Monday, December 28, 2009

குழுப்போட்டி பற்றிய அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகப் போகிறது.

இதுவரை எழுபது ஆர்வலர்களுக்கும் மேல் தங்கள் பெயரை பதிந்துள்ளார்கள். ஆனால், இன்னும் யார் யார் எந்தெந்த குழுவில் இணைந்துள்ளீர்கள், உங்கள் குழுவின் தலைப்பு என்ன, போட்டிக்கான படங்களை தொகுக்க என்ன செய்யப் போறீங்க என்ற விவரங்கள் பலரிடமிருந்தும் கிட்டவில்லை.

அறிவிப்புப் பதிவின் பின்னூட்டம் வாயிலாக ஒரு சில குழு உருவாகியிருப்பது தெரிகிறது.
குழு விவரங்களை இங்கே தொகுக்கலாம் என்று எண்ணம். கூடிய விரைவில், விவரத்தை தெரியப்படுத்தவும். நன்றி!

குழு1: Spirit of Arabia
MQN (ஒருங்கிணைப்பாளர்)
Vennila Meeran


குழு2: PITCH (PiT Chennai Heroes)
கமலகண்ணன் (ஒருங்கிணைப்பாளர்)
P.C.P.Senthil Kumar
Senthil Ganesh
Mark Prasanna
Krishnamoorthy
Gowthaman
Mathanlals
Karthik M
Selva Ganesh


குழு3: Uniquely Singapore
சத்யா (ஒருங்கிணைப்பாளர்)
ராம்/Raam
ஜோசப்
அறிவிழி
கிஷோர்
பாரதி
ராம்குமார்(முகவை)
ஜெகதீசன்
குழு ஆல்பம்: - http://vadakkupatturamasamy.blogspot.com/2010/02/uniquely-singapore.html


குழு4: நம்ம பெங்களூரு (Namma Bengaluru)
சந்தோஷ் (ஒருங்கிணைப்பாளர்)
ராம்குமார்
தர்மராஜ்
ஜீவ்ஸ்(ஆலோசகர்)


குழு5: Los Colores de Orange - Orange County, California
Amal
Senthi


குழு6: City of Summer - சிட்னி, அவுஸ்திரேலியா
மழை ஷ்ரேயா
குழு ஆல்பம்: - http://picasaweb.google.com.au/mazhaipenn.shreya/CityOfSummer?feat=directlink


குழு7: Daedal Delhi
Muthuletchumi
mohankumar karunakaran


Wednesday, December 16, 2009

HighKey படங்கள், நல்ல பிரகாசமான வெளிச்சத்துடன், குறைந்த contrast ல், மகிழ்ச்சியான முகப்பாவங்களுடன் ( பற்பசை விளம்பர சிரிப்போடு), பொதுவாக கருப்பு வெள்ளையில் எடுக்கப்படும் படங்கள். உதாரணதிற்கு இந்தப் படம் ( உபயம் விக்கிபீடியா ). இந்த மாதிரி படங்களை கிம்பில் செய்வது பற்றி இங்கே. அனைவரும் பிரியா மணி அக்காவுக்கு வணக்கம் சொல்லுங்கள். அவிங்க தான் இன்றைக்கு நமக்கு மாடல். ப்டத்தை கிம்பில் திறந்து கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். ( நினைவிருக்கட்டும், high key கலரிலும் செய்யலாம். ) எளிதான கருப்பு வெள்ளைக்கு மாற்றும் முறை. colors -> desaturate .. Luminosity... இந்த கருப்பு வெள்ளை லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். புதிய லேயரின் mode => Addition என்று மாற்றிக் கொள்ளுங்கள். படம் பிரகாசமாய் ஆகி இருக்கும் .படம் பிடித்து இருந்தால், இதோடு கூட முடித்துக் கொள்ளலாம். வலது எலிக்குட்டியை கிளிக்கி Add Layer Mask தெரிவு செய்யுங்கள். Greyscale copy of the layer... படம் அழகாய் மெருகேறி இருக்கும். படம் பிடித்து இருந்தால் இந்த இடத்தோடும் நிறுத்திக் கொள்ளலாம். அடுத்த பகுதி, படத்தின் ஓரங்களை இன்னும் வெள்ளைக்கு மாற்றுவது. ( வினியட் பற்றி இங்கு ஏறகனவே பார்த்து இருக்கிறோம். இது அதேபோலத்தான். அங்கே கருப்புக்கு பதில் இங்கே வெள்ளை. ) ஒரு புதிய transparent லேயரை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு மெல்லிய , சிறிய opacity ( 10-20 % ) வெள்ளை நிற பிரஷ் கொண்டு ஒரங்களில் வெள்ளை அடிக்க ஆரம்பியுங்கள். மற்ற இரண்டு லேயரகளையும் எடுத்து விட்டு , நான் இப்படி சுண்ணாம்பு அடித்து இருக்கிறேன் என்று கீழே காண்பித்து இருக்கிறேன்.. அவ்வளவுதான் வேலை. கலரும் கருப்பு வெள்ளை படமும் அருகருகே. இன்னும் ஒரு உதாரணம்.இந்த முறை ரோஜா. (செல்வமணி ரோஜா இல்லீங்க. நிஜ ரோஜாத்தான். )

Friday, December 11, 2009

புதிய காமெரா, முக்காலி, லென்ஸுகள் பற்றியும், எதை வாங்கலாம் எப்படி வாங்கலாம்னும் PiTல் பரவலா அலசியிருக்கோம். உபயோகித்த புகைப்படக் கருவிகளை வாங்க விற்க, craigslist.org மாதிரி சில தளங்கள் உபயோகமாய் இருக்கும். PiTலும் அநேகம் பேர், உபயோகித்த உபகரணங்களை விற்பதைப் பற்றி கேள்விகள் கேட்டுள்ளனர். இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கவும், அதற்கு பதிலளிக்கவும் ஒரு பதிவைப் போட்டு, பின்னூட்ட வாயிலாக வழி செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு. உங்களின், பழைய புகைப்படக் கருவிகளை விற்க எண்ணமா? பின்னூட்டவும். பழைய காமெரா வாங்க ஆசையா? பின்னூட்டவும். கலந்துரையாடி, தத் தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும். பின்னாளில், இதை ஒரு ஃபோரமாக மாற்றவும் முயலலாம். டிஸ்கி: இந்தப் பதிவின் மூலம் நடைபெறும் வர்த்தகத்துக்கு PiT தளமோ, குழுவினரோ எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் :)

Saturday, December 5, 2009

நம்ம அனைவரின் வீட்டுகளிலும், அந்தக் காலத்து படங்கள் நிறைய இருக்கும்.தாத்தா பாட்டியின் படங்கள், அப்பா அம்மாவின் பள்ளிக்கூடத்து படங்கள், பழைய செய்தித்தாள்/பத்திரிக்கை படங்கள் என பல. கிட்டத்தட்ட அனைத்தும் ஒரு Sepia கலரில் , நிறைய இரைச்சலோட பழுப்பேறி இருக்கும். உங்களின் புத்தம் புதிய படங்களை இந்த மாதிரி எப்படி கிம்பில் செய்வது பற்றி இங்கே. ஒரு பொத்தான் அமுக்குவதுதான் வேலை. படத்தை கிம்பில் திறவுங்கள். இனி Filters->Decor-> Old Photo தெரிவு செய்யுங்கள். இங்கே மாற்றுதற்கு சில பகுதிகள் இருக்கும். உதாரணதிற்கு Mottle தெரிவு செய்தால் , கொஞ்சம் அழுக்கு, இரைச்சல் அதிகமாகும். OK அமுக்குவதுதான் வேலை. படம் பழசாகி இருக்கும். Defocus மற்றும் Border size மாற்றுவதன் முலம், உங்களுக்கு பிடித்த முறையில் படத்தை மாற்றிக் கொள்ளலாம்.

Tuesday, December 1, 2009

மாதாந்திர போட்டிகள் ஒரு பக்கம் விருவிருவென நடந்து கொண்டிருக்க, புதியதாய் ஏதேனும் செயல்படுத்தலாம் என்ற நோக்குடனும், வாசகர் சிலரின் யோசனையின் படியும் சில பல புதிய விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப் படுத்தவிருக்கிறோம். முதல் கட்டமாக, PiT வாசகர்களை, குழுக்களாகப் பிரித்து, அந்த குழுக்களுக்குள் போட்டி வைக்கலாம் என்று முடிவு. குழுப் போட்டி நல்ல விஷயம்தான், ஆனா தலைப்பு என்ன?

தலைப்பு: 'என் நகரம்' அதாகப்பட்டது, ஏதாவது ஒரு நகரை மையமாகக் கொண்டு, அந்த நகரின், மக்கள், கட்டடங்கள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், இயற்கை எழில், அன்றாட வாழ்க்கை, நல்லது, கெட்டது, கண்டது, கேட்டது, இப்படி எதை வேண்டுமானாலும், அழகாய் க்ளிக்கி படங்களை போட்டிக்கு சேர்க்கலாம். ஒரு குழு, ஒரே ஒரு நகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு படங்கள் அனுப்பவேண்டும். அதாவது, 'சென்னைக் குழு'ன்னா, சென்னை சார்ந்த விஷயங்கள் மட்டுமே படத்தில் இருக்கலாம்.

பிற்சேர்க்கை: சிலர், மிகச் சிறிய நகரங்களில் வசிப்பவராயின், உங்கள் அருகாமையில் இருக்கும் நகரங்களை சேர்த்து அனுப்பலாம். உதாரணத்திர்க்கு Udayabaskar, Mountain House என்ற குட்டி நகரில் இருக்கிறார். அவர், அருகாமையில் உள்ள San Franciscoம், மேலும் சில நகரங்களையும் இணைத்து, 'Silicon Valley' என்ற தலைப்பில் குழுவை அமைக்கலாம்.

ஏற்கனவே சொன்ன மாதிரி, இது பரீட்சாதார முறையில் நடத்தப்படும் முதல் போட்டியாதலால், வளைந்து நெளிந்து, இதை முன்னேற்றுவோம். 'என் நகரம்' என்பதை விட, 'எங்க ஏரியா' என்பது பொறுந்தும் :)

ஓஹோ, நான் எப்படி ஒரு குழு அமைப்பது?
குழுவை அமைத்துக் கொள்ளும் பணியை உங்களுக்கே விட்டுவிடுகிறொம். யார் வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் இணைந்து குழுவை அமைக்கலாம். குழுவில் இத்தனை பேர்தான் இருக்கவேண்டும் என்று வரைமுறை கிடையாது. ஆனால், குறைந்த பட்சம் இருவராவது இருக்கவேண்டும். 'என் நகரம்'னு தலைப்பு உள்ளதால், குழுவில் உள்ளவர்கள் அந்தந்த நகரில் வசிப்பவர்களாக இருத்தல் சாலச் சிறந்தது. குழு அமைத்தலை சுலபமாக்கும் வகயில் ஒரு கூகிள் ஃபார்ம் உருவாக்கி வைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரும், உங்கள் பெயர், ஈ.மடல், வசிக்கும் நகரத்தை, ஃபார்மில் பூர்த்தி செய்தால், உங்கள் நகரில் இருக்கும் மற்றவர்களுடன் குழு அமைக்க சுலபமாய் இருக்கும். (இதுவரை இணைந்துள்ளவர்களின் பெயர் பட்டியலை பார்க்க இங்கே சொடுக்கவும்)
எல்லாம் சரிதான், எங்க குழு எத்தனை படம் அனுப்பணும், எப்படி அனுப்பணும்?
மாதாந்திர போட்டிக்கு ஈ.மடல் செய்யச் சொல்வோம். இதுக்கு அப்படிப்பண்ணா சரிவராது. 'என் நகரம்' என்ற தலைப்பிருப்பதால், குறைந்த பட்சம் 50 படங்களாவது இருக்கணும். அதிகபட்சம், 120 படங்கள். படங்களை, அந்தந்த குழுவே ஒரு picasa album தயார் செய்து, அதில் படங்களைப் போட்டு, எங்களுக்கு ஆல்பத்தின் URLஐ தெரியப் படுத்தணும். ஆல்பத்தை share செய்து, அனைவருக்கும் படங்கள் தெரியும் வண்ணம் செய்யணும். ஒவ்வொரு படத்தின் கீழும், அந்த படத்தை எடுத்தவரின் பெயர், இடத்தின் பெயர், இடம் சார்ந்த மேல் விவரங்கள், EXIF, மற்ற விவரங்களையும் தரவும்.
எப்படி வெற்றி குழுவை தேர்ந்தெடுப்பீங்க?
PiT குழும உறுப்பினர்கள் நடுவர்களாக இருந்து, வெற்றி ஆல்பத்தை தேர்ந்தெடுப்போம்.
பரிசு கிரிசு உண்டா?
குழுவிற்கென தனிப் பரிசு இருக்காது. எவ்வளவு பேர் பங்குபெறுகிறார்கள், ஆல்பம் எப்படி உருப்பெறுகிறது, என்பதைப் பொறுத்து, வெற்றி பெறும் 'என் நகரம்' ஆல்பத்தில் உள்ள படங்களை, புத்தக வடிவில் (ஒரே ஒரு photo book மட்டுமே அச்சிடப்படும். புத்தகத்துக்கு வரவேற்பிருந்தால், மேலும் சில நகல்களை வெளிவரச் செய்ய முயற்சிக்கலாம் ) கொண்டு வரலாம் என்றிருக்கிறோம். புத்தகத்தை நம் பதிவர்/வாசகர் வட்டத்திலோ, வேறு மார்கத்திலோ, விற்கவும் முயற்சி செய்யப் படும். விற்று வரும் பணம், ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப் படும். புத்தக வடிவமாக வரும் என்பதால், ஒவ்வொரு படத்துக்கும், நான் மேலே சொன்னது போல், படத்தை எடுத்தவர்/எடுக்கப்பட்ட இடம் பற்றிய சுவாரஸ்யமான மேல் விவரங்கள் அளிப்பது மிக அவசியம்.
கடைசி தேதி எப்போ?

குழுவை சேர்க்கணும், 50 படத்துக்கு மேல தேடணும், எடுக்கணும் என்று பல வேலைகள் இருக்குமாதலால், இதற்கு மூன்று மாதம் ஒதுக்கலாம் என்று முடிவு. ஃபெப்ரவரி 28ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்படும். இந்த தேதிக்குள் எங்களுக்கு, உங்க குழு ஆல்பத்தின் URLஐ கொடுத்து விடவேண்டும். ஆல்பத்தில், உங்களின் நகரம் சார்ந்த அனைத்து படங்களும், தேவையான விவரங்களுடன் இருக்க வேண்டும்.

வேறு ஏதாவது சட்ட திட்டம் இருக்கா?
இப்போதைக்கு இவ்ளோதான். பரீட்சாதார முறையில், முதல் முறையாக, இதை முயல்வதால், சட்ட திட்டங்கள் அடிக்கடி கூட்டிக் கொறச்சு, இதை உந்த முயல்வோம்.
குழு அமைத்து, சிறப்பாய் செயல்பட வாழ்த்துக்கள். திரைக்குப் பின்னால் குழு அமைக்கும் வேலை செய்து, படங்களை ஸைலண்ட்டாய் ஏற்றாமல், குழுவில் ஒருவரோ பலரோ, மொத்த வேலைகளையும், பதிவாகப் போட்டு அவ்வப்பொழுது தகவல் பறப்பினால், இந்த குழுப் போட்டி மேலும் சிறப்பாய் அமையும். ஏதாவது புரியலைன்னாலோ, வேறு கேள்விகள் இருந்தாலோ, கேட்கவும். போட்டியின் போது, PiT குழுவைச் சேர்ந்தவர்கள், அவரவர்களின் நகர குழுக்களுக்கு, இயன்றவரையில் உதவ முயல்வோம். பி.கு: டிசம்பர் மாத மாதாந்திரப் போட்டிக்கு விடுமுறை. அடுத்த மாதாந்திரப் போட்டி ஜனவரி 2010ல் ஒரு 'நவீன' தலைப்புடன் வரும். PiT குழுவினர் பலரும் விடுமுறையில் உள்ளதாலும், வாசகர்களும் அவ்வாரே 'பிசி'யாக இருப்பார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த முடிவு. London: Tower Bridge, by surveysan 1894ல் கட்டப்பட்டது. தேம்ஸ் நதியின் மேல் அமைந்துள்ளது. Camera: Canon EOS Digital Rebel XTi Exposure: 0.125 sec (1/8) Aperture: f/4.5 Focal Length: 18 mm ISO Speed: 400 Tower Bridge, London Chicago: Navy Pier, by Nathas 1916ல் Lake Michiganஐ ஒட்டி கட்டப்பட்டது. Chicagoவின் மிகவும் ப்ரசித்திபெற்ற சுற்றுலாத் தலம்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff