Tuesday, July 24, 2012

காகிதம் - முன்னேறிய 10+2 படங்கள்

17 comments:
 
காகிதப் போட்டிக்கு வந்திருந்த படங்களில் முன்னேறிய 12 படங்கள் இங்கே காணப்படுகின்றன. இம்முறை படங்கள் குறைவாகவே வந்திருந்தபோதும், அற்புதமான சில படங்களைக் காண முடிந்தது. வெறுமனே பிடிக்கப்படாமல் சுவாரசியமாகவும் புது முயற்சியும் கொண்ட படங்கள் முன்னேறியுள்ளன.

எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள 12 படங்கள்:

#Karthi 

#Elan Kumaran Gk

#Nilaa

#Sathishkumar

#Thangavel

#JEGANATHAN

#Nataraajan Kalpattu


#Kusumban

#Nithi Clicks


#Antony Satheesh


#Sangamithra


#SSK


சில படங்கள் சில சின்னக் குறைபாடுகளினால் இங்கு இடம்பிடிக்கவில்லை. அதற்காக காரணங்கள் விரைவில் ஆல்பத்தில் தெரிவிக்கப்படும். இம்முறை இவ்வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டவர்கள். அடுத்த மாதப் போட்டியில் உற்சாகத்துடன் பங்குபெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

17 comments:

  1. #Nataraajan Kalpattu

    இந்த‌ ப‌ட‌த்துல‌ என்ன‌ விசேஷ‌ம்? நான் ஃபோட்டோகிராஃபி தெரிஞ்ச‌வ‌ன் இல்லை, ஆனால் இந்த‌ ப‌ட‌ம் Odd Man Out ஆ தெரியுது.. ஸாரி..

    ReplyDelete
  2. வெண்பூ,
    தலைப்பு காகிதம். ஆகவே அதுதான் படத்தில் முக்கியத்துவம் பெற வேண்டும். அது அளவினால் (பெரிய காகிதம்) தீர்மானிக்கப்படாது தலைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்மானிக்கப்படும். இப்படத்திற்கும் அது பொருந்தும். படத்தினைப் பார்த்ததும் முதலில் பார்வைகள் பதிவது அந்த வயதானவர் மீது. அடுத்ததாக கண்கள் நகர்வது அவர் பார்க்கும் இடத்தில் – காகிதத்தில். அங்குதான் பார்வை குவிவது சிறப்பு. அதைத்தவிர ஒளி பாவிக்கப்பட்டிருக்கும் விதம். “காகிதத்தில் எழுதுதல்” என்பதில் நம்மையும் ஈர்க்கும் கருப்பு – வெள்ளை என்பன மேலதிக சிறப்பு.

    ReplyDelete
  3. அனைத்தும் நன்றாக உள்ளது...
    எனக்கு மிகவும் பிடித்தவை :
    #Elan Kumaran Gk
    #Nithi Clicks
    நன்றி...

    ReplyDelete
  4. வெண்பூ அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் எனக்கும். முதல் சுற்றுக்கு தேர்வான சில படங்களை ஆல்பத்தில் உள்ள மற்ற படங்கலுடன் ஒப்பிடும் போது அவைகள் எதன் அடிபடையில் முதல் சுற்றுக்கு தேர்வாகின வென்று புரியவில்லை. அதனை அந்தந்த படங்களின் கிழேயே விளக்கி இருந்தால் புகைப்பட கலையை கற்று கொள்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்கும். (புதியவர்களுக்கு கற்று கொடுப்பது தானே இந்த வலைபூவின் நோக்கம்.

    ReplyDelete
  5. Beautiful pictures and nice selection!

    ReplyDelete
  6. வெண்பூ அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் எனக்கும். முதல் சுற்றுக்கு தேர்வான சில படங்களை ஆல்பத்தில் உள்ள மற்ற படங்கலுடன் ஒப்பிடும் போது அவைகள் எதன் அடிபடையில் முதல் சுற்றுக்கு தேர்வாகின வென்று புரியவில்லை. அதனை அந்தந்த படங்களின் கிழேயே விளக்கி இருந்தால் புகைப்பட கலையை கற்று கொள்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்கும். (புதியவர்களுக்கு கற்று கொடுப்பது தானே இந்த வலைபூவின் நோக்கம்).

    ReplyDelete
  7. ஆன்ட‌ன்,

    அந்த‌ ப‌ட‌த்தை வேறு யார் எடுத்திருந்தாலும் இதே சிற‌ப்புக‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்டு முத‌ல் 12 இட‌ங்க‌ளில் வ‌ந்திருக்கும்னு நீங்க‌ சொல்றீங்க‌.. ந‌ம்புகிறேன்... ந‌ன்றி :)

    ReplyDelete
  8. happy for selected in 10+2. congrats to other PiT friends.

    ReplyDelete
  9. நான் எனது கருத்தை இரு முறை பின்னுட்டம் இட்டும் நீங்கள் அதை வெளியிடாததில் இருந்தே உங்களுக்கு விளக்கம் அளிக்க விருப்பம் இல்லை அல்லது முடியவில்லை என்பது புலனாகிறது.ந‌ன்றி...

    ReplyDelete
  10. நான் எனது கருத்தை இரு முறை பதித்தும் நீங்கள் அதை வெளியிடாததில் இருந்தே உங்களுக்கு விளக்கம் அளிக்க விருப்பம் இல்லை அல்லது முடியவில்லை என்பது புலனாகிறது.

    ReplyDelete
  11. திரு தர்மா,

    உங்களின் கருத்து ஸ்பேமில் இருந்ததை கவனித்து வெளியிட்டிருக்கிறோம்.

    போட்டிக் குறித்து உங்களின் கருத்துக்கு நன்றி. அதற்கான விளக்கத்தை நடுவர் ஏற்கனவே தெரிவித்த்திருக்கிறார். இங்கு நடக்கும் போட்டிகள் எந்த பாரபட்சமும் இன்றி, விருப்பு வெறுப்பற்றே செயல்படுகிறது என்பதை சொல்லத்தான் இயலுமே தவிர்த்து ஒவ்வொரு முறையும் எல்லாருக்கும் நிரூபித்துக் கொண்டிருக்க இயலாது.

    மேலும் நீங்கள் குறிப்பிடும் படத்தில் Technically What is wrong? which is not relevant to the topic? and why it shouldn't be selected என்று நீங்கள் விளக்கம் தர முடியுமானால் கேள்வி பதில் பகுதியில் தொடரலாம்.

    எல்லாவற்றிற்கும் மேலாக புகைப்படங்கள் எப்படித் தேர்வாகின்றன என்பதை பல முறை விளக்கியாகிவிட்டது. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    ReplyDelete
  12. Thank you for publishing my command(s. First of all i would like to clarify you one thing. If you have explained why the above pictures were selected to the next round, it would be helpful to the beginners (It is the primary motto of this blog.is't it?). This is What i want to tell you. But anyhow i am ready to discuss with you about.... Technically What is wrong? which is not relevant to the topic? and why it shouldn't be selected......Before that i will send you an email regarding this matter. Thanks once again.

    ReplyDelete
  13. நண்பர்களே போட்டியில் முன்னேறிய படங்களை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோசமாகவும் பல புதிய சிந்தனைகளும் தோன்றுகிறது, ஆனால் பின்னூட்டத்தில் நீங்கள் வாக்கு வாதம் செய்வது மிகவும் தர்ம சங்கடமாக உள்ளது, எந்த ஒரு விசயத்திலும் நல்லது இருந்தா கெட்டதும் இருக்கத்தான் செய்யும், நல்லத மட்டும் எடுத்துக்கொள்வது நல்லவர்கள் செயல் என்று திருப்திபடுவோம்,
    நான் மிகவும் சிறியவன் எனது பேச்சில் எதாவுது தவறு இருந்தால் மன்னிக்கவும், நன்றி

    ReplyDelete
  14. தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....தேர்வு செய்த நடுவருக்கும் நன்றி

    ReplyDelete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. @dharma boss...explanations would be given everytime when the final results are announced...for the rejection as well as selection...please be patient...


    and congo for the racers....:-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff