வணக்கம்
பிட் மக்கா, நலமா? சமீபத்தில்
இந்தியா சென்றிருந்த போது போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். போட்டோஷாப்
குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் என்னிடம், “சார்
நாங்க எல்லாம் இங்க 5 நிமிடத்தில
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக்கொடுக்கிறோம்”னு பேச்சை ஆரம்பிச்சாரு, (என்னமோ கேட்கப்போறாருன்னு புரிஞ்சி போச்சு).
“போட்டோஷாப்பில போய்
Face Retouch செய்து கொண்டு
அப்புறம் அதை மாஸ்க் செய்துகிட்டு இருக்க சிரமமாக இருக்கிறது என்பதை
விட அதிக நேரமெடுக்கிறது சார்”னு
சொன்னாரு.
“சரி அதுக்கு என்ன பண்ணலாம்?”ன்னு கேட்டேன்.
“அதுக்கு இல்ல சார் எனக்கு நல்ல நீட்சி (Plug-in) ஆக இருக்கனும் Sliders மூலமாய் எளிமையா சீக்கிரமா வேலைய முடிச்சு பிரின்ட் பண்ணிடனும்”ன்னு கேட்டாரு.
“சரி அதுக்கு என்ன பண்ணலாம்?”ன்னு கேட்டேன்.
“அதுக்கு இல்ல சார் எனக்கு நல்ல நீட்சி (Plug-in) ஆக இருக்கனும் Sliders மூலமாய் எளிமையா சீக்கிரமா வேலைய முடிச்சு பிரின்ட் பண்ணிடனும்”ன்னு கேட்டாரு.
“பொதுவா Portrait Retouch க்கு
நிறைய நீட்சிகள் (Plug-Ins) இருந்தாலும் ஸ்டுடியோக்களை பொருத்தவரை பாஸ்போர்ட் சைஸ் படங்களுக்கு ஒண்ணும்
பெரிய Retouch பண்ணனும்ன்னு அவசியமில்லை.
கொஞ்சம் முகத்துக்கு Blur apply பண்ணிட்டு அத
எளிமையா கண்ட்ரோல் செஞ்சிகிட்டா போதும் சார்”னு
கூறியதால எனக்கும் சற்று யோசனையாகவே இருந்தது,
காரணம் எனக்கு Plug-Ins களில்
போதிய அனுபவமில்லை என்பதால் சென்னையில் பணிபுரியும் நண்பர்களிடம் கேட்டேன், .“என்ன iOS Devolopers கிட்ட
வந்து Designing doubt கேட்டு நக்கல் பண்ணற”ன்னு
சொல்லிட்டு,
“சரி எங்க ஆபிஸ் டிசைனிங் டீம்ல கேட்டு சொல்லுறேன்”னு சொன்னாங்க,
“சரி எங்க ஆபிஸ் டிசைனிங் டீம்ல கேட்டு சொல்லுறேன்”னு சொன்னாங்க,
சொன்னமாதிரியே அவங்க teamல ஒரு
டிசைனர் சொன்னதா சொல்லி “Portraiture
னு ஒரு நீட்சி இருக்காம். அத
யூஸ் பண்ணிக்க சொல்லு”ன்னு சொன்னாங்க.
சரி, ஒருத்தருக்கு சிபாரிசு செய்யறதுக்கு முன்னாடி நாம அதை சோதிச்சுப் பாக்கணுமில்லையா? பயன்படுத்திப் பார்த்தேன். அட not bad ங்க.
மிகவும்
எளிமையான User Interface, அனைத்து கன்ட்ரோல்களும் ஸ்லைடர்கள் கொண்டு நகர்த்தும் விதமாக
வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
பொதுவாக
Portrait, Modelling, Fashion photography சூழலில்
பணி புரிகின்றவர்கள் ஒரு Portrait ஐ
நல்லவிதமாக கொடுக்க Blemishes cleaning, Imperfections, Smoothing
the Skin tone னு மணிக்கணக்காப் பணிபுரிவாங்க. இந்த நேரத்தை மிச்சப்படுத்த போட்டோஷாப்பிலோ
அல்லது தானியங்கியாக இயங்கும் சில நீட்சிகள் (Plug-Ins) இருந்தாலும் அதில்
இந்த Portraiture ம் தன் பணியை
நன்றாகவும் எளிமையாகவும் செய்கிறது என்பதனை தெரிந்து கொண்ட பின்னரே இந்த கட்டுரையை
உங்களுக்கு தருகிறேன்.
Skin
Smoothing presetsகளையும் இதனுடன்
வழங்கியுள்ளது அதாவது Normal, Medium, High, Glamour, High
key மற்றும் low key.
மேலும்,
Auto mode டிலேயே Skin
toning மற்றும் Skin
Smoothing அருமையாக
செய்து தருகிறது. Auto Skin selection கூட குறைசொல்ல முடியாத அளவிற்கு
மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
Sharpness,Softness,Brightness,Contrast
னு கன்ட்ரோல்கள் இதிலேயே இருப்பதால் வெகு சீக்கிரத்தில் facial retouching செய்துகொள்ள
ஏதுவாக இருக்கிறது.
கிழேயுள்ள படமானது
Nikon D5100 இல் Nikkor 75-300 பழைய Fx லென்ஸை பொருத்தி மேனுவலாக நான் எடுத்தபடம்.
இந்த படத்திலிருக்கும்
பாட்டியை Portraiture கொண்டு age defying செய்து அதே நேரத்தில் Skin Texture முழுவதும்
நீக்கப்படாமல் பார்த்துக்கொண்டேன்.
ரிசல்ட் திருப்தியாக
இருக்கிறதா என நீங்கள் தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும்.
அடுத்ததாக பிட்
அட்மின் குழுவின் சக நண்பரான திரு.ஆனந்த் விநாயகம்
(Fashion Photographer) அவர்களிடம் இதுகுறித்து விவாதித்தபோது அவர் கிளிக்கிய ஒரு மாடல்
படத்தை இக்கட்டுரைக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி தந்தார். நன்றி திரு.ஆனந்த் விநாயகம்.
அவரது படத்தை Portraiture
இல் Retouch செய்ததன் வெளியீடு:
© Anand Vinayagam |
ஆக,
Portraiture, டிஜிட்டல் ஃபோட்டோ
ஸ்டுடியோ வைத்திருப்பவர்களும்,பேஷன்&மாடலிங் ஃபோட்டோகிராஃபியில் பணிபுரியும்
கலைஞர்களும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
ஆனால் விலைதான் சற்று
அதிகம் 200 U.S டாலர்கள்...,எனினும்
30 நாட்களுக்கு trial ஆக பயன்படுத்திப் பார்க்கலாம்.
மேலும்
விபரங்களுக்கு :
அன்புடன்:
நித்தி ஆனந்த்