Monday, July 2, 2007

கண்களால் கைது செய்!

12 comments:
 


சென்றவாரம்எனது நண்பர் ரமேஷ் அவர்கள் தனது புதிய டீ தயாரிப்பு நிறுவனத்தின் புதிய இணையதளம் ஒன்றை நான் கலைக்கண்ணோட்டத்தோடு ரி டிசைன் செய்து தர இயலுமா என்று கேட்டார். மிகவும் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு என்று தெரிந்ததால் "சரி 2 நாட்களில் வருகிறேன்" என்று சொன்னேன். அவரின் அலுவலகம் அடைந்த போது அவர் சவுதி அரேபியா சென்றுள்ளதாகச் சொன்னார்கள். சரி திரும்பலாம் என்றுஎழுந்த போது அந்த பேக்ரவுண்ட் என் கண்களைச் சுண்டியிழுத்தது! உடனே ஒரு கப் டீ மற்றும் சில பாக்கெட்டுகளை அவ்விடத்திலே வைக்கச்சொன்னேன்.என்னிடமோ எப்பொழுதும் ஒரு டிஜிட்டல் காமிரா மற்றும் ட்ரைபோடு காரின் பின் சீட்டில் கிடக்கும். (ஆனால் ஃபிளாஸ் மட்டும் நஹீ! ) . ஒரு 15 நிமிடத்தில்எடுத்து முடித்த புகைப்படங்கள்! இயற்கை ஒளியில் சிறிது விளையாடி...எந்த முன் திட்டமிடுதலும் இன்றி !



அவர்கள்ஏற்கனவே சென்னையிலிருந்து வந்த குழு மூலம் விளம்பரப் படம்எடுத்து முடித்திருந்தாலும் என் படங்கள் அவரைக் கவர்ந்ததாக வெளிநாட்டுப் பயணம் முடிந்து வந்ததும் செல் பேசினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது! இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல புகைப்படம்எடுக்க மிகவும் அத்தியாவசியமானது நமது கலைக்கண் என்பதே!
"Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"என்றுஎன் புகைப்படக் கலை குரு அடிக்கடி சொல்வார்!

எனவே நாளை முதல் உங்கள் கண்களையும் சிறிது கூர்தீட்டிக்கொள்ளுங்கள்!

அன்புடன்
ஓசை செல்லா

பிகு:சரி ஒரு சிறிய கேள்வி. மேலே நீங்கள் பார்த்த படங்களின் பின்புலம் (Back Graound) எதனால் செய்யப்பட்டது!




இது அவரின் அலுவலகப் படிக்கட்டுகள்.

animated images

12 comments:

  1. it is a reflection from the table .. and the image is from window blinds? am i right ?

    ReplyDelete
  2. படம் 1 - ஓகே
    படம் 2 - படத்தில தெரியற reflections in the cup and also in the bottle - ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆனா, அந்த angle சரியா? தலைய திருப்பி படம் பார்க்க வைக்கலாமா?
    படம் 3 - ரொம்ப நல்ல abstract படம். பிடிச்சிது.

    அந்த background material என்னன்னு தெரியலை..

    ReplyDelete
  3. புகைப்படங்க மிக நேர்த்தியாகவே வந்திருக்கின்றன.

    //இயற்கை ஒளியில் சிறிது விளையாடி...//

    அந்த விளையாட்டைக் கொஞ்சம் விளக்குங்களேன். இந்த பதிவில் நாங்கள் எதிர்பார்ப்பதும் அதுதானே!

    ReplyDelete
  4. what is the salary level for search engine optimiser in chennai or bangalore. Chella sir, you may help me for this.

    ReplyDelete
  5. வணக்கம் ஓசை அண்ணா.. முதலில் உங்களுக்கு நன்றி!! நான் ஒரு கத்துகுட்டி press photographer. என் வலைப்பக்கத்திற்கு வந்து என் போட்டோஸ் பற்றிய உங்கள் கருத்துகளை சொன்னால் என் புகைப்பட அறிவை மேம்படுத்த உதவியாக இருக்கும்..
    http://vincyclicks.blogspot.com/

    ReplyDelete
  6. செல்லா வேறு வேலைகளில் இருப்பதாகவும் இன்று மாலைக்குள் பதிலளிப்பதாகவும் கூறினார்

    ReplyDelete
  7. **Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"**..சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கார்..


    Backroud
    its a clean table ( probaly balck or deep brown)..placed a litte farther from the vertical blinds of a wall length ( 3/4 lenth) window... சரியா

    சில படங்கள் full screen லே பார்த்தா தான் அதோட details தெரியுது.. அதை webpage ல் போடும்போது resize பண்ணவேண்டிய கட்டாயம்.. அப்போ details ஐ focus பண்ண zoom பண்ணி படம் எடுத்து போட்டா.. சுமாரா தானே இருக்கு... அது ஏன்
    the picture gets pixcellated when zoomed-cut-crop with photoshop ... or when the detailes are focused with the zoom (optical zoom) of the digital camera

    ReplyDelete
  8. எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்... அது கணிணி அலுவலங்களில் பயன்படுத்தப்படும் சன்னல் திரை... கயிரு மூலமாக இயக்கப்படும், இலை, இலையாக உள்ள ஒரு திரை.. அதன் இடைவெளி வழியே வரும் சூரிய ஒளி உங்கள் புகைப்படத்தில் அழகாக வருகிறது..

    சரியா...?

    ReplyDelete
  9. //
    **Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"**..சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கார்..
    //

    சரி தான் தீபா. அது தான் சத்தியமும் சாத்தியமும்.

    Backroud
    its a clean table ( probaly balck or deep brown)..placed a litte farther from the vertical blinds of a wall length ( 3/4 lenth) window... சரியா

    சில படங்கள் full screen லே பார்த்தா தான் அதோட details தெரியுது.. அதை webpage ல் போடும்போது resize பண்ணவேண்டிய கட்டாயம்.. அப்போ details ஐ focus பண்ண zoom பண்ணி படம் எடுத்து போட்டா.. சுமாரா தானே இருக்கு... அது ஏன்
    the picture gets pixcellated when zoomed-cut-crop with photoshop ... or when the detailes are focused with the zoom (optical zoom) of the digital camera


    மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி :)

    அன்புடன்
    ஜீவ்ஸ்

    ReplyDelete
  10. // photo "pazani" said...

    it is a reflection from the table .. and the image is from window blinds? am i right ? //

    YOU ARE RIGHT!

    // தருமி said...

    படம் 1 - ஓகே
    படம் 2 - படத்தில தெரியற reflections in the cup and also in the bottle - ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆனா, அந்த angle சரியா? தலைய திருப்பி படம் பார்க்க வைக்கலாமா?
    படம் 3 - ரொம்ப நல்ல abstract படம். பிடிச்சிது.

    அந்த background material என்னன்னு தெரியலை..//

    என் ஆசிரியையின் ஆசிரியரே ( grand teacher!) நன்றி! அந்த ஆங்கிளுக்கு ரஸ்யன் ஆங்கில் என்று பெயர். இயக்குனர் ஸ்ரீதர் பல இடங்களில் உபயோகப்படுத்திருப்பார் காட்சியின் தாக்கத்தை அதிகப்படுத்த!

    // அருள் குமார் said...

    புகைப்படங்க மிக நேர்த்தியாகவே வந்திருக்கின்றன.

    //இயற்கை ஒளியில் சிறிது விளையாடி...//

    அந்த விளையாட்டைக் கொஞ்சம் விளக்குங்களேன். இந்த பதிவில் நாங்கள் எதிர்பார்ப்பதும் அதுதானே!//
    இயற்க்கை ஒளியை அப்படியே ப்யன்படுத்தினால் நன்றாக இருக்காது. வன்/மென் ஒளிகள் பற்றி தனிப்பதிவு போடுகிறேன்! அப்பொழுது விரிவாகப் பார்ப்போம்!

    // thanjavurkaran said...

    what is the salary level for search engine optimiser in chennai or bangalore. Chella sir, you may help me for this.//
    எனக்குத் தெரியாது! தங்கள் ஈ மெயில் கொடுக்கவும் கேட்டு சொல்கிறேன்

    //சிநேகிதன்.. said...

    வணக்கம் ஓசை அண்ணா.. முதலில் உங்களுக்கு நன்றி!! நான் ஒரு கத்துகுட்டி press photographer. என் வலைப்பக்கத்திற்கு வந்து என் போட்டோஸ் பற்றிய உங்கள் கருத்துகளை சொன்னால் என் புகைப்பட அறிவை மேம்படுத்த உதவியாக இருக்கும்..
    http://vincyclicks.blogspot.com/ //
    நிச்சயம். பார்த்துவிட்டு சொல்கிறேனே!

    நிழற்படம் said...

    செல்லா வேறு வேலைகளில் இருப்பதாகவும் இன்று மாலைக்குள் பதிலளிப்பதாகவும் கூறினார்

    // Deepa said...

    **Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"**..சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கார்..


    Backroud
    its a clean table ( probaly balck or deep brown)..placed a litte farther from the vertical blinds of a wall length ( 3/4 lenth) window... சரியா

    சில படங்கள் full screen லே பார்த்தா தான் அதோட details தெரியுது.. அதை webpage ல் போடும்போது resize பண்ணவேண்டிய கட்டாயம்.. அப்போ details ஐ focus பண்ண zoom பண்ணி படம் எடுத்து போட்டா.. சுமாரா தானே இருக்கு... அது ஏன்
    the picture gets pixcellated when zoomed-cut-crop with photoshop ... or when the detailes are focused with the zoom (optical zoom) of the digital camera //
    ஆம்! நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் முடிந்த அளவு டிஜிட்டல் சூம் ஐ உபயோகிக்காமல் இருப்பதே நன்று... என்னைப்போல்! மேலும் எக்காரணத்தைக் கொண்டும் ப்டங்களை மென்பொருட்களான ஃபோட்டாசாப் போன்றவை உபயோகித்து சுருக்கலாம்... விரிவாக்கக் கூடாது. அப்படி செய்தால் படம் பிக்சல்லேட் ஆகத்தான் செய்யும். காரணம் என்ன என்பதை DPI / rastor/ vector images பற்றி நானோ, அய்யப்பன்/சர்வேசன் அவர்களோ பின்னொரு நாளில் விளக்குவோம். தொடர்ந்து படித்து வாருங்கள். தங்களின் நுணுக்கமான கேள்விக்கு நன்றி!

    // மோனா said...

    எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்... அது கணிணி அலுவலங்களில் பயன்படுத்தப்படும் சன்னல் திரை... கயிரு மூலமாக இயக்கப்படும், இலை, இலையாக உள்ள ஒரு திரை.. அதன் இடைவெளி வழியே வரும் சூரிய ஒளி உங்கள் புகைப்படத்தில் அழகாக வருகிறது..

    சரியா...?//

    மிகச் சரி தோழி...

    ReplyDelete
  11. இரண்டாவது படத்திலிருக்கும் அந்த டீ container-ன் clarity பிடித்திருக்கிறது. ஆர்வமுடன் படிக்கிறேன் உங்கள் புகைப்படகலையின் தொகுப்புகளை.

    //முடிந்த அளவு டிஜிட்டல் சூம் ஐ உபயோகிக்காமல் இருப்பதே நன்று... //

    எனக்கும் டிஜிட்டல் ஜூம் என்பது எதிரியாகத் தான் இருந்தது இந்த பதிவில் சொன்ன நிலவை கேமிராவுக்குள் அடக்கும் வரை...

    http://halwacity.com/blogs/?p=264

    டிஜிட்டல் ஜூம் இல்லாமல் என் கேமிராவின் திறனால் இதை பிடித்திருக்கவே முடியாது. இல்லையென்றால் நான் telephoto லென்ஸூக்கு செலவளித்திருக்க வேண்டும்.

    டிஜிட்டல் ஜூம் பற்றி யாராவது விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்/

    ReplyDelete
  12. விஜய் நீங்கள் டி'சூம் ஐ போட்டாசாப்பிலேயே செய்துகொள்ளலாம்! இரண்டும் கிட்டத்தட்ட ஒரே ரிசல்ட்தான்.. என் அனுபவத்தில்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff