வணக்கம்.
இன்றைய கட்டுரையில் நாம்
சில பிரபலமான பழைய கருப்பு வெள்ளை
நெகட்டிவ் பிலிம் ரோல்கள் உருவாக்கித்தரும்
எபக்ட்டுகளை போட்டோஷாப்/கிம்பில் Channel Mixer கொண்டு
உருவாக்குவதை காணலாம். முன்பெல்லாம் பிற்சேர்க்கை
என்பது கலர் படங்களாகட்டும், அல்லது
கருப்பு வெள்ளைப் படங்களாகட்டும். அவர்களுக்குத் தேவையான எஃபக்டுகளை உருவாக்க அதற்குத் தகுந்தாரற்போல இருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்ரோல்களை பயன்படுத்தி எடுப்பார்கள், உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை படங்களுக்கென நிறைய ஃபிலிம்ரோல் நெகட்டிவ்கள்
பயன்படுத்தப்பட்டன ex : Agfa Pan,Ilford Delta,Kodak tri-x etc…ஒவ்வொரு ஃபிலிம் ரோலுக்கும்
ஒவ்வொரு மாதிரியான வெளியீடு இருக்கும்.
நாம் இப்போது நெகட்டிவ் ரோல்
காலங்களிலிருந்து டிஜிட்டல் உலகத்தில் இருக்கின்றோம். எனினும் இன்றும் பெரும்பாலான
புகைப்படக்கலைஞர்கள் கருப்புவெள்ளைப் படங்களைக் கைவிடுவதாக இல்லை, அந்த அளவிற்கு இந்தக்
கருப்புவெள்ளைப் படங்களில் உணர்சிகளைக்
கொண்டு வரமுடியுமென்கின்றனர் அனுபவம் வாய்ந்த புகைப்படக்கலைஞர்கள்.
சரி, இதுபோல பழைய நெகட்டிவ் ஃபிலிம் ரோல்கள் உருவாக்கிக்கொடுத்த கருப்பு
வெள்ளைப் படங்களை போட்டோஷாப்பில் உருவாக்க
நாம் Channel
Mixer என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தலாம் என்பதை
விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Channel Mixer
Adjustment ஐ கொண்டு போட்டோஷாப்பில்
தரமான கருப்பு வெள்ளை மற்றும்
கலர் படங்களை தயாரிக்க முடியும். இந்த Adjustment ஆனது RGB மற்றும் CMYK மோடில் வேலைசெய்யும். நான்
இதுவரை CMYK
மோடை பயன்படுத்தியது கிடையாது எனவே RGB மோடில் வேலை செய்வது
குறித்து விளக்குகிறேன்.
Channel Mixer இன்
அடிப்படைத்தத்துவதை புரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய படத்திலிருக்கும் Red,Green,Blueஆகிய மூன்று சேனல்களையும்
உங்களின் தேவைக்கேற்றவாறு adjust
செய்துகொள்வதேயாகும். இதில் நீங்கள் ஒரு
சூத்திரத்தை கையாளவேண்டும் அதாவது 3 சேனல்களின் மதிப்பின் கூட்டுத்தொகையானது 100 ஆக இருக்கவேண்டும் என்பதே
அந்த சூத்திரம். (R+G+B=100%), மதிப்புகள் மைனஸாக இருந்தாலும்(-) பிளஸ்ஸாக இருந்தாலும்(+) கூட்டிக்கழித்து பார்க்கும் போது +100% வரவேண்டும் என்பதே முக்கியமாகும். Ex:(40+40+20=100),(-50,+65+85=100),(33+ -17+84=100).
சரி செயல்முறைக்கு செல்லலாம் வாங்க,
முதலில் உங்களது
படத்தை போட்டோஷாப்பிலோ அல்லது கிம்பிலோ திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் New Adjustment Layer சென்று Channel Mixer தேர்வு செய்கிறேன்.
இப்போது
தோன்றும் விண்டோவில் Monochrome
என்பதை டிக் செய்யவும்.
இனி உங்களது Red,Green,Blue சேனல்களின் மதிப்பை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு
கன்ட்ரோல் செய்துகொள்ளுங்கள் ஆனால் உங்களது R+G+B =100% வருமாறு
பார்த்துக்கொள்ளவும். அவ்வாறு 100% மதிப்பை தாண்டும் தருவாயில்
ஒரு Warning
Symbol வரும். கவனமாக செய்யவும்.
கீழேயுள்ள
இந்த அட்டவணையை கொண்டு அதிலுள்ள பிலிம்ரோல்களுக்கான
RGB மதிப்புகளைக்கொண்டு 15 வகையான கருப்பு
வெள்ளை படங்களை இந்த Channel Mixer மூலமாக உருவாக்கிக்கொள்ளமுடியும்.
பயன்படுத்திப் பாருங்கள்.
பயனடையுங்கள் !
***