வணக்கம் பிட் மக்கா! நலமா? இன்றைய கட்டுரையில் நாம் கருப்பு வெள்ளை படங்களை உருவாக்கும் முறையை சற்று விபரமாக
பார்க்கலாம்.பொதுவாக கருப்பு வெள்ளை படங்களை உருவாக்க போட்டோஷாப்பில் பலவழிகள் இருக்கிறது
இது குறித்து பிட் தளத்தில் ஏற்கனவே சேனல் மிக்ஸர் மற்றும் Gradient tool கொண்டு விளக்கம்
தந்திருக்கிறேன்.
இக்கட்டுரையில் கருப்பு வெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை வைத்து 3 விதமான கருப்பு வெள்ளை எபக்டுகளை எளிமையாக உருவாக்குவது குறித்து பார்க்கலாம்.
என்ன வாசகர்களே கட்டுரை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதா?
இக்கட்டுரையில் கருப்பு வெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை வைத்து 3 விதமான கருப்பு வெள்ளை எபக்டுகளை எளிமையாக உருவாக்குவது குறித்து பார்க்கலாம்.
1 கான்ட்ராஸ்டுடன் கூடிய கருப்புவெள்ளை:
முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறைஉருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை Overlay க்கு மாற்றவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை Overlay க்கு மாற்றவும்.
Black &
White 1 adjustment layerஐ திறந்து உங்களது விருப்பதிற்க்கு ஏற்றவாறு சேனல்களை அட்ஜெஸ்ட்
செய்துகொள்ள கான்ட்ராஸ்டுடன் கூடிய கருப்புவெள்ளை படம் தயார்.
2.Lowkey கருப்புவெள்ளை :
உங்களது படத்தை
போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறை உருவாக்கவும்.
Black & White 2
Adjustment layer ன் பிளன்ட் மோடை Multiplyக்கு மாற்றவும்.
Black &
White 1 adjustment layerஐ திறந்து கொண்டு உங்களது ரசனைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள
lowkey கருப்புவெள்ளைப்படம் தயார்.
3.Highkey கருப்புவெள்ளை
:
உங்களது படத்தை
போட்டோஷாபில் திறந்துகொள்ளவும். கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறை உருவாக்கவும்.
Black &
White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை இம்முறை Screenக்கு மாற்றவும்.
Black &
White 1 adjustment layerஐ திறந்து கொண்டு உங்களது ரசனைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள
Highkey கருப்புவெள்ளைப்படம் தயார்.
என்ன வாசகர்களே கட்டுரை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதா?
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்