Monday, December 27, 2010

'அதிகாலை' போட்டியில் பங்குபெற்ற படங்களில் முந்திய டாப்10 படங்களை ஏற்கனவே அறிவித்திருந்தேன். டாப்10க்குள் வராத மற்ற படங்களுக்கு குட்டி குட்டி விமர்சனங்கள் பிக்காஸாவெப்பில் எழுதியும் இருந்தேன். இனி, இம்மாதப் போட்டியின் வெற்றிப் படங்களை காண்போம்.

மூன்றாவது இடத்தில், துளசி கோப்பாலின், ஃபில்ட்டர் காஃபி. தொழில்நுட்பத்தில், 'பன்ச்' கூட்ட இன்னும் பல வாய்ப்புகள் இருந்தாலும், தலைப்புக்கு ஏற்ற காட்சியை அமைத்து, படம் பிடித்த விதம் அருமை. மயிலேறி உலகத்தை சுத்தி ஞானப்பழத்தை அடையாமல், சமயோஜித புத்தியால் சிம்பிளா மேட்டரை முடித்த கண்பத் மாதிரி, வீட்டுக்குள்ளையே அதிகாலையை கொண்டுவந்த துளசி மேடத்துக்கு வாழ்த்துக்கள் :)


இரண்டாம் இடம், Teton national parkஐ ஒரு கேலண்டர் ஷாட் அளவுக்கு துல்லியமா எடுத்து அனுப்பிய அருணின் படத்துக்கு. அட்டகாசமான ஷாட். வாழ்த்துக்கள் Arun.


முதல் இடம் Subashன் இந்தப் படத்துக்கு. இந்தப் படம் முதல் முறை பார்த்ததுமே, பச்சக்னு மனசுல ஒட்டிக்கிச்சு. மஞ்சள் வெயிலும், சிறுவனின் பிம்பமும், அவன் விட்டுச் செலும் கால் தடமும், கறுமேகமும் ரொம்பவே அழகு. குட் கேப்ச்சர். Subash வாழ்த்துக்கள்.


Subankan, Nagappan, Mohan Kumar உங்களதும் ஸ்பெஷல் கவனம் பெற்றது. வாழ்த்துக்கள்.

MohanKumar, உங்க படத்தின் கலர்டோன், ரொம்பவே அருமையாக இருந்தது. அந்த ஆளு மட்டும் நிக்காம இருந்திருந்தா, படம் எங்கையோ போயிருந்திருக்கும். டஃப் லக் ;)


போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

அனைவருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. வரும் வருடம் அனைவர் வாழ்விலும் நல்ல பல மாற்றங்களை கொண்டுவர வாழ்த்துக்கள்.

Thursday, December 23, 2010

வணக்கம். 'அதிகாலை' போட்டிக்கு மொத்தம் 42 படங்கள் வந்திருந்தன. அதில் கடைசி தேதியை கடந்து வந்த மூன்று படங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மன்னிக்கவும்.39ல் டாப்10ஐ கீழே கட்டம் கட்டியுள்ளேன். தலைப்புக்கு பொருநதியும் , கண்டதும் ஈர்க்கவும் செய்த படங்கள் இவை. பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றீஸ். மறக்காமல், நிறை குறைகளை அந்தந்த படத்தின் மேல் அழுத்தி picasawebல் பின்னூட்டமாக தெரிவிக்கவும்.

போட்டிக்கான படம், 'அதிகாலையில்' எடுத்ததுதானா என்று JPG போலீசிடம் எடுத்துச் சென்று விசாரிக்கவில்லை. எல்லாம், ஒரு நம்பிக்கையின் பெயரில் மட்டுமே அலசப்பட்டது :)

(in no particular order)
Nanthana:


Subankan:


Tulsi Gopal:


Subash:


Anton:


Arun:


Nagappan:


K Mohan Kumar:


Aayilyan:


Prabhu:

Sunday, December 19, 2010

PiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1) அந்த தளத்துக்கு போங்க.
2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.
3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.
4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.

அப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்

இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

Saturday, December 18, 2010

மழை சுழர்றி அடிக்கும் இந்த நேரத்தில் கரு நீல வானத்துடன் புகைப்படம் எடுப்பது எளிதுதான். ஆனாலும், இந்த கரு நீல வானத்தை கிம்பில் எப்படி கொண்டுவருவது பற்றி இங்கே.




படத்தை கிம்பில் திறந்து லேயரை நகலெடுத்துக் கொள்ளுஙகள்.




லேயர் Multiply Mode க்கு மாற்றுங்கள. படம் மாறி இருக்கும்.



இனி Channel Mixer தெரிவு செய்ய்ங்கள்.




Monochrome தெரிவு செய்து விட்டு, சிகப்பை 200 க்கு மாற்றுங்கள். நீலமும் , பச்சையும் , உங்களின் இரசனைக்கு ஏற்ப குறைக்க வேண்டும். நான் இந்த அள்விற்கு குறைத்துள்ளேன்.



இனி லேயர் மாஸ்க் உபயோகித்து வானம் தவிர்த்த தேவையற்ற பகுதிகளை நீக்கி விடுங்கள். நான் லேயர் மாஸ்க் முழுமையாக முடிக்கவில்லை சோம்பேறித்தனம்தான். :)




Wednesday, December 15, 2010

ஏற்கெனெவே சொன்னேன் படம் எடுக்கும் போது அந்தப் படத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று. மனிதர்களைப் படம் பிடிக்கும் போது தவிர்க்கப் பட வேண்டியவை சில உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

1. வெட்டப் பட்ட உருவங்கள் (பாதி உடல் படத்திலும் பாதி வெளியிலுமாக இருந்திடும் உருவங்கள், அதுவும் ஃப்ரேமில் இருந்து வெளியே செல்பவரின் அரை உருவம்).

2. முன் பகுதியிலோ அல்லது பக்கங்களிலோ, தனியாகக் கிடந்திடும் காலணிகள், துடைப்பம், பழய செய்தித் தாள்கள் இவை படத்தினுள் இருக்கக் கூடாது. படம் எடுக்கும் போது இருக்கும் ஆர்வத்தில் இவை இருப்பதை நீங்கள் பார்க்கத் தவறி விடுவீர்கள். பின்னால் படம் வந்த போது தான் புரியும் இவற்றின் கோரம். இன் நாட்களில் இவற்றைப் படம் எடுத்தபின்னும் அழித்திட முடியும் என்பது வேறு விஷயம். ஆனால் இது எல்லாராலும் முடியாது.

3. மனித உருவங்களின் பின்னிருந்து கிளம்பும் செடிகளோ, மரங்களோ. அவை அவர்கள் தலையில் இருந்து முளைப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்திவிடும்.

4. மர இலைகள், கிளைகள் வழியே வந்து உங்கள் பட நாயகன் / நாயகி முகத்தில் திட்டு திட்டாக விழுந்திடும் வெளிச்சம். (இப்படி எடுக்கப் பட்ட படம் அவருக்கு இல்லாத வெண் குஷ்டம் இருப்பது போன்ற் ஒரு பிரமையை உண்டாக்கி விடும்). இதே போன்று தரையிலும் சூரிய வெளிச்சம் திட்டுத் திட்டாக விழுமானால் அதுவும் படத்தைக் கெடுக்கும். அதே சமயம் திட்டாக விழுந்திடும் சூரிய வெளிச்சமே ஒரு நல்ல படத்தினை உங்களுக்கு அளித்திடலாம் கீழே உள்ள் படம் போல.


(படம்: சி.ராஜகோபால்)

5. எந்த நிலையிலும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று கேமிராவைப் பிடித்திருக்கும் கையின் நடுக்கம். சிலர் கேமிராவின் ஷட்டரை அழுத்தும் போது கேமெராவையே நகர்ந்திடச் செய்வர். இதைத் தவிர்க்க ஆள்காட்டி விரல் ஷட்டர் மீது இருந்தால் கட்டை விரலால் கேமிராவின் எதிர் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு இந்த இரு விரல்களுக்குமான இடை வெளி குறிகிடுமாறு செய்து ஷட்டரை இயக்க வேண்டும். மற்றொரு வழி கேமிராவை உங்கள் உட்லோடு ஒட்டினாற் போல வைத்துக் கொள்ளல். இரண்டாவதை விட முதல் வழி நல்லது.

-நடராஜன் கல்பட்டு

Wednesday, December 8, 2010


வணக்கம் நண்பர்களே..

prosumer
camera என்பது proffessional தேவை மற்றும் consumer தேவை, இவ்விரண்டு கேமராக்களின் கலவை என்பதால் இதை prosumer கேமரா என்று கூறுகின்றனர்..
அதாவது proffessional கேமராவில்(DSLR) இருக்கும் control வசதிகளும்,consumer கேமராவில் இருக்கும் எளிமைகளும் ஒரு சேர இந்த வகை கேமராவில் இருக்கும்.




இந்த வகை கேமராக்கள் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்படும் சென்சார் என்பது பட்ஜெட் மற்றும் advance compact கேமாராக்களில் வரும் சென்சாரின் அளவுகளோ அல்லது கொஞ்சம் அதிக அளவு சென்சார்களை தான் பயன்படுத்துகின்றனர்.

இதன் நன்மைகளை பார்ப்போம்,

1.பெரிய அளவிலான zoom range

இவ்வகை கேமராக்களில் zoom range என்பது மிக அதிகமாக இருக்கும்.. அதாவது 24-600mm,28-700mm என்று அதிக அளவில் இப்பொழுது வரத்தொடங்கி விட்டன.

இந்த மாதிரி zoom range DSLR ல் வாங்க வேண்டும் என்றால் சில சமயம் நாம் சொத்துக்களை விற்க வேண்டியது வரலாம்..
இதனால் அதிக zoom range விரும்புகின்றவர்கள்,பெரிய பெரிய லென்ஸ்களை வாங்கமுடியாத பட்ஜெட் காரணங்களினால் இக்கேமராக்களை வாங்கி பயன் பெறலாம்..

டீசெண்ட்டான wide angle(24mm) முதல் மிக அதிகமான tele end(675mm) வரை ஒரே லென்ஸில் சிறியதாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இது, பல DSLR லென்ஸ்களை எடுத்து சென்று மிகுந்த சிரமப்படுவதை போல் இல்லாமல் எளிதாகவும்,வெயிட் குறைவாகவும் இருக்கும்.. travelling செல்லும் போது இதன் பயன்பாடு நன்றாக புரியும்.

எனவே இவ்வகை கேமராக்களை super zoom camera என்றும் கூறுகின்றனர்..

2.DSLR மாதிரியிலான கையாலுதல்


சிறிய கேமராக்களில் நாம் படம் எடுக்கும் போது கேமராக்கள் சிறியதாக இருப்பதால் ஆடாமல் எடுக்க சற்று சிரமாக இருக்கும்.

prosumer கேமராக்கள், சிறிய கேமராக்களை போல் சிறியதாக இல்லாமலும் அதே சமயம் பெரிய DSLR வகைகளைப்போல் பெரிதாக இல்லாமலும் இருக்கும்.

இது கிட்டதட்ட DSLR மாதிரி தான் handling இருக்கும்.. இதன் ஷேப் மற்றும் grip இதெல்லாம் ஒரு DSLR மாதிரியே இருக்கும்..

ஒரு சில கேமராக்களில் DSLR லென்ஸ்களை போன்றே நாம் manual ஆக zoom செய்யலாம்.. இதனால் நாம் துள்ளியமாக zoom ஐ பயன்படுத்தலாம்..

இதை ஒரு குட்டி DSLR வகை என்று சொல்லலாம்..

3.DSLR மாதிரியிலான பயன்பாடுகள்


இவ்வகை கேமராக்களில் DSLRல் இருப்பது போல் அததெற்கென deticated பட்டன்கள் இருக்கும். அதாவது exposure , ISO , white balance போன்றவற்றை நாம் மெனுவிற்குள் சென்று மாற்றாமல் உடனடியாக பட்டன்களை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்....


நாம் live view ஐ பயன்படுத்தி (மேலே உள்ள படம் மாதிரி)படம் எடுக்கும் போது நமது shoulder தான் நமக்கு துணை.. ஆனால் இந்த மாதிரி நமது shoulder ன் துனையோடு படம் எடுக்கும் போது கண்டிப்பாக படம் ஆடாமல் எடுப்பதும், சில சமயம் சரியாக compose செய்யவும் சிரமமாக இருக்கும்..
ஆனால் இக்கேமராக்களில் DSLR ல் இருப்பது போல் நாம் கண்களை கேமராவுடன் ஒட்டி எடுப்பதற்கு வசதியாக EVF( electronic view finder) வசதியும் உண்டு..


இதனால் நாம் DSLR ல் எடுப்பது போல் ஒரு gripஆக இந்த கேமராவிலும் steady யாக படம் எடுக்கலாம்..


4.பெரிய லென்ஸ்கள்..


இதன் லென்ஸ் என்பது சிறிய கேமராக்களை விட சற்று பெரியது ஆகும்.. இதனால் optical quality என்பது சிறிய கேமராக்களை விட சற்று நன்றாக இருக்கும்.. அதே சமயம் ஒரு சில கேமராக்களில் நாம் DSLR லென்ஸ்களை போல் manual ஆகவும் zoom ஐ பயன்படுத்தலாம்.. இதனால் நாம் சரியான zoom அளவை எளிதாகவும் , வேகமாகவும் பயன்படுத்த முடியும்.
சிறிய கேமராக்களில் உள்ள electronic zoom adjustment ஐ பயன்படுத்தும் போது ஏற்படும் அசெளகர்யங்கள் இதில் (manual zoom) இல்லை..

5.பிற நன்மைகள்

  • • aperture range என்பது வேகமாகவும் கிடைக்கும்..
  • • raw formatல் படங்களை பதிவு செய்யும் வசதிகள் உண்டு. இதனால் post processing பிரச்சனையில்லாமல் பன்னலாம்
  • • external flash சிறிய கேமராக்களின் ஃப்ளாஷ் என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும்.. பெரிய ஃப்ளாஷ் பயன்படுத்த முடியாது,இவ்வகை prosumer கேமராக்களில் பெரிய external flash களை பயன்படுத்துவதற்கு external hot shoe வசதி கொடுக்கப்பட்டிருக்கும்


  • • low noise சிறிய கேமராக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் noise என்பது குறைவு.. இதனால் ISO வை பயமில்லாமல் அதிகப்படுத்தி படம் எடுக்கலாம்..
  • • macro வில் படமெடுப்பது என்பது இவ்வகை கேமராக்களில் மிகவும் நன்றாக depth of field கிடைக்கும்.subjectற்கும் லென்ஸிற்கும் 3cm வரை ஃபோகஸ் ஆகும். பெரிய macro lensல் கூட இவ்வசதி கிடையாது..

இதை தவிர சிறிய கேமராக்களின் நன்மைகளும்( சைஸை தவிர) உண்டு.

குறைகள்

  • • இவ்வகை கேமராக்களை பொறுத்த வரையில் zoom range என்பது அதிகமாக தான் இருக்கும். இதனால் கண்டிப்பாக zoom அதிகமாக,அதிகமாக optical quality என்பது கண்டிப்பாக soft ஆக தான் இருக்கும்..
  • • DSLR உடன் ஒப்பிட்டு பார்த்தால் prosumer கேமராக்களில் அதிக ISOவை பயன்படுத்தும் போது noise என்பது அதிகமாகவும் , details குறைவாகவும் இருக்கும்
  • • நாம் கண்களை ஒட்டி படம் எடுக்கக்கூடிய EVF(electronic view finder) என்பது ஒரு குட்டி LCD finder தான்.. நாம் live viewவில் எப்படி பார்த்து படம் எடுக்கின்றோமோ அதே மாதிரி தான் வேகம் குறைவாக இருக்கும்.. அதே சமயம் அதிக சூரியஒளியில் EVF பயன்படுத்தி படம் எடுப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்.. DSLR ல் இருக்கும் optical view finder என்பது இவ்வகை கேமராக்களில் கிடையாது.
  • • சிறிய கேமராக்களை விட பெரியதாக இருப்பதாலும்,electrical பயன்பாடு அதிகமாகவும் இருப்பதாலும் பேட்டரி life சற்று குறைவு.
  • • என்ன தான் DSLR மாதிரி இருந்தாலும்,இதன் சென்சார் என்பது சிறியது..இதனால் அதிக பிக்ஸல்களை பயன்படுத்தும் போது smudging,artifacts போன்ற திரித்தல்கள் அதிகம் இருக்கும்..post processing என்பது சற்று கடினமே..
  • • Auto Focus என்பது வேகம் குறைவாக இருக்கும் (DSLR உடன் ஒப்பிடும் போது).. வெளிச்சம் குறைவான நேரத்தில் சற்று தடுமாறும்.
  • • இதன் விலை என்பது கிட்டதட்ட DSLR கேமராக்களின் விலைக்கு இனையாக வரும்.
  • • லென்ஸ்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றுவதற்கு வழியே கிடையாது. fixed lens தான்..

தற்போதைக்கு சந்தையில் இருக்கும் சில சிறந்த prosumer கேமராக்கள்:

1.panasonic fz 35 ,2.canon sx 20 IS,
3.nikon P100



மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம் நண்பர்களே..

நன்றி
கருவாயன்



Friday, December 3, 2010

படத்தினுள் கோடுகளா? அப்படி என்றால்?

சில சமயம் நீங்கள் பிடிக்கும் படத்தினுள் உள்ள மனிதர்களோ, பொருட்களோ ஒரு கோடு போன்று அமையலாம். அது வரிசையாக நிற்கும் மரங்களாக இருக்கலாம்.
அல்லது ஒரு சாலையாக இருக்கலாம். சாய்ந்த கம்பமாக இருக்கலாம். அல்லது இரவில் வரிசையாக நின்று வெளிச்சம் தரும் விளக்குகளாக இருக்கலாம். அல்லது ஓடும் கார்களின் முன் விளக்குகளும் பின் விளக்குகளுமாக இருக்கலாம். அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் கூட்டமாக இருக்கலாம். வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளாக இருக்கலாம். அல்லது ஒருவர் பின்னர் ஒருவராக ரயில் வண்டி விளையாடும் குழந்தைகளால் ஏற்படும் கோடாக இருக்கலாம். அப்படிப் பட்ட கோடுகள் வரும் போது கவனிக வேண்டிய சிலெ விதிகள் உள்ளன.

கடிகார விளம்பரங்கள் பார்த்திருக்கிறிகள் தானே? அதில் உள்ள கடிகாரம் என்ன மணி காட்டும்? 10-10. ஏன் தெரியுமா? இதோ கீழே உள்ள மூன்று படங்களைப் பாருங்கள்.

படம் - 1


படம் - 2


படம் – 3


இந்த மூன்று படங்களில் உங்கள் கண்களை உறுத்தாமல் இருக்கும் படம் எது? அதே காரணத்திற்காகத் தான் கடிகார விளம்பரங்கள் 10-10 என்ற மணியைக் காட்டுகிறது.

‘சரி’ என்று சொல்வதற்கான குறியீடும் அது தானே?



அதனால்தான் உங்கள் படங்களில் உள்ள ‘கோடு’ சரி என்று சொல்லும் குறியீட்டினைப் போல அமைந்தால் அழகாயிருக்கும்.

‘கோடுகள்’ பற்றி சில விதிகள் உள்ளன என்று சொன்னேன். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. கோடுகள் ஒரு போதும் பட்த்தின் எல்லைகளைத் தொடக் கூடாது.

2. கோடு வளைவாக இருத்தல் நலம், கடிகாரத்தின் 10-10 போல.

3. கோடு ஒன்று வெளி எல்லையில் இருந்து உள்ளே சென்று முடிந்தால், அந்தக் கோடு முடியும் இடத்திலே உங்கள் படத்தின் முக்கியப் பொருள் இருக்க வேண்டும். அல்லது அங்குள்ள பொருள் உங்கள் கண்களை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். அதாவது அந்தக் கோடு உங்கள் கண்களை படத்திற்குள்ளேயே கட்டிப் போட வேண்டும்.

இந்த விதிகள் ஏன் என்று பார்ப்போம்.

‘கோடு’ படத்தின் உள்ளிருந்து ஆரம்பித்து எல்லை தாண்டிச் சென்றால் அதன் கூடவே உங்கள் கண்களும் சென்று விடும். பின் அவை படத்திற்கு மிண்டும் திரும்பி வர விருப்பப் படாது. “அடுத்த படம்?” என்று கேட்டிடும்.

கடிகாரத்தின் 10-10 மணி காட்டுதல் போல மைந்திருந்தால் அந்தக் ‘கோடு’ பார்ப்பவர் கண்களுக்கு இதமாகாக இருக்கும்.

மூன்றாம் விதியின் ஒரு சிறு மாற்றம் தான் ‘படத்தினுள் முக்கோணம்’ விதி என்பது.

கிழே உள்ள படத்தில் ஒரு முக்கோணம் உள்ளது. அது மூன்று கோடுகளால் ஆனது.


படத்தைப் பார்த்தவுடன் நம் கண்களை இழுத்திடுது ஹரிகேன் விளக்கு. அந்த விளக்கும் பெரியவரின் இடது கையும் அதன் நிழலும் சேர்ந்து முதல் கோடு. இரண்டாவ்து கோடு பெரியவரின் வலது கையும் அதன் நிழலும். மூன்றாவது கோடு சிறுவனும் அவன் கையில் உள்ள புத்தகமும். இதில் மூன்றாவது கோடு மீண்டும் முதல் கோட்டினைப் பார்த்தே இருப்பதால் உங்கள் கண்கள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து படத்தையே சுற்றிச் சுற்றி வரும்.

-நடராஜன் கல்பட்டு

Thursday, December 2, 2010

வணக்கம். அப்படி இப்படீன்னு இன்னொரு வருஷமும் முடியப் போவுது.டிசம்பர் மாதப் போட்டிக்கு எல்லாரும் தயார் தானே?

சென்னையில் இருந்த நாட்களில், மெத்தப் பிடித்த நாட்கள், டிசம்பர் நாட்கள். காலைக் குளுமையும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதிகாலையில் இடப்படும் கோலங்களும், காலையில் நடந்து செல்லும்போது, வாயிலிருந்து வரும் பனிப் புகையும், தெருவை சூழ்ந்து நிற்கும் வெள்ளைப் பனியும், மஃப்ளர் மண்டைகளும், ரம்யமான நினைவுகள்.

இந்த மாசப் போட்டிக்கு தலைப்பு அதிகாலை

அதிகாலையில் எடுக்கப்பட்ட படமா இருக்கணும். படத்தில், பனி படர்ந்த தெருவும் இருக்கலாம், அதிலிருக்கும் ஃப்ரெஷ்ஷான கோலமும் இருக்கலாம், பேப்பர் போடும் பையனும் இருக்கலாம், ஓரமா குந்திக்கினு பீடி பிடிக்கும் பெரியவரும் இருக்கலாம், டீ ஆத்தும் நாயரும் இருக்கலாம், பால் பூத்தில் வரிசையாக நிற்கும் யுவதிகளும் இருக்கலாம், ஜாகிங்க் செல்லும் பெருசுகளும் இருக்கலாம், கோலம் போடும் பெண்டிரை சைட் அடிக்கும் யுவன்களும் இருக்கலாம்,.. இப்படி. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.

மத்த விதிமுறை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுதான். இங்க பாத்துக்கங்க.

***படங்களை அனுப்ப வேண்டிய ஈ.மடல் pitcontests2.submit@picasaweb.com

சில மாதிரிகள்:
Morning walk…

Let us sail till we become frail ...

Tea Maker Chennai Style

காலை வணக்கம்

Wednesday, December 1, 2010

ஒளியில் தெரிந்தவை... வென்றவை


இந்த மாத படங்கள் அருமையானவை. அதிலும் முதல் சுற்றில் வென்றவைகளில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்ய உண்மையில் சிரமாகிவிட்டது.





வினீத் ஜான் ஆப்ரஹாம் படம் போட்டியில் இருந்தது. ஆனால் படம் அளவு ரொம்பவும் சிறியதாக இருந்தது. குறைந்தது 800 x 600 அளவிலாவது கொடுங்கள் அடுத்தப் போட்டியில் இருந்து.

மெர்வின் ஆண்டோ படம் - அருமையான முயற்சி. ஆனால் ஒளி என்ற கான்செப்டை விட நீரும் நெருப்பும் சரியாகப் பொருந்தும்.

செந்திலின் படம் இன்னும் கொஞ்சம் அதிகம் டீடெயில்ஸ் இருந்திருக்கலாம்.



ஆக மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொள்ளும் இரண்டு படங்கள் :
ராஜேஷ் :

மற்றும்

வெங்கட் நாராயணன்.





இரண்டாம் இடம் கிங்க்ஸ்லி சேவியர் படத்துடன் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது

அமைதிச் சாரல் :









முதல் இடத்தில் இருப்பது


மோஹன் :

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்

நன்றி
ஜீவ்ஸ்

Saturday, November 27, 2010

வணக்கம் மக்களே.

ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல் போலிருந்தாலும் கடைசீ நேரத்தில் ஒளிமழையாய் பொழிந்து விட்ட அனைவருக்கும் நன்றி.

முதல் சுற்றில் தேர்வான படங்கள் இதோ. இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திப்போம்.


மோஹன் :






செந்தில் குமார் :


ராஜேஷ் :
மெர்வின் ஆன்டோ :


லாரி SMA :

சத்யா :


கபில்ஸ் :


ராமலக்ஷ்மி :




ஷ்ரேவ்யன் :




அமைதிச் சாரல் :


கிங்க்ஸ்லி சேவியர் :




அரவிந்த் நடராஜ் :


வினீத் ஜான் ஆப்ரஹாம்.


வினோத் :

வெங்கட் நாராயணன்.

ரம்யா :


நனானி :


ஆன்டன் :



Seyone SOMA :


நன்றி :

ஜீவ்ஸ்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff