Monday, August 9, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? - பாகம் - 8 / வேகமான லென்ஸ் என்றால் என்ன??

13 comments:
 
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??

இதற்கு முந்தைய பகுதிகள்....

பகுதி:1 கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது..
பகுதி:6 கேமராவின் கண்கள் - லென்ஸ்
பகுதி:7 எந்த ZOOM RANGE வாங்கலாம்


வணக்கம் நண்பர்களே,

நீ..ண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கட்டுரையின் தொடர்ச்சி மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. கடந்த பகுதிகளில் மேலே கூறியவற்றை பற்றி பார்த்தோம்..இனி,

லென்ஸின் வேகம் என்றால் என்ன?

பொதுவாக லென்ஸ்களில் ஒரு அளவு குறிப்பிட்டிருப்பார்கள்.

1:3.3-5.6,
1:2.8-4.5
1:2.8
1:1.8 இந்த மாதிரி..

இந்த அளவுகள் எல்லாம் லென்ஸின் படமெடுக்கும் வேகத்தை குறிப்பதாகும். இதை தான் aperture அளவு என்று சொல்வார்கள்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதன் நம்பர் அளவு குறைய குறைய லென்ஸின் வேகம் என்பது அதிகமாகும்..

லென்ஸின் வேக அளவுகள் என்பது, வேகமாக போகும்,ஓடும் சப்ஜெக்டை படம் எடுப்பது என்று அர்த்தம் கிடையாது..
ஒரு லென்ஸ் எவ்வளவு அதிகமாக ஒளியினை உள்வாங்கும் திறன் கொண்டுள்ளது என்று அளவுகளால் குறிப்பதாகும்..

ஒளி உள் வாங்குதல் அதிகம் இருந்தால் நாம் வேகமாக போவதை freeze பன்னலாம்

கீழே உள்ள படத்தினை பார்த்தால் ஒளி உள்வாங்குதல் நமக்கு புரியும்..


இந்த படத்தில் f/1.4 (1:1.4) என்பதின் ஒளி துவாரம் என்பது பெரியதாக இருக்கின்றது , அப்படியே படிப்படியாக குறைந்து f/16(1:16) ன் ஒளி துவாரம் சிறியதாகின்றது..
aperture அளவுகளுக்கேற்ப ( ஒரே அளவு ஷட்டர் ஸ்பீடில்) ஒளி அதிகமாவதையும்,குறைவதையும் அருகில் தெரியும் படங்களிலே நாம் பார்க்கலாம்.

இந்த துவாரத்தின் (diameter) அளவு பெரியதாக இருந்தால் ஒளியின் அளவு அதிகமாக உள்ளே போகும். அப்படி அதிகமாக ஒளியினை உள்வாங்கும் போது ஷட்டர் ஸ்பீட்ன் அளவு அதிகமாகும். . ஷட்டர் ஸ்பீடின் அளவு அதிகரித்தால் தான் நம்மால் blur இல்லாமல் படம் எடுக்க முடியும்..
இதனால் வெளிச்சம் குறைவான நேரத்தில் கூட blur இல்லாமல் நாம் எளிதாக, flash போடாமல் படம் எடுக்கலாம்.

கவனிக்க... துவாரம் பெரிதாக பெரிதாக f number என்பது குறையும்..

ஆகையால், அதிக f number என்பது சிறிய துவாரம்... இதனால் குறைவாக ஒளி தான் உள்வாங்கும்,
சிறிய f number என்பது பெரிய துவாரம்... இதனால் அதிகமாக ஒளியினை உள்வாங்கும்.


வேகத்தின் அளவுகள்:

வேகத்தின் அளவுகளை படிப்படியாக இவ்வாறு வரிசையாக நிர்ணயித்துள்ளார்கள்.
1.0 1.4 2.0 2.8 4.0 5.6 8.0 11 16 22 32 45 64 ..

(இதற்கென்று ஒரு ஃபார்முலா இருக்கின்றது,இப்போதைக்கு நமக்கு அது வேண்டாம்,அதை படித்தால் தலை தான் வலிக்கும்)

மேலே கூறியிருக்கும் அளவுகளின் வரிசையில், ஒவ்வொரு வரிசை நம்பரும் மாறும் போது அதன் ஒளி வேகம் என்பது இரண்டு மடங்கு அதிகரிக்கும்.. உதாரணமாக f/16 என்பதின் ஒளியை விட அதற்கு முந்தைய ஸ்டாப் ஆன f/11ன் ஒளி என்பது இரண்டு மடங்கு அதிகமாக உள்வாங்கும்.
அதாவது f/16 ல் வைத்து எடுக்கும் போது ஷட்டர் ஸ்பீடின் அளவு 1/30 secs என்று இருந்தால் , அதையே f/11 ல் வைத்து எடுத்தால் ஷட்டர் ஸ்பீடின் அளவு 1/60 secs என்று இருக்கும்.. இந்த மாற்றங்கள் எல்லாம் நாம் shutter priority mode , manual mode ல் வைத்து எடுக்கும் போது நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்..
எண்கள் குறைய குறைய சிறு அளவு மாற்றமே இரண்டு மடங்கு வெளிச்சம் அதிகரிக்கும்..(உ.ம். 2.0 vs 1.4).
இந்த aperture அளவு என்பது லென்ஸுக்கு லென்ஸ் மாறுபடும்..

இதில் ,

f/1.4, f/1.8 போன்ற அளவுகளை அதிவேக லென்ஸ் எனவும்,
f/2.0, f/2.8 போன்ற அளவுகளை வேகமான லென்ஸ் எனவும்,
f/3.3, f/4 போன்ற அளவுகளை மிதமான வேகம் எனவும்,
f/5.6, மற்றும் இதற்க்கும் கிழ் உள்ள f/8,f/11,f/16 etc போன்ற அளவுகளை slow லென்ஸ் எனவும் கூறுகின்றனர்..

இரண்டு வகையான APERTURE அளவுகள்:


ஒவ்வொரு லென்ஸும் அதன் அதிகபட்ச aperture அளவுகளை(ஒளிகளை உள்வாங்கும் திறனை) லென்ஸில் குறிப்பிட்டிருப்பார்கள்..

இதில் இரண்டு வகையாக வரும்,
  1. நிலையான aperture அளவுகள். - constant aperture

  2. மாறுகின்ற aperture அளவுகள். - variable aperture


நிலையான aperture அளவுகள். - constant aperture






constant aperture என்பது இரண்டு வகையான லென்ஸுகளுக்கு வரும்..

இந்த வகையான constant aperture என்பது சிறிய கேமராக்களில் கிடையாது..

fixed lens மற்றும் zoom lens

nikon 50mm 1:1.8,
nikon 17-55mm 1:2.8

இந்த வகை constant aperture என்பது zoom லென்ஸில் தயாரிப்பதற்க்கு செலவு அதிகமாகும்.. இதனால் இதன் விலை கூடுதலாக இருக்கும்.. ஆனால் குவாலிட்டி என்பது மிகவும் நன்றாக இருக்கும்..

பொதுவாக லென்ஸ்களில் அதிகபட்ச அபெர்சூர் அளவினை(உ.ம். f 2.8 ) மட்டும் தான் லென்ஸில் குறிப்பிட்டிருப்பார்கள்.. குறைந்த பட்ச அளவுகளை (f/16, f32) லென்ஸில் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

இந்த வகையில் தயாரிக்கப்பட்ட லென்ஸ் என்பது எந்த zoom range லும் அதிகபட்ச ஒளியினை உள்வாங்கும் படி அமைக்கபட்டிருக்கும்.
உதாரணமாக, nikon 17-55mm 1:2.8 என்று இருக்கும் லென்ஸில் 17mm ல் வைத்து எடுக்கும் போதும் f/2.8 aperture அளவில் எடுக்கலம்,28mm,35mm,45mm,55mm போன்ற எந்த zoom ல் வைத்து எடுத்தாலும் இதன் அதிக பட்ச wide aperture ஆன f/2.8 ல் வைத்து எடுக்கலாம்... அதே சமயம் f5.6 , f8 , f16... போன்றவற்றிலும் வைத்து எடுக்கலாம்..

ஆனால் variable aperture லென்ஸ்களில் இந்த மாதிரி எடுக்க முடியாது..


மாறுகின்ற aperture அளவுகள். - variable aperture






variable aperture அளவுகளை கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருப்பார்கள்..

nikon 18-55mm 1:3.5-5.6
sigma 17-70mm 1:2.8-4.5
canon 28-135mm 1:3.5-5.6
sigma 18-200mm 1:4 - 6.3

இந்த அளவுகளை சிறிய வகை கேமராக்களிலும் குறிப்பிட்டிருப்பார்கள்..



இதன் அர்த்தம் என்ன?

உதாரணமாக , 18-55mm 1:3.5 - 5.6 என்றால்,

இதன் அதிகபட்ச aperture அளவு என்பது f/3.5 முதல் f/5.6 என்று அர்த்தம்..
குறைந்த பட்ச aperture என்பது f/32 முதல் f/45 வரை செல்லும்..

அதென்ன அதிகபட்ச அளவு என்பது f/3.5 முதல் f/5.6 என்று வேறுபடுகின்றது?

இது எப்படி என்றால்,

நாம் இந்த லென்ஸில் 18mm ல் வைத்து எடுக்கும் போது நாம் அதிகபட்சமாக f/3.5 வரை apertureஐ அதிகபடுத்தலாம்..
ஆனால் அதுவே zomm rangeஐ அதிகப்படுத்தி 50mmல் வைத்து எடுக்கும் போது f/3.5 ல் aperture ஐ வைத்து படம் எடுக்க முடியாது..

50mm ல் இதன் அதிகபட்ச aperture என்பது f5.6ஆக மாறிக்கொள்ளும்.

எனவே f/5.6 வரை தான் 50mm ல் apertureஐ அதிகபடுத்த முடியும்..
இதனால் நமக்கு படம் எடுக்கும் வேகம்(ஷட்டர் ஸ்பீட்) குறைந்து விடும்..

இந்த மாதிரி லென்ஸ்களை பொறுத்த வரையில், அதிகபட்ச aperture அளவுகள் கீழ்கண்டவாறு மாறிக்கொள்ளும்..

18mm - 24mm = f/3.5
28mm - 34mm = f/4.0
35mm - 40mm = f/4.5
40mm - 55mm = f/5.6

ஆனால் constant aperture லென்ஸ்களில் எந்த zoom rangeல் வைத்து எடுத்தாலும் ஒரே மாதிரி அதிகபட்ச apertureஐ வைத்து எடுக்கலாம்.. aperture அளவுகள் மாறாது..

சரி, மீண்டும் அடுத்த பகுதியில் பார்ப்போம்..

இந்த பகுதியில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்...

நன்றி
கருவாயன்.

13 comments:

  1. அருமையான, தெளிவான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  2. நடமாடும் நூலகம் நீங்கள். அரிச்சுவடி முதல் சொல்லித் தருகிறீர்கள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி தல :-))

    ReplyDelete
  4. ணா..
    அற்புதம்.. வேற வார்த்தைகளே இல்ல. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இது மாதிரி ஒரு கட்டுரைய இங்கிலீஷ்ல நெட்ல படிச்சு காலேஜுல பீட்டர் உட்டுகிட்டு இருந்தேன். இந்த வலைத்தளத்தை இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன். (ஒரு கேள்வி: எங்க அப்பாவுடைய ஒரு கேமராவிற்கு (1974ல் வாங்கியது) B&W film தற்போது கிடைக்குமா? அவருக்கும் எனக்கும் அதில் திருப்ப போட்டோ எடுக்க ஆசை. மேலும் எனக்கு டிஜிட்டல் கேமராக்களை விட Manual-Film கேமரா மீதுதான் விருப்பம் )

    ReplyDelete
  5. @கொழந்த..

    நான் பெரியதாக b&w film பயன்படுத்தியது இல்லை..ஆனால் சென்னையில் கிடைக்கும் என்று தான் நினைக்கின்றேன்..

    ````மேலும் எனக்கு டிஜிட்டல் கேமராக்களை` விட Manual-Film கேமரா மீதுதான் விருப்பம் )```

    இன்றைய காலத்தில் DSLR க்கும் FLIM SLR க்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.. நவீன DSLR கேமராக்கள் எல்லாம் FILM SLRக்கு சமமானதே..

    ReplyDelete
  6. சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  7. rompa nalla vilakkam kotuththeenga sir.pala visayangalsi therinthu kondean.arpputham pataippu.

    ReplyDelete
  8. தெளிவாக விளக்கியதற்கு நன்றி.... மிக அருமை....

    ReplyDelete
  9. தெளிவான விளக்கங்கள்.... நன்றி..... தொடரட்டும் தங்களது சேவை....

    ReplyDelete
  10. தெளிவான விளக்கங்கள். நன்றி.....

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff