Thursday, September 30, 2010

அன்பு மக்களே வணக்கம்...

கடந்த மாத போட்டியில் அருமையாக வளர்ப்பு பிராணிகள் படங்களை அனுப்பி கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்..

இந்த மாதத்திற்கான போட்டி என்ன வைக்கலாம் என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப, என் வீட்டுக்கு வெளியே ஒரே குழந்தைகள் சத்தம்.. என்னென்னு போய் பார்த்தா எல்லா குழந்தைகளும் தன்னை மறந்து சத்தம் போட்டு நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்...

எல்லாம் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் இந்த விளையாட்டு... அவ்வளவு மகிழ்ச்சி..

`மாலை முழுவது விளையாட்டு` என்பது இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி விடுமுறை நாட்களின் மாலையில் மட்டும் தான் என்று சுருங்கிவிட்டதை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.. தினமும் விளையாடினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்..

உடம்பு,மனசு இந்த இரண்டும் ஒரு சேர புத்துணர்வு அடைவது என்பது இந்த விளையாட்டினால் மட்டும் தானே..

எனவே, இந்த மாதம்,
போட்டிக்கான தலைப்பு ` விளையாட்டு`
போட்டிக்கான விதிமுறைகள்,எப்படி அனுப்புவது என்பது இங்கே... கானலாம்..
போட்டிக்கான கடைசி தேதி :15-10-2010

வாங்க மக்களே.. ஏதோ நம்மளால முடிந்த அளவு இந்த புகைப்பட போட்டியின் மூலமாக `விளையாட்டு` என்பது நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியம் என்பதை கொஞ்சம் விழிப்புணர்வூட்டுவோம்..

indoor games , outdoor games என்று எந்த விளையாட்டு வேண்டுமானாலும் விளையாடலாம்..ஆனா விதி மட்டும் விளையாடக்கூடாது..

ச்சும்மா பூந்து விளையாடுங்க மக்களே..

-கருவாயன்..

Monday, September 27, 2010

வணக்கம் மக்கா,
இந்த முறை போட்டிக்கு வந்த வளர்ப்பு பிராணிகள் அனைத்தும் அழகு. நாம எந்த பிராணியையும் வளர்க்கலைன்னு ஏக்கமா போச்சு. போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்கள் கீழே.

மூன்றாம் இடம் - கபில்ஸ்
எளிமையான பச்சை பின்னணியில், கோல்டன் ரெட்ரீவர் மிகவும் அழகாக இருக்கு.


இரண்டாம் இடம் - விஜய் வெங்கடேஷ்
செம க்யுட்டான நாய் குட்டி. கருப்பு வெள்ளை தேர்வு சிறப்பாக உள்ளது. (Little blurring has enhanced the cuteness)


முதல் இடம் - மெர்வின் அன்டோ
செட்டப், கருப்பு பின்னணி மற்றும் லைட்டிங் இப்படத்தினை எளிதாக முதலிடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. [லென்ஸ் பத்திரம் அண்ணாச்சி ;) ]


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !

Wednesday, September 22, 2010

வணக்கம் மக்கா,
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !

என்னை கவர்ந்த முதல் பத்து படங்கள் கீழே.

விஜய் வெங்கடேஷ்


தேக்கிகட்டான்


ராம்


மெர்வின் அன்டோ


மது கோபால்


கபில்ஸ்


குரு


பாரதி


ஞானசேகரன்


சித்தா டிரீம்ஸ்மற்ற படங்களுக்கும், தேர்வான முதல் பத்திற்கும் உள்ள இடைவெளி சிறிது அளவு தான் எனவே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் !

Monday, September 6, 2010

வணக்கம் நண்பர்களே...

கடந்த பகுதிகள் வரை கேமரா வாங்குவதற்கு முன் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய பல் வேறு தகவல்களை பார்த்தோம்.. இனி ஒவ்வொரு கேமரா வகைகளை பற்றியும், அதன் பயன் மற்றும் தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்..

முதலில்,

பேசிக் கம்பேக்ட் கேமரா..
பொதுவா மக்கள் அதிகமா விருப்படுகின்ற கேமரா வகை இது...
ஏனென்றால் இது அளவில் சிறியது,எளிதாக எங்கே வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

ஈசியா பயன்படுத்த முடியுங்கிறதால, இதை பொதுவா point-and-shoot கேமரான்னும் சொல்லுவாங்க.

இந்த கேமராவை,கேமராவுக்கு பின்னாடி இருக்கிற LCD display screen ஐ முதன்மையா பயன்படுத்தி தான் படம் எடுப்பாங்க.ஒரு சில கேமாராக்களில் மட்டும், நமது பழைய கேமராக்களில் உள்ளது போல viewfinder(optical) ஐ பயன்படுத்தியும் எடுக்கலாம்..

ஆனால் இதில் 80-85% மட்டுமே நாம் நம் கண்களால் பார்க்க முடியும்.
அதாவது,உதாரணமாக 5 பேர் ஒரு போட்டோவுக்கு போஸ் குடுப்பாங்க,ஆனால் இந்த மாதிரி கேமரா viewfinder ல் 4 பேர் தான் தெரிவாங்க,ஆனா போட்டோ எடுத்த பின் result ல் 5 பேர் இருப்பாங்க. இதை தான் view finder coverage area என்று சொல்வார்கள்.

அதனால் இந்த வகை கேமராவில் viewfinderஐ பயன்படுத்தும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த compact கேமராக்கள் தற்போதைய நிலவரப்படி 6 முதல் 12 megapixels வரை கிடைக்கின்றன. பிக்ஸலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.. அதை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்...

இந்த வகை கேமராக்கள், நாம் கஷ்ட்டபடாமல் அனைத்து settings ம் (shutter speed,aperture and other settings) எளிதாக கேமராக்களே பார்த்துக்கொள்ளும்படி அமைக்கபட்டிருக்கும்.

இந்த வகையிலான கேமாரக்கள் அனைத்தும், நாம் நடைமுறையில் அதிகமாக பயன்படுத்த கூடிய போதுமான zoom range உடன் வருகின்றது.

விலை குறைவிலான compact கேமராக்கள் கொஞ்சம் slow effective aperture வகையில் தான் வரும். அதாவது f4 , f5.6 என்று.... இதனால் நாம் வெளிச்சம் குறைவான நேரங்களிலும்,வேகமாக நடக்ககூடிய,ஓடக்கூடிய இடங்களிலும் இந்த வகை கேமராக்களை focus செய்வது சிரமமே.. இதை பற்றிய விரிவான தகவல்கள் இங்கே..

இவ்வகை கேமராக்களில் பொதுவாக ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால்,அது shutter lag தான்..

shutter lag என்றால் ஒரு image ஐ நாம் படம் பிடிப்பதற்காக கேமராவில் click செய்தபின், அந்த imageஐ கேமரா பதிவு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரமே shutter lag..

இவ்வகை compact கேமராக்களில் shutter lag என்பது மிக அதிகம்..
உதாரணமாக, இரண்டு மூன்று பேர் வரிசையாக நடந்து செல்கிறார்கள்,அவர்களில் நாம் முதலாவதாக நடப்பவரை click செய்வோம்,ஆனால் shutter lag பிரச்சனை காரணமாக கேமரா இரண்டாமானவரையோ,மூன்றாமானவரையோ படம் பிடித்து லொள்ளு பன்னும்..

இதனால் நமக்கு ACTION,WILDLIFE,SPORTS போன்ற போட்டோக்களை எடுக்க ஒத்து வராது.

ஆனால் landscape,casual shots,still shot,family shot போட்டோக்களை எடுக்க இந்த வகை மிகவும் சிறந்ததே..

ஏனென்றால் இதனுடய sensor size சிறியதாக இருப்பதால் zoom lens அளவும் சிறியதே..அதனால் மற்ற கேமரா வகைகளை போல் இல்லாமல் இதனுடைய depth of field கொஞ்சம் அதிகமாக இருக்கும்..

அதாவது உதாரணமாக,50mm zoom( 35mm format) அளவில் இரண்டு பேரை வைத்து DSLR ல் போட்டோ எடுக்கும் போது ஒருவர் நல்ல தெளிவாகவும்,மற்றொருவர் கொஞ்சம் தெளிவில்லாமலும் இருப்பார்.
அதே 50mm zoom( 35mm format) அளவில் smaller sensor size கொண்ட compact கேமராவில் எடுத்தால் இரண்டு பேரும் நல்ல focus ல் இருப்பார்கள்..

இதை extended depth of field என்று சொல்வார்கள்.

இவ்வகை கேமராக்களில் உள்ள நல்லது,கெட்டது என்னவென்று பார்ப்போம்,

நிறைகள்...

 • சிறியது,அதனால் எங்கு வேண்டுமானலும் எளிதாக எடுத்து செல்லலாம்.
 • பயன்படுத்துவதும் எளிது.
 • விலை குறைவு.(விலை அதிகமும் உண்டு)
 • திருட்டுதனமாக எடுப்பதற்க்கு மிகவும் பயன்படும்.
 • லென்ஸ் மாற்ற இயலாது,அதனால் dust கேமராக்குள்ளே செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு.
 • LANDSCAPE,FAMILY SHOT, சில வகை MACRO SHOTS எடுக்க சிறந்தது.
 • live view ஆக போட்டோ எடுக்கலாம்.
 • ஒரே குட்டி கேமராவில் பல feautres..
 • உயர்ரக வீடியோ mode

குறைகள்...

 • நம் கையில் எந்த கண்ட்ரோலும் கிடையாது..எல்லாம் கேமரா தான் முடிவு செய்யும்..
 • zoom range குறைவு.இதனால் தூரத்தில் இருப்பதை எடுப்பதற்கு பயன் படாது.இருப்பினும் நமது நடைமுறைக்கு போதுமான அளவு zoom range இருக்கும்.
 • shutter lag அதிகம்.இதனால் வேகமாக எடுக்க முடியாது.
 • picture quality என்பது மற்ற கேமரா வகைகளை compare செய்தால் குறைவு.
 • flash power குறைவு.உதாரணமாக flash effect முகத்திற்கு நன்றாக வரும், மற்ற பகுதிகளான உடம்புக்கு டல் அடிக்கும்
 • ஒரு சில கேமராக்களை தவிர,LCD screen ஒன்று தான் நாம் படத்தை கம்போஸ் செய்யும் வழி.. view finder கிடையாது.அப்படியே இருந்தாலும் அது சிறியதாக தான் இருக்கும்.LCD screen கொஞ்சம் scratch ஆனாலும் நாம் கேமராவை பயன்படுத்துவது சிரமமாகிவிடும். இதனால் LCD screen ஐ மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
 • அதிகமான சூரிய வெளிச்சத்தில் LCD screenஐ பயன்படுத்தி படம் எடுப்பது மிகவும் சிரமம். இதனால் சரியான exposure அளவை தெரிந்து கொள்வது மிகவும் சிரமம்.
 • battery life கம்மி..viewfinder ஆக LCD screenஐ அதிகமாக பயன்படுத்துவதால் battery அதிகமாக இழுக்கும்.இதனால் அடிக்கடி recharge செய்யவேண்டும்
 • noise அதிகம்... sensor சிறியதாக இருப்பதால் crop factor அதிகம் இருக்கும் .. எனவே iso 200க்கும் மேல் noise இல்லாமல் எடுப்பது மிக கஷ்டம்..இதனால் வெளிச்சம் குறைவான இடங்களில் படம் எடுப்பது சிரமம்.
 • sensor size சிறியதாக இருப்பதால் கொஞ்சமாக crop செய்தாலே picture quality மோசமாகி விடும்..இதனால் பெரிய size ப்ரிண்ட் என்பது சிரமம்..
 • manual zoom கிடையாது..ELECTRONIC ZOOM ஐ இயக்குவது சில நேரங்களில் கடினம்..
 • ultra wide angle இன்றைய சிறிய கேமரா டெக்னாலஜியில் கிடையாது.. இன்று வரையில் 24mm என்பதே சிறிய வகை கேமராக்களில் அதிகமான wide angle.
TIPS..
 • உங்கள் தேவைகள் என்ன என்பதை தவிர வேறு எதற்காகவும் பணத்தை waste செய்யவேண்டாம். அது பெரிய பலன் தராது.
 • optical zoom அளவை மட்டும் பாருங்கள்,digital zoom ஐ பார்க்க தேவையில்லை. இதை பற்றி தகவல்கள் இங்கே..
 • zoom அளவு என்பது 28mm அல்லது அதற்கு கீழ் உள்ளதாக பார்த்து வாங்கவும்...long zoom range ஐ விட wide zoom range தான் மிக முக்கியம்.
 • 35-120mm என்பதை விட 28-100mm என்பதே சிறந்த zoom range ஆகும்.. இதை பற்றி தகவல்கள் இங்கே
 • நாம் படம் எடுப்பதற்கு viewfinder என்பது LCD screen ஒன்று தான் வழி..எனவே LCD screenஐ பத்திரமாக பாதுகாக்கவும்.ஒரு சில கேமராக்களில் optical view finder உண்டு,ஆனால் அது மிகவும் சிறியதாகவும்,பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்காது.
 • லென்ஸை மாற்றுவதற்கு வழியே கிடையாது எனவே லென்ஸ் மீது கை,அழுக்கு படாமல் பார்த்துகொள்ளவும்.
 • 6 pixel என்பதே போதும்,எனவே pixel அதிகமாக இருந்தால் குவாலிட்டி நன்றாக இருக்கும் என்று செலவு செய்ய வேண்டாம்..இப்போது கிடைக்கும் விலை குறைவான கேமராக்களே குறைந்தபட்சம் 8 MP யாக தான் வருகிறது..எனவே pixelஐ பற்றி கவலை பட வேண்டாம்.
 • எதுவாக இருந்தாலும் நீங்களே கையில் பயன்படுத்திய பின் வாங்கவும்..
 • VR(nikon),IS(canon),MIOS(panasonic),steady shot(sony) இந்த feature இருப்பதாக பார்த்து வாங்கவும்..இதன் பயன் பெரிய அளவில் இல்லை என்றாலும்,ஒரு சில விஷயங்களுக்கு கொஞ்சம் பயன்படும்.. இதை பற்றி தகவல்கள் இங்கே..
 • பில்,வாரண்ட்டி வேனுங்கறவங்க show room லேயே வாங்குவது நல்லது..விலை பற்றி கவலைப்பட கூடாது..

சரி நண்பர்களே மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.. இந்த பகுதி குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

நன்றி
கருவாயன்..

Wednesday, September 1, 2010

வணக்கம் மக்கா,
உங்க வீட்டுக்கு புதுசா வந்து, பின்னாடி உங்க வீட்டில் ஒருத்தரா மாறிவிடுகின்ற "வளர்ப்பு பிராணிகள்" தான் இந்த வார தலைப்பு.

உங்களுடைய நண்பர்களை வித விதமாக படம் எடுத்து, எங்களுக்கு "pitcontests2.submit@picasaweb.com" என்ற முகவரிக்கு அனுப்பவும்.

எடுத்துக்காட்டு படங்கள் கீழே,
படங்களுக்கு நன்றி நந்து

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff