Saturday, July 28, 2007

நேயர் விருப்பம்.. போர்ட்ராய்ட் டிப்ஸ்

3 comments:
 
போர்ட்ரைட் படத்திற்கான முக்கியத் தேவைகள் டிஜிடலில் எடுத்தாலும் ஃபிலிம் கேமராவில் எடுத்தாலும் பொதுவானவை.

போட்டி வேற வச்சுட்டம், போர்ட்ரைட் எப்படி எடுக்கறதுன்னு தெரியும் ஆனா அதை எப்படி சிறப்பா கொண்டுவர்ரதுன்னு தெரியலைங்கறவங்க மேலே (அட கீழங்க) படிக்கலாம்.


சின்னச் சின்னக் குறிப்புகள்.
போர்ட்ரைட் படம் எடுக்கும்போதும் நாம் கவனிக்கவேண்டிய காரணிகளில் சில

1 - வெளிச்சம் - ( ligthing)
2 - படத்தில் இடம்பெற இருக்கும் துணியின் அமைப்பு மற்றும் வண்ணங்கள்.
3 - படம் எடுக்கப்படும் பின்னனி. இவையெல்லாம் இருந்தாலும் மிக முக்கியமாக
4 - போட்டோவிற்கு ஒத்துழைக்கும் சப்ஜெக்ட் ( செந்தழல் என்னமோ சொல்ல வரமாதிரி தெரியுது :-? )


முடிந்த வரை சப்ஜெக்டோட eye-contact இருக்கிற மாதிரி முயற்சி செய்யுங்க. இல்லாட்டா போட்டோ வேறெங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும். கேட்சியா இருக்காது ( சில விதிவிலக்குகள் தவிர்த்து )

கேமராவை சப்ஜெட்டுக்கு மிக அருகில் கொண்டு சென்று போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நன்றாக வரவேண்டிய போட்டோ.. அலங்கோலமாகி அசிங்கமாக இருக்கும். முக்கியமாக வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ள கேமராக்களில் இது அவசியம். மிக அருகில் இருந்து ஜூம் செய்து எடுப்பதையும் தவிர்த்தல் நலம்.


இரவு நேரங்களில் ஃபிளாஷ் போட்டு எடுக்கும் போது slow sync flash ஆப்ஷனை வைத்து எடுங்கள். இல்லாவிட்டால் பிண்ணனி இருட்டடிப்பு செய்யப்படும்.

அதே போல ரெட் ஐ வராமல் இருக்க red eye ஃப்ளாஷ் ஆப்சன் வைத்து எடுக்கவும். இல்லாவிட்டால் கண்கள் சிவந்து மெட்ராஸ் ஐ வந்ததை விட மோசமாய் வேறு மாதிரி தெரியும்.



குழந்தைகளையும், கேமரா என்றால் கஞ்சி போட்டு விரைப்பாகும் மக்களையும,் சாதாரணமாக போட்டோ எடுக்க வேண்டும் என்றால் வெறுமனே ஃப்ளாஷை சில சமயம் அடித்து வைய்யுங்கள். அப்புறம் அவர்கள் சாதாரணமாவார்கள். அவர்கள் அசந்த நேரத்தில் நன்றாக இருக்கும் படத்தை எடுத்து வையுங்கள்.


" போட்டோ எடுக்கவேண்டும் .. சிரியுங்கள் " இந்த வாசகத்தை உங்கள் அகராதியில் இருந்து அழித்து விட்டு வாய்ப்புக்காக காத்திருந்து படம் எடுங்கள். படம் அற்புதமாக இருக்கும்.

அப்படியே உங்களுக்கு தெரிந்த டெக்னிக்ஸையும் இங்கே போட்டு வையுங்கள் .. மற்றவர்களுக்கு உதவும்.

கீழே உள்ள படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்

3 comments:

  1. you can avoid unwanted / distracting background.

    ReplyDelete
  2. என்னங்க செல்லா போட்டோ பதிவு வெறும் போட்டிக்கான பதிவா மாறிவருகிறதோ?

    ஒப்பாரி வெய்க்கிறேன்னு கோபப்படதீங்க, பழக்கமாயிடுச்சி.

    ReplyDelete
  3. ஒப்பாரி, இங்கு அனைத்து பதிவர்களும் கிடைக்கும் நேரத்தில் வேகத்தில் எழுதுகிறோம். மேலும் கால அவகாசம் தேவை இந்த ப்ராக்டிகளுக்கு... முதலில் நேச்சர், இப்பொழுது போர்ட்ராய்ட். ஒவ்வொரு போட்டியுமே பாடங்கள் தான். அடுத்தவர்களின் படத்தை வைத்து விளக்குவதை விட நமது படங்களை வைத்து விளக்க வேண்டும் மற்றும் need based learning என்ற முறைப்படியும் இங்கு பாடங்கள் படங்களாகப் பரிமாறப்படும். வேறு ஒன்றும் இல்லை. தங்களும் கலந்து கொள்கிறீர்களா?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff