Tuesday, March 31, 2015

அனைவருக்கும் வணக்கம், 

இந்த முறை எண்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் போட்டிக்கு வந்துள்ளன. அசத்திட்டீங்க நண்பர்களே! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! 

முதல் சுற்றுக்கு முன்னேறும் பத்து படங்கள். 
எந்த வரிசையின் படியும் அமையவில்லை.

# சித்ரா சுந்தர் 


# தீபன் சுபா 


# கார்த்திக் ராஜா


# மாஹே தங்கம் 


# பிரபு 

# ராஜ்குமார்


# பாரிவேல்


# மாஹிரன்


# வித்யாதரன்

# விஜய்

இறுதி முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். இந்தப் பத்தில் இடம்பெறாத படங்களுக்கு இந்த ஆல்பத்தில் குறை நிறைகளை நாளைக்குள் எழுதுகிறேன். 

Sunday, March 22, 2015

வணக்கம் பிட் மக்கா,


பொதுவாக  நம் படங்களை போட்டோஷாப் பில்டர்களைக்கொண்டு ஷார்பன் செய்யும்போது நமது படத்தில் அனைத்து பகுதிகளும் ஷார்பன் ஆகும். Lightroom அல்லது Camera Raw எடிட்டரில் படத்தை ஷார்பன் செய்யும்பொழுது இதனை மாஸ்கிங் ஆப்ஷன் பயன்படுத்தி நமது ஷார்பன் பகுதியை நாம் செலக்டிவ்வாக செய்துகொள்ளமுடியும்.

** 


ஆனால் போட்டோஷாப்பில் ஷார்பன் பில்டர்களைக்கொண்டு ஷார்பன் செய்யும்பொது படம்முழுவதுமாக ஷார்பன் செய்யப்படும் அவ்வாறு ஷார்பன் செய்யும்போது படத்தில் இருக்கும் Blur பகுதிகளும் பாதிக்கப்படும் இதனால்  Depth of Field பாதிக்கலாம்.மேலும் Sharpening Artifacts ஏற்படவும் சாத்தியமுள்ளது, எனவே நாம் Selective Sharpen செய்துகொள்வதன் மூலம் இந்த Sharpen Artifacts ஐ blur பகுதிகளில் தவிர்க்கலாம்.மேலும் படத்தின் பார்வை ஒருகுறிப்பிட்ட பகுதியில் பதியுமாறு செய்துகொள்ளலாம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் படத்தில் நாம் விரும்பும் பகுதிகளை மட்டும் ஷார்பன் செய்துகொள்வது எப்படி என்பதன் செயல்முறை விளக்கமே இக்கட்டுரையாகும்.


கீழேயுயிருக்கும் படத்தை பாருங்கள்,இதில் சிறுவனும் அவனைச்சுற்றி Blur பேக்கிரவுண்டும் இருக்கிறது. இப்போது இந்த படத்தை போட்டோஷாப் ஷார்பன் பில்டரைக்கொண்டு ஷார்பன் செய்கையில் என்னுடைய Blurபேக்கிரவுண்டும் சேர்ந்தே தான் ஷார்பன் ஆகும்.



ஆக எனக்கு இந்தப்படத்தை பொருத்தவரை எனக்கு சிறுவனின் முகம் மட்டும் ஷார்பன் செய்தால் போதும், Blur பேக்கிரவுண்டுகளில் எனக்கு Sharpen வேண்டாம் என நினைக்கிறேன்,இதற்கு நான் என்னுடைய ஷார்பன் ஏரியாவை செலக்டிவாகத்தான் செய்தாக வேண்டும் அல்லவா?

சரி போட்டோஷாப்பில் உங்களது படத்தை திற‌ந்துகொள்ளவும்.
போட்டோஷாப்பில் பொதுவாகவே நான் சிபாரிசு செய்வது
Non Destructive-Editing  தான் எனவே இதனை எப்படி Non-Destructiveவாக செய்வது எனவும் பார்க்கலாம்.

படத்தை போடோஷாப்பில் திறந்துகொண்டதும்,பேக்கிரவுண்டு லேயரை மவுஸால் வலது கிளிக் செய்து பின்னர் Convert to SmartObject என மாற்றிக்கொள்ளவும்.


இப்போது ஷார்பன் பில்டருக்கு செல்லும்முன்னர் ஒரு சின்ன விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் அதாவது போடோஷாப்பில் ஷார்பன் பில்டர்களில் Unsharp Mask,Smart Sharpen,High Pass பில்டர்கள் என வகை வகையாக இருந்தாலும் நான் பயன்படுத்துவது Smart Sharpen பில்டரைத்தான்.எனவே இதுதான் சிறந்த ஷார்பன் பில்டர் எனவும் நான் குறிப்பிடவில்லை,நான் பயன்படுத்துவது என்பதால் இக்கட்டுரையில் நான் Smart Sharpen பில்டரையே பயன்படுத்துகிறேன்,சரி கட்டுரையை தொடருவோம்.

இப்போது Filter>Sharpen>Smart Sharpen செல்லவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் Amount,Radius,Reduce Noise ஆகிய அனைத்தும் உங்களது தனிப்பட்ட ரசனையை பொருத்தது,எனினும் Radius 1லிருந்து1,5 க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும் இல்லையென்றால் படத்தில் Sharpening Halos வந்துவிடும்.அதேபோல Reduce என்பதில் Lens Blur பிற Blurகளைக்காட்டிலும் நல்ல பலன் தருகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.


சரி ஷார்பன் செய்தப்பின்னர் ஓகே செய்துகொள்ளவும்.இப்போது உங்களது படம் ஷார்ப்பன் செய்யப்பட்டிருக்கும்.இப்போது இந்த ஷார்ப்னஸை நாம் தேவையான இடத்தில் மட்டும் அப்ளை செய்துகொள்ளபோகிறோம்.
இப்போது லேயர் பேலட்டை பாருங்கள் உங்களது பேகிரவுண்டு லேயரின் கீழே நீங்கள் அப்ளை செய்திருந்த ஷார்பன் பில்டரானது தனி லேயராக தெரிகிறது அல்லவா? இப்போது நான் வட்டமிட்டு காட்டியிருக்கும் குறியை இருமுறை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் Blending Optionல் blend Modeஐ  Luminosityக்கும் அதன் Opacityயை 80% க்கு மாற்றிக்கொள்ளவும்.


சரி இப்போது நான் படத்தில் காட்டியதுபோல Smart Filter Maskகை ஒரு முறை கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளவும்.


இப்போது விசைப்பலகையில் CTRL+I அழுத்தவும் .
இப்போது உங்களது ஷார்பன் மறைக்கப்பட்டு படம் ரீசெட் செய்யப்பட்டிருக்கும் அதாவது பழைய நிலையில் ஷார்பன் இல்லாமல்.

சரி கடைசியாக உங்களது ஃபோர்கிரவுண்ட் நிறமாக வெள்ளை நிறத்தை தேர்வுசெய்துகொண்டு பின்னர் பிரஷ் டூலைக்கொண்டு நீங்கள் எந்த இடத்தில் பிரஷ் செய்கிறீர்களோ அந்த இடம் மட்டும் ஷார்ப்பாக மாறும்.


என்ன மக்கா கட்டுரை உபயோகமாக இருந்ததா....

குறிப்புகள் :

சரி ஏன் இந்த முறையை சிபாரிசு செய்கிறீர்கள்,இதற்கு பதிலாக பேக்கிரவுண்ட் லேயரை டூப்ளிகேட் செய்து பின்னர் ஷார்பன் பில்டரை பயன்படுத்தி ஷார்பன் செய்து பின்னர் லேயர் மாஸ்கை பயன்படுத்திக்கொள்ளலாமே ஏன் நித்தி இதற்கு இவ்வளவு பெரிய கட்டுரையை தந்திருக்கிறார் என போட்டோஷாப் தெரிந்தவர்கள் நினைக்கக்கூடும்.

Smart Filtersமுறையில் செய்யப்படும் ஷார்பன் செட்டிங்குகளில் ஏதாவது மாற்றம் தேவைப்படுகிறது என்றால் Smart filtersஐ இருமுறை கிளிக் செய்தால் போதும் நீங்கள் கொடுத்திருந்த மதிப்புகள் அப்படியே இருக்கும் அந்த மதிப்புகளில் என்ன மாற்றம் வேண்டுமென்றாலும் நீங்கள் எந்த நேரத்திலும் Edit செய்துகொள்ளலாம்.லேயர் மாஸ்க் முறையில் அவ்வாறு மதிப்புகளை நேரடியாக எடிட் செய்ய இயலாது என்பதால் தான் இந்த முறையை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

அன்புடன்,
நித்தி ஆனந்த்

Thursday, March 5, 2015

வணக்கம்,

இம்மாத போட்டித் தலைப்பு: Negative Space

எல்லா படங்களிலும் வெற்றிடங்கள் அல்லது தேவையில்லாத இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் இந்த வெற்றிடங்கள் ஒரு படம் தரும் உணர்வையே மாற்றி அமைத்துவிடும். ஒரு தேவையை உருவாக்கிவிடும்.

அச்சுத் தொழிலில் படங்களின் ஓரத்தில் எழுத்துக்களை சேர்ப்பதற்கும் இந்த வகையில் கட்டம் கட்டுவதை (கம்போஸ்  செய்வதை) கடைப்பிடிக்கிறார்கள்.

நீங்கள் எடுக்கும் படம் Minimalism ஆக கூட இருக்கலாம்.

அதாவது நீங்கள் செய்ய வேண்டியது... கருப்பொருளைச் சுற்றியிருக்கும், கவனத்தைக் கலைக்காத வெற்றிடத்தை சரியான வகையில் பயன்படுத்தி ஆஹா!சொல்ல வைக்க வேண்டும்

உங்களுக்கு எளிதாக புரிந்துகொள்வதற்கேற்ப கீழேயுள்ள படங்களுடன் அதற்கான காரணங்களும் செர்க்கப்படுள்ளன. மேலும் படங்களுக்கு இங்கே பாருங்க.

1) இந்தப் படத்தில் இருக்கும் வெற்றிடம், இந்தப் படகு செல்லும் திசையில் என்ன இருக்கிறது, மேலும் கடலின் பிரமாண்டத்தையும் நமக்கு உணர்த்துகிறது:

#Naufal MQ


2) இந்தப் படம் மினிமலிசத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிள்ளையாரின் சிலையைச் சுற்றியிருக்கும் வெற்றிடம் ஒரு அமைதியை நமக்கு கடத்துகிறது:

#Ramalakshmi

3) இந்தப் படத்தில் சப்ஜெக்ட் மேலே மூலையில் ஓரங்கட்டப்பட்டு அலைகளுக்கு இடம் ஒதுக்கி கப்பல் கரை தட்டியிருப்பதை காட்டுகிறது:

#Naufal MQ


4) இந்தப் படங்களில் சப்ஜெக்டின்  மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இடம் ஒதுக்கப்பட்டு சப்ஜெடின் மீது நமது கவனத்தை அழகாக ஈர்க்கிறது:

#Ramalakshmi

#


5) இதில் ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடம் மனிதன் இயற்கையின் பிரமாண்டத்தின் முன் சிறிய புள்ளிதான் என்பதை காட்டுவதாக உள்ளது:

#Naufal MQ

#

6) ரெட் சிக்னல் தான் இதில் சப்ஜெக்ட். பாதசாரிகள் கடந்து போகும் இடத்தை இதில் நெகடிவ் ஸ்பேசாக காட்டப்பட்டுள்ளது:

#Naufal MQ


நெகடிவ் ஸ்பேஸ்னா என்னன்னு இப்போ ஓரளவுக்கு புரிந்திருக்கும். மேலும் படங்களுக்கு இணையத்தில் தேடுங்க. கலக்கலான படங்களை எடுத்து போட்டிக்கு அனுப்புங்க. வாழ்த்துகள்!

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 20 மார்ச் 2015
***

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்:
https://picasaweb.google.com/111715139948564514448/201503#

Wednesday, March 4, 2015

வணக்கம் நண்பர்களே!

                வெற்றிபெற்ற படங்களைப் பார்க்குமுன் கவனத்தை ஈர்த்த படங்களைப் பார்ப்போம்.

சிறப்புக் கவனம் : நிவேதா




சிறப்புக் கவனம் : விவேக்



முதல் மூன்று இடங்களைப் பிடித்தப் படங்கள்:

மூன்றாம் இடம்: ராஜ்குமார்




இரண்டாம் இடம் : பிரபு



முதல் இடம்: அமுதா ஹரிஹரன்



 வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff