Saturday, January 31, 2009

பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு

38 comments:
 
எல்லோருக்கும் வணக்கம்,
புது வருஷம் பழசாக ஆரம்பிச்சாச்சு,ஒரு மாசம் போய் இன்னொரு மாசமும் வந்தாச்சு,கூடவே நமது குழுப்பதிவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பும்.. :)
போன போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த படத்தை ஒரு முறை பார்க்கலாமா??


சூப்பரா இருக்குல்ல?? இந்தப்படம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா??

அதுக்கு முன்னாடி.. புகைப்படக்கலையின் தனித்துவம் என்னன்னு எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா??

புகைப்படக்கலை என்பது நேரத்தை சிறைப்படுத்தும் செப்பட்டி வித்தை.ஒரு கணத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை அப்படியே நமது பெட்டிக்குள் அடக்கிவிடக்கூடிய மாயாஜாலம்.சாதாரணமாக எந்த ஒரு நிகழ்வையும் தொடர்ச்சியாக கண்டே பழக்கப்பட்ட நமக்கு இந்த மாதிரியான ”கணநேர கண்ணாடிகள்” வாய் பிளக்க வைத்துவிடுகின்றன.எனக்கு இந்தப்படம் ஏன் பிடிச்சிருக்குன்னு புரிஞ்சிருக்குமே,கூடவே இந்த மாசத்துக்கான தலைப்பு என்னன்னு யூகிச்சாச்சா?? :)
இந்த மாத பிட் போட்டியின் தலைப்பு “கணநேர கண்ணாடிகள்”. சுத்தத்தமிழில் சொல்லனும்னா “Action shots"(ஆக்‌ஷன் ஷாட்ஸ்). :-)


படத்தை பார்த்தவுடனே அந்தக்கணத்தின் அருமையை படம் பார்வையாளருக்கு
தெள்ளத்தெளிவாக உரைக்க வேண்டும்(உறைக்கவும் வேண்டும்.:-))..அது போன்ற படங்கள்...
.
எங்கோ தூங்கிக்கொண்டிருக்கும் மலையையோ அல்லது உங்கள் தெருவோரத்தில் காற்றில்லா நேரத்தில் வெட்கப்பட்டு தரையை பார்த்துக்கொண்டிருக்கும் மரத்தையோ படம் பிடித்து அனுப்பாதீர்கள்...
சரியா??

போட்டியின் முக்கிய தகவல்களின் பட்டியல் இதோ..

தலைப்பு : கணநேர கண்ணாடிகள் (Action shots)


நடுவர்:CVR


படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : பிப்ரவரி 15, 23:59போட்டி விதிமுறைகள்:-
1.) படங்கள் நீங்களே எடுத்த,உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.


2.)படங்களை pitcontests.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com. (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டாம்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. புகைப்படத்தின் சுட்டி மட்டும் இணைத்து, புகைப்படம் இல்லாத மடல்கள் நிராகரிக்கப் படும்.)


3.)நீங்கள் அனுப்பும் படத்தின் பெயர் உங்களின் பெயராக இருக்க வேண்டும்( Eg Deepa.jpg, CVR.jpg etc ...மேற்குறிப்பிட்டபடி பெயரிடப்படாத படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


4.)ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கவும் , பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.

5.)ஒரு முறை படத்தை நிர்ணயித்து PiT க்கு அறிவித்துவிட்டால், எக்காரணத்தாலும் அதை மாற்ற முடியாது.தலைப்புல சந்தேகம் இருந்தா பின்னூட்டத்திலோ அல்லது photos.in.tamil@gmail.com.என்ற முகவரிக்கு மடலிட்டு தீர்த்துக்கொள்ளவும் :-)


6.)போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.(Pictures not suitable for public viewing shall be removed from contention based on PIT moderators discretion)


7.) எங்களின் போட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிய படத்தை மறுபடியும் அனுப்ப வேண்டாம்

இந்தத்தலைப்பிற்கு ஏற்ற உதாரணப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.. :)

மேலும் படங்கள் பார்க்கனும்னா இங்கிட்டு க்ளிக் பண்ணுங்க..
வரட்டா? :-)

38 comments:

 1. // (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//

  புதசெவி

  ReplyDelete
 2. /// (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//

  புதசெவி//


  அதாவது படங்களை மடலில் அனுப்பாமல் படங்கள் இருக்கும் சுட்டிகளை மட்டும் தனியாக அனுப்பாதீர்கள். ஸ்லைட் ஷோவில் வராது. மேலும் அதை எடுத்து ஆல்பத்தில் சேர்த்து வைப்பதெல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.

  புகைப்படத்தை அட்டாச்மென்ட் ஆக மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்

  ReplyDelete
 3. // (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//

  படத்தை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா? எவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது? விளக்கம் தேவை.

  ReplyDelete
 4. /// (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//

  படத்தை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா? எவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது? விளக்கம் தேவை./


  மேலே சொன்ன விளக்கம் தான். புகைப்படங்கள் இணைக்கப் படாமல் வெறும் சுட்டிகள் மட்டுமே கொண்டு வரும் மடல்கள் நிராகரிக்கப் படும். பதிவிலும் சரி செய்துவிட்டாகிற்று. நன்றி எஸ்.ஆர்.கே

  ReplyDelete
 5. //(தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)///
  அனுப்ப வேண்டாம் எனபதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று தவறுதலாக தட்டச்சு செய்து விட்டேன்.
  இப்பொழுது சரிசெய்தாகிவிட்டது..
  நன்றி :)

  ReplyDelete
 6. //
  CVR said...

  //(தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)///
  அனுப்ப வேண்டாம் எனபதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று தவறுதலாக தட்டச்சு செய்து விட்டேன்.
  இப்பொழுது சரிசெய்தாகிவிட்டது..
  நன்றி :)
  //

  அது...!!

  பெரிசுக்கு அது புரியவில்லை..

  உங்களுக்காவது புரிந்ததே..!!

  ReplyDelete
 7. ஆக்‌ஷன் படம் கேட்டு எங்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்திருப்பதற்கு நன்றி.

  i will jump in to action.

  ReplyDelete
 8. start...ACTION...camera...!!!
  சுறுசுறுப்பான தலைப்பு!! இதோ வந்திட்டே இருக்கேன். எப்படியும் போட்டில இருக்கணுமில்ல?

  ReplyDelete
 9. இந்த மாசம் முதல் போணி நாந்தேன். படமும் அதோட விளக்கமும் இங்கே இடுகையா .. http://www.sankarbalu.blogspot.com/2009/02/feb-09-pit.html

  ReplyDelete
 10. action phottikku insects,animals actions aunppalama??
  -suresh babu

  ReplyDelete
 11. //action phottikku insects,animals actions aunppalama?? //

  கண்டிப்பா அனுப்பலாம் அண்ணாச்சி :)

  ReplyDelete
 12. ennodathu anuppiyaachu.... vantha pin therivikka vendukiren...
  -karuvayan

  ReplyDelete
 13. //ennodathu anuppiyaachu.... vantha pin therivikka vendukiren...
  -karuvayan//

  i dont see it yet.

  ReplyDelete
 14. sent my pic - expecting lot of action this month

  ReplyDelete
 15. @கருவாயன்
  உங்கள் படத்தை சேர்த்தாகிவிட்டது..

  ReplyDelete
 16. இந்த தடவை இப்போவே படங்கள் எல்லாம் பட்டைய கெளப்ப ஆரம்பிச்சிருச்சு!!
  எப்பவும் கடைசி நேரத்துல நெறைய படங்கள் வரும் . அவங்களுக்கு இன்னும் சிறப்பான படமாக எடுத்து அனுப்பனும்னு எண்ணம் வரும்படியாக வந்திருக்கும் படங்கள் இருக்கு!!

  உங்கள் கருத்துக்களை பிக்காசாவில் தெரிவியுங்கள் மக்களே.
  கூடவே கடைசி நாள் வரைக்கும் காத்திருக்காமல் சீக்கிரமே உங்கள் படங்களை அனுப்ப முயற்சி செய்யுங்கள் :)

  ReplyDelete
 17. I have posted my contest picture for this month.

  ReplyDelete
 18. யாருடைய படமோ பெயர் சரியாக குறிப்பிடாமல் வந்திருக்கிறது.
  அனுப்பியவரின் பெயரை வைத்து மங்கை என்று பெயரிட்டிருக்கிறேன்.
  அனுப்பியவர் தயவு செய்து சரி பார்க்கவும்.
  படங்கள் அனுப்பும்போது படத்தின் filename உங்களின் பெயராக இருக்கவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
  கூடவே அனுப்பினவங்க உங்க படங்கள் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க!!
  அனுப்பிட்டு உடனே பாக்காதீங்க,ஒரு நாள் கழிச்சு சரிபாருங்கள்..
  :)

  ReplyDelete
 19. என்னுடைய படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

  ReplyDelete
 20. எதை எடுப்பது எதை விடுப்பது என்று குழம்பி, கடைசியில் சீட்டு போட்டு பேரன் கையால் எடுத்த சீட்டில் உள்ள படத்தையே போட்டிக்கு அனுப்பிவிட்டேன். பார்த்து அபிப்பிராயம் சொல்லுங்கள்!!!!

  ReplyDelete
 21. I've posted my contest picture for this month.

  ReplyDelete
 22. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...படங்கள் எல்லாம் பாத்தேன். இந்த தரம் போட்டி போட வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்!

  (அதனால எல்லாரும் ரிலாக்ஸ்டா இருங்க!)
  :-)))))))

  ReplyDelete
 23. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...படங்கள் எல்லாம் பாத்தேன். இந்த தரம் போட்டி போட வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்!

  (அதனால எல்லாரும் ரிலாக்ஸ்டா இருங்க!)
  :-)))))))
  என்று அனைவரையும் ரிலாக்ஸ் பண்ணின
  திவாவை நான் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 24. ஜாம்பவான்களோடு மோதுவதே ஒரு வெற்றிதான் .கனல் பறக்க ,களத்தில் இறங்கி விட்டேன்.
  திவா உங்கள் யானையின் ஆக்‌ஷன் படத்தை இறக்குங்கள்,
  உங்களை வழிமொழிவதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. என்னுடைய படம் கடைசி நேரத்தில்..... அனுப்பியுள்ளேன்
  http://rainbow-attitudes.blogspot.com/2009/02/blog-post.html

  thank u
  TJay

  ReplyDelete
 27. ஒருவழியாக வந்து சேர்ந்தாச்சு:-)
  இந்த படம்தான் போட்டிக்கு.

  ReplyDelete
 28. இன்றே கடசி நாள்!!
  நாளை முதல் படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

  படங்கள் பெயர்கள் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

  இன்னும் ரெண்டு பேரு படங்களில் சரியாக பெயர்கள் இல்லை. அதனால் அப்படங்கள் போட்டி ஆல்பத்தில் இல்லை.அனுப்பியவர்கள் கவனிக்க...

  ReplyDelete
 29. இதை ஆட்டைக்கு சேர்த்துக்கோங்கப்பா.... :)

  ReplyDelete
 30. என்னோட படத்தையும் போட்டிக்கு அனுப்பிட்டேன். வந்துச்சான்னு சொல்லுங்க.

  ReplyDelete
 31. கோமா அக்கா சொன்னா தட்ட முடியுமா?
  அனுப்பிட்டேன் கருடனை!
  இங்கேயும் பாருங்க! கமென்ட்ஸ் கேட்டு போட டூ லேட்!

  ReplyDelete
 32. ஹிஹி சாரி சுட்டி கொடுக்க மறந்த அசுட்டி பயல்!
  http://chitirampesuthati.blogspot.com/2009/02/2009.html

  ReplyDelete
 33. as usual.. accept my last entry also...
  Thanks
  Anand

  ReplyDelete
 34. என்னோட புகைப்படத்தையும் எடுத்துக்கோங்க!!
  ஏற்கனவே ஒரு ஆனந்த் இருந்ததால் ananth பேர்ல அனுபிருக்கேன்

  மக்களே என்னோட மற்ற படங்களையும் இங்கே பார்க்கவும்

  My Picasa

  ReplyDelete
 35. படத்தை அனுப்பி விட்டேன் அன்றைக்கே.
  பதிவொன்றும் போட்டிருக்கிறேன் இன்றைக்கு.
  பார்க்க வாருங்கள் நேரம் இருப்பவர்கள்..:)!

  ReplyDelete
 36. எல்லோருக்கும் மிக்க நன்றி.
  விரைவில் முதல் பத்து படங்களோடு உங்களை சந்திக்கிறேன்.
  அதுவரை வந்திருக்கும் படங்கள் கண்டு களித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

  :)

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff