Monday, May 28, 2012

போலரைசிங் ஃபில்டர் - கார முந்திரி X

2 comments:
 
எவ்வளவுக்கு எவ்வளோ காமிராகிட்ட விளக்கு இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சமமா வெளிச்சம் விழும். உதாரணமா காமிராவோட பிளாஷ். ஆனா பிரச்சினையே அந்த மாதிரி விளக்கு கோணக்கொத்துக்குள்ளே வந்துடும் என்கிறதுதான். என்ன செய்யலாம்? எனக் கார முந்திரி 9-ல் கேட்டு நிறுத்தியிருந்தேன்.

இப்போ அதற்கு இன்னொரு வழியை பார்க்கலாம். விளக்கை கிட்ட கொண்டு வராம தூரத்தில வைக்கலாம். அப்ப அது கோணக்கொத்துக்குள்ளே வராது. வெளிச்சமும் கூடியவரை சமமா இருக்கும்!

விளக்கை எங்கே வைத்தா நேரடி பிரதிபலிப்பும் இல்லாமல், கூடிய வரை சமமான வெளிச்சம் பொருள் மேலே விழுமோ, எப்போது அது குறைந்த எக்ஸ்போசர் நேரத்தை கொடுக்கும் அளவு வெளிச்சம் அதிகமா இருக்குமோ- அதை சாதிக்கணும்!

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்! அப்பாடா!

இதுக்கு பென்சிலும் பேப்பரும் வெச்சுகிட்டு கணக்கு போடலாம். ஆனா ப்ராக்டிகலா அது தேவை இல்லைங்க! மனித கண்ணே போதுமானது. பிரச்சினைகள் என்னன்னு புரிஞ்சா தானா விடைகளை நாமளே கண்டு பிடிச்சுடுவோம். தேவையானால் பொருள் மேலே விழுகிற வெளிச்சத்தை லைட் மீட்டர் வெச்சு அளந்துக்கலாம். வேற ஒண்ணும் வேணாம்!

முடியாததை முயற்சி செய்ய...

இப்ப பார்த்த உதாரணங்களில் ஒரு விஷயம் புரிஞ்சிருக்கும். சமமான ஒளியூட்டலும் கிளேர் இல்லாத ஒளியூட்டலும் ஒண்ணுக்கொண்ணு முரணாக இருக்கலாம். காமிராவுக்கு அருகிலே விளக்கு இருந்தா அது வெளிச்சத்தை சீரா சமமா பொருள் மேலே பாய்ச்சும், ஆனா கோணக்கொத்திலே இருக்கும். பக்கவாட்டிலே இருந்தா சம வெளிச்சம் போயிடும், ஆனா கோணக்கொத்திலே இருந்து வெளியே இருக்கும்.

தீர்வு என்ன?

ஒண்ணு விளக்கை காமிரா கிட்டே கொண்டு போனா, காமிராவை தூரத்துக்கு கொண்டு போகணும். (அதே மாதிரி படம் வர நீளமான லென்சை பயன்படுத்தியோ ஜூம் செய்தோ எடுக்கணும்.) அப்ப கோணக்கொத்து சின்னதா இருக்கும். விளக்கை வைக்கிறதுல கொஞ்சம் சுதந்திரம் கிடைக்கும்.

அல்லது இட வசதி இல்லை, காமிரா கிட்டேதான் இருந்தாகனும்ன்னா, விளக்கை மிக சின்ன கோணத்தில வைக்கணும்; அப்ப கொஞ்சமாவது சீரான வெளிச்சம் பொருள் முழுதும் படணும்ன்னா விளக்கு பக்கவாட்டிலே தூரத்துக்கும் போகணும்.



படம் நன்றி: http://www.freenaturepictures.com/mountain-peak-pictures.php




எப்படி இருந்தாலும் இடம் வேணும் என்கிறதே பிரச்சினை. ஒரு ம்யுசியத்திலே சின்ன ரூமில எட்டுக்கு பத்து அடி அளவில சுவர் முழுதும் ஆக்கிரமிக்கற படத்தை எப்படித்தான் போட்டோ எடுக்கிறது? பின்னால் ஓரளவுதான் போகலாம். விளக்கை பக்கவாட்டிலேயும் கொண்டு போக முடியாது. படத்தை பாருங்க. முடியவே முடியாதுன்னு சொல்லிடலாம். இப்ப காட்டி இருக்கிற மாதிரி எடுத்தா நிச்சயம் கிளேர் இருக்கும். (உதாரண படத்துக்கு க்ளேர் கிம்ப்ல சேத்தது!)


ம்ம்ம்ம்ம்ம்... என்ன செய்யலாம். கொஞ்சம் லாஜிகலா யோசிக்கலாம்.

பிரச்சினை என்ன? கிளேர்.

அது எப்படி வருது? டிரக்ட் ரிப்லெக்ஷன்.

இதை தவிர்க்கிறது எப்படி? இது வரை பாத்த வழிகள் உதவா. ம்ம்ம் வேற வழி இருக்கு?

இருக்கு! போலரைஸ்ட் லைட் பத்தி பாத்தோமில்லையா? அங்கே விடை இருக்கு.

விளக்கு முகப்பில ஒரு போலரைசிங் பில்டர். காமிராவிலேயும் ஒரு போலரைசிங் பில்டர்.

விளக்கு முகப்பு பில்டரால வெளிச்சம் போலரைஸ்ட் ஆகிடும். அதனால் ரிப்லக்ஷனும் அப்படியே இருக்கும். காமிரா பில்டரை கொஞ்சம் சுழற்றி அட்ஜஸ்ட் செஞ்சா 90 டிகிரி வந்ததும் போலரைஸ்ட் வெளிச்சம் பில்டராகிடும். எந்த பொருளுமே நூறு சதவிகிதம் ஒரே மாதிரி வெளிச்சமா ரிப்லக்ட் பண்ணாதுன்னு பாத்தோமில்லையா? அதனால, என்ன டிப்யூஸ் வெளிச்சம் இருக்கோ அது மட்டும் காமிராவில பதிவாகும். இப்ப மத்ததை அட்ஜஸ்ட் பண்ணி படம் எடுத்துடலாம்!


எந்த பில்டரும் நூறு சதவிகிதம் வேலை செய்யாது. அதனால கொஞ்சம் கிளேர் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவிலே இருக்கும்.
இது ரொம்பவே ஸ்மார்ட் வழியா தோன்றினாலும் உண்மையில் வேற வழியே இல்லைன்னா இது என்கிற சமாசாரம்.

காரணம் பலது. நிறைய வெளிச்சம் பில்டர் ஆகிடும் என்கிறதால அபெர்சரை அதிகமாக்கணும். தியரில ரெண்டு ஸ்டாப் அதிகமாகும்ன்னாலும் செயலிலே 4-6 ஸ்டாப் அதிகமாகும். அப்படி செஞ்சா படத்தின் ஆழம் குறையும்.
இது காபி வேலைகளுக்கு பரவாயில்லை. ஆனா எக்ஸ்போசர் நேரம் அதிகமாகும் என்பதால நகரும் பொருட்களை இப்படி எடுக்க முடியாது. ஒளி மூலத்தை மிக அதிகமா வைத்து கொஞ்சம் சமாளிக்கலாம்.

இன்னொரு விஷயம் போலரைசிங் பில்டர் பத்தியது. பில்டர் ஆன ஒளி எங்கே போச்சு? அது சூடாக மாறிடும். சூடான பில்டர் சீக்கிரம் சேதமாகும். அதனால இந்த பில்டரை பயன்படுத்துகிறவங்க மத்த விளக்கை எல்லாம் அணைச்சுட்டுத்தான் இதை மாட்டுவாங்க. படமெடுக்க ரெடியாகிற வரை இதை செய்ய மாட்டாங்க.
கடைசியா, இந்த பில்டர் படத்தோட கலரை மாத்தவும் கொஞ்சம் வாய்ப்பிருக்கு.

-திவா(வாசுதேவன் திருமூர்த்தி)
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/




முந்தைய பதிவுகள்:
காரமுந்திரி I.
காரமுந்திரி II

2 comments:

  1. நல்ல பதிவு .. வடிகட்ட படும் வெளிச்சம் என்ன ஆகும் என்று யோசித்து இல்லை :)
    பிளாஷ் போடும் போது இந்த பில்டரை மறக்காமல் கழற்றிடனும் ...
    ஒரு விஷயம் கவனித்து உண்டு... நிழலில் மறந்தவாக்கில் பில்ட்டர்-ஓடு எடுத்த படங்களில் contrast ரொம்பவே வித்தியாச படும் ..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff