களுடய சிறந்த விளக்கதுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    எனக்கு அமல் 'லின் கொள்கை பிடித்திருக்கு. நானும் இனி ஒவ்வொரு போட்டிக்கும் புது புகைப்படம் எடுக்க முயற்சிப்பேன்.

    ReplyDelete
  3. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான தெரிவுகள்.
    ஒவ்வொரு படங்களையும் மிகவும் ஆழமாக விமர்சித்த நடுவருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். நான் படம் பிடிச்சி அனுப்பனும் என்பதற்கு உந்துதலே உங்களின் விமர்சனம் தான். போட்டிக்காக படம் பிடிக்க ஆரம்பிச்சதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  5. PiT குழுவினருக்கு நன்றி
    வேற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வெற்றி பெற்றவைகளுக்கு வாழ்த்துக்கள்..
    என் படத்தை மறந்து விட்டீர்கள்?
    :( Karthik (vandalur)

    ReplyDelete
  7. @karthik(vandalur)...

    உங்கள் படத்தை மறக்கவில்லை கார்த்திக்... உங்களது படம் இரண்டாவது சுற்றில் வெளியேறிவிட்டது.. அதை பற்றி விளக்கமும் கொடுத்துள்ளேன்.. நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன்...

    அடுத்த முறை கலக்கிவிடலாம் கார்த்திக்..

    -கருவாயன்

    ReplyDelete
  8. well done karuvayan. beautiful selection. :) congrats to all here.

    ReplyDelete
  9. @கருவாயன், மன்னிக்கவும்.. நான் அதை இரண்டாவது சுற்றில் முன்னேறியதாக நினைத்து விட்டேன்.

    ReplyDelete
  10. நான் எக்ஸ்பெக்ட் செஞ்ச படம் பர்ஸ்ட் வந்துருச்சேய்ய்ய் :) செம ஷாட் பாஸ் சூப்பரூ :)


    //நூல்ல கட்டி விட்டு எடுத்தீங்களா??//

    இல்ல பாஸ் கம்பியில தொங்கிகிட்டிருந்துச்சு எடுத்தேன் கொஞ்சமா பிபி :)

    ReplyDelete
  11. @ ஆயில்யன் - அந்த PP எப்படின்னு சொன்ன ரொம்ப உபயோகமா இருக்கும்

    ReplyDelete
  12. ஊக்கமளித்த எல்லாருக்கும் நன்றி. தேர்ந்தெடுந்த நடுவருக்கும் நன்றி. மற்ற வெற்றியாளர்களுக்கும்/பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். எனக்கு அன்பு ஆனந்தின் படம் மிகவும் பிடித்திருந்தது. எங்க ஏரியாவுல (ராமேஸ்வரத்துல) எடுத்தது மாதிரி தெரியுது. :) வாழ்த்துகள் அன்பு.

    ReplyDelete
  13. பரிசு பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    முதல் பரிசுப் பெற்ற புறா அழகு.
    வித்தியாசமான போஸ்.

    ReplyDelete
  14. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. இவ்வளவு அருமையாக பொருமையாக எங்களோட படத்திற்க்கு எல்லாம் சரிபார்த்து கருத்துரைத்த நடுவர்க்ளுக்கு வணக்கங்கள்.

    ReplyDelete
  16. Romba pakkathula vandhutten, just la miss ayiduchu. Paravala ithana padangalukku naduvula en padam kadaisi round varaikkum vandhu adhum 3rd place ku kadaisi varai potti pottadhe sandoshama irukku. Arumaya ovvoru padathukkum vizhakkangal kodutha nanbar Karuvaayanaukku nanri, adutha thadava kandippa kuraigala thiruthikkuren.

    Pottiyil pangetra anaivarukkum en vaazhthukkal, kurippa MQN and Anbu anand, unga rendu per padamum attagasam.

    ReplyDelete
  17. வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

    புறாக்கள் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் MQN படமே கண்ணில் வந்து போகிறது:)!

    ReplyDelete
  18. சூப்பர் விமர்சனங்கள். நன்றி

    ReplyDelete
  19. வேற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்... .. (கருவாயன் = நக்கிரன்) ... .. இனி என் கை நடுங்கும் ...

    ReplyDelete
  20. நடுவர் சார், எனக்கு ஒரு சந்தேகம்.... முதலாம் இடம் பெற்றுள்ள படத்திலுள்ள புறா பிரேமின் நட்ட நடுவில் உள்ளதே? அது சரியான காம்போசிஷனா? அது குறை இல்லையா? - அன்பரசு

    ReplyDelete
  21. @அன்பரசு.. நீங்கள் கேட்டிருப்பது அருமையான கேள்வி..

    ஃப்ரேமிங்கை பொறுத்த வரையில் இரண்டு வகையில் நாம் கம்போஸ் செய்கின்றோம்...
    horizontal(இடமிருந்து வலமாக) மற்றும் vertical(மேலிருந்து கீழாக)..

    horizontal ஃப்ரேம் என்பது அகலமாக இருப்பதால் நமது கண்களை இரண்டாக தான் பிரிக்கும்..இந்த ஃப்ரேமிங்கில் நடுவில் சப்ஜெக்ட் வருவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்..

    ஆனால் vertical ஃப்ரேம் என்பது அப்படி முழுதாக பிரிக்காது..

    இதே புறா படம் horizontal ஃப்ரேமாக சப்ஜெக்டை நடுவில் கம்போஸ் செய்திருந்தால் கண்டிப்பாக அது முதலிடம் வந்திருக்காது என்றி நினைக்கின்றேன்..

    அதே புறா படத்தை horizontalஆக க்ராப் செய்து பார்த்தால் நமது கண்கள் கொஞ்சம் பிரிவதை நாம் அறிய முடியும்.. இங்கே அதை பார்க்கவும்..

    http://picasaweb.google.com/pitcontests/Framing#

    ஆனால் இப்படம் கிட்டதட்ட vertical ஃப்ரேம்..

    அதுவும்,சப்ஜெக்ட் பாதியாக இல்லாமல் முழுமையாகவும், நாலு பக்கமும் சரியான அளவு இடைவெளி உள்ள ஃப்ரேம்..

    வென்னிலா மீரான் அவர்களது படமும் கிட்டதட்ட இவ்வகை தான்.. இவர் படத்தையும் நான் நடுவில் உள்ள சப்ஜெக்ட் படம் என்று கூறவில்லை.

    அதே சமயம் சப்ஜெக்ட் என்பது நடுவில் இருக்ககூடாது என்பது எழுதப்படாத விதி தான்...

    இருக்கவே கூடாது என்றும் கிடையாது..

    இருக்கலாம்..அது நம் கண்களை பிரிக்காத வரையில்..

    இந்த படத்தை கவனித்து பாருங்கள்,நமது கண்கள் அந்த புறாவை விட்டு வேறு பக்கம் பிரிக்கின்றதா என்று.... நானும் பல வகைகளில் இந்த படத்தை ஃப்ரேம் செய்து பார்த்தேன் இந்த ஃப்ரேமைவிட வேறு எதுவும் சிறப்பாக வரவில்லை.. சப்ஜெக்ட்டும் முழுமையாக உள்ளது..

    இதை பற்றி நான் முன்னரே விளக்கமாக கூறியிருக்க வேண்டும்... அது தவறு தான்.. வருந்துகிறேன்..

    -கருவாயன்

    ReplyDelete
  22. அன்பரசு,

    ஃப்ரேமிங்க் பத்தி ஏற்கனவே சுரேஷ் ரொம்பத் தெளிவா சொல்லிட்டார். இருந்தாலும் என்னோட ரெண்டு பைசா

    1 - நடுவில் சப்ஜக்ட் இருக்கக் கூடாது என்று இல்லை. இருக்கலாம். ஆனால் நம் கவனம் சப்ஜெக்ட்டின் மேல் குவியும் வகையில் இருக்க வேண்டும்.
    2 - எந்த ஒரு படத்துக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதான விதி இல்லை. எப்படியும் எடுக்கலாம். அது அழகாய் தெரிவதாய் இருந்தால் :)

    மிச்சத்தை மறுபடியும் சுரேஷிடமே விட்டுடறேன்

    ReplyDelete
  23. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. Hearty congratulations to all the winners..! I wasn't able to identify any flaws in any of them, but seeing through the eyes of professional photographers like you, I understand how much composition can alter the quality of the photo!! Great job! I am learning a lot through PIT...! Great site for amateurs like me!

    PS: Adhutha thadavai "tamil" la type panren!! :)

    ReplyDelete
  25. ஆஹா ...கருவாயன் நண்பரே....அருமையான விளக்கம்....இவ்வளவு பொறுமையா நீங்க ஒவ்வொரு படத்தையும் அலசுரதுல இருந்து உங்களுக்கு இருக்குற அக்கறை தெரியுது...

    எப்போவும் போல MQN கலக்கல் .....சும்மா சொல்ல கூடாது....வந்த படங்கள்ல பாதிக்கு மேல பீதி கிளப்பினதுனால தான் நான் ஆட்டத்துக்கே வரல...

    ReplyDelete
  26. விளக்கங்களுக்கு நன்றி.
    - அன்பரசு

    ReplyDelete
  27. அம்சமான படங்கள். அம்சமான அலசல்.

    கலக்கிபுட்டீங்க கருவாயன்.

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    -சர்வேசன்

    ReplyDelete
  28. //shutter speed 1/1000sec வரை பயன்படுத்தும் அளவு வெளிச்சம் இருக்கும் போது ISO 1800 என்பது தேவையில்லை..//

    Auto ISO இருந்ததால் அப்படி ஆகிடுச்சு. திருத்திக்கிறேன். நன்றி. என் எதிர்ப்பார்ப்பைப் பொய்க்காத முதல் மூன்று இடங்கள். வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  29. செல்போன் ல எடுத்த படத்தை போட்டிக்கு anuppalaamaa?

    ReplyDelete
  30. வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள். அருமையான விளக்கங்கள். இதை படிக்கவே இவ்வளோ நேரம் ஆகுது, இதை மொத்தமா விமர்சனம் செய்ய ரொம்ப நேரம் செலவழிச்சி இருக்கீங்க...கலக்கீட்டீங்க கருவாயன்.

    ReplyDelete
  31. வெகு அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இந்தப் பதிவே அருமையான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது அதற்கு நன்றியும் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் சொல்கிறேன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff