Monday, January 5, 2009

வெண்ணிலா மீரானின் வெற்றி ரகசியம் - ஷட்டில் ஃபெதரின் நிழல்

21 comments:
 
நடந்து முடிஞ்ச டிசம்பர் மாத "நிழல்" போட்டியில் வித்தியாசமான ஒரு படத்தை எடுத்து பரிசை தட்டிச்சென்றவர் திரு.வெண்ணிலா மீரான். ஏன்னடா, ஒவ்வொரு மாசமும் போட்டி முடிவுகள் சொல்லும்போது, "வித்தியாசமான படம், வித்தியாசமான முயர்ச்சி" ன்னெல்லாம் சொல்லறோமே..அப்படி என்ன தான் வித்தியாசமா பண்ணிட்டாங்கன்னு நீங்க சொல்லரது எங்களுக்கு கேக்காமல் இல்லை. அதனால் தான் நாங்களும் ஒரு வித்தியாசமான முயர்ச்சி எடுக்கலாம்ன்னு இருக்கோம்.என்னான்னா.. முடிஞ்ச வரை நம்ம எல்லாரையும் கவர்ந்த புகைப்படத்தை எடுத்தவர்கிட்டேயே எப்படி எடுத்தார்ன்னு கேட்டுவிடலாம்ன்னு தான்.ஒருத்தர் அனுபவம் இன்னொருத்தருக்கு பாடம்.

அந்த வகையிலே முதல் வெற்றி ரகசியம் நம்ம வெண்ணிலா மீரான்கிட்டே கேட்டோம். அவரும் நம்ம வேண்டுகோளுக்கு இணங்கி இந்த ரகசியத்தை மின்-அஞ்சலில் பகிர்ந்துகிட்டார். நிஜமாவே மனுஷர் ரூம்போட்டு தான் யோசிச்சிருக்கார். கிட்டதட்ட 15 - 17 படத்திலே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுக்கு தான் போட்டியிலே கலந்துக்கவே வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதோட இல்லாம, பரிசையும் தட்டிகிட்டு போயிடுச்சு.

வெண்ணிலா மீரான் சொல்லரது என்னான்னா ....
நான் எடுத்த இந்தப் படம் பற்றிய technical விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியாது. காரணம் புகைப்பட கலையில் நான் கத்துக்க்குட்டி, ஒரு பொழுதுபோக்குக்காக படம் பிடிப்பவன். நான் கற்றுக்கொள்வதற்காக தான் PIT யை தேடி கண்டுப்பிடித்தேன்.

இருந்தாலும் இந்த படத்தை எடுப்பதற்கு நான் மேற்கொண்ட முயற்ச்சியையும் அன்று எடுக்கப் பட்ட வேறு சில படங்களையும் இங்கு தருகிறேன்.

நிழல்கள் தேடி நானும் என் கேமிராவும் வெளியே சென்று எதுவும் திருப்தி அளிக்காத நிலையில் அன்று இரவு எனது அறையில் இருந்த Shuttlecock ஐ வைத்து ஏதேனும் செய்யலாம் என யோசித்து என் அறையில் இருந்த மேசை விளக்கை பயன்படுத்தி பார்த்தேன். வெளிச்சம் சரியாக அமையவில்லை. அப்போது எனக்கு கிடைத்தது என்னுடைய செல்போன் (Sony Ericson W850i). அதனுடைய ஒளியை பயன் படுத்தி தான் அந்த படத்தை எடுத்தேன். அதிலுள்ள Flashஐ பயன்படுத்தி எடுக்க ஆரம்பித்தேன்.
இந்த படங்களை போல ஒரு Shuttlecockஐ கீழே போட்டு,இந்த படத்தை போல 3 Shuttlecock ஐ வைத்து என பல முயற்ச்சிகள் செய்தேன். அப்படி செய்து பார்க்கும் போது தான் Shuttlecockஐ நிற்க வைத்து எடுக்க முயற்ச்சித்தேன். உருண்டையான அடிப்பாகம் உள்ள Shuttlecockஐ எப்படி நிற்க்க வைப்பது?!?! ஒரு கையில் கேமரா ஒரு கையில் மொபைல் light இதுல Shuttlecockஐ எப்படி பிடிப்பது, என்ன செய்றது adjust பன்னி பிடித்து இரண்டு மூன்று முறை எடுத்து பார்த்தேன்.

சரியா வரல. பின்பு தான் வீட்டில் fewi kwik இருந்தது நியாபகம் வந்தது. உடனெ ஒரு வெள்ளை பெப்பரை எடுத்து அதில் Shuttlecockஐ ஒட்டி சிறிது நேரத்திற்கு பிறகு அதன் மேலிருந்து லைட் அடித்து பார்த்தேன், அற்புதம். 3 – 4 படங்கள் க்ளிக்கினேன். போட்டியில் கலந்து கொள்ள படம் கிடைத்தது.

அது மட்டுமில்லாமல் அந்த Shuttlecockன் மீது வேறு ஒரு Shuttlecockஐ தலைகீழாக வைத்து...

இந்த படம் போல எடுத்தேன் (இந்த படத்தை பார்க்கும் போது ஒரு Shuttlecock தலைகீழாக இருப்பது போலவும் அதன் நிழல் இரண்டு Shuttlecockஐ காட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்தது). போட்டிக்கு படம் அனுப்பும் போது என்னிடத்தில் போட்டிப் போட்டுக் கொண்ட படங்கள் இவை இரண்டும் தான். நான் எதிர்பார்த்தது இதில் முழுமையாக அமையாததினால் இதை அனுப்பவில்லை.

இப்படியாக ஒரு கையில் கேமரா ஒரு கையில் மொபையில் லைட், ஏங்கிள் பார்த்து அளவு பார்த்து......... அப்பப்பா அன்றிரவு நான் உறங்க செல்லும் போது மணி 1 ஆகிவிட்டது.

முயற்சிக்கு கிடைத்த நல்ல பலன். இங்கு கிடைத்த முதல் இடம்.

நான் கண்ட உன்மை: நம்முடைய பார்வையும் அதற்குரிய முயற்சியும் சரியாக இருந்தால் அதற்குரிய பயன்/விளைவு (result) நம் மனதிற்கு நிறைவானதாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
வெண்ணிலா மீரான்


கஞ்சத்தனம் பண்ணாம க்ளிக்கோக்ளிக்குன்னு க்ளிக்குங்க,
... அடுத்த வெற்றி ரகசியம் உங்களுடையதாக கூட இருக்கலாம்.!!!

21 comments:

 1. வெண்ணிலா மீரான் அவர்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. உண்மையான உழைப்புங்க...

  ReplyDelete
 3. 'அசத்தல்’ எனப் பெற்ற பாராட்டின் பின்னால் இருந்த அயராத உழைப்பையும் நாங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி வெண்ணிலா மீரான்.

  ReplyDelete
 4. நன்றி சதங்கா,

  ReplyDelete
 5. இளா
  //உண்மையான உழைப்புங்க...//
  கண்டிப்பா...

  ReplyDelete
 6. வாங்க ராமலக்ஷ்மி,
  //நாங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி வெண்ணிலா மீரான்.//
  ஒருத்தர் அனுபவம் இன்னொருத்தருக்கு பாடம்ன்னு சும்மாவா சொன்னாங்க.

  ReplyDelete
 7. நல்ல முயற்சி. அவர் படம் எடுத்த விதத்தை விவரிக்க வைத்ததும் அவர் படம் எடுத்ததும்.

  ReplyDelete
 8. no wonder he got the winning shot.

  great effort!

  ReplyDelete
 9. மீரான் அவர்களின் படம் எடுத்த வித்தையே எங்களோடு பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி

  ReplyDelete
 10. உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. 5th photo can be used as Logo

  ReplyDelete
 12. படங்களை பாக்க முடியலை. லினக்ஸ் உபுண்டு. ஸ்கிரிப்ட் எல்லாம் எனேபிள் பண்ணியாச்சு.

  ReplyDelete
 13. சூப்பரப்பு .. உங்க முயற்சி, உங்க விளக்கம் ரெண்டுமே சூப்பர் .. கலக்குங்க

  ReplyDelete
 14. தங்களின் இந்த புதிய முயற்சி (செய்வினை விளக்கம் கேட்டு வாங்கி பிரசுரித்திருப்பது) என் போன்ற சைலண்ட் வாசகர்களுக்கு மிகவும் உதவி
  நல்ல சீரிய விடா முயற்சி வாழ்த்துக்கள் வெண்ணிலா மீரானுக்கும் நன்று உங்களுக்கும்.

  ReplyDelete
 15. // இப்படியாக ஒரு கையில் கேமரா ஒரு கையில் மொபையில் லைட், ஏங்கிள் பார்த்து அளவு பார்த்து......... அப்பப்பா அன்றிரவு நான் உறங்க செல்லும் போது மணி 1 ஆகிவிட்டது.//

  வாழ்துக்கள்

  ReplyDelete
 16. //திவா said...

  படங்களை பாக்க முடியலை. லினக்ஸ் உபுண்டு. ஸ்கிரிப்ட் எல்லாம் எனேபிள் பண்ணியாச்சு.//

  try with firefox and adobe flash plugin enabled. it worked well with my ubuntu firefox. Mail me if you need more help

  ReplyDelete
 17. நன்னி ஜீவா! பேசாம விண்டோஸ்லேயே பாத்துட்டேன்.நாலாவது படம் கூட நல்லாதான் இருக்கு.

  ReplyDelete
 18. அருமை ... ஒரு படம் எடுக்க எவ்வளவு யோசிக்கணும் ... மலைப்பா இருக்கு ..
  வாழ்த்துக்கள் வெண்ணிலா மீரான்...!

  ReplyDelete
 19. நல்ல முயற்சி - வெற்றி...

  படத்துக்கு வாழ்த்துக்கள் ...

  பாடத்திற்கு நன்றி ...

  ReplyDelete
 20. Dear friends,

  Thanks for your kind comments, Appreciations and wishes.

  Wishing you all the best in your life.

  With Love,
  Vennila Meeran

  ReplyDelete
 21. உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்!!! உண்மையான உழைப்பு! அதற்கேற்ற பலன்!!!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff