ஓஹோ, நான் எப்படி ஒரு குழு அமைப்பது?தலைப்பு: 'என் நகரம்' அதாகப்பட்டது, ஏதாவது ஒரு நகரை மையமாகக் கொண்டு, அந்த நகரின், மக்கள், கட்டடங்கள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், இயற்கை எழில், அன்றாட வாழ்க்கை, நல்லது, கெட்டது, கண்டது, கேட்டது, இப்படி எதை வேண்டுமானாலும், அழகாய் க்ளிக்கி படங்களை போட்டிக்கு சேர்க்கலாம். ஒரு குழு, ஒரே ஒரு நகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு படங்கள் அனுப்பவேண்டும். அதாவது, 'சென்னைக் குழு'ன்னா, சென்னை சார்ந்த விஷயங்கள் மட்டுமே படத்தில் இருக்கலாம்.
பிற்சேர்க்கை: சிலர், மிகச் சிறிய நகரங்களில் வசிப்பவராயின், உங்கள் அருகாமையில் இருக்கும் நகரங்களை சேர்த்து அனுப்பலாம். உதாரணத்திர்க்கு Udayabaskar, Mountain House என்ற குட்டி நகரில் இருக்கிறார். அவர், அருகாமையில் உள்ள San Franciscoம், மேலும் சில நகரங்களையும் இணைத்து, 'Silicon Valley' என்ற தலைப்பில் குழுவை அமைக்கலாம்.
ஏற்கனவே சொன்ன மாதிரி, இது பரீட்சாதார முறையில் நடத்தப்படும் முதல் போட்டியாதலால், வளைந்து நெளிந்து, இதை முன்னேற்றுவோம். 'என் நகரம்' என்பதை விட, 'எங்க ஏரியா' என்பது பொறுந்தும் :)
குழுவை அமைத்துக் கொள்ளும் பணியை உங்களுக்கே விட்டுவிடுகிறொம். யார் வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் இணைந்து குழுவை அமைக்கலாம். குழுவில் இத்தனை பேர்தான் இருக்கவேண்டும் என்று வரைமுறை கிடையாது. ஆனால், குறைந்த பட்சம் இருவராவது இருக்கவேண்டும். 'என் நகரம்'னு தலைப்பு உள்ளதால், குழுவில் உள்ளவர்கள் அந்தந்த நகரில் வசிப்பவர்களாக இருத்தல் சாலச் சிறந்தது. குழு அமைத்தலை சுலபமாக்கும் வகயில் ஒரு கூகிள் ஃபார்ம் உருவாக்கி வைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரும், உங்கள் பெயர், ஈ.மடல், வசிக்கும் நகரத்தை, ஃபார்மில் பூர்த்தி செய்தால், உங்கள் நகரில் இருக்கும் மற்றவர்களுடன் குழு அமைக்க சுலபமாய் இருக்கும். (இதுவரை இணைந்துள்ளவர்களின் பெயர் பட்டியலை பார்க்க இங்கே சொடுக்கவும்)எல்லாம் சரிதான், எங்க குழு எத்தனை படம் அனுப்பணும், எப்படி அனுப்பணும்?
மாதாந்திர போட்டிக்கு ஈ.மடல் செய்யச் சொல்வோம். இதுக்கு அப்படிப்பண்ணா சரிவராது. 'என் நகரம்' என்ற தலைப்பிருப்பதால், குறைந்த பட்சம் 50 படங்களாவது இருக்கணும். அதிகபட்சம், 120 படங்கள். படங்களை, அந்தந்த குழுவே ஒரு picasa album தயார் செய்து, அதில் படங்களைப் போட்டு, எங்களுக்கு ஆல்பத்தின் URLஐ தெரியப் படுத்தணும். ஆல்பத்தை share செய்து, அனைவருக்கும் படங்கள் தெரியும் வண்ணம் செய்யணும். ஒவ்வொரு படத்தின் கீழும், அந்த படத்தை எடுத்தவரின் பெயர், இடத்தின் பெயர், இடம் சார்ந்த மேல் விவரங்கள், EXIF, மற்ற விவரங்களையும் தரவும்.எப்படி வெற்றி குழுவை தேர்ந்தெடுப்பீங்க?
PiT குழும உறுப்பினர்கள் நடுவர்களாக இருந்து, வெற்றி ஆல்பத்தை தேர்ந்தெடுப்போம்.பரிசு கிரிசு உண்டா?
குழுவிற்கென தனிப் பரிசு இருக்காது. எவ்வளவு பேர் பங்குபெறுகிறார்கள், ஆல்பம் எப்படி உருப்பெறுகிறது, என்பதைப் பொறுத்து, வெற்றி பெறும் 'என் நகரம்' ஆல்பத்தில் உள்ள படங்களை, புத்தக வடிவில் (ஒரே ஒரு photo book மட்டுமே அச்சிடப்படும். புத்தகத்துக்கு வரவேற்பிருந்தால், மேலும் சில நகல்களை வெளிவரச் செய்ய முயற்சிக்கலாம் ) கொண்டு வரலாம் என்றிருக்கிறோம். புத்தகத்தை நம் பதிவர்/வாசகர் வட்டத்திலோ, வேறு மார்கத்திலோ, விற்கவும் முயற்சி செய்யப் படும். விற்று வரும் பணம், ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப் படும். புத்தக வடிவமாக வரும் என்பதால், ஒவ்வொரு படத்துக்கும், நான் மேலே சொன்னது போல், படத்தை எடுத்தவர்/எடுக்கப்பட்ட இடம் பற்றிய சுவாரஸ்யமான மேல் விவரங்கள் அளிப்பது மிக அவசியம்.கடைசி தேதி எப்போ?
வேறு ஏதாவது சட்ட திட்டம் இருக்கா?குழுவை சேர்க்கணும், 50 படத்துக்கு மேல தேடணும், எடுக்கணும் என்று பல வேலைகள் இருக்குமாதலால், இதற்கு மூன்று மாதம் ஒதுக்கலாம் என்று முடிவு. ஃபெப்ரவரி 28ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்படும். இந்த தேதிக்குள் எங்களுக்கு, உங்க குழு ஆல்பத்தின் URLஐ கொடுத்து விடவேண்டும். ஆல்பத்தில், உங்களின் நகரம் சார்ந்த அனைத்து படங்களும், தேவையான விவரங்களுடன் இருக்க வேண்டும்.
இப்போதைக்கு இவ்ளோதான். பரீட்சாதார முறையில், முதல் முறையாக, இதை முயல்வதால், சட்ட திட்டங்கள் அடிக்கடி கூட்டிக் கொறச்சு, இதை உந்த முயல்வோம்.குழு அமைத்து, சிறப்பாய் செயல்பட வாழ்த்துக்கள். திரைக்குப் பின்னால் குழு அமைக்கும் வேலை செய்து, படங்களை ஸைலண்ட்டாய் ஏற்றாமல், குழுவில் ஒருவரோ பலரோ, மொத்த வேலைகளையும், பதிவாகப் போட்டு அவ்வப்பொழுது தகவல் பறப்பினால், இந்த குழுப் போட்டி மேலும் சிறப்பாய் அமையும். ஏதாவது புரியலைன்னாலோ, வேறு கேள்விகள் இருந்தாலோ, கேட்கவும். போட்டியின் போது, PiT குழுவைச் சேர்ந்தவர்கள், அவரவர்களின் நகர குழுக்களுக்கு, இயன்றவரையில் உதவ முயல்வோம். பி.கு: டிசம்பர் மாத மாதாந்திரப் போட்டிக்கு விடுமுறை. அடுத்த மாதாந்திரப் போட்டி ஜனவரி 2010ல் ஒரு 'நவீன' தலைப்புடன் வரும். PiT குழுவினர் பலரும் விடுமுறையில் உள்ளதாலும், வாசகர்களும் அவ்வாரே 'பிசி'யாக இருப்பார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த முடிவு. London: Tower Bridge, by surveysan 1894ல் கட்டப்பட்டது. தேம்ஸ் நதியின் மேல் அமைந்துள்ளது. Camera: Canon EOS Digital Rebel XTi Exposure: 0.125 sec (1/8) Aperture: f/4.5 Focal Length: 18 mm ISO Speed: 400 Chicago: Navy Pier, by Nathas 1916ல் Lake Michiganஐ ஒட்டி கட்டப்பட்டது. Chicagoவின் மிகவும் ப்ரசித்திபெற்ற சுற்றுலாத் தலம்.
ஆலோசனைகள், திருத்தங்கள், கேள்விகள் வரவேற்கப்படுகின்றன :)
ReplyDeleteபதிவை போட்டபின்ன், எனக்கெழுந்த கேள்வி: சில நகரங்கள் ரொம்ப குட்டியா இருக்கும். சில பேருக்கு மேட்டர் கிடைக்காது, அருகாமையில் இருக்கும் நகரையும் சேத்தாதான் ஓரளவுக்கு படம் மாட்டும். யாராச்சும் இந்தமாதிரி நகரத்துல இருக்கீங்களா?
அதே போல், பெரிய நகர வாசிகள், மொத்த கவரேஜ் பண்ண முடியாது, நகரின் ஒரு பக்கத்தை மட்டும்தான் கவர் பண்ன முடியும். அப்படி யாராச்சும் இருக்கீங்களா?
உங்கள் குழுக்களுடன் கலந்தாலோசித்து தெரியப்படுத்தவும்.
நல்ல துவக்கம். பாராட்டிற்குறியது. இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா.. அருமை!
ReplyDeleteம்ம் சூப்பரான மேட்டர்தான் ! பார்ப்போம் நிறைய ஊரை பத்தியும் போட்டோஸ் வைச்சு நிறைய தெரிஞ்சுகிடலாம் :))
ReplyDeleteசின்ன ஊர்ல இருக்கறவங்க, அவங்களோட மாவட்டத்தை சேர்த்துகலாமா ?
ReplyDeleteSome Landmarks, places may be around 50-100kms from the city.
-nathas
சர்வேசன், நான் வசிப்பது கலிபோர்னியாவிலுள்ள Mountain House என்ற நகரத்தில். இது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிகச் சிறிய நகரம். இங்கு வீடுகளே அதிகம். :) இந்நகரம் Bay Area என்றும் silicon valley என்றும் அழைக்கப்படும் San Francisco மற்றும் அதைச் சுற்றியுள்ள சில நகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. எனவே, எனக்கு "என் நகரம்" என்பதை விட "Bay Area" அல்லது "Silicon Valley" என்பதே சரியான தலைப்பாக இருக்கும். ஏனெனில், இந்த நகரங்களெல்லாம் சின்னச் சின்ன நகரங்கள். ஐம்பது படங்கள் எடுக்குமளவுக்கு விஷயங்கள் வேண்டுமென்றால், Bay Area முழுக்கச் சுற்ற வேண்டும்! Any thoughts?
ReplyDeleteபுதியதோர் முயற்சி
ReplyDeleteஎங்களுக்கும் நல்ல பயிற்சி
எங்களுக்குள் வந்தது எழுச்சி
அடைய மாட்டோ ம் தளர்ச்சி
PiTக்கு வந்திடும் புகழ்ச்சி
அதனால் எங்களுக்கு மகிழ்ச்சி
நானும் முயற்சி செய்கிறேன் இந்த முறை. நன்றி.
ReplyDeleteவாவ், பிட் மிக கவனமாகவும் அழகாகவும் அடுத்த தளத்திற்க்கு நகர்வதை கானமுடிகிறது இதற்கான அனைத்து பெருமைகளும் குழுவிற்க்கே செல்லும். வாழ்த்துக்கள். ஆச்சர்யமான அடுத்த நகர்விற்க்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteநாங்களெல்லாம் ஏற்கனவே குரூப்பாத் தான இருக்கோம் ;)
ReplyDeleteஎங்க ஊரில் நான் மட்டுமதான் வலைப் பதிவர்...........என் குட்டிபொண்ணு அப்பப்போ எழுதுவா....நாங்க இருவர் குழுவா???ஹிஹிஹிஎங்க ஊரிலே நிறைய விஷயம் இருக்குங்க!
ReplyDeleteFrom
Jaipur.
Udayabaskar, Nathas, கீழிருக்கும் மேட்டரை இப்ப பதிவில் சேத்திருக்கேன். ஓ.கேவா?
ReplyDeleteபிற்சேர்க்கை: சிலர், மிகச் சிறிய நகரங்களில் வசிப்பவராயின், உங்கள் அருகாமையில் இருக்கும் நகரங்களை சேர்த்து அனுப்பலாம். உதாரணத்திர்க்கு Udayabaskar, Mountain House என்ற குட்டி நகரில் இருக்கிறார். அவர், அருகாமையில் உள்ள San Franciscoம், மேலும் சில நகரங்களையும் இணைத்து, 'Silicon Valley' என்ற தலைப்பில் குழுவை அமைக்கலாம்.
ஏற்கனவே சொன்ன மாதிரி, இது பரீட்சாதார முறையில் நடத்தப்படும் முதல் போட்டியாதலால், வளைந்து நெளிந்து, இதை முன்னேற்றுவோம். 'என் நகரம்' என்பதை விட, 'எங்க ஏரியா' என்பது பொறுந்தும் :)
Truth,
ReplyDeleteநன்றி, யோசனைகளுக்கு. தொடர்ந்து தரவும் :)
அருணா,
ReplyDelete////எங்க ஊரில் நான் மட்டுமதான் வலைப் பதிவர்...........என் குட்டிபொண்ணு அப்பப்போ எழுதுவா....நாங்க இருவர் குழுவா???ஹிஹிஹிஎங்க ஊரிலே நிறைய விஷயம் இருக்குங்க!
/////
ஜெய்பூர்ல கண்டிப்பா, நம்மூர் ஆளுங்க பலர் இருப்பாங்க. பெரிய குழுவா தேடுங்க :)
நான் வசிப்பது rotterdam, netherlands. ஊர் நல்ல பெருசு தான். ஆனா, தமிழர்கள் / இந்தியர்கள் எல்லாம் கிடையாது. சோ, நான் இன்னும் ஒரு ஆளா அந்நியன் மாதிரி வந்து கலக்கலா போட்டோ அனுப்பறேன். பரிசு கொடுங்க.
ReplyDeleteஎங்களது ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமம் , நான் மாவட்டம் முழுமையும் சேர்த்து கொள்ளலாமா ?
ReplyDeleteமணிகண்டன், சிங்கிளா வர முடியாது. செட்டு சேருங்க :)
ReplyDeleteமூர்த்தி, பதிவில் உள்ள பிற்சேர்க்கையில் சொன்னது போல், சின்ன நகரில் இருப்பவர்கள், அருகாமை நகரையும் சேர்த்து, 'என் சுற்றம்'னு உங்க மாவட்டத்தை போட்டு ஆல்பம் செய்யலாம்.
கலக்குங்க.
பிற்சேர்க்கை:
ReplyDeleteவெற்றி பெரும் ஆல்பத்தை புத்தக வடிவில் கொண்டு வருவோம் என்று சொல்லியிருந்தோம்.
இதில் முக்கியமான விஷயம், ஒரே ஒரு photo book மட்டுமே அச்சடிக்கப்பட்டு விற்க முயல்வோம்.
இதற்கு கிட்டும் வரவேற்பை பொறுத்து, மேலும் அதிக நகல்கள் அச்சடிக்க முயற்சிக்கலாம்.
சில பதிவுகளில், 'புத்தகமாவ வெளிவரும்' என்று எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். just wanted to set everyones expectations right :)
நன்றி மற்றும் ஒரு ஆலோசனை Man of The Group என்று மிக முக்கியமாக ஒருவருக்கோ அல்லது 2 நபர்களுக்கோ அளித்தால் குழுவாக மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு மிகிழ்ச்சியை தருவதோடு மட்டும் அல்லாமல் அனைவரும் அந்த இந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உந்துதலோடு சிறப்பாக படம்பிடிக்க உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து... PiT உறுப்பினர்கள் பரிசிலிக்கவும்...
ReplyDeleteகமலகண்னன்,
ReplyDeleteநல்ல யோசனை.
இம்முறை pure குழுப் போட்டியா நடத்திப் பாக்கலாம்.
ஆனா, ஒரு குழு வெற்றி பெற, குழுவுக்கு ஒரு 'நடத்துனர்' இருத்தல் சாலச் சிறந்ததுதான்.
'நடத்துனரை' தேர்ந்தெடுக்கும் பணியை அந்தந்த குழுக்கே விட்டுவிடுகிறோம் :)
23 cities so far, but mostly only one inidividual contestant from many of them.
ReplyDeleteBangalore
Bangkok
Chennai
Coimbatore
Dubai
Erode
Irvine or Orange County
Karur
London
Lyon, France
Madurai
Mangalore
Mayiladuthurai
Melbourne
New York
Paris, France
Perambalur
salem
SINGAPORE
Tiruchi
Tirunelveli
Tiruppur
Toronto
yaaravathu Phoenix la irrukeengala ?
ReplyDeleteசர்வேசன்,
ReplyDeleteஅட்டகாசமான முயற்சி. வெற்றிகரமாக கொண்டுசெல்ல வாழ்த்துகள்!
ஒருவரே இரு குழுக்களில் இருக்கலாமா? ஏனென்றால், இந்த ஊருக்கு(Orange County) ஆள் சேர்ப்பது நடக்காதுபோல. அப்படியே நடந்தாலும், ஜனவரி, ஃபெப்ரவரி மாதங்களில் மதுரையில் இருப்பதால் அந்த குழுவிலும் சேர்ந்துக்கலாமா? விளக்கம் ப்ளீஸ்
Amal, நல்ல கேள்வி.
ReplyDeleteஉங்களால், இரு குழுக்களுக்கும் சரிசமமாய் நேரம் ஒதுக்க முடியும் என்றால், தாராளமாகச் சேந்துக்கலாம். எங்களுக்கு ஆட்சேபணை இல்லை ;)
அட...நிறைய தமிழர்கள் ஜெய்ப்பூரில்...ஆனால் வலைப் பதிவர் NO!சரி தேடுறேன்!எங்க ஊரையும் சேர்த்துக்கோங்க!
ReplyDeleteAny group / anybody is there from Dammam or Saudi Arabia.
ReplyDeleteஎன்ன ஒரு மன-ஒற்றுமை?
ReplyDeleteஎன்னுடைய கைல என் முதல் டி-எஸ்.எல்.ஆர் வந்து ஒரு வாரம் ஆகுது. எதாவது உருபடியா பண்ணனும்கிற யோசனைல , நான் வசிக்குற பரோடா-வ ஒரு profile பண்ணனும்-நு இருந்தேன். So that I can use it in my Company annual arts exhibition, too.
இப்போ நல்ல ஒரு தளம் கிட்டியாசு...!
டீம் மெம்பெர் தான் சேக்கணும்.....!!!!
I think, whoever from UAE, Oman, Qatar, Saudi, Bahrain or Kuwait can join together as a group called 'Sprit of Arabia'. What u think?
ReplyDelete-MQN
I think, whoever from UAE, Oman, Qatar, Saudi, Bahrain or Kuwait can join together as a group called 'Sprit of Arabia'. What u think?
ReplyDelete-MQN
MQN, (Sprit = Spirit)
ReplyDeletenice title. i like it. அரேபிய ஷேக் புக் வாங்குவாரு :)
சர்வேசன், பாஸ்டன் ரொம்ப சின்ன ஊரு, ஏரியாவ எங்க மாநிலத்துக்கு Massachusetts (இத்த தமிழ்ல எழுதுறதுக்குள்ள தாவு தீந்துடும்) விரிவு படுத்திக்கறேன். டீம் பேரு கூட ரெடி - Majestic Massachusetts - மெம்பர்ஸ் சீக்கிரமா வாங்கப்பு - கலக்கிப்புடலாம்...
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
nsriram73@gmail.com
//SurveySan said...
ReplyDeleteMQN, (Sprit = Spirit)
//
ஓ! ஒரு 'ஐ' Out of focus ஆயிடுச்சா!! :) கண்டுக்காதீங்க.
sriram, Majestic Mass.....s பேரு சூப்பரு. யாருங்க அந்த ஸ்டேட்டுக்கு இப்படி டைப்பே பண்ண முடியாத மாதீரி ஒரு பேரு வச்சா? :)
ReplyDeleteMQN, எல்லாம் சகஜம்தான். லூஸ்ல விட்டுடலாம் ;)
Sriram and all,
ReplyDelete//மெம்பர்ஸ் சீக்கிரமா வாங்கப்பு - கலக்கிப்புடலாம்...
///
இதுவரை கோதாவில் உள்ள மற்ற உங்க ஏரியா ஆர்வலர்களை தொடர்பு கொண்டு குழு அமைக்கும் பணியை தொடங்கவும். பின்னூட்டத்தில் மட்டும் போட்டா, நிறைய பேர் பாக்க மாட்டாங்க.
http://spreadsheets.google.com/pub?key=tPwZmiGrFtzKEVPjpc_ybRQ&output=html
நல்ல முயற்சி. உள்ளூர் புகைப்பட ஆவலர்களுக்கு ஒன்றாக கலந்தாலோய்க்க நல்ல வாய்ப்பும் கூட. ஒரு குட்டி பட்டறையும் நடக்க வாய்ப்புள்ளது குறைந்த பட்சம் கருத்துப்பரிமாற்றமாவது கண்டிப்பாக நடக்கும்.
ReplyDeleteவாசி
தில்லியும் போட்டு வைங்க .. ஆளுங்க இருக்காங்க தேத்திடலாம்.. :)
ReplyDeleteThat's great idea... thanks MQN
ReplyDeleteLet me join in "Spirit of Arabia"
Eagerly,
Vennila Meeran
மக்கள்ஸ்,
ReplyDeleteஇதுவரை உருவாகியிருக்கும் குழுவீனர், உங்கள் விவரங்களையும், ஆல்பத்தின் 'டைட்டிலையும்' பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
மேலிருக்கும் பின்னூட்டங்களை பார்த்த வரையில்,ஒரே ஒரு டீம் தான் உருவாகியிருக்கு.
spirit of India - MQN, Vennila meeran
மத்த நகரவாசிகள் எல்லாம் பேசி சீக்கிரம் டீமையும் அதுக்கொரு பேரையும், ஃபார்ம் செய்யவும் :)
Bangalore
Bangkok
Chennai
Coimbatore
Dubai
Erode
Irvine or Orange County
Karur
London
Lyon, France
Madurai
Mangalore
Mayiladuthurai
Melbourne
New York
New Delhi
Paris, France
Perambalur
salem
SINGAPORE
Tiruchi
Tirunelveli
Tiruppur
Toronto
I want to join "Dubai" or "Spirit of Arabia" group . how to join
ReplyDeleteEjas, contact MQN and/or Vennila meeran and expand the team of Spirit of Arabia.
ReplyDeleteFor 'Spirit of Arabia' team, i would like to ask Mr.MQN to lead this team.
ReplyDeleteMQN please lead us...!
MQN please lead us...!
I want to be in "Chennai" team. I have submitted the form.
ReplyDeleteKindly tell me, who is going to lead the Chennai team and how we are going to proceed the contest?
-Saravanan D
சென்னை குழுவில் சேர்ந்தவர்கள் சேர விருப்பம் உள்ளவர்கள், kamalk023@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்...
ReplyDeleteபெங்களூரூ குழு அமைக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறோம்... எப்படி போகிறது என்பதைப் பொறுத்து உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்...
ReplyDeleteமும்பை குழு ஆரம்பிச்சாச்சா?
ReplyDeleteSpirit of Arabia
ReplyDeleteBengaluru
Chennai?
Mumbai?
Delhi?
please work towards finalizing your teams and update here. Danks..
முந்தைய போட்டிகளில் பங்கேற்ற படங்களை குழுப்போட்டிக்கும் (தலைப்பிற்கு சம்பந்தமான படங்கள்தான்) அனுப்பலாமா?
ReplyDeleteAmal, yes.
ReplyDeleteசென்னை குழுவின் சார்பாக உங்களை PiTயில் சந்திப்பதில் மகிழ்கிறேன்...
ReplyDeleteபெயர் : PITCH (PiT Chennai Heroes)
குழு தலைவர் : கமலகண்ணன்
குழு ஆலோசகர் : P.C.P.Senthil Kumar
குழு தொழிநுட்ப இயக்குனர்கள் : Senthil Ganesh & Mark Prasanna
மற்ற பொறுப்பளர்களும் உறுப்பினர்களும் விரைவில் அறிவிப்படுவார்கள்...
எங்கள் குழுவை ஓருங்கிணைத்து அனைவருக்கும் வேலைகளை பிரித்து கொண்டோ ம்...
விரைவில் அதற்கான விரிவான செய்தியுடன் வருகிறோம்
நன்றி...
கமலகண்ணன்
குழு தலைவர்
PITCH (PiT Chennai Heroes)
கமலகண்ணன், அருமை.
ReplyDeleteமொத்த விவரமும் கொடுங்க. அடுத்த பதிவு போட்டு உங்க டீமையும், இதுவரை சேந்துள்ள மத்த டீமை(?) பத்தியும் அறிவிச்சிடலாம்.
யாரப்பா சிட்னில இருக்கீங்க? mazhaippenn dot shreya at gmail dot com இற்கு அஞ்சல் போடுங்க.
ReplyDeleteplease share your team status.
ReplyDeleteஇராஜபாளையம் குழு விரைவில்.
ReplyDeleteசேர விருப்பம் உள்ளவர்கள், pg.nanda@yahoo.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்..
வணக்கம் , குழு போட்டியில் சேர விரும்புகிறேன் .யாராவது சிதம்பரம் குழுவில் இருக்கிறார்களா? இருந்தால் தெரிவிக்கவும்.
ReplyDeletemalar.ramesh69@gmail.com
இராஜபாளையம் குழுவின் விபரம்:
ReplyDeleteபெயர் : எழில் கொஞ்சும் இராஜபாளையம்.
குழு தலைவர் : நந்தகுமார்
உறுப்பினர்கள் : ரகுபதி, வெங்கடேஷ் குமார், கிருஷ்ண மூர்த்தி, ராதா ரமணன்.
மற்ற உறுப்பினர்கள் மற்றும் குழு ஆல்பம் விரைவில்.