Wednesday, August 29, 2012

முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்தும் பலரின் மனதில் இடம்பெற்று விட்டிருந்ததை உங்கள் கருத்துகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மகிழ்ச்சி. வெற்றி பெற்ற படங்களைப் பார்க்கும் முன் வெளியேறும் சில படங்களைக் கவனிப்போம்:

# நவோதயா செந்தில்
அழகான படம்.

# பன்னீர் ஜவஹர்
அருமையான முயற்சி.

செந்தில், ஜவஹர் நீங்கள் இருவருமே வாட்டர் மார்க்கை தவிர்த்திருக்கலாம். PiT தளத்தில் மட்டுமல்ல, எல்லா புகைப்படப் போட்டிகளுமே இதைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்கின்றன என்பதை நினைவில் கொள்க. மேலும் PiT அளவைக் குறைத்தே இப்போது படங்களை சமர்ப்பிக்கக் கேட்பதால் உங்கள் படங்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்கிற கவலையும் வேண்டாம். அப்படியும் போட்டுதான் ஆகவேண்டுமெனில் நித்தி க்ளிக்ஸ், வெங்கட்ராமன், நிலா ஆகியோர் படங்களில் உள்ளது போல (ஒபாஸிடி குறைத்து) உறுத்தல் இல்லாமல் ஓரமாகப் பதியலாம்.# ஷகீவன்
கலைநயத்துடன் உள்ளது. ஷார்ப்பாக இல்லாதது குறை.

# சத்தியா
கருப்புப் பின்னணி காண்ட்ராஸ்டாக அமைய எதிர் திசைகளில் பார்க்கும் இரட்டை ஆரஞ்சு ஃப்ளெமிங்கோ அசத்தல். ஆனால் டைட் க்ராபிங் ஆகி விட்டதே சத்தியா. பறவையின் பார்வை செல்லுமிடத்தில் இடப்பக்கம் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் இடம் விட்டிருந்திருக்கலாம்.

# R.N. சூர்யா
தெறிக்கும் தண்ணீரில் அமிழும் ஆரஞ்சு. கவனத்தை ஈர்க்கிறது. பிரமாதமான டைமிங்கும். பழத்தின் மேல் வெளிச்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பது சின்ன குறை.

வெற்றி பெற்ற படங்கள் கூடுதல் சிறப்பாக அமைந்து விட்டதால் விலகுகின்றன முதல் சுற்றின் பிற படங்கள். மற்றபடி பெரிய குறையென்று ஏதுமில்லை.

இனி, என் ரசனையின் அடிப்படையில் அமைந்த தேர்வுகள்:

மூன்றாம் இடம்: Asjaloys Devadass

வானத்தின் ஆரஞ்சு வசீகரம்.

இரண்டாம் இடம்: குசும்பன்

மேகங்களிலும் நீரின் பிரதிபலிப்பிலும் மிளிருகிறது ஆரஞ்சு. லைட்டிங் பிரமாதம். நேர்த்தியான படம்.

முதல் இடம்: குமரகுரு

அம்மை அப்பனைச் சுற்றி வந்து மாம்பழத்தைத் தட்டிச் சென்ற பிள்ளையாரப்பனைப் போல் சின்னஞ்சிறு கண்ணைச் சுற்றி அற்புதமாக ஆரஞ்சைப் படர விட்டு முதல் இடத்தைத் தட்டிக் கொண்டு விட்டார் குமரகுரு:)!

சிறப்புக்கவனம்:

# நிலா
போட்டி ஆல்பத்தில் பார்த்ததுமே பாராட்டத் தோன்றிய படம்.
படம் நடுவே செல்லச் செல்ல அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகியிருப்பதும் நீர்த்திவலைகள் மேல் வெளிச்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பதும் குறைகள். ஆயினும் பளிச் ஐடியாவைப் பளிச் எனக் காட்டிய விதத்தில் சிறப்புக் கவனம் பெறுகிறார் நிலா.


# ராஜசேகரன்
துல்லியமாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்த விதத்தில் சிறப்புக் கவனம் பெறுகின்றவர் ராஜசேகரன்.
படத்தின் பின்னணி ஆரஞ்சாக இருந்தாலும் ப்ளெயினாக இருப்பதால், நீர்த்துளிகளுக்குள் இருக்கும் ஆரஞ்சு மலர்களையே கருப்பொருளாகக் கண்கள் நோக்குகின்றன. அளவில் அவை சிறியதாகி விட்டது குறை. இதேபடம் இரண்டு அல்லது மூன்று துளிகள்(மலர்கள்) மட்டும் தெரிகிற மாதிரி க்ராபிங் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கும். முடியுமானால் க்ராப் செய்து அனுப்பி வையுங்களேன். காண ஆசை:)! போட்டி ஆல்பத்தில் பார்வைக்கு சேர்த்திடலாம்.

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! தொடர்ந்து பங்கு பெற்று வாருங்கள்! விரைவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வெளியாகும்.
***

Saturday, August 25, 2012

நூற்று இருபத்தெட்டு பேர் கலந்து கொள்ள ‘ஆரஞ்சு’ப் போட்டி அழகான கொண்டாட்டமாகவே அமைந்து விட்டது. பலபேர் சிரத்தையுடன் சிறப்பாக எடுத்து அனுப்பியிருந்தீர்கள். வண்ணம் என்றாலே கண்ணைக் கவரணுமில்லையா:)? அப்படிக் கண்ணையும், எடுத்த விதத்தில் கருத்தையும் கவர்ந்த முதல் பதினைந்து படங்கள் இவை. எந்த வரிசையின் படியும் அமையாமல் முதல் சுற்றுப்படங்களாக இடம் பெறுகின்றன.

# Asjaloys Devadass


# கெளதம்


# R.N. சூர்யா


# கார்த்தி


# வினோகாந்த்


# குசும்பன்


# வெங்கட்ராமன்# குமரகுரு


# ஷகீவன்# நிலா


# பன்னீர் ஜவஹர்


# நித்தி ஆனந்த்


# ராஜசேகரன்


# நவோதயா செந்தில்


# சத்தியா


பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்! விரைவில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலோடு சந்திக்கிறேன்.

Sunday, August 19, 2012

19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.

பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!


தொடர்ந்து இயங்கக் காரணமாக இருந்து வரும் PiT வாசகக் குடும்பத்தினருக்கும், பயனாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
***

Monday, August 6, 2012

எல்லாருக்கும் வணக்கம்!

சில நேரங்களில் நாம் இணையத்தில் உலவி வரும்போது பொக்கிஷமாக சில விஷயங்கள் கிடைக்கும். சில நேரங்களில் நாம் கற்பனையில் 'இப்படி ஒரு வசதி இருந்தால் நல்லாருக்குமே' என்று நினைப்பது போல் கிடைக்கும். அப்படி கிடைத்ததுதான் இந்தத் தளம். நான் புகைப்படக்கலை (ஒளிப்படக்கலை?!?) கற்க ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்படி ஒரு மென்பொருள் (சாஃப்ட்வேர்) இருந்தால் நல்லாருக்குமே/எளிதில் புரியுமே என்று நினைத்ததுண்டு.

இந்தத் தளத்தில் ஒரு அருமையான சிமுலேட்டர் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதில் மூன்று மோட்களும் (Manual, Aperture priority & Shutter priority) உள்ளன. அதில் நாம் அதிலுள்ள அளவுகளை மாற்றி மாற்றி 'கிளிக்' செய்து படம் எடுப்பதை கற்றுக் கொள்ளலாம். உடனே நாம் எடுத்த படமும் தெரிகிறது. அதைப பார்த்து புரிந்து கொண்டு அளவுகளை மீண்டும் மாற்றி படம் எடுக்கலாம். நிச்சயமாக இது ஒரு நல்ல பயனுள்ள தளமாக இருக்கும் என நம்புகிறேன்.***

Sunday, August 5, 2012

டேங்கரின் டேங்கோ. அழுத்தமான ஆரஞ்சு. இதுதான் 2012 கொண்டாடிக் கொண்டிருக்கும் வண்ணம். பளிச் என ஒளிரும் இந்நிறம் ‘உலகின் பொருளாதாரச் சிக்கல்கள் சரியாகி மக்களின் வாழ்வு மேம்பட வழிவகுத்து, நல்ல விஷயங்களை நோக்கி உற்சாகமாக நம்மை நகர்த்தும்’ என்பது இதைத் தேர்ந்தெடுத்த வல்லுநர்களின் கருத்து. வண்ணத்துக்கும் வாழ்வுக்கும் என்ன சம்மந்தம்? கேள்வி எழும்பினாலும் நல்லதொரு நம்பிக்கையை விதைக்கும் விஷயத்தை நாமும் கொண்டாடி விடுவோமே:)!

இம்மாதத் தலைப்பு: ஆரஞ்சு (இளஞ்சிகப்பு)

கொண்டாடலாம் வாங்க!

கவனிக்க வேண்டியவை: சிகப்பை ஏற்கனவே சீரும் சிறப்புமாக நாம் கொண்டாடி விட்டுள்ளோம். இப்போது வண்ணம் சிகப்பை நோக்கிச் சாய்ந்திடாமல் ஆரஞ்சுக்கு.. இளஞ்சிகப்புக்கு.. முக்கியத்துவம் கொடுக்கட்டும். பிரதானமாக ஈர்க்கும் கருப்பொருள் அல்லது வண்ணம் ஆரஞ்சாக அமையட்டும். அருமையாய் படமாக்கிட ஐநூறு பதிவுகளை(அதைத் தனியாகப் பிறகு நாம் கொண்டாடிலாம்) நெருங்கிக் கொண்டிருக்கும் PiT தளத்தில் பாடங்களுக்கா பஞ்சம்:)? எல்லா நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு அழகழகான ஆரஞ்சுடன் வாருங்கள்!

சில மாதிரிப் படங்களைக் பார்ப்போம்.

#1 ராமலக்ஷ்மி# ஆனந்த் விநாயகம்


# ராமலக்ஷ்மி# நாதஸ்


# ராமலக்ஷ்மி


# ஐயப்பன் கிருஷ்ணன்


# சர்வேசன்

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2012.

பி.கு: சில மாதம் தேதி 15 ஆக, சில மாதம் 20 ஆக அறிவிப்பாவது சிலருக்குக் குழப்பத்தைத் தருவதால் எளிதாக நினைவில் நிற்க, இனி வரும் எல்லா மாதங்களிலும் 20ஆம் தேதியே கடைசித் தேதியாக இருக்கும்.

Saturday, August 4, 2012

ஷார்ப்பா இருக்கு கத்துக்கணும் பகுதி 1 இங்கே.பார்த்து இருப்பீர்கள் 
இந்த பதிவில்  Manny Librodo  என்ற  கலைஞரின் ஒரு மெருகேற்றும் முறையை பார்க்கலாம்.மிக எளிதான் முறை, அழகான படம் படத்தை கிம்பில் திறந்து பின்ண்ணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். 

 Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்து


 Radius = 40, Amount = 0.18 Threshold= 0 என்ற அளவை பயன்படுத்துங்கள்.
 மீன்டும் ஒரு முறை Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்யுங்கள். ஆனால் இந்த முறை Radius = 0.3 Amount =1.5 Threshold = 0 என்ற அளவை உபயோகிங்கள்.
 லேயர் மோட் Darken Only என்ற்ய் மாற்றுங்கள். படம் நன்றாக மெருகேறி இருப்பதை காணலாம்.
 அடுத்து இந்த லேயரை ஒரு நகலஎடுத்துக் கொள்ளுங்கள்.


 மீண்டும் ஒரு முறை Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்து போன் முறை பயன் படுத்திய அதே அளவான Radius=0.3 Amount = 1.5 Threshold = 0 பயன்படுத்துங்கள். இனி இந்த லேயரின் மோட் Lighten Only, என்று மாற்றுங்கள்


. இந்த லேயரின் Opacity 50% என்று குறையுங்கள். படம் அழகாக மெருகேறும்.
 உபயோகித்துப் பார்த்து உங்களின் மெருகேறிய படத்தை பின்னூட்டத்தில் தெரியத்தாருங்கள்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff