Tuesday, July 31, 2012

காகிதப் போட்டிக்கு வந்திருந்த படங்களில் முன்னேறிய 12 படங்களை ஏற்கெனவே பார்த்தோம். தெரிவு செய்யப்படாத படங்களுக்கான காரணங்களை அப்படங்களில் ஆல்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

படங்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றன என்பதற்கான காரணங்கள் பல முறை தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கு நினைவூட்ட நான் ஏற்கெனவே பதிவிலிட்ட காரணங்களை மீண்டும் இங்கே தருகின்றேன்.
  • படம் தலைப்புக்கு (மிகபொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
  • பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
  • விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
  • அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
  • பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
  • சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
இவற்றைத் தவிர,  நடுவராக செயற்படுபவருக்கென்று ரசணை உள்ளது. இது ஆளாளுக்கு வேறுபடும். ஏன் வேறுபடுகிறது என்று புத்திசாலிகளான நீங்கள் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

வெற்றிப்படங்களைப் பார்க்குமுன் வெளியேறிய படங்களை பார்ப்போம்.

#Kusumban
அற்புதமாக, கிரியேடிவாக படம் பிடித்துள்ளீர்கள். அழகான வர்ணங்கள். ஆனால், காகிதத்தைவிட பொம்மைகள் முக்கிய கவனம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கிறது.

#Antony Satheesh
கருப்புப் பின்னனியில் எளிமையாகப் பிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாக உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.


#Karthi 
கிரியேடிவான படம். பின்னனி சிறப்பாக அமையவில்லை. மற்றும் காகிதத்தைவிட பல பொருட்கள் முக்கியத்துவம் பெறுவது படத்திற்கு பலவீனம்.

#Nilaa
மிக எளிமையாகவும் அழகாகவும் உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லாதது மைனஸ்.

#Thangavel
எளிமையாக கிரியேடிவாக படம் எடுப்பதற்கு உதாரணமான படம். வெறுமனே பண நோட்டுக்களை படம் பிடிக்காமல், அழகாக அலங்கரித்தது சிறப்பு. ஆனாலும் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.

#Nataraajan Kalpattu
புதிய கோணத்தில் தலைப்பினை வெளிப்படுத்திய புகைப்படம். ஆனாலும் தெளிவின்மை (sharpness) குறைபாடாகவுள்ளது. 

#JEGANATHAN
கடலையும் வானத்தையும் அழகாக, காகிதப் படகுடன் வெளிப்படுத்திய கிரியேடிவான படம். படகின் முன்பு விழும் நிழல், தெளிவு குறைவாகவுள்ளமை என்பன குறைபாடுகள்.

#Sangamithra
வெறுமனே புத்தகத்தினை படம்பிடிக்காது, slow shutter வேகத்தில், கருமையான பின்னனியில் படம் பிடித்தது அழகு. ஆனாலும் கவனயீர்ப்பில் குறைவாகவுள்ளது.


#SSK
அற்புதமான படம். ஆங்காங்கே கிடக்கும் கசங்கிய காகிதங்கள், ஒளியை சிறப்பாக பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளமை சிறப்பு. ஆனாலும் காகிதத்தைவிட ஒளி முக்கியத்துவம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கின்றது.

3ம் இடம்:
#Sathishkumar
கிரியேடிவான படம், சிறப்பான ஒளி மற்றும் செலக்டிவ் கலர் பாவணை என்பன சிறப்பு. காகிதத்திலிருந்து பார்வை செலக்டிவ் கலர் பண்ணப்பட்ட கண் நோக்கிச் செல்வது குறைபாடு.


2ம் இடம்:
#Nithi Clicks
அழகான, கவர்ச்சிகரமான படம். DoF அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. "Happy Valentine's Day" காகிதத்தின் முக்கியத்துவத்தினைக் குறைக்கின்றது.


1ம் இடம்:
#Elan Kumaran Gk
எளிமையான, காகிதத்தினை சரியாக பிரதிபலிக்கும், சிறப்பாக ஒளி மற்றும்  பிற்சேர்க்கையுடன் அமைந்த படம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! பங்குபற்றியவர்களுக்கு பாராட்டுக்கள்!!

Saturday, July 28, 2012

Instagram மாதிரி படங்களை கிம்பில் செய்வது பற்றி இங்கே.

** 1) படத்தை கிம்பில் திறந்து லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்
 2) முன்ணணி வண்ணமாக R=240 G=215 B=165 தெரிவு செய்துக்கொள்ளுங்கள்


 3) ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை முன்ணணி வண்ணத்தால் நிரப்புங்கள்
 4) Layer Mode - Multiply என்று மாற்றுங்கள்
5) அடுத்து Colors-;Levels தெரிவு செய்து
அதில் Channel-Red தெரிவு செய்யுங்கள் 6) Output Levels இடது முக்கோணத்தை வலது பக்கமாய் இழுங்கள். பட்த்தில் சிவப்பு வண்ணம் அதிகரிக்கும்
 7) அதே Channel-Green , Channel-Blue போல வ்ண்ணத்தையும் அதிகரியுங்கள். உங்களின் இரசனைக்கு ஏற்றவாறு மாற்றுங்கள்
. இதில் மேலும் மெருகேற்ற சில வழிகள்


  • . Layer Mode மாற்றிப் பாருங்கள்.

  •  Opacity மாற்றிப்  பாருங்கள்  
  • அல்லது உங்களின் விருப்பமான வண்ணத்தை முன்ணணி வண்ணமாக மாற்றிக் கொள்ளுங்கள். 
  •  வினியட் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Friday, July 27, 2012

நீல வானம் பற்றி பல முறை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இங்கே இன்னும் ஒரு முறை.
***

** படத்தை கிம்பில் திறவுங்கள்.

இரண்டு லேயர் நகல் எடுத்துக்கொள்ளுங்கள். மொத்தம் மூன்று லேயர்கள் இருக்கும் இப்போது.
மேல் லேயரை கருப்பு-வெள்ளைக்கு மாற்றுங்கள்,.
இனி லேயர் Mode, Grain Extract என்று மாற்றுங்கள்.
இந்த லேயரை கீழே இருக்கும் லேயரை இணைத்து விடுங்கள். இனி இரண்டு லேயர்கள் மட்டுமே இருக்கும்.
இனி மேல் லேயரின் Mode Grain Merge என்று மாற்றி விடுங்கள். லேயர் Opacity வேண்டுமானல் உங்களின் விருப்பதற்குஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

Thursday, July 26, 2012

மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்? பறவை களில் இல்லையா? ஏன் இல்லை. ஜனவரி பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் "கிவீ...கிவீ..." என்று கணீரென ஒரு குருவியின் குரல் கேட்கிறதா? சற்று கூர்ந்து கவனியுங்கள். பறவையின தையல் காரரை உங்களால் பார்க்க முடியும். அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக் குருவி.

குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.

#1 (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)
வண்ணப்படம் நன்றி: Wikipedia

இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?

சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும். இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும். ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும், காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களா? குப்பை மேட்டிலிருந்துதான்)

இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடுபடும்.

#2 (குஞ்சுகளுக்குக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)
படம்: நடராஜன் கல்பட்டு

தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவை ஆகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.

தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும். இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளயில் உட்கார்ந்து, உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளி (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்து கொண்டு தூங்கும். இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.


# 3 (எங்களுக்குத் தூக்கமா வருது)
படம்: நடராஜன் கல்பட்டு

நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்க்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும். சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் தூக்கம் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும். அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்தொடர்புடைய முந்தைய பதிவுகள்:Tuesday, July 24, 2012

காகிதப் போட்டிக்கு வந்திருந்த படங்களில் முன்னேறிய 12 படங்கள் இங்கே காணப்படுகின்றன. இம்முறை படங்கள் குறைவாகவே வந்திருந்தபோதும், அற்புதமான சில படங்களைக் காண முடிந்தது. வெறுமனே பிடிக்கப்படாமல் சுவாரசியமாகவும் புது முயற்சியும் கொண்ட படங்கள் முன்னேறியுள்ளன.

எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள 12 படங்கள்:

#Karthi 

#Elan Kumaran Gk

#Nilaa

#Sathishkumar

#Thangavel

#JEGANATHAN

#Nataraajan Kalpattu


#Kusumban

#Nithi Clicks


#Antony Satheesh


#Sangamithra


#SSK


சில படங்கள் சில சின்னக் குறைபாடுகளினால் இங்கு இடம்பிடிக்கவில்லை. அதற்காக காரணங்கள் விரைவில் ஆல்பத்தில் தெரிவிக்கப்படும். இம்முறை இவ்வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டவர்கள். அடுத்த மாதப் போட்டியில் உற்சாகத்துடன் பங்குபெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
நான் படம் பிடித்த இரண்டாவது பறவை தேன் சிட்டு.

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் “கீ வூ...கிக்வூ...கிக்வூ...” என்று கத்தியபடி பறந்த நிலையிலேயே செம்பருத்திப் பூவில் தேன் குடித்திட வரும் ஒரு சிறு பறவையைப் பார்த்திருப்பீர்கள் அதுதான் தேன் சிட்டு. ஒரே இடத்திலேயோ, முன்னும் பின்னுமோ பறந்திடும் சக்தி கொண்டது இப்பறவை. இதை அமெரிக்காவின் ஹம்மிங்க் பேர்டின் சொந்தக் காரன் எனலாம்.

# 1 தேன் சிட்டு பெண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்)


# 2 பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் – ஆண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்)

இந்தப் பறவை நம் தோட்டங்களில் உள்ள செடிகளில் இருந்து தொங்கிடும் கூடு ஒன்றை அமைத்து, அதில் நான்கு முட்டைகள் இட்டு, அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். கூடு காய்ந்த இலை, சரகு, மெல்லிய குச்சிகள், பேபர் துண்டுகள், தட்டு போன்ற எட்டுக் கால் பூச்சியின் முட்ட்டைகளின் பைத் தோல் இவற்றை ஒட்டடை, சிலந்தி வலை இவற்றால் ஒட்டித் தயார் செய்திடும்.

கூடு கட்டும் போது பெண் பறவை கூட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கூட்டைத் தயார் செய்யும். ஆண் பறவை தானும் கஷ்டப் பட்டு வேலை செய்வது போலக் கூடக் கூடப் பறந்திடும்.

(கீழ்வரும் அனைத்து கருப்பு வெள்ளைப் படங்களும்: நடராஜன் கல்பட்டு)

# 3 தேன் சிட்டு பெண் பறவை


# 4 தேன் சிட்டு ஆண் பறவை

பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றின் உணவும் ஒரு விதம். தேன், தானியம், பழம், கொட்டைகள், தேனீ, புழு பூச்சிகள், பல்லி, ஓணான், எலி, பாம்பு, இறந்த மிருகங்களின் இறைச்சி, ஏன் மனிதனின் மலம் கூட பறவைகளின் உணவு. ஆனால் எல்லாப் பறவைகளுமே தங்கள் குஞ்சுகளுக்கு மாமிச பதார்த்தங்களையே உணவாக அளிக்கும். காரணம் என்ன தெரியுமா? குஞ்சுகள் குறைந்த கால அவகாசத்தில் வளர்ந்து பறக்கும் திறமையை அடைய வேண்டும். அதற்குப் புரதச் சத்து (protein) அதிகமுள்ள உணவு தேவை.

தேன் சிட்டு கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு சிறிது நேரம் உணவளித்த பின் தாய்ப் பறவை தங்களுக்கே தெரிந்த மொழியில், "நீ இவ்வளவு நேரம் உணவு உட்கொண்டுவிட்டாய். இனி மலம் கழிக்க வெண்டும்", என்று சொல்லும். குஞ்சும் திரும்பிக் கொண்டு மலம் கழிக்கும். அவ்வாறு வெளியேற்றப் படும் மலத்தினை தாய்ப் பறவை அலகில் கொத்திக் கொண்டு வெகுதூரம் எடுத்துச் சென்று எறிந்துவிடும். மலமும் கூட்டிலோ அல்லது தாயின் அலகிலோ ஒட்டிக் கொள்ளாத வகையில் ஒரு மெல்லிய தோல் பொன்ற வஸ்துவால் மூடி இருக்கும். மலப் பை (fecal sac) என்று அதற்குப் பெயர். இவ்வாறு மலம் கூட்டில் படாமல் வெளியேற்றப் படுவதற்கு கூட்டின் சுத்தம் (nest hygiene) என்று சொல்வார்கள்.
இதற்கு நேர் எதிர் புறாக்கள். குஞ்சுகள் கூட்டிலேயே மலம் கழிக்கும். ஆனால் கூடு இடைவளி அதிகம் கொண்டு குச்சிகளால் கட்டப் பட்டு இருக்குமாதலால் மலம் வெளியே விழுந்து விடும்.

# 5
(மலம் கூட்டினுள் விழுமுன் வெளியேற்றப் படுகிறது)

‏தேன் சிட்டில் இரு வகைகளைக் காணலாம். ஒன்று பர்பிள் ரம்ப்ட் சன்பேர்ட். மற்றொன்று பர்பிள் சன்பேர்ட். முன்னதை நம் தோட்டங்களில் காணலாம். பின்னதை சாதாரணமாக காடுகளில் காணலாம்.

தேன் சிட்டினை நான் படம் பிடித்த போது 'பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்' அதிகம் கலவரப் படவில்லை. ஆனால் 'பர்பிள் சன் பேர்டோ' மிகுந்த கலவரப் பட்டு ஆத்திரத்தில் கேமராவையே தாக்கியது. அதை மற்றொரு கேமெரா மூலம் பதிவு செய்தேன். அந்தப் படம் இதோ:

# 6 “என்னிடம் அனுமதி பெறாமல் என்னையா படம் பிடிகிறாய் நீ?

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff