Wednesday, July 8, 2015

வணக்கம் நண்பர்களே!

இந்த மாத தலைப்பு “பிடித்ததில் பிடித்தது “. 

உங்களின் படத்திற்கு முதல் நீதிபதி நீங்கள். நீங்கள் நிறைய படங்கள் பிடித்திருப்பீர்கள்.      இது தான் என்று இல்லை. குழந்தைகள், பெரியவர்கள் என யாராகவும் இருக்கலாம்.  அல்லது இயற்கை காட்சிகளாக இருக்கலாம். எந்த வகையான படமாகவும் இருக்கலாம்.    அவற்றில் இருந்து மிகச்சிறப்பாக நீங்கள் கருதும் படங்கள் பத்தை தேர்ந்தெடுத்து அதில் இருந்து அதி சிறப்பு என்று  உங்களுக்குப் பிடித்த  ஒன்றை நீங்கள்  போட்டிக்கு அனுப்புங்கள்.

சில மாதிரி படங்கள்... உங்களின் பார்வைக்கு

ஐயப்பன் கிருஷ்ணன்:
#
Divya-arangetram
#
Twins

#
Early morning - cubbon park

#
Lines  of wisdom and experience

#
NandhiHills

ராமலக்ஷ்மி:

#

#

#


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூலை 2015
போட்டி விதிமுறைகள் இங்கே. மீண்டும் நினைவூட்டுகிறோம், படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:
hall84eyes@photos.flickr.com
photos_in_tamil@yahoo.in
***

பிடித்ததில் பிடித்தது.. போட்டி ஆல்பம் இங்கே.
[போட்டி ஆல்பம் சில தினங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அப்படி அப்டேட் ஆன ஆல்பத்தில் உங்கள் படம் வரவில்லை என்றால் மட்டும் தெரிவிக்கவும்.]

Saturday, July 4, 2015

போட்டியில் வென்ற படங்களைப் பார்க்கும் முன் வெளியேறும் படங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமா?

ல்ல காட்சி. கட்டம் கட்டிய சட்டத்துக்கு வெளியே இருக்கும் பகுதி கருப்பொருளின் மேல் முழுக் கவனத்தைக் கொண்டு போகாதது குறை.
பாலா
தலைப்பை மனதில் இருத்தி இப்படி க்ராப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


வாட்டர் மார்க் பெரிய அளவில் இருப்பதும் உறுத்தல்.

கீழ்வரும் படத்துக்கும் மேல் சொன்னவை பொருந்தும். போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் இத்தனை பெரிய வாட்டர் மார்க் இடுவதைத் தவிருங்கள் நண்பர்களே.
பாலமுருகன்
கருப்பொருளை இன்னும் தெளிவாக முன் வைக்க, பல வட்டங்களைத் தவிர்த்து, கீழ்வருவது போல க்ராப்பிங் இருந்திருந்தால் சிறப்புக் கவனம் பெற்றிருக்கும்.ட்டத்துக்குள் சட்டத்துக்குள் சட்டம் என அசத்தியிருந்தாலும் கிளி போதுமான அளவு ஷார்ப்பாக இல்லாதது குறை.
# குமார்
ற்ற படங்களில் பெரிய குறைகள் ஏதுமில்லை,வென்ற படங்கள் அவற்றை விடச் சிறப்பாக இருப்பது தவிர்த்து..

சிறப்புக் கவனம் பெறும் படங்கள்: 
நரேந்திரன் & தேவேந்திரன் S
தை சொல்லும் காட்சி. யாருமற்ற இல்லத்தில் ஒவ்வொரு கதவாகத் திறந்து விட்டு கடைசிக் கதவைத் திறந்து நிற்கும் மனிதனை நோக்கி இழுத்துச் செல்லும் கோடுகள்.. அதாவது Leading lines ஆக அறையின் சுவர்கள்...! நபரை silhouette ஆகக் காட்சிப் படுத்தியிருப்பதும் சிறப்பு.
# நரேந்திரன்
கருப்பு வெள்ளைப் படங்களில் ஓரளவுக்கு இரைச்சல் அனுமதி என்றாலும் இதில் சற்று அதிகமாக இருப்பது சிறு குறை.
**

ச்சிதமான சட்டம். கருப்பொருளாக வானும் கடலும் நிலமும்!

# தேவேந்திரன் S

மூன்றாம் இடம்: பிரபு சதாசிவம் 
ட்டத்துக்குள் தாஜ்மஹாலும் அங்கே குழுமியிருக்கும் மக்களும் மட்டுமின்றி, இந்த முனையில்  silhouette ஆக மக்கள் அதைப் படப்பிடிக்கும் காட்சி படத்துக்கு உயிர்ப்பைத் தருகிறது.
# பிரபு
சற்றே படம் tilt ஆகியிருப்பது குறை.
**
ருமையான ஒளி அமைப்பு. சட்டத்துக்குள் இருக்கும் பெண்ணும் சிறுமியும் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லும் உணர்வைப் பார்ப்பவருக்குக் கடத்துகிறது.
# சதாசிவம்

அத்தனை உறுத்தலாகத் தெரியாவிட்டாலும் இந்தப் படமும் சற்றே tilt ஆகி உள்ளது.

இருவருமே சாய்மானத்தை சரி செய்திருந்தால் முதலிரண்டு இடங்களில் பங்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாம் இடம்: ஆன்டனி சதீஷ்

ருமை. இயற்கைச் சூழலில் ஆந்தையை தெளிவாக, அழகாகப் பாறைகளால் சட்டமிட்டுக் காட்டியிருக்கிறார்.


முதலிடம்:  கரிகாலன்

ம்போஸிஷனும் ஒளியைக் கையாண்ட விதமும் அற்புதம். தரையில் படிப்படியாகப் பரவியிருக்கும் வெளிச்சம் நம்மை மறுமுனைக்கு அழைத்துச் செல்கிறது.

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

டுத்த மாதப் போட்டி விரைவில் அறிவிப்பாகும். போட்டிகளை  திறனை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள், நண்பர்களே:)!
**
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff