Friday, January 30, 2015

வணக்கம் மக்கா இறுதிச்சுற்றில் வென்ற‌  படங்களை பார்ப்பதற்க்கு முன் வெளியேறும்  படங்களை பார்க்கலாம்.***


அப்பு :
அருமையான காட்சிதான் தலைப்பிற்கு பொருத்தமாக இருந்தாலும் குழந்தையை தாங்கும் தாயின் கரத்தை வெட்டிவிட்டது ஒரு குறை.

# பிலால் :படத்தில் வானம்,கடல்,சூர்யோதய காட்சிதான் பிரதானமாக அமைந்துள்ளது படத்தின் குறையாக ஆகிவிட்டது.

# தியாகராஜன் :

அபிநயத்தில் தாய்பாசத்தை வெளிப்படுத்தும் அருமையான காட்சி இங்கே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் குறையே "கிராப்" தான்.

சற்றே "டைட் கிராப்" செய்து காட்டியிருந்தால் அம்சமாக அமைந்து வெற்றிப்படமாக ஆகியிருக்கும் என்பது எனது கருத்து.

# ஜெயராம் அழகுதுரை :போட்டியின் தலைப்பிற்கு படம் பொருந்தினாலும் தாயும் சேய்களும் எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பதால் காட்சியின் ஆழம் சற்று குறைந்துவிட்டது.

# விக்னேஷ் :படத்தில் தெரியும் மதில் சுவர் மற்றும் பின்புலம் படத்தில் அதிகம் ஆதிக்கம் செய்கிறது,சற்றே "கிராப்" செய்திருக்கலாம்.

# வின்சன்: தலைப்பிற்க்கு ஏற்ற படமாக பார்த்தாலும் கூட படத்தில் நிறைய unwanted elements  இருப்பதே  பிரதானமான குறையாகும்.

# பிரேம்நாத் :அற்புதமான படம், ஆனால் படம் Tilt-Shift effect ல கொடுத்திருப்பதே படத்தின் குறையாகும்,குழந்தையின் ஒருகண் மட்டுமே போகஸில் இருக்கிறது,மேலும் பாசத்தை பொழியும் அன்னையை அவுட் ஆப் போகஸ்ல காட்டி அவரின் தலையையும் வெட்டி விட்டீர்களே....

எனவே மூன்றாம் இடத்தில் சஞ்சய் அவர்களின் படம்,படத்தில் சிலகுறைகள் புலப்பட்டாலும் காம்போசிஷன்  படத்தை தாங்கி நிற்பதால் மூன்றாமிடத்தில்.இரண்டாமிடம் பிடிப்பது சாந்தி மாரியப்பன் :முதலிடம் பிடிப்பது ஆதவன் :


பிரேமில் சில குறைபாடுகள் இருந்தாலும், தாய்பாசத்தை தாங்கி நிற்கும் அற்புதமான காட்சியமைப்பால் முதலிடம் பிடிக்கிறது வாழ்த்துக்கள் ஆதவன்.

நன்றி மக்கா மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த் 

Thursday, January 22, 2015

வணக்கம் பிட் மக்கா,

ஜனவரி 2015 பிட் மாதாந்திரபோட்டியில் முதல்சுற்றில் தேர்வான முத்தான பத்துப்படங்கள் எவ்வித வரிசையுமின்றி. ***

** 


ஆதவன் :அப்பு :பிலால் :தியாகராஜன் :ஜெயராம் அழகுதுரை :சாந்தி மாரியப்பன் :சஞ்சய் :விக்னேஷ் :வின்சன் :பிரேம்நாத் :விரைவில் முடிவு சுற்றுடன் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,

நித்தி ஆனந்த்

Sunday, January 18, 2015

வணக்கம் பிட் மக்கா,அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!இன்றைய கட்டுரையில் நான்,படங்களுக்கு அழகிய‌ தமிழில் "வாட்டர் மார்க்" இடுவது குறித்து விளக்குகிறேன். ***

** 
"பிட்" தளத்தின் மூலமாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னைத்தொடர்பு கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று "தமிழில் வாட்டர்மார்க் இடுவது எப்படி"?

பொதுவாக தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் தமிழ் எழுத்துருக்களைக்கொண்டு எளிமையாக டிசைன் செய்துகொள்வார்கள் ஆனால் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள். போட்டோஷாப்பில் தமிழில் தட்டச்சு செய்வது சற்று சிரமம்தான். எனினும் இக்கட்டுரை வெறும் "வாட்டர்மார்க்" தயார் செய்ய மட்டும் தான் என்பதால் எளிதாக தட்டச்சு செய்யும் முறையை பார்க்கலாம்.
முதலில் நமக்கு போட்டோஷாப்பில் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ் எழுத்துருக்களை நாம் முதலில் கணினியில் நிறுவவேண்டும். 

இக்கட்டுரைக்காக நான் இலவசமாக தமிழ் எழுத்துருக்களை வழங்கிடும் அழகி எழுத்துருக்களை  பரிந்துரை செய்கிறேன்.


இலவசமாக அவர்கள் அளித்திடும் இந்த எழுத்துருக்களுக்கு “பிட்” தளம் சார்பாக நன்றியையும் அவர்களுக்கு இக்கட்டுரை மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம்.

முதலில் அழகி தளம் சென்று அவர்கள் அளித்திடும் இலவச தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்துகொண்டு அவைகளை Zip or Rar சாப்ட்வேர்களைக்கொண்டு extract செய்துகொண்டு பின் அவைகளை C:\\windows\Fonts போல்டரில் பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
இப்போது உங்களது விசைப்பலகையில் இருக்கும் விண்டோஸ் கீயையும்+R ஐயும் அழுத்த Run டயலாக் பாக்ஸ் திறக்கும்.
இப்போது charmap என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்த character mapதிறக்கும்.


நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 தொகுப்பை பயன்படுத்தினால் நேரடியாக search ஆப்ஷனில்  தட்டச்சு செய்து character map ஐ திறந்துகொள்ளலாம்.


இப்போது character mapஇல் நீங்கள் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிய ஏதாவது ஒரு எழுத்துருவை தேர்வு செய்யவும் இக்கட்டுரைக்காக நான் “பட்டினத்தார்” என்பதனை தேர்வு செய்திருக்கிறேன்.

இப்போது உங்களுக்கு தேவையான எழுத்துகளை இருமுறை மவுஸால் கிளிக் செய்யவும் அவ்வளவே.

தமிழில் எழுத்துக்களை தட்டச்சு செய்தப்பின், copy என்பதனை கிளிக் செய்யவும்.


இப்போது மீண்டும் போடோஷாப்பிற்கு வரவும்,லேயர் பேலட்டில் புதிய லேயர் ஒன்றை உருவாக்கவும்,பின்னர் text டூலை தேர்வுசெய்துகொள்ளவும் பின்னர் போட்டோஷாப் எழுத்துருவில் நீங்கள் character mapல் தேர்ந்தெடுத்த அதே எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும் இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியிருப்பது “பட்டினத்தார்” எழுத்துருவாகும், எனவே நான் அதனை தேர்வுசெய்துகொள்கிறேன்,

எந்த நிறத்தில் வாட்டர்மார்க் இருக்கவேண்டும் என்பதனையும் தேர்வு செய்துகொள்ளவும்.


இப்போது Edit menu சென்று பேஸ்ட் செய்ய புதிய லேயரில் தமிழ் எழுத்துரு பேஸ்ட் செய்யப்பட்டிருக்கும்.


இப்போது உங்களுக்கு வாட்டர்மார்க் எந்த அளவில் தேவையோ அந்த அளவிற்க்கு எழுத்துருவின் அளவை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும். அதேபோல் வாட்டர் மார்கின் opacityயையும் உங்களுக்கு பிடித்த அளவில் செட் செய்துகொள்ளலாம்.


அவ்வளவுதாங்க தமிழில் எளிமையாக வாட்டர் மார்க் போட கத்துகிட்டீங்களா??

குறிப்பு : ஒவ்வொரு முறையும் இப்படி சென்று என்னால் தட்டச்சு செய்ய இயலாதுன்னு நினைக்கிறவங்க நான் ஏற்கனவே “பிட் “தளத்தில் பகிர்ந்திருக்கும் வாட்டர் மார்க்கை பிரஷ் ஆக மாற்றுவது எப்படி என்ற கட்டுரையை படித்து வாட்டர் மார்க்கை பிரஷ் ஆக மாற்றி எளிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


நன்றி,
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Wednesday, January 7, 2015

வணக்கம் பிட் மக்கா,வாசகர்கள் அனைவருக்கும் "பிட்" தளத்தின் இனிய 2015 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இம்மாத போட்டியின் தலைப்பு தாய்மை (அ) தாய்ப்பாசம் (Motherhood).

வழக்கம்போல அசத்தலான படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது "பிட்" தளம்.

இவ்வுலகில் வாழும் சகல ஜீவராசிகளின் தாய்ப்பாசத்தினை நீங்கள் படமாக்கி தரலாம். அனுப்பும் படங்களில் தாய் சேய்க்கான பாசம், பரிவு, அக்கறை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். சில மாதிரிப்படங்கள் உங்களது பார்வைக்காக :

ஐயப்பன் கிருஷ்ணன் :
#
என்ன தவம் செய்தனை.. யசோதா..


ராமலக்ஷ்மி ராஜன்:
#

 #

#


ஆன்டன் க்ரூஸ் :
#


நித்தி ஆனந்த் :
#

#
படங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி 20 ஜனவரி 2015.

படங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரியும் போட்டிக்கான விதிமுறைகளும் இங்கே.

மீண்டும் சந்திப்போம்
அன்புடன்,

நித்தி ஆனந்த்.

Monday, January 5, 2015

​வணக்கம் மக்களே,

சற்றே தாமதமான புத்தாண்டு வாழ்த்துகளுடன் உங்களை சந்திக்கிறேன்.  முதல்ல தாமதமான  அறிவிப்பிற்கும் மன்னிச்சுடுங்க. 

வழக்கம் போல நான் அறிவிப்பு குடுத்தா குறைஞ்ச படங்கள் தான் வருது. என்னன்னு தெரியல. எனக்கு அதிகம் வேலை வைக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டீங்க போல. வந்த படங்களில்  பத்து படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் 7 + 3 ஆக பிரித்திருக்கிறேன்.  இதுவும் இன்னொரு படம் என்று கடந்து செல்ல விடாமல் இன்னொருமுறை திரும்பப் பார்க்கச் செய்யும் படங்கள் எப்போதுமே வெற்றிப் படங்கள் தான். 

முதல் பத்து இடங்களில் ஏழு படங்கள் - எந்த ஒரு வரிசப் படுத்தலும் இன்றி. 

Dr.Dolittle

10ல் இடம் பிடித்திருக்க வேண்டியது. படத்தை அனுப்பும் போது.., பெயர் சொல்லாததால்... தவறிப் போகிறது. #நவோதயா செந்தில் #பிரேம்நாத்# செல்வ ரங்கன்

#செல்வா #Adarath#செந்தில்குமார் விக்னேஷ் குமார் :****************
மூன்றாம் இடத்தில்  - வினோத் குமார்.

# இரண்டாம் இடத்தில்  தன்யா முதல் இடத்தில் - ஜவர்ஹலால் ஜெயபால்


-- போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும்  குழுவினர் சார்பில் வாழ்த்துகளும் மீண்டுமொருமுறை புத்தாண்டுவாழ்த்துகளும். 

நன்றி 
அன்புடன்
ஐயப்பன் கிருஷ்ணன்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff