Monday, July 23, 2007

PiT's - ஜூலைப் படங்கள் - சில கருத்துக்கள்

23 comments:
 
ஜூலைப் போட்டி அமக்களமா நடந்து முடிஞ்சிருக்கு. வந்திருந்த படங்களில் பெரும்பான்மை அமர்க்களமா இருக்கு. நான் உங்களுக்கு சொல்லித்தரத விட, நிங்க நெறைய எனக்கு சொல்லித் தரலாங்கர ரேஞ்சுல இருக்கு படங்கள்.

PiTன் (Photography-In-Tamil) ஆசிரியர் குழு பெருசாக நிறைய வாய்ப்பிருக்கு :)

CVRம் நானும் சேந்து, வந்திருந்த 52 பதிவர்களின் படங்களையும் அலசி, இளவஞ்சியின் சூரியகாந்தியை ஜூலைப் படமா தேர்ந்தெடுத்திருப்பதைப் இங்க பாத்திருப்பீங்க.
வாழ்த்துக்கள் இளவஞ்சி!
தீபா, ஜெயகாந்தன் உங்களுக்கும் வாழ்த்துக்கள்! அருமையான படங்கள்!

எல்லா படத்தையும் அலசி, குறை நிறைகளை சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சேன் இந்தப் பதிவை.
104 படங்கள் என்பதால், ஒரு லெவலுக்கு மேல, ஸ்ரத்தயூடன் யோசிக்க முடியல. மானிட்டர் முழுவதும் பூ பூவா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. இன்னும் ரெண்டு நாளுக்கு பூக்களைப் பார்க்காமல் இருக்க வேண்டி வரும்னு நெனைக்கறேன் :)

பரிசுக்கான படங்களை தேர்ந்தெடுக்கும்போது, நான் டாப்5, CVR டாப்5 தேர்ந்தெடுத்து, அதனுள் இருந்த படங்களைப் பற்றி விவாதித்து, கடைசியா இளவஞ்சியின் படம் ஜூலைப் படமா தேர்ந்தெடுத்தோம்.

உண்மையில், இதுல பெரிய டெக்னிகாலிடியெல்லாம் சேக்காம, பாத்தவுடன் 'நச்'னு இருக்கர படங்கள முதலில் தேர்ந்தெடுத்து, அதுக்கப்பரம், அதனுள் இருந்த சிறப்புகளை ஆராய்ந்து, கலந்தாலோசித்து எடுத்தோம்.
Very interesting deliberation for a very interesting collection of pictures :)

இயற்கை தலைப்புக்கு படம் அனுப்ப ஸ்கோப் ஜாஸ்தி.
Macro modeல் பூக்களும் வரும், landscape modelல் வனப் பகுதிகளும் வரும்.
300X300ல, என் கம்ப்யூட்டர் மானிடர்ல, பாத்தவுடன், நச்சுனு இழுத்தது, பூக்கள் தான் :)
அடுத்த முறை வேணா, போட்டி விதிமுறைகள் கொஞ்சம் கூட்டிக் கொறச்சு, playing field இன்னும் லெவெலா இருக்க ஏற்பாடூ செய்ய முடியுமான்னு பாக்கரோம் :) அதாவது, எல்லாப் படங்களும் macroல இருக்கணும், இல்லன்னா landscapeல இருக்கணும், DOF கையாளுதல் etc..
இது முதல் போட்டி என்பதால், ஓப்பனா விட்டாச்சு, போகப் போக, டைட்டலாம் :)

சரி, இனி ஒவ்வொரு படத்தை பாக்கும்போதும் என் மனசுக்கு பட்டத, அப்படியே தட்டச்சி கீழ கட்டம் கட்டியிருக்கேன்.

நீங்களும், உங்க ஒவ்வொருவரின் கருத்தையும், கூட்டல் கழித்தலுடன், கீழே விலாவாரியா சொன்னீங்கன்னா, எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு, ஒண்ணா பெரிய புகைப்பட வித்தகராயிடலாம்.

விமர்சனம், கீகீகீகீகீகீழே.........
























































































































































































































1.இம்சை



அருமையான இடத் தேர்வு. லைட்டிங் இன்னும் கொஞ்சம் பளிச்சுனு இருந்திருந்தா படம் எங்கயோ போயிருக்கும்.

நீல நிர வானம் இல்லாததும் ஒரு பெரிய மைனஸ் ஆனமாதிரி இருக்கு.


ரெண்டாவது படம், 'நச்' மிஸ்ஸிங்.
2. Deepa



தொட்டாச்சிணுங்கிதானே இது?

இத படம் எடுக்கணும்னு தோணற 'கலைக் கண்ணுக்கே' பரிசு கொடுக்கலாம் :)

ஆங்கிளும் அருமை. பக்காவா வந்திருக்கு.

ரெண்டாவது படம், கரெண்டு கம்பு நடுவுல வந்து கெடுத்த மாதிரி ஆயிடுச்சு :(
3, சுரியாள்



முதல் படம் நல்லா வந்திருக்கு. இடது பக்கம், அந்த பூ மேல் ஏதோ 'அழுக்கு' ஒட்டிக்கிட்டிருக்கோ? ஒரு டிஸ்ட்ரேக்ஷன்.

அது தவிர, இந்த மாதிரி, இடமிருந்து வலமாய் செல்லும் படங்கள், பனோரமிக்கா எடுத்தா நல்லா இருக்கும்.

இல்லன்னா, (சிவிஆர்?,செல்லா? செஞ்ச மாதிரி) க்ராப் பண்ணி டச் அப் செய்யலாம்.


ரெண்டாவது, 'நச்' மிஸ்ஸிங்.

வெளிச்சம் குறைத்து, டச் அப் பண்ணிப் பாருங்க, நல்லா வரலாம்.
4. Chalam



இரண்டாவது படத்தின், கலர் காண்ட்ராஸ்டிங் நல்லா இருக்கு.

கேமரா நல்ல கேமரா இல்லியோ? சில விஷயங்கள் விழுங்கிட்ட மாதிரி தெரியுது.

முதல் படம் நல்லா இருக்கு. பூ தான் 'சாதா' பூ, அதனால் கவனம் இழுக்கல :)

5. முத்துலெட்சுமி



நல்ல கேமரால எடுக்கலயோ?

பூ நல்லா இருக்கு, ஆனா, எத மெயினா காட்ட வரீங்கன்னு தெரியாம, படம் முழுவதும் தேட வேண்டியதாயிருக்கு.

'சப்ஜெக்ட்' பக்கம் கவனம் கொண்டு செல்லணும்.


வானம் சூப்பர். நல்ல கேமரால எடுத்து, டச் அப் பண்ணா எங்கயோ போயிருக்கும்.
6. Veyilan



முதல் படம் நல்லா இருக்கு. ஆனா ஏனோ தெரியல, ஒரு பன்ச் இல்லாம இருக்கு. ப்ரௌண் பாரைகள், பச்சையோட சேராம இருக்கோ?

ஒரு முயற்ச்சி செஞ்சு பாருங்க, பாரைய கொரச்சு காட்டர மாதிரி க்ராப் செஞ்சு பாருங்க,.

வேர யாராவது டிப்பு தராங்களான்னு பாக்கலாம்.


ரெண்டாவது படமும் கலர் ப்ரச்சனை தான். ஆடு, ப்ரௌண் மலைல காணாம போயிருச்சு :(
7. Sathanga



நல்ல முயற்ச்சி.

பறக்கும் பறவைகள், டெலி-போடோ லென்ஸ் வச்சு க்ளோஸப்ல எடுத்தா நச்சுனு இருக்கும்.

தூரத்துல இருந்து பாத்தா, அவ்ளோ ஒட்டல :(
8. சிறில் அலெக்ஸ்



அழகான லில்லி, ஆனா லில்லியில் ஒரு செயற்கைத் தனம் தெரியுது. ஏனுங்கோ?

அடுத்த தடவ, கைல ஒரு வாட்டர் பாட்டில் கொண்டு போய், கொஞ்சமா அது மேல தண்ணி தெளிச்சு எடுத்துப் பாருங்க :)

9. An&



பாத்தவுடன் 'நச்சுனு' பார்வைய நிக்க வெக்குது.

'greeting card' quality :)

போதி மரம் அடியில் ஒக்காந்து தியானம் பண்ணா நல்லா இருக்கும். CVR சொலியிருப்பது போல், இன்னும் கொஞ்சம் வலதா இருந்தா 'நச்' கூடியிருக்கும்.

இரண்டாவது படம் அருமை. நீல வானமும், ப்ரௌண் புல்லும் காம்ப்ளிமண்ட்ஸ் ஈச் அதர்.

10. Jayakanthan



முதல் படம் அட்டகாசம். எந்த கேமரா இது?

பூ மட்டும் சிகப்பாவோ மஞ்சளாவோ வேர ப்ரைட்டாவோ இருந்திருந்தா, பின்னியிருக்கும்.

இந்த கலரும் அருமை, ஆனா கொஞ்சம் கம்மியா இழுக்குது :)

படத்தை சுற்றியிருக்கும் ப்ளர்ரிங், அழகுக்கு அழகு.
11. ஒப்பாரி



நேர்த்தியா இருக்கு. ஆனா, வானத்தில் ஒரு 'ஒவர்' டச்சிங் கொடுத்த மாதிரி ஒரு செயற்கைத் தனம். மரம் மட்டும், வெர்டிகலா எடுத்திருந்தா நல்லா வந்திருக்குமோ?

ரெண்டாவது சூப்பர். கலர் டச்சிங் கொடுத்து,ஒரு கோல்டன் கோட்டிங் கொடுத்திருந்தா, எங்கயோ போயிருக்கும் :)
12. Sathia



மரம் தரையிலிருந்து தெரிஞ்சிருந்தா பன்ச் கூடியிருக்கும்.

ரெண்டாவது நல்லா இருக்கு. 'சாதா' பூவானதால, இழுக்கல :)

13. அல்வாசிட்டி விஜய்



நெலா சூப்பரு. ஆனா, இழுக்கல. பட், குட் effort.
'பிறை' எடுத்து பாருங்க, நல்லா இருக்கும். :)


ரெண்டாவது அருமை. லைட்டிங் அட்டகாசம். அந்த பூ மட்டும் கொஞ்சம் பெருசா இருந்திருந்தா, ஏ-க்ளாஸ் ஆகியிருக்கும்.

பூ வளந்துடுச்சுன்னா, திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க. :)
14. Ilavanji


அடேங்கப்பா ரகம். என்ன கேமரா?
ஒரே குறை, அந்த நடுவில் தெரியும் இலை. DOF காட்ட இன்னொரு பூவையே முன் நிருத்தியிருக்கலாமே?
ஆனா, அதை அறுத்தெரியாமல், அப்படியே எடுத்த உங்க அக்கரை பாராட்டுக்குரியது :)
நானா இருந்தா, அத ஒடிச்சு எடுத்திருப்பேன் :)
பட்டாம்பூச்சி அழகு. ஆனா, ஏங்கிள் சரியா அமையாத மாதிரி இருக்கு.
15. Yathirigan


நல்லா இருக்கு முதல் படம்.
டச்-அப் பண்ணா நல்லா இன்னும் வரும்.
அது என்னமோ தெரியல, இயற்கைனு வரும்போது, க்ளோஸ்-அப் பூக்கள் அளவுக்கு, landscape படங்கள் அமைவதில்லை. landscape படங்கள் நச்சுனு இருக்கணும்னா, எடம் ஊட்டி மாதிரி இருக்கணுமோ? :)
இரண்டாவதும் நல்ல படம். டச்-அப் தேவை.
16. துளசி கோபால்


சிறிலுக்கு சொன்ன அதே விஷயம்தான் இங்கியும்.
ஒரு செயற்கையா இருக்கு பூ பாத்தா? ப்ளாஸ்டிக் மாதிரி. ஏன்?
17. மின்னுது மின்னல்


இரண்டாவது படம் நல்லா வந்துருக்க வேண்டியது. மரத்த தரையோட சேத்து முழுசா காட்டியிருந்தா நல்லா வந்திருக்கும்.
18. ஜி.ராகவன்


முதல் படம் டூம் லைட் போட்டு மஞ்ச வெளிச்சத்துல எடுத்தா நல்லா வரும். NGல பாத்த ஞாபகம்.
ரெண்டாவது, அட்சரம் பெசகாம வந்திருக்கு. ஆண்டிய தள்ளி நிக்க சொல்லியிருக்கலாம் :)
19. கிவியன்


ரெண்டு படத்துலயும் வெயில் ஜாஸ்தி.
ப்ரைட்னஸ் கம்மி பண்ணிப் பாருங்க.
நல்ல கேமரா இல்லாத குறை மாதிரியும் தெரியுது ?
20. இளா


நல்ல இடத் தேர்வு. கொஞ்சம் டல்லா இருக்கு பாக்க.
வெளிச்சம் கூட்டிப் பாருங்க.
விஷயம் தெரிஞ்சவங்க வேர என்ன பண்லாம்னு சொல்லுங்க:)
21. ஜீவா


கரும்பாரை நல்லாதான் இருக்கு. தடுப்பு சுவர் நடுவுல வந்து கெடுத்திருச்சு.
அந்த வெள்ளள நிறமும் நெருடுது :)
22. விருபா


அடேங்கப்பா என்னமா இருக்கு மரம்.
ஆனா, எல்லா கிளையும் படத்துக்கு வெளிய கவனத்தை இட்டுச் செல்கிறது. அதனால அட்ராக்ஷன் கம்மி ஆயிட்ட மாதிரி ஒரு பீலிங் :(
23. அனுசுயா


அழகான குரங்கு. பேக்ரவுண்ட் தெரியாததால, படத்துக்கு 'நச்' பேக்டர் கம்மி ஆயிடுச்சு :)
குரங்கு சமத்தா இருக்கே. ஒரு க்ளோஸ்-அப் எடுத்திருந்தா, டக்கரா வந்திருக்கும் :)
24. கானா பிரபா


:) நடுவுல என்ன கயிறு? இந்தப் படம் எடுக்க பிராணிகள் எதுவும் டிஸ்டர்ப் பண்ணலயே? :)
ரெண்டாவது படம் கலைத்துவமா இருக்க வேண்டியது, நடுவுல அண்டா, கேன் எல்லாம் வந்து சொதப்பிடுச்சு :)
25. பிருந்தன்


ரொம்ப சிம்பிளா இருக்கு. பழே காலத்து படமோ? இப்ப போய் திரும்ப எடுத்துப் பாருங்க :)
26. Aruna Srinivasan


ஹ்ம். வெளிச்சம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தா நல்லா இருந்திருக்கும், இல்லன்னா வெளிச்சம் கம்மியா இருந்து ஒரு சிலுயெட் மாதிரி இருந்திருந்தாலும் நல்லா இருந்திருக்கும்.
27. லொடுக்கு


முதல் படம் நல்லா இருக்கு.
ரெண்டாவது படம் டச்-அப் பண்ணா நல்லாயிருந்திருக்கும்.
28. அமிழ்து


அடடா, நல்ல முயற்சி.
ரெண்டாவது படத்தின் ப்ளாக்&வைட் எடுபடலை.
29. Maya


சூப்பரா இருக்குங்க. கடலின் நிறம் அழக கூட்டுது.
வலது பக்க எக்ஸ்ட்ரா பன மரம் இடிக்குது. வெளிச்சத்த கொறச்சு பாருங்க நல்லா இருக்கும்.
30. grprakash/Pranni


வானம் என்னிக்குமே அழகுதான். ஒரு கோல்டன் டிண்ட் இருந்திருந்தா இன்னும் நல்லா வந்துருக்கும். star filter போட்டு எடுத்தீங்கன்னாலும் அமக்களமா வரும்னு நெனனக்கறேன் :)
ரெண்டாவது படம் அருமை.
31. மதி கந்தசாமி


ரெண்டாவது, ஏதோ வித்யாஸமா ட்ரை பண்ணிருக்கீங்கன்னு தெரியுது. நெனச்சது கெடைக்கலயோ? :)
32. Sen


ம்ம். வலது பக்கம் ட்ரிம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும்.
33. Vaasi


நல்லா இருக்கு ரெண்டும்.
தாத்தா சூப்பர். பாட்டி முகம் பளிச்னு தெரியர மாதிரி ஃப்ளாஷோ, ஆங்கிளோ மாத்தி எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
34. Vasanth


மரத்தினூடே வரும் வெயில் அழகா இருக்கு.
வேற ஏங்கிள்ல எடுத்திருந்தா, வெயிலின் கதிர் தெரிஞ்சிருக்குமோ? அப்படி ஒண்ணு ட்ரை பண்ணிப் பாருங்க, டாப் டக்கர் ரேஞ்சுக்கு இருக்கும்.
35. சிவகுமார்


துளி அழகாத்தேன் இருக்கு.
ரெண்டாவது கலர் காம்பினேஷன் சரியில்லை. ஒரு மஞ்சள் இலை அப்ஸ்ட்ரக்ட் பண்ணுது.
36. வி.ஜெ.சந்திரன்


எனக்கென்னமோ, மரங்கள எடுக்கும்போது, தரையோடு சேத்து தெரியரமாதிரி எடுக்கலன்னா, 'பன்ச்' கொரஞ்ச மாதிரி தெரியுது.
நெலாவா அது?
37. Mayan


'கேமராவ மாத்துங்க சார்னு' பையன் சொல்றான் :)
38. சந்தோஷ்


நல்லா இருக்கு செயில் போட், அந்த பறவையும் அழகக் கூட்டுது.
50mm இன்னும் உள்ள ஜூம் போயிருந்தா, ப்ரேம் போட்டு வீட்ல மாட்டியிருக்கலாம் :)
இரண்டாவது அழகு. அடுத்த முறை, டைம் ஸ்டாம்ப் போடாம எடுங்க :)
39. சாரலில்


நல்ல முயற்ச்சி.
ஆடு, க்ளோஸ்-அப்ல எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
40. Anitha


முதல் படத்தில் டெப்த் இல்லாததால், அழகு கம்மி ஆன மாதிரி தெரியுது.
இரண்டாவது நல்லா இருக்கு.
41. வெற்றி


அடுத்த பஸ் புடிச்சு அந்த எடத்துக்கு போகணும் போல இருக்கு. ஒரு கேரளா படகு நடூல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
ரெண்டாவது நல்ல லொகேஷன். நானும் கூட இந்த மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன், ஆனா சரியா வந்ததுல்ல :(
முன்னாடி தெரியும் தரைய ட்ரிம் பண்ணிப் பாருங்க, புல் இல்லாம தரை எடுபடல.
42. சிவபாலன்


'போட்டோ அனுப்ப' இன்றே கடைசி நாள்னு பாத்துட்டு, அன்னிக்கே எடுத்து அனுப்பிட்டீங்களா?
எடுத்த அவசரம் தெரியுது படத்துல.
43. செந்தழல் ரவி(due to popular demand)


ஒண்ணும் சொல்லரதுக்கில்ல.
ஆயிரம் மரஞ்செடி கொடி எடுத்தாலும், அழகுப் பெண்ணின் போர்ட்ரெயிட்டுக்கு ஈடாகுமான்னு, சொல்லாம சொல்லிட்டீங்க.
என்ன கேமரா இருந்து என்ன பயன்? இந்த மாதிரி ஒரு போட்டோ எடுக்க முடியலன்னா? :)
44. நாடோடி


மங்கலா வந்துடுச்சே?
மேக மூட்டும் ஜாஸ்தி! :)
45. வல்லிசிம்ஹன்


டைனாஸோரும், நாயும் அருமை :)
நேச்சுரலா இருக்கர மாதிரி இருக்கு. ஆனன, பில்டிங் தெரிஞ்சு சொதப்பிடுச்சு :)
46. கைப்புள்ள


பெருசும் சிருசும் அழகா இருக்கு.
பறவையும் அழகு. தண்ணி கலரயும், வானத்துக் கலரையும் கூட்டிப் பாருங்க.
அந்த நடூல இருக்கர பறவைய க்ளோஸ்-அப்பினீங்கன்னா NGக்கு அனுப்பிடலாம் :)
47. Vanthian
அட, நம்ம க்ரேட்டர் லேக்.
தல 'பில்டர்' போட்டு எடுத்தா ப்ளூ ரொம்ப நல்லா வரும்.
நல்ல ப்ரேமிங். ப்ளூ கூட்டினா, ப்ரிண்ட் போட்டு சொவத்துல மாட்டலாம்.
48. Boston Bala


செம எடம். மேக மூட்டம் அதிகமோ?
சும்மா ஒக்காந்து பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.
பட்டாம் பூச்சி உயிரோட இருக்கா? இல்ல, உங்க கலைப் பசிய தீத்துக்க, அத தீத்துட்டீங்களா? மேனகா கிட்ட சொல்லணுமா? :)
எனிவே, பட்டாம் பூச்சி க்ளோஸா எடுக்கணும். கேமரா ஜூம் இல்லாததோ?
49. கண்மணி


அவசரப் படமா?
வீடு நல்லா இருக்கு :)
50. நாட்டு நடப்பு


இந்த மாதிரி அருவி எடுக்கும்போது, ஒண்ணு நைட் மோட்ல போட்டு எடுக்கலாம், இல்லன்னா, ஷட்டர் வேகத்த கொறச்சு எடுக்கலாம்.
அருவி பாக்க அழகா தெரியும்.
51. முகவை மைந்தன்


கொக்கு அட்டஹாசமா வந்திருக்கு.
NGல ஒருத்தரு சொன்னாரு, ப்ராணிகளை எடுக்கும்போது, அது சும்மா இருக்கும்போது எடுக்கக் கூடாதாம், வேற ஏதாவது மூவ்மெண்ட் செய்யும்போது எடுத்துக்கிட்டே இருக்கணுமாம். கேண்டிட்'டா வரும்போது, மிக அழகா இருக்குமாம்.
52. Johan-Paris


வண்டு சூப்பர். ஆனா, கொஞ்சம் பளிச் கம்மி.
பையன் சூப்பரா பளிச்னு வந்திருக்கான்.
"போட்டிக்கெல்லாம் என்ன அனுப்பினா ஒததான்'னு சொல்றானோ? :)

யப்பா, ஒரு டீ சொல்லுபா! :)

23 comments:

  1. நல்ல அலசல்.. சில விஷயங்களில் உடன்பாடு இல்லை. உதாரணத்திற்கு சூரியாள் முதல் புகைப் படம். அழுக்கு மாதிரி தெரியறது எல்லாம் பிரச்சினையில்லை. ஆனா கொஞ்சம் கட்டிங் பண்ணியிருந்து நீங்க அதுக்கு பரிசு தரலைன்னா தான் கோவிச்சுட்டு இருப்பேன். அந்த கட்டிங் பண்ணாததால மிஸ் பண்ணிட்டாங்க. மத்தபடி கிரேட் வொர்க்.

    ReplyDelete
  2. சர்வேசன்,
    பட விமர்சனத்துக்கு நன்றி.

    /* ஒரு கேரளா படகு நடூல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.*/

    ஐயய்யோ! சர்வேசன் நடுவில் படகு போகும் போதும் படம் எடுத்திருந்தேன். அடடா, அதைச் submit பண்ணியிருந்திருக்கலாமோ! :-))

    ReplyDelete
  3. pazani, அந்த பூக்கு இடது பக்கம் என்னமோ ஒட்டிக்கொண்டு இருக்கே? அததான் அழுக்குன்னு சொன்னேன். நெருடலா இல்லியா அது படத்துக்கு? :)
    உடன்பாடில்லாத மத்த விஷயங்களையும் கட்டம் கட்டிச் சொல்லுங்க. எனக்கும் மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்கும். நன்றி :)


    வெற்றி, நல்ல வேள, படகு இருக்கரத அனுப்பல நீங்க. அனுப்பியிருந்தா, முதல் சுற்றிலேயே 'செயற்கை'த் தனத்தால், வெளியேற்றப்பட்டிருக்கும் :)

    ReplyDelete
  4. @சர்வேசன்!!!
    அருமையான அலசல்!!
    My bows for your effort!!
    You make me ashamed for my laziness!! :-)))

    எனக்கு தோன்றிய ஏறக்குறைய எல்லா விஷயங்களையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்!!
    அந்த குரங்கு வலது பக்கம் பார்த்துக்கொண்டு இருப்பதால் இடது ஓரத்தில் இருப்பது போல் Compose செய்திருந்தால் பார்ப்பதற்கு நன்றாக் இருக்கும்!! (will look more balanced)
    படத்தில் இருக்கும் மனிதனோ மிருகமோ நாம் பார்க்க முடியாத இடத்தை பார்ப்பது போல இருந்தால் அந்த படம் பார்க்க கொஞ்சம் நெருடலாக இருக்கும்.
    அதை போன்ற சமயங்களில் we should leave as much space as possible between the eyes and rest of the frame.

    ReplyDelete
  5. சர்வேசன்..
    விமர்சனதுக்கு ரொம்ப நன்றி..
    ///தொட்டாச்சிணுங்கிதானே இது? //
    ஆமாம்.. அதே தான்

    ///ரெண்டாவது படம், கரெண்டு கம்பு நடுவுல வந்து கெடுத்த மாதிரி ஆயிடுச்சு //
    அமாம்.. light was fading away.. & train வேறே வேகமா போய்கிட்டு இருந்துது.. பொசிஷன் பார்க்க நேரமே இல்லை.. மானவாரியா சிலதை க்ளிக்கினேன்.. அதிலே இது தான் கொஞ்சம் சுமார்

    ஒரு சின்ன டவுட்.. Before Touching up with photoshop & after touch up ன்னு சப்மிட் பண்ணலாமா.. ஏனா எதெல்லாம் accepted touchups ன்னு ஒரு சின்ன கண்பூஷன்

    ReplyDelete
  6. ஜூலைப் போட்டிக்கு first entry anupinathuku prize illaya.

    இளவஞ்சி, தீபா, ஜெயகாந்தன் வாழ்த்துக்கள், அருமையான படங்கள்.

    Let me wait for next round...

    ReplyDelete
  7. நல்ல கேமரா பெண்ட்க்ஸ்( MZ-30 slr) இருக்கு ஆனா ஸ்கேனர் இல்லயே நெட்ல போடா...அதனால வீடியோ கேம்ரால எடுத்தது போட்டேன். தெளிவா இருக்காது பெரியதா பண்ணா..

    ReplyDelete
  8. CVR, உங்க அலசல்களும் அருமையா இருந்தது :)

    //படத்தில் இருக்கும் மனிதனோ மிருகமோ நாம் பார்க்க முடியாத இடத்தை பார்ப்பது போல இருந்தால் அந்த படம் பார்க்க கொஞ்சம் நெருடலாக இருக்கும்//

    interesting. i will remember it!

    Deepa,
    //ஒரு சின்ன டவுட்.. Before Touching up with photoshop & after touch up ன்னு சப்மிட் பண்ணலாமா.. ஏனா எதெல்லாம் accepted touchups ன்னு ஒரு சின்ன கண்பூஷன்
    //
    டச் அப் பண்ணத அனுப்பினா போதும். டச் அப் பண்ணும்போது, ஒரிஜினாலிட்டி மாறாம பாத்துக்கங்க. அம்புடுதேன் :)


    இம்சை,
    ///ஜூலைப் போட்டிக்கு first entry anupinathuku prize illaya. //

    :) உங்க படம் நல்லாவே இருந்துதுங்க. லைட்டிங் தான் கொஞ்சம் டல்லாக்கிடுச்சு.
    அடுத்த முறை கலக்க வாழ்த்துக்கள்!

    முத்துலெட்சுமி,
    //நல்ல கேமரா பெண்ட்க்ஸ்( MZ-30 slr) இருக்கு ஆனா ஸ்கேனர் இல்லயே நெட்ல போடா...அதனால வீடியோ கேம்ரால எடுத்தது போட்டேன். தெளிவா இருக்காது பெரியதா பண்ணா..//

    ஓஹோ, அதுதான் மேட்டரா. அடுத்த முறை, கடைல கொடுத்து ஸ்கேன் பண்ணி அனுப்புங்க. போட்டின்னு வந்துட்டா, பெஸ்ட்டு இல்ல கொடுக்கணும் :)
    அந்த வானம், அருமையா வந்திருக்க வேண்டிய படம் :)
    btw, உங்க பரிசு ஆன் - த - வே :)

    ReplyDelete
  9. என் படத்திற்கான ஆலோசனைகளுக்கு நன்றி! சர்வேசன்

    ReplyDelete
  10. ஹப்பா...

    இதுக்கே தாவு தீர்ந்திருக்குமே ?

    நல்ல அலசல்...!!!!

    இவ்வளவு உழைப்பை இதில் போட போட்டோகிராபி மீதுள்ளா பேஷன் மட்டும் தான் கிரியா ஊக்கியோ !!!

    ReplyDelete
  11. நன்றி செல்லா.

    இயற்கையே இங்கே செயற்கை மாதிரி காமிக்குது(-:

    ReplyDelete
  12. கருத்துக்களுக்கு நன்றி சர்வேசன்.
    vertical composition இருக்கு, ஆனா அது கொஞ்சம் ordinarya இருந்திருக்கும் போல தோனிச்சு and I love blue. வானம் செயற்க்கையா தெரியுதா கொஞ்சமாதான் contrast adjust பண்ணினேன் ஒரிஜனலும் இருக்கு.

    இரண்டவது படம் மெரினாவில் எடுத்தது. ரொம்ப casual shot and i loved the cloud at that time.

    ReplyDelete
  13. @ஒப்பாரி
    AN&-ஓட படத்துல மரம் கொஞ்சம் வலது ஓரத்துல வரா மாதிரி crop செஞ்சது போல உங்க படத்துல மரம் கொஞ்சம் ஓரம் வந்த நல்லா இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!! :-)
    இந்த போடும் போதே செய்து பார்த்தில் நன்றாக இருந்தது போன்ற பீலிங்!! :-)

    ReplyDelete
  14. //ரெண்டாவது அருமை. லைட்டிங் அட்டகாசம். அந்த பூ மட்டும் கொஞ்சம் பெருசா இருந்திருந்தா, ஏ-க்ளாஸ் ஆகியிருக்கும்.

    பூ வளந்துடுச்சுன்னா, திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க. :)//

    அய்யய்யோ அந்த பூ சைஸ் அவ்ளோ தான். வளராதே.

    ReplyDelete
  15. @அல்வாசிடி விஜய்
    :-)
    அந்த பூக்களை பக்கவாட்டில் எடுத்ததற்கு பதிலாக முன்னால் இருந்து அல்லது Isometric view-இல் எடுத்திருந்தால் பூக்களின் முகங்கள அழகாக தெரிந்திருக்கும என்று தோன்றுகிறது.
    அதுவும் இல்லாமல் படத்தோட பேக்ரவ்ண்டு ரொம்பவும் distracting.
    was hard to find the lines in the merged background.
    :-)

    ReplyDelete
  16. alwacity vijai,

    //அய்யய்யோ அந்த பூ சைஸ் அவ்ளோ தான். வளராதே. //

    oram pottu paatheengalaa ? :)

    ReplyDelete
  17. //ரெண்டாவது, அட்சரம் பெசகாம வந்திருக்கு. ஆண்டிய தள்ளி நிக்க சொல்லியிருக்கலாம் :)//

    சர்வேசன்...
    சப்ஜெக்டு-ல நல்லாவே கான்சன்ட்ரேட் பண்றீங்க தல! கலைக் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பது இது தானோ? :-)

    மொதல்ல கொஞ்ச நேரம் நீங்க யாரைச் சொல்றீங்க-ன்னு தேடினேன்! அப்பறம் தான் தென்பட்டுது! ஜிரா...நீங்க கூடவா கவனிக்கல? :-)

    ReplyDelete
  18. பொறுமையின் திலகம் சர்வேசன் வாழ்க வாழ்க!
    பரிசு கொடுப்பதோடு நின்று விடாது, ஒவ்வொருத்தருக்கும் areas of improvement இனம் கண்டிருப்பது, மிகவும் ஊக்கப்படுத்தும் செயல்!

    CVR மற்றும் ஓசை செல்லாவுக்கும் பாராட்டுக்கள்!

    //PiTன் (Photography-In-Tamil) ஆசிரியர் குழு பெருசாக நிறைய வாய்ப்பிருக்கு :)//

    அப்பிடின்னா போட்டியில ஆசிரியர்களும் சரி சமமா கலந்துக்க ஏற்பாடு பண்ணுங்க! :-)

    ReplyDelete
  19. சர்வேசன்,

    அசாத்திய பொறுமையுடன் அனைத்தையும் குறிப்பிட்டு விளக்கியதற்கு நன்றி!

    ReplyDelete
  20. //அந்த பூக்களை பக்கவாட்டில் எடுத்ததற்கு பதிலாக முன்னால் இருந்து அல்லது Isometric view-இல் எடுத்திருந்தால் பூக்களின் முகங்கள அழகாக தெரிந்திருக்கும என்று தோன்றுகிறது.
    அதுவும் இல்லாமல் படத்தோட பேக்ரவ்ண்டு ரொம்பவும் distracting.
    was hard to find the lines in the merged background.//

    நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை. பூக்களை நேரடியாக பார்க்க முடியாததால் பக்கவாட்டில் எடுக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாமல் லோ ஆங்கிளில் இருந்து கிளிக்கியது. ஆகையால் பேக்ரவுண்டில் distract செய்யும் அதே லைன் அதாவது நடைபாதையை முற்றிலும் out of focus செய்து மறைய வைக்க வேண்டுமென பெரு முயற்சி செய்தேன். சப்ஜெக்ட்டிலிருந்து சரியான தூரத்தில் நான் இல்லையோ என்னமோ அந்த அரைகுறையாக தெரியும் அந்த நடைபாதை லைன் இந்த படத்துக்கு ஆப்பு வைத்தது....

    சிரமம் பாராமல் பின்னூட்டம் கொடுத்த உங்கள் ஆர்வத்துக்கு நன்றி....

    //oram pottu paatheengalaa ? :)//

    சர்வேசா,

    பக்கத்து வீட்டு கிம்பர்ளின் கிட்டே சொல்லி பார்க்கிறேன் கட்டாயம்.

    ReplyDelete
  21. நன்றி செல்லா,சிவிஆர்.

    நல்லா ஃபோகஸ் செய்து எடுத்து அனுப்பறேன். படங்களைப் பதிவில் சேர்த்ததற்கு நன்றி. மிக நல்ல விமரிசனம்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff