Tuesday, February 26, 2008

பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி - படங்களின் விமர்சனம்

23 comments:
 
இந்த மாத போட்டி ஆரம்பித்த போதே ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தர முயல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் எழுதும் போதும் நிறைய விஷயங்களை திரும்பத்திரும்ப சொல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படாமல் இல்லை.அப்படி பரவலாக பல படங்களை பார்த்து சொல்லத்தோன்றிய சில பொதுவான விமர்சனங்கள் இதோ.

அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான டிஸ்கி: இந்த விமர்சனங்கள் பல நேயர்களின் விருப்பத்திற்கேற்ப பங்கேற்பாளர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வழங்கப்படுகிறது!! இதன் மூலம் யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.ஏதாவது விமர்சனம் தவறாக பட்டால் கோபித்துக்கொள்ள வேண்டாம்!! :-)

சரி ! இப்போ விமர்சனங்களுக்கு போலாமா??

தலைப்பு:
தலைப்பு வட்டம்னு வெச்சதால படத்துல எங்கேயாச்சும் வட்டம் இருந்தா போதும்னு நினைத்துக்கொள்ள வெண்டாம். படத்தை பார்த்தால் பார்ப்பவரின் மனதில் போட்டியின் தலைப்பு தோன்றினால் அதுவே தலைப்புக்கு பொருந்தும் படம்!! நிறைய நல்ல படங்கள் வரும்போது தலைப்போடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறதோ அந்த அளவுக்கு தேர்ந்துடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்பதை மறக்க வேண்டாம்!! போட்டிகளில் படம் தேர்ந்தெடுக்கப்படுவதில் மிக முக்கியமான ஒரு criteria,relevance to topic!

படத்தின் சிறப்பு:
நாம் அன்றாடம் காணும் பொருட்களை அப்படியே படம் பிடித்து அனுப்பினால் அது பார்ப்பவரின் மனதில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.பொருட்களை சற்றே மேலே,கீழே,தூரம்,பக்கம் என்று பல்வேறு கோணங்களில் எடுக்க முயற்சி செய்து அந்த பொருளை சற்றே வித்தியாசமான கண்ணோட்டத்தில் படம் பிடிக்க முயலுங்கள். நூற்றுக்கணக்கான படங்கள் வரும் போது உங்கள் படம் பளிச்சென வித்தியாசமாக தெரிய வேண்டும் என்றால்,உங்கள் படத்தின் கோணம்,ஒளியமைப்பு ஆகிய எதிலாவது ஏதேனும் சிறப்பு இருப்பது அவசியம்.

காட்சியமைப்பு:
Rule of thirds,Leading lines மற்றும் இன்னபிற காட்சியமைப்பு உத்திகள் பற்றி இந்த பதிவில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம்.உங்கள் படத்தில் கருப்பொருள் தெளிவாக அடையாளம் தெரியுமாறு காட்சியில் பொருத்துவது உங்கள் படம் அழகாக தெரிவதற்கு இன்றியமையாதது.கருப்பொருளை நட்ட நடுவில் வைக்காமல் offcenter-ஆக படத்தில் நிறுத்துவது ஒரு அடிப்படையான காட்சியமைப்பு குறிப்பு.

கருப்பொருளை தனிப்படுத்துங்கள்:
உங்கள் படத்தில் கருப்பொருளை தனியாக தெளிவாக தெரியுமாறு செய்வது,திசை திருப்பங்கள் ஏதும் இல்லாமல் பார்வையாளர்கள் படத்தை விட்டு கண்ணை அகலவிடாமல் கட்டிப்போட்டு விடும். DOF,Contrast,colors இப்படி பல விஷயங்கள் மூலம் கருப்பொருள் காட்சியில் தனியாக தெரியுமாறு செய்யலாம்.அதுவுமில்லாமல் பின்னால்,பக்கத்தில் தேவை இல்லாத பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது,மற்றும் பின்னணியில் இருக்கும் காட்சி கருப்பொருளுக்கு complementing ஆக இருப்பது உங்கள் படம் சுவாரஸ்யமாக வழிவகுக்கும்.
போட்டிக்கு அனுப்பும் படங்களில் நேரம்/தேதி ஆகியவை இருந்தால் அந்த படம் ரொம்ப amateurish ஆக தெரியும்.

பிற்தயாரிப்பு:
பிற்தயாரிப்பு செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி பல இடுகைகள் இந்த பதிவில் பார்த்திருக்கிறோம்.காட்சியமைப்பு,contrast.black and white போன்ற சிறு சிறு வேலைகள் செய்வதன் மூலம் உங்கள் படத்தின் தரம் பல மடங்கு அதிகமாகும். படத்தில் border போட்டு உங்களின் கையொப்பத்தை கலையுணர்வுடன் பதித்து அனுப்பினால் அது அந்த படத்தை வெகு professional ஆக்கி விடும்.

படத்தின் pixel தரம்:
உங்கள் கண்ணோட்டம் காட்சியமைப்பு போன்றவை எவ்வளவு ஆழகாக இருந்தாலும் படம் சொர சொர வென்று பொலிவிழந்து காணப்பட்டால்,அந்த படத்தை யாருக்கும் பிடிக்காது.சரியான ஒளியமைப்பு,resolution setting,ISO இவையெலலாவற்றையும் விட ஒரு ஒழுங்கான கேமரா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி படம் பளிச்சென grainy ஆக இல்லாமல் பார்த்துக்கொண்டால் நலம்.

இப்பொழுது இந்த மாதம் வந்த படங்கள் ஒவ்வொன்றாக பார்ப்போமா?? :-)


இம்சை :
1.)குழந்தை கொள்ளை அழகு! கண்ணில் ஒளி படத்தின் சிறப்பை கூட்டுது!! படம் கொஞ்ச்ச்ச்சம் ஷேக் ஆகி இருக்கு!!மற்ற படங்களோடு ஒப்பிடும் பொழுது தலைப்போடு ஒத்து வராதது போன்ற உணர்வு.
2.) மிக சாதாரணமாக தோன்றும் படம்! ப்ளாஷ் போட்டதால் படத்தின் ஜீவன் குலைந்து விட்டதாக ஒரு உணர்வு.

ரமேஷ்
1.) அழகான வண்ணங்கள்,நல்ல காட்சியமைப்பு,Nice contrast.
2.)நல்ல கண்ணோட்டம் மற்றும் ஒளி அமைப்பு,ஆனாலும் சற்றே மங்கிப்போனது போன்ற தோற்றம் படத்தை சாதாரணமாக்கி விடுகிறது.


ஷோனா
1.)பளிச்சென்ற நிறங்கள்,சிறப்பான க்ளோஸ் அப் படம்,தலைப்போடு ஒத்துப்போவதில் குறைபாடு.
2.)நல்ல நிறங்கள்,சிறப்பான DOF ,நல்ல க்ளோஸ் அப் படம்,திரும்பவும் தலைப்போடு ஒத்துப்போவதில் குறைபாடு.படத்தில் கொஞ்சம் காண்ட்ராஸ்ட் கூட்டி,பிக்காஸாவில் darken செய்திருந்தால் பார்ப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.

கேசவன்
1.) மிக அருமையான படம்,ஆனால் தலைப்புக்கு அவ்வளவாக பொருந்தவில்லை.

சின்ன அம்மிணி
1.)tight composition.சுத்தி கொஞ்சம் அதிகமாக இடம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நடு வெயிலில் எடுத்ததால் நிறங்கள் உயிரில்லாமல் ஒரேடியாக பளிச்சென்று இருக்கின்றன.
2.)திரும்பவும் ஒரேயடியாக நெருக்கமாக படம் அமைந்து விட்டது போன்ற உணர்வு.வட்டம் முழுவதுமாக இல்லை,சுற்றிலும் நிறைய distractions வேற.

மஞ்சு
1.)நிமிர்ந்து பார்த்து மேலிருக்கும் வட்டத்தை கவனித்ததை பாராட்டலாம்,Picasa-வில் warmify செய்து,பின் கொஞ்சம் darken செய்திருந்தால் நன்றாக இருக்கும். ஜன்னல்களினால் படத்தில் distraction.காட்சியமைப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
2.)கருப்பொருளை நட்ட நடுவே வைக்காமல் சற்றே off center-ஆக வைத்தால் படத்தில் சுவாரஸ்யம் கூடும்.முடிந்தால் ஜூம் செய்து தெரு விளக்கு மற்றும் பக்கத்தில் உள்ள கட்டிட விளக்குகள் ஆகிய distractions ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்,அல்லது crop செய்திருக்கலாம்.

சூரியாள்
1.) நல்ல subject selection.படத்தை straighten செய்து மற்றும் darken செய்திருந்தால் நன்றாக இருக்கும். வட்டம் என்பது நமது தலைப்பு என்பதால் காட்சியின் பெருன்பான்மையான பகுதி வட்டமாக அமையுமாறு படத்தை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
2.)ஏதோ கிராபிக்ஸ் செய்திருக்கிறார் போல் இருந்தது.

உண்மை
1.) தரமான இரவுக்காட்சி!! சக்கரத்தை இன்னும் கொஞ்சம் வலப்புறம் அமையுமாறு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.வலப்புறம் ஒட்டிக்கொண்டிருக்கும் Happy New year banner-ஐ காட்சியமைப்பில் தவிர்த்திருக்கலாம்,அல்லது crop செய்திருக்கலாம்.
2.)மிக அற்புதமான selective coloring. ஆனால் திரும்பவும் காட்சியமைப்பில் சற்றே குறைபாடு. கண் வலது பக்கம் பார்த்துக்கொண்டிருப்பதை போல உள்ளதால் வலது புறம் சற்றே அதிக இடம் விட்டிருக்க வேண்டும்.அல்லது கண் இடது ஓரத்தில் அமையுமாறு crop செய்திருக்கலாம்.என் கணினியில் இதை செய்து பார்த்தால் படம் பல மடங்கு அழகானது போல தோன்றியது.

துளசி டீச்சர்
1.)Nice perspective.ஆனால் பதிவில் உள்ள எல்லா படத்தையும் அதே கோணத்தில் எடுத்திருக்கிறார்.சற்றே காட்சியமைப்பை மாற்றி முயன்று பார்க்கலாம்.படத்தில் தேதி இட்ட புகைப்படங்கள் போட்டியில் பார்க்கும் போது மிக amateurish-ஆக தோன்றிவிடுகிறது.
2.)முதல் படம் போன்றே ஒரே மாதிரியான காட்சியமைப்பு.ஃப்ளாஷினால் படத்தில் செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது.தரையின் கார்பெட் வண்ணம் வேறு அவ்வளவாக சோபிக்க வில்லை


நியோ
1.)Contrast அதிகமாக்கி சூரியனை சுத்தி உள்ள மற்ற விஷயங்களை கொஞ்சம் இருட்டாகி இருந்தால் அழகாகி இருந்திருக்கும் வட்டமும் highlight ஆகி இருக்கும்.
2.)subject என்ன என்பதில் சற்றே குழப்பம்.வட்டத்தை எடுத்து காட்ட வேண்டும் என்றால் சாலையை முழுமையாக காட்டியிருக்க வேண்டும்.மேலும் குமிழ் போன்ற மேலெழும்பிய தரை பரப்பு மிகவும் ஓரமாகிப்போணாறபோன்ற உணர்வு.Circle is not clearly portrayed in this picture.

லக்ஷ்மணராஜா:
1.)நல்ல creative-ஆன படம்!! ஆனாலும் ஒரே dark and gloomy effect ஆகிபோனாற்போன்ற உணர்வு
2.)Interesting perspective,ஆனா அவ்வளவா தலைப்போடு பொருந்தாதது போன்ற உணர்வு.

தமிழ் பிரியன்
1.)படத்தில் பல்வேறு வட்டங்கள்.கவனம் முழுமையாக செலுத்த ஒரு தெளிவான கருப்பொருள் இல்லாத்தால் படத்தில் சிறப்பாக எதுவும் தெரியவில்லை.
2.) இந்த படமும் மிக சாதாரணமாக தோன்றும் படம்,சற்றே வித்தியாசமான பொருள் ஆல்லது வித்தியாசமான கோணம் ஏதாவது பயன்படுத்தியிருக்கலாம்.


முரளி
நல்ல கேமரா ஒன்னு வாங்குங்க அண்ணாச்சி!! :-)

அழகிய தமிழ்க்கடவுள்
1.)வலது புறம் குடிசை,இடது புறம் ஒரு ஆள் என்று படத்தை கவனம் சிதறுகிறது.தேர்ந்தெடுத்த கருப்பொருளும் அவ்வளவாக சுவாரஸ்யம் கூட்ட வில்லை.
2.)நல்ல composition,ஆனால் படம் கொஞ்சம் நெருக்கமாகி விட்டது போன்ற உணர்வு.இதை விட ஐந்தாவது படம் பார்க்க நன்றாக உள்ளது.

கைலாஷி
1.)மிக சாதாரணமான கோணம்,படத்தில் சிறப்பாக எதுவும் பளிச்சிட மாட்டேன் என்கிறது.
2.)திரும்பவும் மிக சாதாரணமான கோணம்.சிடியில் உங்களது மற்றும் கேமராவின் பிரதிபளிப்பால் கவனம் சிதறுகிறது.படத்தில் clarity-உம் கம்மி.

சூர்யா
1.) படம் மிகவும் grainy-ஆக உள்ளத்,வண்ணங்களும் அவ்வளவாக பளிச்ச்சிடவில்லை.வட்டம்(?!) ரொம்ப சின்னதா இருக்கே அண்ணாச்சி.
2.)முதல் படம் போலவே இந்த படமும் பிக்சல் தரம் சரியில்லை.கருப்பொருள்,கோணம் கூட சுவாரஸ்யம் கூட்டுவதாக இல்லை.

கார்த்திகேயன் குருசாமி
1.) ஆற்புதமான slow shutter speed படம்.முதல் வளையத்தின் நடுவே ஏதொ சிக்கிக்கொண்டிருப்பது போல உள்ளதே? என்னது அது? :-) ஆனா படம் கொஞ்சம் மொட்டையா இருக்கறா மாதிரி உணர்வு,ஏதோ reference point இல்லாம வெறுமையா இருக்கா மாதிரி தோணுது.
2.)வித்தியாசமான கண்ணோட்டம் மற்றும் ஒளியமைப்பு.வட்டம் அவ்வளவாக பளிச்சிடவில்லை.

நானானி
1.)சுவாரஸ்யமான கருப்பொருள்,ஆனால் மிக சாதாரணமான கோணம்,சற்றே வித்தியாசமாக எடுக்க முயற்சித்திருக்கலாம்.போட்டிக்கு படம் எடுக்கும்போது படத்தில் தேதி வராத மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.
2.)படம் dull-ஆக இருப்பது போன்ற உணர்வு.ப்ளாஷ் பிரதிபளிப்பு படத்தின் அழகை இன்னும் குறைத்து விடுகின்றன.


ரிஷான் ஷெரீஃப்
1.)பெரிய படமாக இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.அடுத்த முறை படங்கள் பெரியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.very tight composition,சற்றே வித்தியாசமான கோணத்தில் எடுக்க முயற்சி செய்திருக்கலாம்.
2.)subject என்ன என்றே தெளிவாக இல்லை.

Peevee
1.)நல்ல வண்ணங்கள மற்றும் contrast! குழுமியிருக்கும் பல சலசலப்புகளுக்கு நடுவிலும் முதன்மையாக பளிச்சென தெரியும் வட்டங்கள்,நல்ல perspective மற்றும் subject selectionஆனால் வட்டம் என்ற தலைப்புக்கு ஏற்றார்போல் படத்தை சற்றே crop செய்து distractions-ஐ விலக்கியிருக்கலாம்.

வீரசுந்தர்
1.)அவ்வளவாக தனித்தனமை இல்லாமல் சாதாரணமாக தோன்றும் படம்.மிக சாதாரணமான கோணம்,மற்றும் காட்சியமைப்பினால் எதுவும் படம் பெரிதாக கவராமல் சாதாரணமாகி போய்விடுகிறது.

நாதஸ்
1.)Neat!! நீர்த்துளிகளை நீங்கள் பொறுமையாக இடம் விட்டு பொருத்தியிருப்பது நீங்கள் ஒரு நல்ல படம் உருவாக்க எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறீர்கள் என்று காட்டுகிறது.இவ்வளவு செய்து விட்டு படத்தை அரை வட்டமாக எடுத்துவிட்டீர்களே.
2.)ரொம்ப நல்ல மெக்ரோ ஷாட்.Matrix படத்துல கணிணி திரையில் எண்கள் விழர காட்சி ஞாபகத்துக்கு வருது.அற்புதமாக படமாக்கப்பட்ட படம்.

பிரபாகரன்
1.)நல்ல படம் மற்றும் காட்சியமைப்பு,ஆனால் ஓவர் பிற்தயாரிப்பு செய்ததாலோ என்னவோ படம் செயற்கையாக தெரிகிறது.(படத்தை அதிக்கபடியா sharpen/contrast adjust பண்ணிட்டீங்களோ??)
2.)சூப்பர் silhoutte படம்!! beautiful colors and tones.பையனை விட சூரியன் கொஞ்சம் கீழே மற்றும் சற்று தள்ளி வந்திருக்கலாம்,அப்படி இல்லாவிட்டாலும் இது அற்புதமான படம்.


செந்தில்
1.)நல்ல காட்சியமைப்பு.வலது ஓர விளக்குகள் nicely complementing.இடது புறம் சற்றே வெட்டி விட்டால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
2.) இலைகள் நன்றாக பரந்து இருக்கின்றன படத்தில்,ஆனால் படத்தில் பார்த்தால் ஒரு இயற்கை காட்சி போல தோன்ற வில்லை.மேலிருக்கும் வெள்ளை தூணை வெட்டி விட்டிருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும்.


முத்துலெட்சுமி
1.) நல்ல ஒளியமைப்பு,காட்சியமைப்பு மற்றும் DOF.Bottom left மூலையில் இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் பொருளின் orientation-ஓட ஒத்து போயிருக்கும்,ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு.
2.)neat capture!! மேலே கொஞ்சம் அதிகமாக இடம் விட்டிருக்கலாம்,படம் சற்றே சின்னதாக/நெருக்கமாகிப்போனது போன்ற உணர்வு.


இல்லத்தரசி
1.) குமிழ் நட்ட நடுவில் இருப்பதை விட சற்றே தள்ளி இருந்தால் நன்றாக இருக்கும்.பின்னால் இருக்கும் வானத்தொடு குமிழ் blend ஆகி விடுகிறது(அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்கிறீர்களா?? உண்மைதான்! :-))
2.) நல்ல சிந்தனை.அருமையான காட்சியமைப்பு மற்றும் DOF.

K4K
1.) நிறைய பேர் யோசித்து வைத்த பொருள்.நல்ல perspective மற்றும் குறிப்பாக ஒரு கருப்பொருள் இல்லாத்ததால் சற்றே focus is wavering.குறிப்பாக ஏதாவது புள்ளியின் மேல் focus-ஐ நிறுத்தியிருக்கலாம்.
2.) சி டி யை சில பேர் எடுத்திருந்தாலும் ,இது வித்தியாசமான கண்ணோட்டம்.நல்ல காட்சியமைப்பும் கூட.

எஸ்.குமரன்
1.) Transparent மூடி மற்றும் பஞ்சுக்குச்சிகள்,இதில் வட்டம் சரியாக வெளிப்படவில்லை.ப்ளாஷ் வேறு படத்தை மிக சாதாரணமாக்கிவிடுகிறது.
2.) மிக சாதாரணமாக தோன்றும் கருப்பொருள் மற்றும் காட்சியமைப்பு

சத்தியா
1.)மிக நல்ல கண்ணோட்டம் மற்றும் DOF.வெங்காயம் இடது ஓரம் வந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
2.)வட்டம் முழுமையாக படம் பிடித்திருக்கலாம்,ஆனாலும் மிக நல்ல கண்ணோட்டம் மற்றும் DOF.

தினேஷ்
1.)இரண்டும் ஒரே மாதிரியான படங்கள்.நல்ல படம் ,நல்ல perspective,ஆனால் வட்டம் என்ற தலைப்பு அவ்வளவாக ஒத்துவரவில்லை என்று தோன்றியது.

தர்மா
1.)பின்னாடி உள்ள செய்தித்தாள் படத்தை வெகுவாக பாதிக்கிறது,காசுகளும் சற்றே அழுக்காக இருக்கிறது.படம் dull-ஆக இருப்பதற்கு contrast adjustment செய்து சரி செய்திருக்கலாம்.
2.)இதை போன்று புத்தகத்தில் மோதிரத்தை வைத்து இதயம் போன்ற நிழல் வர வைப்பதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்,ஆனால் அதை முயற்சி செய்திருந்தால் வட்டத்தில் இருந்து கவனம் திசை திரும்பி போயிருக்கும்,அதனால் நீங்கள் முயற்சி செய்யாமல் இருந்ததே நல்லது.நல்ல படம் பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வாசி
1.)டீ போட்டோவுக்கு lens flare-a???அதுவும் சுத்தி சுத்தி எல்லா இடத்திலையும்?? இந்த படத்துக்கு இந்த effect பொருந்தல.நீங்க இந்த அதிகப்படியான பிற்தயாரிப்பு எடுத்துகிட்ட சிரமத்தை,வித்தியாசமான கோணத்துல எடுக்க செலவிட்டிருக்கலாம்.
2.)திரும்பவும் டம்ப்ளரில் பானம் எடுப்பதை விட வேற ஏதாவது எடுக்க முயற்சித்திருக்கலாம். சுத்தி கொஞ்சம் அதிகமா இடம் விட்டிருக்கலாம்,படம் ரொம்ப நெருக்கமா இருக்கு,குறிப்பா கீழ்ப்பகுதியில்.


ஜெகதீசன்
1.)படத்தில் எந்த பகுதியும் தெளிவாக இல்லாமல் blurred-ஆக ஆக்கப்பட்டிருக்கிறது.பிற்தயாரிப்பு மூலம் அப்படி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது,அதுவுமில்லாமல் படத்தில் soft focus உத்தியின் உபயோகிப்பு படத்திற்கு பொருந்துவதாக தோன்றவில்லை.
2.)முதல் படம் போன்றே இரண்டாம் படம்.வேறு ஏதாவது படம் பிடிக்க முயற்சித்திருக்கலாம்.முதல் படத்திற்கான கருத்துக்கள் இந்த படத்துக்கும் பொருந்தும். பழத்தின் நிழல் முழுமையாக காட்சியில் இருப்பது நன்றாக இருக்கின்றது.


ஒப்பாரி
1.)நல்ல கற்பனை ஆனால் முழுவட்டமாக படம் இல்லாமல் போனது வருத்தம். நல்ல சூரிய ஓளி சுரீர் என்று அடிக்கும் நேரத்தில் படம் எடுத்திருப்பதால் படம் ரொம்ப அடிக்கறா மாதிரி வந்திருக்கு. ஏதாவது பிற்தயாரிப்பு செய்து ஒளியின் வீரியத்தை சற்றே குறைத்திருக்கலாம்.
2.)வித்தியாசமான சிந்தனை தான் என்றாலும் மிகவும் சாதாரணமாக தோன்றும் படம்.அவ்வளவாக வசீகரிக்கவில்லை.

சுடரொளி
1.)அற்புதமான படம்!! பின்னால் மங்கிப்போய் இருக்கும் பொருட்கள்,மற்றும் பிரதிபளிப்பு ஆகியவை படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.படத்தில் சற்றே அதிகமாக வெற்றிடம் இருப்பது போன்ற உணர்வு தவிர்க்கமுடியவில்லை.கொஞ்சம் tight cropping செய்திருக்கலாம்.குறிப்பாக வலது பக்கம் வெற்றிடத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று ஒரு உணர்வு!

கோகிலவாணி கார்த்திகேயன்
1.) படம் இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். படம் மங்கிப்போய் ஒளி குறைந்தும் இருப்பதால் சிறப்பாக தெரியவில்லை.
2.)படம் overexposed ஆகியுள்ளது போன்ற உணர்வு,படமும் தொளிவாக இல்லை! வெளிப்புற வட்டத்தை முழுமையாக படம் பிடித்திருக்கலாம்!! இது போன்று சூரியனை நேரிடையாக படம் எடுத்தால் கேமராவும்,கண்ணும் கெட்டுப்போக வாய்ப்புண்டு,பாத்து.. :-)

ஹரண்
1.) மிக நல்ல fireworks படம்.வட்டம் என்ற தலைப்புக்கு அவ்வளவாக பொருந்தவில்லை. காட்சியமைப்பிலும் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்,படத்தில் நிறைய distractions.
2.)நல்ல காட்சியமைப்பு மற்றும் கோணம்.

இரண்டாம் சொக்கன
1.) மிகச்சாதாரணமாக தோன்றும் படம்.கோணம்,எடுத்துக்கொண்ட கருப்பொருள்,ஒளியமைப்பு எதிலும் பெரிதாக ஒன்றும் சிறப்பில்லாத்து ஏமாற்றம்.
2.)படம் சற்றே ஷேக்காகி இருக்கிறது,அதனால் படத்தின் தெளிவில் குறைவு.சுற்றி கொஞ்சம் அதிகமாகவே காய்ந்த இலைகள் இருப்பது போன்ற உணர்வு.மேலும் கீழும் சற்றே crop செய்திருக்கலாம்.கொஞ்சம் பிக்காஸாவில் darken செய்திருந்தால் படங்களின் வண்ணம் இன்னும் கொஞ்சம் பளிச்சிட்டிருக்கும். இலைகள் எதுவும் வட்டமாக இருப்பது போல் தெரியவில்லை.

நித்யா பாலாஜி
1.) அழகாமன ஒளியமைப்பு,சற்றே இருட்டானது போல் இருந்தாலும் படம் பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது.வட்டம் முழுமையாக இல்லாதது ஏமாற்றம்.
2.)கொஞ்சம் குனிந்து கடிகாரம் கேமராவை பார்ப்பது போல கம்போஸ் செய்திருக்கலாம்.sepia ஆக்கியிருப்பது நன்று,ஆனால் சற்றே பிக்காசாவில் darken செய்து பின் sharpen செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பிரபாகர் சாமியப்பன்
1.)படம் அவ்வளவாக தெளிவாக இல்லை,கோணமும் மிகச்சாதாரணம். பொருளை சுற்றி சற்றே இடம் விட்டிருக்கலாம்,கொஞ்சமாவது context set ஆகியிருக்கும்.
2.) மஞ்சள் கருவை சுற்றியிருக்கும் திரவத்தை முழுமையாக காட்சியில் பிடித்திருக்கலாம். படத்தில் symmetry-உம் பார்த்து crop செய்திருக்கலாம்.ப்ளாஷினால் படத்தின் ஒளியமைப்பும் அவ்வளவாக திருப்தியளிக்கவில்லை.
ப்ரியா
1.) ரொம்ப சாதாரணமான படம்,கோணத்திலோ காட்சியமைப்பிலோ,ஒளியிலோ ஏதாவது வித்தியாசமாக இருந்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும்.
2.)முதல் படம் போன்றே,படத்தில் வசீகரிக்கும் அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லாதது ஏமாற்றம்.

இசை
1.)கேமராவின் focus நீர்க்குமிழி மேலே இல்லாமல் இலை மேலே இருக்கிறது.நீர்க்குமிழி நட்ட நடுவில் இல்லாமல் சற்று தள்ளி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்,சற்றே பிற்தயாரிப்பு செய்து வண்ணம,contrast ஆகியவற்றை கூட்டியிருக்கலாம்.பிக்காசாவில் sharpen,darken,warmify ஆகியவற்றை சரியான விகிதத்தில் பயன்படுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாகி இருக்கும்.
2.)படம் மிக plain ஆக உள்ளது. இந்த மாதிரி படங்களில் மேகங்கள் போன்ற reference points வைத்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும்.

அமான் அப்துல்லா
1.)முந்தைய வாசகருக்கு சொன்னது போல படம் ரொம்ப plain,படத்தில் ஒரு reference point இருந்தால் படத்தின் சிறப்பு கூடி விடும்.
2.)படம் கொஞ்ச்ச்ச்ச்ச்ச்சம் ஷேக்,அதனால் தெளிவில் குறைவு. சுற்றி இன்னும் கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது,சக்கரத்தை கொஞ்சம் ஓரம் கட்டுவது போல இடது புறம் வெற்றிடம் இருந்தால் காம்போசிஷன் நன்றாக வந்திருக்கும்.சக்கரத்தின் அச்சாணி rule of thirds -இன் படி அமையும் படி படத்தை crop செய்திருக்கலாம்.வித்தியசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

லொடுக்கு
1.)மோதிரத்தின் orientation-ஐ பார்த்தால் அதை நட்ட நடுவில் வைப்பதை விட offcenter-ஆக வைத்திருக்கலாம்.குறிப்பாக வலது கீழ் பக்கம் தள்ளி விட்டால் நன்றாக இருக்கும்.படத்தில நல்ல DOF.மோதிரத்தின் நிறத்திற்கு இந்த background அவ்வளவாக ஒத்து வராதது போல தோன்றுகிறது. வெள்ளை பேப்பர் ஏதாவது வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
2.)நல்ல perspective மற்றும் DOF.ஆனால் வலது புறம் இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருக்க வேண்டும்,அது இல்லாத்தால் படம் இறுக்கமாக இருப்பது போல தோன்றுகிறது.

நட்டு
1.) நல்ல படம்.இன்னும் contrast அதிகமாக்கி படத்தை sharpen செய்திருந்தால் படம் நன்றாக தெரியும்.நல்ல படமாக இருந்தாலும் இப்பொழுது மிகவும் dull-ஆக இருப்பதால் அவ்வளவாக சுவாரஸ்யம் கூட்டவில்லை.
2.)நல்ல படம்,ஆனால் மிக மிக நெருக்கமாக crop செய்யப்பட்டிருக்கிறது,சுற்றி இடம் விட்டிருக்க வேண்டும்.

Night Rams
1.)Contrast சற்று அதிகமாக்கியிருக்கலாம்.Subject நட்ட நடுவில் இருப்பதால் படத்தில் பெரிதாக சுவாரஸ்யம் தோன்றவில்லை.
2.)இந்த இடம் mackinac island எனும் இடத்தில் தானே உள்ளது.பல படங்களுக்கு சொன்ன கருத்து தான் இங்கேயும்! உங்கள் கருப்பொருளை நட்டநடுவில் வைத்தால் there is nothing in the picture to arouse interest.

கார்த்திகேயன் சண்முகம்
1.)Neat!! நிழலையும் நீங்கள் முழுமையாக காட்சியில் பிடித்தது படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.மூடி மேல் இருக்கும் கூடுதல் ப்ளாஷ் ஒளி இந்த படத்திற்கு பொருந்துகிறது.
2.) நல்ல படம்!! சற்றே மேலிருந்து, கீழிருந்து என்று கோணம் மாற்றி எடுக்க முயற்சித்திருக்கலாம்.நிழலை வெட்டாமல் விட்டிருக்கலாம்.

மோகன்குமார்
1.)சாதாரணமாக தோன்றும் படம்,ஏதாவது சிறப்பம்சம் இருந்தால் பல படங்கள் இருக்கும் ஒரு போட்டியில் உங்கள் படம் தனித்து நிற்கும்.
2.)மேகங்களுடன் எடுத்திருப்பதால் படத்தில் சுவாரஸ்யம் கூடுகிறது!! ஆனாலும் சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டியிருந்தால் படம் பல மடங்கு அழகாகி இருக்கும்.கருப்பு வெள்ளை ஆக்கியதால் பார்க்க சந்திரன் போல படம் உள்ளது.சூரியனின் சக்தி மற்றும் வீரியத்தை காட்ட வேண்டும் என்றால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
உங்கள் நிழவு படம் மற்றும் காஸ் அடுப்பு படம் அருமை

இ.கா.வள்ளி
1.)தண்ணிரில் ஒளியின் பிரதிபளிப்பு மிக சுரீரென்று பளிச்சிடுவதால் அதனால் படம் அடிக்கிறார்போல் ஆகிவிடுகிறது.தண்ணீரின் இருண்ட வண்ணம் இலையின் கருப்பு வண்ணத்தோடு சேர்ந்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமில்லாமல் ஆக்கி விடுகின்றன.
2.)மிக் சாதாரணமான கண்ணொட்டம்.நிழல் சற்றே செட்டுப்பட்டு இருந்தாலும் அதை முழுமையாக படம் பிடிக்க முயற்சித்திருப்பது நல்லது.பின்னால் இருக்கும் நிழல் பகுதி படத்தை ஒரு வித அரை குறை ஒளி அமைப்போடு படத்தின் தரத்தை குறைத்து விடுகிறது.

கோமா
1.)வித்தியாசமான சிந்தனை,சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டி இருக்கலாம்!! மாற்றும் கருப்பொருள் நட்ட நடுவில் இருப்பதற்கு பதிலாக சற்றே தள்ளி இருந்தால் காட்சியமைப்பு மேம்படும்.
2.)நல்ல கண்ணோட்டம்! வானத்தின் நீலம் இன்னும் கொஞ்சம் நீலமாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும்! பிற்தயாரிப்பு செய்து அதை சரி செய்ய முயற்சித்திருக்கலாம்.வட்டத்தை முழுமையாக எடுத்திருக்கலாம்,சுற்றி எப்படி இருந்தது என்று தெரியவில்லை,அதனால் எடுக்க முடியாத படி வட்டத்தை சுற்றி ஏதாவது இருந்திருக்கலாம் என்று புரிகிறது.

டி.ஜே
1.)படத்துல வட்டத்தை பிரதானப்படுத்தி எதுவும் இல்லாதது ஏமாற்றம்.
2.)உங்கள் கலைக்கண்ணோட்டம் நீங்கள் போகும் இடம் எல்லாம் உங்களை பின் தொடர்ந்து வருவது கண்டு மகிழ்ச்சி!படத்தில் அவ்வலவாக தெளிவில்லை.கீழ்ப்பகுதி பிற்தயாரிப்பு மூலம் மங்கலாக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.Toliet paper மேல் கவனம் நம் கவனம் செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியிருந்தால் ,flush tank மேலுள்ள குழிழ் அந்த கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது.

நக்கீரன்
1.)மிக நல்ல Framing! படல் சற்றே grainy ஆகிவிட்டது படத்தின் தரத்தை குறைத்து விடுகிறது,ஆனால் நல்ல கலைத்துவம்,கண்ணோட்டம்,காட்சியமைப்பு நிறம்பிய படம்!
2.)திரும்பவும் நல்ல framing!ஆனால் முதல் படம் அளவுக்கு இல்லை. மரத்தை விட்டு சூரியனை சற்றே தள்ளி பொருத்தியிருக்கலாம்!

குட்டிபாலு
1.)மிக நல்ல ஒளியமைப்பு ,காட்சியமைப்பு மற்றும் கண்ணோட்டம்!!Neat
2.) முதல் படம் அளவுக்கு mind blowing-ஆக இல்லாவிட்டாலும் திரும்பவும் நல்ல காட்சியமைப்பு!

குசும்பன்
1.) நல்ல தெளிவான படம்.வெள்ளைக்கரு முழுமையாக படத்தில் பிடித்திருப்பது நன்று. மிக அதிகமாகவும் இல்லாமல் நெருக்கமாகவும் இல்லாமல் சரியான அளவு காட்சியமைப்பு!!Neat crop!
2.)படம் ரொம்ப அகலமாகி போய் விட்டது போன்ற உணர்வு.Background-ஐ விட்டு foreground தனித்து நிற்காததால் படத்தின் தெளிவு குறைந்து கருப்பொருளின் மேல் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

ஆதி
1.) படம் சற்றே கோணல்,பிக்காஸாவில் straighten செய்திருக்கலாம். dials-ஐ சுற்றி முழுமையாக இருட்டாகவும் இல்லாமல் இருப்பது படத்தில் ஏதோ உருத்துவது போன்ற மனநிலையை கொடுத்து விடுகிறது,மற்றபடி காட்சியமைப்பில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லாதது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.
2.)மிக சாதாரணமாக தோன்றும் படம்! படத்தில் பார்வையாளரை பெரிதாக ஈர்ப்பது போன்று எதுவும் இல்லாதது ஏமாற்றம்.

சஞ்சய்
1.)படம் ரொம்பவே நீட்டமாகி போய்விட்டது,படத்தில் தெளிவும் குறைவு!!சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டியிருக்கலாம்.
2.)படத்தில் தெளிவில்லை.மேற்புறம் பிற்தயாரிப்பு செய்து இருட்டாக்கியிருப்பது போல இருக்கிறது.அது படத்திற்கு பொருந்தாதது போன்ற உணர்வு,மற்றும் அதனால் படத்தில் வட்டம் பளிச்சிடவில்லை என்றே தோன்றுகிறது.

நந்து f/o நிலா
1.)சாதாரண வளையலையும் அழகான கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறீர்கள்.நல்ல காட்சியமைப்பு!!பின்னணி மற்றும் படத்தின் தெளிவில் குறைபாடு.
2.) நல்ல ஒளியமைப்பு,காட்சியமைப்பு மற்றும் கண்ணோட்டம்.

ஜேகே
1.) ஒளி மங்கிப்போனாற்போல் இருப்பது படத்துக்கு மைனஸ். உங்கள் கருப்பொருளின் பின்னால் ஏதேதோ சாமான்கள் இருப்பது திசை திருப்புவதாக இருக்கின்றன.கருப்பொருளும் அவ்வளவாக சுவாரஸ்யமூட்டுவதாக இல்லை! சற்றே குனிந்து எடுத்திருந்தால் காட்சியமைப்பு மேம்பட்டிருக்கும்.கருப்பொருளை நட்ட நடுவில் வைக்காமல் சற்றே தள்ளி அமையுமாறு காட்சியமைத்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும்.
2.)சிடியை துடைத்து சற்றே பளபளப்பாக்கியிருக்கலாம்.மிக சாதாரணமான காட்சியமைப்பு,சற்றே வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கலாம்.ப்ளாஷ் ஒளி படத்தை ஜீவனில்லாமல் ஆக்கி விடுகிறது.

ஷிவ்
1.)நல்ல கண்ணோட்டம். சற்றே சாதாரணமான காட்சியமைப்பு. கொஞ்சம் பிற்தயாரிப்பு செய்து contrast அதிகமாக்கியிருக்கலாம்.



==========



இளவஞ்சி

-----------

இம்சை,



உங்களோட இது ஒரு இனிய இம்சைங்க... வட்டம் போடச்சொன்னா பூகோள உருண்டை கணக்கா பாப்பாவோட மொட்டய போட்டிருக்கீங்க! வீட்டுக்குள்ளாக இல்லாம வெளில வைச்சி பேக்கிரவுண்டு ப்ளைனா க்ளிக்கியிருந்தீங்கன்னா சிவாஜி கணக்கா தூக்கியிருக்கும். போட்டிக்கெல்லாம் எதுக்கு? பாப்பா முன்மொட்டைல இந்த மொட்டை மாமாவோட ஒரு உம்மா! :)



பூக்களும் பூக்களனும் அருமையான சப்ஜெக்ட்டுதான் . ஆனால் இந்த இரண்டின் சிறப்புகள் எதுவுமே சிறப்பாக வெளிப்படவில்லை.

பார்க்கற பொருளை பார்க்கறமாதிரியே எடுத்தா சிறப்பா வருமா? அடுத்தமுறை ஆங்கிளை மாத்தி யோசிங்கப்பு.



ரமேஷ்,



அருமையா வந்திருக்கு. சிகப்புக்குள்ள ஆரஞ்சுக்குள்ள மஞ்சளுக்குள்ள வெள்ளை வட்டங்கள்!!! வானம் முழுதும் கருமையடைந்திருப்பது ஒரு குறையோ? சூரியனுக்கே நேருக்கு நேர் போட்டிருக்கீங்க! UV ஃபில்டர் போட்டிங்களா? இல்லாமல் இப்படி அடிக்கடி எடுத்தா சென்சாரு பொத்துக்கும்.



இதுவும் அருமை. கருப்பு வெள்ளை படம் தானே? சிங்கத்தலைய ஏனுங்க மறைச்சு எடுத்தீங்க?



ஷோனா,



முதல் படத்தில் சொல்வதற்கு எதுவும் இல்லை. வட்டம் போட்டிக்குள் வரக்கூடுமா?!



இரண்டாவது அருமை. வட்டம் போட்டிக்கென ஃபோக்கஸை மீனின் கண் மீது வைத்திருந்தீர்கள் எனில் இன்னும் அருமையாக வந்திருக்கும்.



கேசவன்,



அருமையான மனம் மயக்கும் சாலை. அவிங்கவிங்க அவிங்கவிங்க ஆளைக்கூட்டிக்கிட்டு கையக் கோர்த்துக்கிட்டு தோளோடு தோள் உரசிக்கிட்டு நடந்துக்கினே இருக்கலாம் போல அருமையான இடம். அதுவும் நடந்து ஓஞ்சதும் வளைவுல ஒரு பெஞ்ச்சு போட்டு மசாலா பொரி ஒரே ஒரு பாக்கெட்டு வாங்கிட்டு மாறி மாறி துன்னுக்கிட்டே இருக்க அட்டகாசமா இடம்! ஆனா வட்டம் எங்கங்க?



சின்ன அம்மிணி,



பூக்கள், பூக்கள், பூக்கள்!! நின்ன எடத்துல இருந்து இல்லாம இடம் மாறி பார்த்திருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும் தானே! வட்ட வட்ட பூக்களை தூரத்துல இருந்து நெட்டுக் குத்தலா பாத்திருந்தா அட்டகாசமா வந்திருக்கும். அதுக்காக ஹெலிகாப்டரு வைச்சாடா படம் புடிக்க முடியும்னு அடிக்க வராதீக! :)



ரெண்டாவது படத்துல வலது ஓரம் மேல்நாட்டு அம்மணீயை பாதியாக வெட்டியதை வண்மையாக கண்டிக்கிறேன்! ஹிஹி....


மஞ்சு,



படம் எடுத்த ஆங்கிள்ல மிஸ் பண்ணிட்டீங்க... படத்தை நேர் செய்யவும் மறந்துட்டீங்க.



ரெண்டாவது படம் இருட்டுல எடுத்திருந்தாலும் பளிச்சுன்னு இருக்கு. வேண்டாத பகுதிகளை நீக்கி க்ராப் செய்து பலூனை வலப்பக்கம் வைச்சிருந்தீங்கன்னா நல்லா வந்திருக்கும்



சூரியாள்,



முட்டை முக்கண்ணன் திகிலைக்கெளப்பராரு. படத்தை நேர் செய்ய மறந்துட்டீங்களா?



ரெண்டாவது படம் அருமை. கிராபிக்ஸா?



உண்மை,



லண்டன் கண்ணை வலப்பக்கமா வைத்திருந்தீர்கள் என்றால் கவனம் முழுதும் அதன் மீதானதாக இருந்திருக்கும். இரவில் எடுத்ததுதான் என்றாலும் இன்னும் ஷார்ப்பாக எடுத்திருக்கலாமோ? ISO, EV எவ்வளவு வைச்சீங்க?



அருமையான வடிவமைப்பு. கண்களின் நீல வண்ண பிரதிபலிப்பும் கண்மணிப்பாப்பாவின் மேற்பரப்பின் பிரதிபலிப்பு இல்லாமையும் இயல்பானதொரு படமில்லையோ என சந்தேகப்படவைக்கிறது.



துளசியக்கா,

படம் இரண்டுமே வித்தியாசமான கோணம்தான். இரண்டாவது படத்துக்கு ஏன் ப்ளாஷ் போட்டீங்க? கூடைக்குள்ளும் சேர் மேலயும் இருந்த பூனைக்குட்டிங்களை என்னா செஞ்சீங்க? அடுத்தமுறை தேதி காட்டற ஆப்ஷனை தூக்கிருங்க.



நியோ,



மஞ்சள் நிறம் நல்லா வந்திருக்கு. பெரிய படத்துல இருந்து க்ராப் செஞ்சிருப்பீங்க போல. ஆதவனை கொஞ்சம் ஓரமா நகர்த்தியிருக்கலாமோ?



இருபக்க சாலைகளும் முழுமையாக வந்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கும். "படமெடுக்க இதுக்கும் மேல பின்னாடி போயிருந்தா பனிச்சரிவுல உருண்டு நானே முழுமையா கிடைக்காம போயிருப்பேன் டா என் வென்று!" ன்னுதானே என்னை திட்டறீங்க?! :)



லக்ஷ்மணராஜா,



டெக்னிக்கலா சில குறைகள் சொல்ல முடியும்னாலும் பார்த்தவுடன் மனசுல சிலீர்னு ஒரு சாரலடிக்க வைக்கும் படம். அருமை.



தமிழ் பிரியன்,



முதல் படம் ஒரு படம். அவ்வளவே!



இரண்டாவது படத்தில்தான் உங்க "பிக்காசோ"த்தனம் தெரியுது. இன்னும் கொஞ்சம் சிரத்தையா எடுத்திருந்திக்கலாம். அதுக்குள்ளார க்வாட்டரை ஒடைச்சு ஒரு டம்ளருல ஊத்தற அவசரமா? :)



முரளி,



Focus, my dear Murali Focus!! ( செல்போன்ல அம்புட்டுத்தான் போகஸ் செய்ய முடியுமா?! )



அழகிய தமிழ் கடவுள்,



முதல் படம் பப்படம். நல்லா இல்லைன்னு சொன்னா என்னை திட்டாதீங்க. ஒரு சிறப்பான பொருளை இருக்கறது இருக்கற மாதிரியே எடுக்கறது அழகுதான். ஆனால், ஒரு சாதாரண பொருளை கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமான கோணத்துல எடுத்தாக்கூட அழகாகிடும்.



இரண்டாவது படம் அருமையான இடம். எங்கேங்க இருக்காரு இந்த சிவலிங்கம்? இரண்டாவது படத்தை விட ஐந்தாவது படம் முழுமையாக இருக்கு.



கைலாஷி,



அண்ணே, நல்லா படமெடுத்தீங்களே... அதைச்சரியா வெட்டி போட்டிருக்கலாம் தானே? முதல்பட விநாயகரு தங்கமா? இருங்க IT Dept காதுல போட்டுவைக்கறேன்!



சூர்யா,



நல்லதொரு சூரிய அஸ்தம படம். ஆனால் வட்டத்திற்கு பதிலாக புள்ளிதான் இருக்கு. என்னாது புள்ளியும் வட்டம்தானா? அதுசரி. :)



இரண்டாவது பூக்கோலம் ஜீவனுடன் இருந்தாலும் ஈவனாக இல்லை.



கார்த்திகேயன் குருசாமி,



அட்டகாசமா இருக்குங்க. வட்டமும் விளிம்பில் சிதறும் ஒளித்துகள்களும் நல்லா விழுந்திருக்கு, முன்னாடி ஒரு ஒன்னு போட்டிருந்தீங்கன்னா அந்த மார்க்கு உங்களுக்கே! :)



நானானி,



முதல் படத்தின் படமெடுப்பொருள் ( அதாங்க... சப்ஜெக்ட்டு ) அருமை. தேதிய யாருங்க கேட்டா?



ரிஷான் ஷெரீஃப்,



மனதை மயக்கும் படம். இருந்தாலும் வட்டப்போட்டிக்கு உதவுமான்னு தெரியலை.



இரண்டாவது படம் சுமார்தான்.



PeeVee,



வட்டங்கள், வண்ணங்கள், வெளிச்சம், நிழல், இயல்பானதொரு ப்ரேம் என அனைத்தும் அருமை. பாலிமகேந்திராவின் பாடலுக்கு நடுவில் ஸ்டில் போட்டாப்புல இருக்கு. வாழ்க்கையைச் சொல்லும் வட்டங்கள்!!



வீரசுந்தர்,



நல்ல பூ தான்! வட்டப்போட்டிக்கு இன்னும் அழுத்தமான வட்டம் கிடைக்கலையா?



யோவ் நாதஸ்,



உமக்கெல்லாம் பரிசு வாங்கி போரடிக்கலையா?! :)



முதல் படம் நுட்பரீதியாக அருமை. இருந்தாலும் செயற்கைமீது செயற்கையாக அமர்ந்திருக்கும் நீர்த்துளிகள் மனசுக்கு ஒருவித வெறுமையையே தருகிறது.



இரண்டாவது படத்தில் பிரதிபளிப்பு தெளிவாக விழும்படி எடுத்திருந்தால் அடிபொளியாக வந்திருக்கும். பரவலான பல நீர்த்துளிகளில் கவனத்தை எங்கே வைக்க?! :)

********************************************

வேலை பளு காரணமாக இளவஞ்சி அண்ணாச்சியால் இதற்கு மேல் விமர்சனங்கள் எழுத நேரம் கிடைக்கவில்லை,அதனால் அவர் எழுதிய வரை இந்த பதிவில்! :-)

23 comments:

  1. very detailed :)


    kudos for your hard work!!

    ReplyDelete
  2. மார்ச் மாத போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  3. இரண்டு நடுவர்களின் விமர்சனத்தையும் போட்டியாளரின் பெயருக்கு கீழே ஒன்றாகத் தொகுத்து இருக்கலாம்.
    சிவீஆரின் 120 விமர்சனங்களைப் படித்துவிட்டு, மீண்டும் இளவஞ்சியின் விமர்சனங்களை முதலில் இருந்து படிப்பது மிகவும் அயர்ச்சியளித்தது எனக்கு.

    ReplyDelete
  4. நன்றி, போட்டியின் முடிவைவிட இந்த விமர்சனம், எல்லோருக்கும் உபோயோகமா இருக்கும்.

    ReplyDelete
  5. அப்ப...நான் பர்ஸ்ட் ரவுண்டுல பெஃயிலாய்ட்டேனா...

    இருக்கட்டும் அடுத்தவாட்டி கலந்து கட்டி அடிக்கறேன்...

    குறைகளை சுட்டியதற்கு...நெம்ப டேங்ஸ் பாஸ்...

    ReplyDelete
  6. அடப்பாவி நடுவர்காள்!!!! :-)

    நீங்கள்ளாம் மனுசனே இல்லைய்யா. தலைக்குப் பின்னால ஒளி 'வட்டம்' சுத்தற (ஆ)சாமிகள்!

    பாராட்டுகள்.

    ReplyDelete
  7. மிகப்பெரிய வேலை இது. மனம் திறந்த பாராட்டுக்கள்.

    என்னை போண்ற புதிதாக கேமரா பழகுபவர்களுக்கு உங்கள் இரண்டு வரி கமெண்ட் மிகப்பெரிய டானிக்.

    தொடருங்கள் CVR.

    அப்படியே இளவஞ்சி சாரிடம் பாக்கி கமெண்டையும் விடாமல் வாங்குங்கள். :P

    என் பெயர் வருவதற்குள் எஸ்ஸாகிவிட்டார் :(

    ReplyDelete
  8. விமர்சனத்திற்கு நன்றி... அடுத்த முறை தவறுகளை நீக்க முயற்சிக்கிறேன்... ;)

    ReplyDelete
  9. சூப்பர்..
    எப்படி தான் இம்புட்டு பொறுமையா எல்லா போட்டோவுக்கும் விமர்சனம் எழுதினீங்களோ..??
    நடுவர்களை நினைச்சாலே பாவமா தான் இருக்கு..

    ReplyDelete
  10. நடுவர்களே,

    நடுநிலையான விமரிசனத்துக்கு நன்றி.

    அடுத்தமுறை போட்டிக்கு எடுக்கும்போது மறக்காம தேதி ஆப்ஷனை எடுத்துடணும். லேப்டாப்லே முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டேன்:-)

    எல்லாம் பார்ட் ஆஃப் லேர்னிங்தான்.

    அசாத்தியப் பொறுமை உங்க ரெண்டு பேருக்கும். அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  11. an& சொன்னதை வழிமொழிகிறேன்.

    அப்படியே முடிஞ்சா ஒரு அந்தந்த படங்களுக்கு ஒரு link போட்டேள்னா நன்னா இருக்கும். :)

    ஆபீஸ்ல ஆணி இல்லன்னா, பேஷா செய்ய்லாமே? :)

    hats off guys!

    ReplyDelete
  12. படங்களுக்கு நிகரான விமர்சனப் பார்வை.எவ்வளவு ஆழ்ந்து ஆராய்கிறீர்கள் என்பது புரிகிறது.தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. நடுவர்களின் கருத்துக்களை, அதற்கான படங்களுடன் இணைத்துப் படிக்கும்போதுதான் தெரிந்தது, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல், எடுத்த படத்தை அலசவேண்டும் என்பது.

    ஒன்று மட்டும் உறுதி; எதிலும் நல்லதை மட்டுமே பார்க்கும் 'வெகுளி' மனம், போட்டிக்கு உதவாது என்று. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

    நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  14. hooo. my God. excellent work.
    Ilavanji, the second pic is a real one :), if you drill a bit inside, you can also see my hands with camera on the pupil. I must have avoided this. :)

    ~Truth

    ReplyDelete
  15. "அழகிய தமிழ்க்கடவுள்
    1.)வலது புறம் குடிசை,இடது புறம் ஒரு ஆள் என்று படத்தை கவனம் சிதறுகிறது.தேர்ந்தெடுத்த கருப்பொருளும் அவ்வளவாக சுவாரஸ்யம் கூட்ட வில்லை.
    2.)நல்ல composition,ஆனால் படம் கொஞ்சம் நெருக்கமாகி விட்டது போன்ற உணர்வு.இதை விட ஐந்தாவது படம் பார்க்க நன்றாக உள்ளது."

    1.குடிசையைக் கவனிக்கத் தவறிவிட்டேன்... ஆளைத் தவிர்க்க இயலவில்லை.
    2.உண்மையில் 5ஆம் படத்தை Microsoft Office Picture Manager-இல் Crap செய்ததுதான் 2ஆம் படம்.



    "அழகிய தமிழ் கடவுள்,

    முதல் படம் பப்படம். நல்லா இல்லைன்னு சொன்னா என்னை திட்டாதீங்க. ஒரு சிறப்பான பொருளை இருக்கறது இருக்கற மாதிரியே எடுக்கறது அழகுதான். ஆனால், ஒரு சாதாரண பொருளை கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமான கோணத்துல எடுத்தாக்கூட அழகாகிடும்.

    இரண்டாவது படம் அருமையான இடம். எங்கேங்க இருக்காரு இந்த சிவலிங்கம்? இரண்டாவது படத்தை விட ஐந்தாவது படம் முழுமையாக இருக்கு."

    1.நான் விமர்சனங்களை வரவேற்கின்றேன். ஏனோ தானோ எனப் படமெடுத்துக்கொண்டிருந்தேன் . நேரம் கிடைக்கும் போது உங்கள் பாடங்களைப் படித்து என்னை மேம்படுத்திக் கொள்கின்றேன்.

    2.ஜலகம்பாறை ஏலகிரியின் அருகில் உள்ளது. இங்கு லிங்கம் போல் உள்ளது அழகிய தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயம். நான் நண்பர் ஒருவரின் Camera- வில் நல்ல கோணத்திற்காக மலை விளிம்பிற்குச்சென்று நண்பர்கள் திட்டத் திட்ட எடுத்த படம்.

    மேலதிக விவரங்களுக்கு : http://wikitravel.org/en/Yelagiri

    ReplyDelete
  16. இந்த விமர்சனங்களை படிக்கும் போது வெற்றி பெற்ற களிப்பினை அடைந்தேன்.

    மிக்க நன்றி நடுவர்களுக்கு!!!!!

    அடுத்து என்ன தலைப்பு????

    ReplyDelete
  17. hi,

    even i had sent my photos for the contest... no mention here? I wud be glad if you can let me know the good n bad of my skills...or may be where i shud begin with.

    thanks.

    ReplyDelete
  18. ஒவ்வொரு முறையும் படங்களின் தரம் எப்படி உயர்கிறதோ அதை விட நடுவர்களின் ஈடுபாடும் உழைப்பும் உயர்ந்துகிட்டே போகுது! இதுக்கெல்லாம் நாங்க என்ன கைமாறு செய்ய போறோம்...இன்னும் நல்ல படங்களை பிடித்து உங்களுக்கு மேலும் கஷ்டத்த கொடுக்க முயற்சிப்போம்;)

    ReplyDelete
  19. வாழ்த்தளித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி!

    @இமான்
    உங்கள் படங்களுக்கான விமர்சனமும் பதிவில் இருக்கிறதே !
    கவனிக்கலையா?? ;)

    //இமான்
    1.)முந்தைய வாசகருக்கு சொன்னது போல படம் ரொம்ப plain,படத்தில் ஒரு reference point இருந்தால் படத்தின் சிறப்பு கூடி விடும்.
    2.)படம் கொஞ்ச்ச்ச்ச்ச்ச்சம் ஷேக்,அதனால் தெளிவில் குறைவு. சுற்றி இன்னும் கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது,சக்கரத்தை கொஞ்சம் ஓரம் கட்டுவது போல இடது புறம் வெற்றிடம் இருந்தால் காம்போசிஷன் நன்றாக வந்திருக்கும்.சக்கரத்தின் அச்சாணி rule of thirds -இன் படி அமையும் படி படத்தை crop செய்திருக்கலாம்.வித்தியசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.///

    ReplyDelete
  20. நன்றி,
    போட்டியில் பரிசுகிடைக்கிறதோ இல்லையோ விமர்சனம் கிடைக்கிறது மனசுக்கு சந்தோசமா இருக்கு. அடுத்த போட்டியில கலந்துக்க ஆர்வமும் தைரியமும் வருது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  21. முதல் படம் மயிலை கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்து மீன்கள் பொரிக்காகப் பறந்து வந்த காட்சி
    2வ்து படம்
    சென்னை பறக்கும் ரயில் பெருங்குடி நிலையத்தில் சுட்டது.
    இரண்டுமே போட்டி அறிவிப்புக்கு முன்னே எடுக்கப் பட்டது .அடுத்த போட்டியின் போது நீங்கள் தந்த கருத்துக்களை மனதில் கொண்டு எடுக்கிறேன்
    நன்றி
    வித்தியாசமான சிந்தனை ,நல்ல கண்ணோட்டம் ,போன்ற வரிகள் முதல் பரிசு கிடைத்த சந்தோஷத்தைத் தருகிறது.நன்றி

    ReplyDelete
  22. hi,

    thank u. i dint notice. cos,u have written my name wrongly, iam Amaan. neways, thanks for the comments. i have to read a lot n appear for t next one, well prepared:), thanks again.

    ReplyDelete
  23. @Amaan

    Oops!!
    My mistake!!
    really really sorry!!

    Got the name corrected in the post now!
    All the very best for the coming contests!! :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff