Friday, December 30, 2011

வெற்றி முத்திரை பெறும் படங்களைப் பற்றிப் பார்க்கும் முன் வெளியேறும் ஒரு சிலபடங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

# ராஜசேகரன்,
பச்சை நீரின் பின்னணியில் தட்டான்களைத் தெளிவாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.
ஆனால் டைட்டான க்ராபிங். கீழ் நோக்கி நகரும் தட்டானுக்கு இன்னும் சற்று இடம் கொடுத்திருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்.

# சூர்யா,
பச்சை இலைகளில் பளிச் சிகப்பு வண்டுகள். அருமை.
ஆனால் நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாச்சுரேஷன் கூட்டினீர்களா தெரியவில்லை. எப்போதுமே சிகப்பு இருக்கும் படங்களில் வண்ணங்களில் கைவைக்காமல் இருப்பது நல்லது. சிகப்பு லேசாக அதிகரித்தாலும் அப்பகுதியின் டீடெயில்ஸ் குறைந்து விடும். ஒருவேளை நீங்கள் எந்த அட்ஜஸ்ட்மெண்டும் செய்யவில்லையெனில், மன்னிக்க. என் பார்வைக்கு சிகப்பு அதிகப்படியாகத் தெரிகிறது.

# கடலை மிட்டாய்,
நல்ல முயற்சியாயினும் படத்தில் இரைச்சல் அதிகம்.


ஏனைய பிறரின் படங்களில் பெரிய குறைகள் இல்லையெனினும் அவற்றை விட கீழ்வரும் படங்கள் சிறப்பாக இருந்தபடியால் அவை விலகுகின்றன.

சிறப்புக்கவனம் பெறும் படங்கள்:

# ஜகன்,
அருமையான படம். கதவுக் கம்பிகள் மட்டுமின்றி சொட்டும் மழைத்துளியும் ஒன்றைப் போல் ஒன்றாக.

# கீழைராஸா,
இரட்டையர்களை வைத்துத் தலைப்புக்கு பொருத்தமாக எடுத்திருக்கிறீர்கள். அதையும் யோகாசன போஸில் கருப்பு வெள்ளையில் ப்ரசெண்ட் செய்திருக்கும் விதம் அருமை.


இருவருக்கும் வாழ்த்துகள்!

படங்களுக்குள் உங்கள் பெயர்களைப் போட்டிருப்பது மட்டும் உறுத்தல். எந்தப் போட்டிக்கானாலும் சரி, படங்களைக் கொடுக்கும் போது பெயர்களை ஓரமாகவோ அல்லது பார்டரிலோ இருக்குமாறோ பார்த்துக் கொள்வது நல்லது. இது அனைவருக்குமான ஒரு குறிப்பு.

சிறப்புக் கவனத்துடன் சிறப்புப் பாராட்டையும் பெறுகிற படம்
:

# மெர்வின் ஆன்டோ
ஸ்லோ ஷட்டர் ஸ்பீடில் இரட்டையராகத் தோன்றும் படத்தை நீங்களே எடுத்திருக்கிறீர்கள். ஒரே பிரேமில் குறிப்பிட்ட நொடிகளுக்குள் எடுக்கபட்டதென பிகாஸா ஆல்பத்தில் தெரிவித்தும் இருக்கிறீர்கள். இப்படியும் படங்கள் எடுக்கலாம் எனக் காட்டிய விதத்தில் அசத்தியிருக்கிறீர்கள்.
இருப்பினும் இடப்பக்கமிருக்கும் உங்கள் மேல் வெளிச்சம் மிக அதிகமாகி விட்டதால் முதல் மூன்றுக்குள் செல்லும் வாய்ப்பு தவறுகிறது.

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள்!

படத்தை எடுத்த விதத்தை இயலுமானால் கெஸ்ட் போஸ்டாக இங்கு பகிர்ந்து கொள்ளும்படி PiT கேட்டுக் கொள்ளுகிறது.

மூன்றாமிடம்:

# ஒளித்தச்சன்
அருமையான படம். பறக்கும் பறவைகளை நேர்த்தியாக, தெளிவாகப் படமாக்குவது அத்தனை எளிதல்ல. ஒன்றைப் போலவே ஒன்று. அதிலும் ஒன்றின் இறக்கைகள் மேல்நோக்கியும் ஒன்றின் இறக்கைகள் கீழ்நோக்கியுமாக பிரமாதமான டைமிங்கில் அமைந்து போன படம். மூன்றாம் இடத்துக்கான வெற்றி முத்திரையை பெறுகிறது இப்படம்:

இரண்டாம் இடம்:

# குசும்பன்,
அழகான லைட்டிங். காட்சி அமைப்புக்கு எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஒரு விளம்பரப் படத்தின் நேர்த்தியைப் பலனாகக் கொடுத்திருக்கிறது. வெற்றி முத்திரையை அழுத்தமாகப் பதித்தாயிற்று.


முதலாமிடம்:

# இளங்குமரன்,
சிறப்பான லைட்டிங்கும், இரண்டு முகமூடிகளையும் நிற்க வைத்து எடுத்திருக்கும் விதமும் க்ளாஸ்!!
வெற்றியாளர்களுக்கும், சிறப்புக்கவனம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

தேர்வு தனிப்பட்ட ரசனையில் அமைந்தவை. முதல் சுற்றுக்குத் தேர்வு செய்யவே சிரமமாக இருக்கும் வகையில் நல்ல நல்ல படங்களைத் தந்திருந்தனர் பலரும். உற்சாகமாகக் கலந்து கொண்ட உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. அடுத்த போட்டிக்கான அறிவிப்புடன் 2012-ல் சந்திக்கிறோம்.

வாசக நண்பர்களுக்கு PiT-ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Tuesday, December 27, 2011

போலரைஸ்ட் டிரக்ட் ரிப்லக்ஷன் வெளிச்சம்..

இதுல எப்பவுமே படம் பொருளை விட வெளிச்சம் கம்மியாத்தான் வரும். ஏன்னு புரிய போலரைஸ்ட் வெளிச்சம் பத்தி புரியணும்.

ஒளி துகளா இல்லை அலையான்னு பெரிய சர்ச்சை பல நாட்கள் இருந்தது. அப்புறம் அது ரெண்டுமாவும் இருக்கும்ன்னு ஒத்துகிட்டாங்க! எந்த அலை போகும் திசைக்கு செங்குத்தா அதிருமோ அது போலரைஸ் ஆகும்.

ஒலி அப்படி இல்லை, அது போகும் திசையிலேதான் அதிருது. அதனால அது போலரைஸ் ஆகாது!

மேலே இது பத்தி படிக்கிற ஆர்வம் இருந்தா இங்கே போய் படிக்கலாம்: http://en.wikipedia.org/wiki/Polarised_light#Photography

ரெண்டு பசங்க ஒரு கயிறை வெச்சுச்கொண்டு விளையாடறாங்க. ஒரு பையன் கயித்தை சும்மா பிடிச்சுகிட்டு இருக்கான். இன்னொருவன் அதை சுழற்றிக்கிட்டே இருக்கான்.
கயிறு சுருள் சுருளா இருக்கிறதை பார்க்கலாம். இப்ப இவங்க நடுவில ஒரு கேட் இருக்கு. கேட்ல செங்குத்தா சட்டங்கள் இருக்கு. என்ன ஆகும்? கயிறு பக்க வாட்டிலே ஆடுறது கேட்டை தாண்டி நின்னுடும். மேலே கீழே மட்டும் கயிறு போய் வரும். குறுக்கு சட்டங்களும் இருந்தா? மேலே கீழே ஆடுவதும் நின்னுடும்.

இதே போல போலரைஸ்ட் வெளிச்சமும்.

முதல்ல போலரைஸ்ட் பில்டர் பத்தி பார்க்கலாம். ஒரு பில்டர் வழியா ஒரு பொருளை பார்க்க பில்டர் ஒரு திசையில் அதிரும் வெளிச்சத்தை மட்டும் அதன் வழியா அனுப்பும். மற்ற திசைகளில வரதை அனுப்பாம பிடிச்சு வெச்சுக்கும். இன்னொரு பில்டரை அதன் மேலே 90 டிகிரில வெச்சா ஒரு வெளிச்சமும் வராது. இது சட்டங்கள் வழியே கயிறு ஆடுகிறா மாதிரிதான். இருக்கட்டுமே, என்ன இப்ப? நான் இப்படி பில்டர் எல்லாம் உபயோகப்படுத்த மாட்டேன் னு சொன்னா... இயற்கையிலேயே சிலது இப்படிப்பட்ட வெளிச்சத்தை ரிப்லக்ட் பண்ணுது!

ஒரு ஏரி தண்ணீர் பரப்பு, பெயின்ட் பண்ண உலோகம், பிளாஸ்டிக் – இதெல்லாமே இப்படி செய்யக்கூடும்! நாம எடுத்த ஏரித்தண்ணீர் பரப்பு ஏன் டல்லடிக்குதுன்னு இப்ப தெரியுதா? (இதனாலேயோ என்னவோ வலையில உதாரணம் காட்ட படம் தேடினா கிடைக்கலை!)

எல்லா ரிப்லக்ஷன் மாதிரி இந்த போலரைஸ்ட் ரிப்லக்ஷனும் பெர்பெக்ட் இல்லை. கொஞ்சம் டிப்யூஸ் ரிப்லக்ஷன், கொஞ்சம் போலரைஸ் ஆகாத ரிப்லக்ஷன் எல்லாமும் இருக்கும். பளபள பரப்புகள் அதிக போலரைஸ்ட் ரிப்லக்ஷன் கொடுக்கும். அதுக்குன்னு சொர சொர பரப்பு கொடுக்காதுன்னு இல்லை.

பொருள் கருப்பாவோ இல்லை ஒளி ஊடுருவறதா இருந்தாலோ போலரைசெஷன் அதிகமா இருக்கும். பளபள கருப்பு பிளாஸ்டிக் ஷீட் போலரைஸ்ட் வெளிச்சத்துக்கு நல்ல உதாரணம். இது புரிஞ்சா நாம் தேவையானா பில்டரை சரியா பயன்படுத்த முடியும்.

போலரைஸ் ஆன டைரக்ட் ரிப்லக்ஷனும் போலரைஸ் ஆகாத டைரக்ட் ரிப்லக்ஷனும் ஒரே மாதிரி கூட தெரியலாம். போட்டோ எடுக்கிரவங்க பின்ன எப்படி வித்தியாசம் கண்டு பிடிக்கிரதுன்னு கேட்கலாம். முக்கியமான வித்தியாசம் போலரைஸ் ஆனது வெளிச்சம் குறைவா இருக்கும் என்கிறது. பொருள் மின்கடத்தியா இருந்தா அது போலரைஸ்ட் ரிப்லக்ஷனா இருக்காது. பொருள் மின் கடத்தாத இன்சுலேஷன் சமாசாரம்ன்னா அது போலரைஸ்ட் ஆ இருக்கும்.

உதாரணமா பிளாஸ்டிக், செராமிக், கண்ணாடி...
images black plastic ன்னு வலையில தேடி பாருங்க. எல்லாமே எவ்வளோ டல் அடிக்குதுன்னு தெரியும்!
சும்மா ஒரு உதாரணத்துக்கு:

பொருள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி தெரிஞ்சா அது சாதா டைரக்ட் ரிப்லக்ஷன்.
பளபளப்பான பொருள் ஆனா முகம் பார்க்கிற மாதிரி இல்லை.... ம்ம்ம் பாலிஷ் பண்ண தோல், மரம் ... இது கொஞ்சம் தமாஷ்! காமிரா இதை ஒரு 40-50டிகிரி கோணத்துல பாத்தா அது போலரைஸ்டா இருக்கும்! மத்த கோணங்களில போலரைஸ் ஆகாத டிரக்ட் ரிப்லக்ஷன்! நிச்சயமான வழி போலரைஸ்ட் பில்டரை உபயோகிச்சு பாக்கிறது. வித்தியாசம் இல்லைன்னா அது போலரைஸ்ட் இல்லை.
முழுக்க பாலிஷ் செய்த ஷூ! பளபளப்பா தெரிவது டிரக்ட் ரிப்லக்ஷன். கோணம் மாறியதால டல்லா தெரியறது போலரைஸ்ட்!

வெளிச்சமே இல்லாம போச்சுன்னா அது போலரைஸ்ட்; வெளிச்சம் குறைஞ்சா அது போலரைஸ்ட் ப்ளஸ் போலரைஸ்ட் இல்லாத கலவை.

சிலர் வெளிச்சம் போலரைஸ்டா இருக்கணும், அதை உபயோகிச்சு தான் நினைத்தபடி படம் எடுக்கனும்ன்னு விரும்பலாம். அதுக்கு லென்ஸ் மேலே வைக்கிற பில்டரை நம்பி பிரயோசனம் இல்லை. அது வர வெளிச்சத்தைதானே மாத்தமுடியும்? பில்டரை வெளிச்சத்தின் மூலத்தில வைக்கலாம். இதன் வழியா வெளிச்சம் போய் பொருள் மேலே விழும் போது அது போலரைஸ் ஆகி இருக்கும். இதை லென்ஸ் மேலே வைக்கிற பில்டர் மாத்தும். ஆச்சரியமான விஷயம் என்னான்னா போலரைஸ்ட் வெளிச்ச மூலம் ஸ்டுடியோல மட்டும் இல்லை. இயற்கையாவே கிடைக்குது! மேகமே இல்லாத திறந்த வானம் அருமையான போலரைஸ்ட் ஒளி மூலம். வானம்ன்னு ஒண்ணுமே நிஜமா இல்லைதானே? அது ஒரு மாய தோற்றம். விண்வெளியில சிதறுகிற வெளிச்சம் இப்படி தெரிகிறது. அதனால இது ஒரு ஒளி மூலமா இருக்கிறது ஆச்சரியம் இல்லை. இப்படிப்பட்ட வானத்தை நோக்கி வைக்கிற பொருளை படம் எடுக்கும்போது போலரைஸ்ட் லைட் பில்டர் வேலை செய்யலாம்.

வலது பக்கம் போலரைஸ்ட் பில்டர் போட்டு எடுத்த படம். நன்றி: விக்கிமீடியா

தியரியை செயல்படுத்த...

நல்ல படப்பிடிப்பு காமிராவை சரியா போகஸ் செய்து சரியா எக்ஸ்போஸ் செய்யறது இல்லை. வெளிச்சத்துக்கும் படம் எடுக்கிற பொருளுக்கு ஒரு உறவு இருக்கு. இது சரியா அமையனும். நம்ம வாழ்க்கை போலவே! மேட் பார் ஈச் அதர். பொருளுக்கு தகுந்த வெளிச்சம் , வெளிச்சத்துக்கு தகுந்த சப்ஜெக்ட்! இந்த பொருத்தம் என்கிறது ஆளுக்கு ஆள் வேறுபடும். அது போட்டோக்ராபரோட கலைநயம். ஒளியையும் அது பொருட்களை எப்படி பாதிக்குது என்றும் அவர் சரியா புரிஞ்சு கொண்டு இருந்தார்ன்னா அது நல்லாவே அமையும்.
போட்டோ என்கிறது ரிப்லக்ஷனோட ஒரு பதிவு என்கிறதால எந்த மாதிரி ரிப்லக்ஷன் இந்த பொருளுக்கு வேணும்ன்னு முடிவு செய்து அதை சாதிக்கணும். ஸ்டூடியோ ன்னா இது ஒளியை சரி செய்வது. இல்லை வெளியே இயற்கையா எடுக்கறதுன்னா கொஞ்சம் பிரச்சினைதான். காமிராவை சரியான இடம் பாத்து வைக்கணும். சரியான நேரத்துக்கு காத்து இருக்கனும். சூரியன் வெளியே வருமா? மேகங்கள் இருக்கா? அது கருப்பா வெள்ளையா? இப்படி பல கேள்விகளுக்கு சரியான விடை வேணும். நம்ம வீட்டு எதிரே இருக்கிற பூங்காவில் இருக்கிற சிலைன்னா இப்படி நாள் கணக்கில காத்து இருக்கலாம். எப்பவும் சாத்தியப்படுமா? இது கஷ்டம்தான். அதனால் இருக்கிற ஒளி எப்படி இருக்கு, அது என்ன செய்ய முடியும்ன்னு கவனிக்கறவங்க நல்ல போட்டோ எடுக்கலாம்.




காரமுந்திரி I.
காரமுந்திரி II

Friday, December 23, 2011

‘இவனைப் போல் இவன், பாருங்கள்’ என எழுபத்தைந்து பேர்கள் உற்சாகமாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தீர்கள். பலரும் மிக அருமையான படங்களைத் தந்திருந்தீர்கள். அவற்றில் முதல் சுற்றுக்குப் பத்தாக இல்லாமல் பதினைந்தை அழைத்து வந்துள்ளோம். (படங்கள் வரிசைப்படியானவை அல்ல).

# கீழைராஸா


# ஷ்ரவ்யன்


# ஒளித்தச்சன்


# குசும்பன்


# மெர்வின் ஆன்டோ


# தருமி


# இளங்குமரன்


# ராஜசேகரன்


# R கனிமொழி


# ஸ்வர்ணராஜன்


# கார்த்தி


# கடலை மிட்டாய்


# Chan


# ஜகன்


# R N சூர்யா


பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்!

முதன்முறையாகக் கலந்து கொண்ட சிலரது முயற்சிகளும் நன்றாக இருந்தன. தொடர்ந்த பங்கேற்பில் இன்னும் சிறப்பாக எடுக்க ஆரம்பிப்பீர்கள் என்பதில் PiT-க்கு நம்பிக்கை உண்டு. எங்கள் நோக்கமே ‘ஆர்வம் அணையாமல் தொடர்ந்து நண்பர்கள் படங்கள் எடுக்க வேண்டும். நுணுக்கங்கள் கற்று தேர்ச்சி பெற வேண்டும்’ என்பதே. ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களிலிருந்து மட்டுமின்றி பங்கு பெறும் படங்களிலிருந்தும் அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் நிறைய பாடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம். தொடர்ந்து எடுத்துப் பழகுவோம்.

இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திக்கிறோம்.

நண்பர்களுக்கு PiT-ன் கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!
***

Tuesday, December 20, 2011

அனைவருக்கும் வணக்கமுங்க.  ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறோம் இல்லீங்களா ?


என் கிட்ட பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரா தான் இருக்கு நல்ல ஜூம் இல்லை... என்னால நிலாவை எல்லாம் எடுக்க முடியுமான்னு கவலைப் படறவங்களா நீங்க... நான் வழக்கமா சொல்றது தாங்க. பென்சில் எது இருந்தாலும், அது நல்ல ஓவியங்களை தானா வரைவது இல்லை. அது யார் கையில் இருக்கிறது, அது  எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதில் தான் விஷயமே இருக்கிறது.

சரி இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்.  மேலே தொடர்ந்து  படிங்க


இதுல ஆர்ச்சோட ட்யூப்லைட்டும் தெரியுற படம் இருக்கே அது ஜூம் இல்லாமலே அப்படியே எடுத்தது.









ட்யூப்லைட் பக்கத்துல இருக்கிறது 4 எக்ஸ் ஜூமோட எடுத்தது. சரிங்களா.











சரி. இப்ப வீட்ல பசங்க விளையாட வச்சிருப்பாங்களே பைனாகுலர் .. அதை சுட்டுக்கோங்க. அதன் ஒரு பகுதிய கேமராவோட விரிந்து நீளும் பகுதிமேல் இணைச்சு பிடிச்சுக்கோங்க. ஆச்சா.. இப்ப அப்படியே பாத்தீங்கண்ணா... வட்டமா நடுவில 11:35 காமிக்கிற படம் ஜூம் எதுவும் இல்லாம + பைனாகுலர் அட்டாச் பண்ணது.






10,9,8 அப்படின்னு நம்பர் காமிச்சுட்டு இருக்கிற படம் - 2 எக்ஸ் ஜூம்+பைனா குலர்ல எடுத்தது.








வெறும் கடிகாரத்தின் கைகள் மட்டும் காமிக்கிற படம் இருக்கில்லையா அது 4 எக்ஸ் ஜூம்ல + பைனாகுலர் அட்டாச்மெண்ட்டோட எடுத்தது.

இதோட ஜூம் அளவு என்னன்னு தெரியுமா? அப்ராக்ஸிமேட்டா 400 எம் எம் கணக்கு. :)








நான் நிலவை எடுத்தது 300 எம் எம் அளவு. http://www.flickr.com/photos/iyappan/6482039409/



முக்கியக் குறிப்பு. எஸ்.எல்.ஆர் அளவுக்கு அதே தரம் கிடைக்காதுன்னாலும் ஏற்கக் கூடிய தரத்தில் கிடைக்கும். அதை விட முக்கியமா படம் எடுக்கும் போது கை கொஞ்சம் அசங்கினாலே ப்ளர்ராகிடும். கடைசி படம் ( கடிகாரத்தின் கைகள் மட்டும் கொண்டது ) அதற்கு உதாரணம். கொஞ்சம் நல்ல குவாலிட்டி வேணும்னா 150 - 200 க்கு கிடைக்கும் பைனாகுலர் பர்மா பஜார்ல தேடி வாங்குங்க. ப்ளாஸ்டிக் லென்ஸ் இல்லாம கண்ணாடி லென்ஸா இருக்கும். குவாலிட்டியும் நல்லா வரும்.


இப்ப சொல்லுங்க. பாயிண்ட் அண்ட் ஷூட் வச்சும் நீங்க பட்டைய கிளப்ப முடியுமா முடியாதா ?

கருப்பு வெள்ளை -எளிய முறை. படத்தை கிம்பில் திறவுங்கள். முன்ணணி வண்ணம் கருப்பாக இருக்குமாறுபார்த்துக்கொள்ளுங்கள்  
  

ஒரு புதிய லேயரை திறந்து அதை கருப்பு வண்ணத்தால் நிரப்புங்கள்.  


இனி Layer Mode ->  Color ஆக மாற்றுங்கள் 
 


பின்ணணி லேயரை தெரிவு செய்து பின் Colors-> curves  தேர்வு செய்யுங்கள். 




உங்களின் இரசனைக்கு ஏற்ப இங்கே(Value, Red, Green Blue )  மாற்றிப்பாருங்கள்.






இந்த இடுகையில் சில குறிப்புகள் உங்களுக்கு தேவைப்படலாம். 




Monday, December 5, 2011

அடுத்து டிரக்ட் ரிஃப்லெக்ஷன்.

ம்ம்ம்ம்ம் ஒளியை ரிஃப்லெக்ட் செய்யறது பேப்பருக்கு பதில் ஒரு பிரதிபலிக்கிற கண்ணாடின்னு வெச்சுக்கலாம்.

ஒளி மூலம் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒரு இடத்தில இருக்கிற காமிராதான் அதை பார்க்கும். மற்ற இடங்களில வைக்கிற காமிராக்கள் பார்க்கா.

திருப்பியும் ஸயன்ஸ்_க்கு போக எந்த கோணத்தில ஒளி கண்ணாடியை தாக்குதோ அதே கோணத்துல அது திருப்பி விடப்படும். அதனால டிரக்ட் ரிஃப்லெக்ஷன் பார்க்கப்படுமா என்கிறது ஒளி மூலம், பொருள், காமிரா பார்க்கிற இடங்கள் இவை இருக்கிற கோணங்களை பொறுத்தது. கீழே இருக்கிற படத்தில காமிரா 1&2 நேரடியா விளக்கை பார்க்கா. காமிரா  3 பார்க்கும்!

ஒளி ரிஃப்லெக்ட் ஆகிற கோணத்துல இருக்கிற காமிரா ஒளி மூலத்தையே - அதாவது அதன் வெளிச்சத்தை அதே அளவே பார்க்கணும்.

மற்ற இடங்களில இருக்கிற காமிராக்கள் இந்த ஒளியை பார்க்க முடியாது இல்லையா? அதனால அது கருப்பாகவே பார்க்கும்.

{ஆனால் இப்படி உண்மையில நடக்கிறதில்லை. ஏன்னு யோசியுங்க! பதில பின்னூட்டமா கொடுங்க.}

இந்த கண்ணாடி மாதிரியே பாலிஷ் பண்ண உலோகம், தண்ணீர் எல்லாம் நடந்துக்கும்!

"ஒளி மூலத்தையே - அதாவது அதன் வெளிச்சத்தை அதே அளவே பார்க்கணும்.” இதை படிச்சப்ப கொஞ்சம் சந்தேகம் வந்ததா?

"நெசமாவா? அதே அளவு வெளிச்சத்தைப் பார்க்கும்? எவ்வளோ தூரம் ஆனாலுமா? இப்பதானே இன்வர்ஸ் லா_ன்னு படிச்சோம்? தூரம் அதிகமாக இருந்தாலுமா?

ஆமாம். ஒரு சின்ன சோதனையில சந்தேகத்தை நீக்கிக்கலாம். ஸ்கூல்ல விளையாட்டு பசங்க கண்ணாடியை பயன்படுத்தி நம்ம கண்ணில சூரிய வெளிச்சத்தை அடிச்சது நினைவிருக்கா? அப்ப சூரியன் அளவு வெளிச்சத்தைதானே பார்த்தோம்? ஆனா சூரியன் எவ்வளோ தூரத்தில இருக்கு? :-))

கிடக்கட்டும்.

ஒரு விளக்கை தூரத்தில வெச்சு காமிராவால கண்ணாடில ரிப்லெக்ஷனை பார்க்கலாம். அதையே பாதி தூரத்துக்கு கொண்டு வந்தும் பார்க்கலாம். படத்துல வெளிச்சம் அதேதான் இருக்கும். ஆனா விளக்கோட சைஸ் -அளவு- அதிகமாயிடுத்து!

இரண்டு மடங்கு வெண்ணையை இரண்டு மடங்கு ப்ரெட் ஸ்லைஸ் மேலே தடவற மாதிரிதான். வெண்ணை திக்னஸ் மாறாது! ஒளியோட மொத்த அளவு மாறலை. ஆனா அது பரவின இடம் அதிகமானதால முன்னே இருந்த வெளிச்சமே இருக்கு!

எதுக்கு இதை தெரிஞ்சுக்கணும்?

டிரக்ட் ரிப்லெக்ஷன் ல ஒளி மூலத்தை பார்க்க முடிவதால அது கிட்டே வந்தா எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்ய முடியும். அதனால பாலிஷ் பண்ண பொருட்கள் எவ்வளவு ஹைலைடோட தெரியணும்ன்னு திட்டம் போட்டு ஒளி மூலத்தை அமைக்கலாம்.

இது வரைக்கு கோணம்_ன்னு ஒருமையிலேயே பேசிகிட்டு இருந்தோம். ஆனால் ஒளி மூலத்தைப் பொறுத்து இது ஒருமையா இல்லாம போகலாம். ஒரு பெரிய ஒளி மூலமா இருந்து கிட்டேயும் இருந்தா ஒளி ரிப்லக்ட் ஆகிறது ஒரே ஒரு கோணமா இராது. ஒரு கொத்து கோணங்களா இருக்கும். இதை "பாமிலி ஆஃப் ஆங்கிள்ஸ்" என்கிறாங்க. ஏன் இப்படி?

ரிஃப்லக்ட் பண்ணுகிற பரப்பு ஒரு சின்ன துகள் இல்லை. பல துகள்கள் கொண்ட பரப்பு. ஒவ்வொரு துகளும் ஒளியை ப்ரதிபலிக்கும் இல்லையா? வெகு தூரத்தில இருக்கிற சூரியன்னா ஒண்ணும் பிரச்சினை இராது. ஆனா கிட்டே இருக்கிற ஒளி மூலத்தை இவை ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்துல பார்க்கிற வாய்ப்பு இருக்கு. அப்ப திருப்பப்படுகிற ஒளி வெவ்வேறு கோணத்தில இருக்கும். அதனால காமிராவால இதை பார்க்கக்கூடிய இடம் ஒரு சின்ன அளவா இல்லாம பெரிசாக ஆயிடும்.

இந்தக் கோண கொத்து போட்டோகிராபர்களுக்கு மிக முக்கியம்.

யாரும் ஒரு பொருளை நல்லாப் பார்க்க நாம் போடுகிற விளக்கு போட்டோவில வரதை விரும்ப மாட்டோம். அல்லது ஒரு நல்ல வெளிச்சம் தருகிற ஜன்னல், கதவு இது போல இருக்கிறதெல்லாம் படத்தில வரதை விரும்ப மாட்டோம். அதே போல பாலிஷ் பண்ண உலோகம், கண்ணாடி மாதிரி சமாசாரம் எல்லாம் படத்தில இருக்கப்போகிறதுன்னா நம்ம காமிராவுக்கு அதிலேந்து பிரதிபலிச்சு வெளிச்சம் வருமா? அதை எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம்_ன்னு எல்லாம் யோசனை செய்யணும்.

From reflection


நாம படம் எடுக்கிற பொருளுக்கும் ஒளி மூலத்துக்கும் இருக்கிற கோணம் தெரியும் என்கிறதால காமிரா இந்த கோண கொத்துக்குள்ளே வராதுன்னா தைரியமா படம் எடுக்கலாம். இதையே வேற மாதிரியும் யோசனை பண்ணலாம்,
காமிரா இந்தப் பள பள பொருளைப் பார்க்கிற கோணம் இருக்கு இல்லையா? அதை வெச்சு அதோட பிரதிபலிப்பு கோணங்கள்குள்ள ஒளி மூலம் இருக்கான்னும் பார்க்கலாம்.

போட்டோ எடுக்கும்போது சில சமயம் ஒரு பளபளப்பான பொருள் முழுதும் பளபளப்பு தெரியணும்ன்னு விரும்பலாம். அப்ப ஒளி மூலம் பெரிசா இருக்கும் படி பாத்துக்கணும். அப்பதான் கோணக்கொத்து பெரிசா இருக்கும்.


மற்ற சமயங்களில டிரக்ட் ரிப்லக்ஷனே இருக்கக்கூடாதுன்னு நினைக்கலாம். அப்படிப்பட்ட சமயம் காமிராவோட பார்வையில கோணக்கொத்தில ஒளி மூலம் இல்லாம பாத்துக்கணும்.

--


காரமுந்திரி I.
காரமுந்திரி II

Thursday, December 1, 2011

இரட்டை. ஆனா ஒரே மாதிரியான ரெண்டு.

ட்வின்ஸ். ஆமா, ஒண்ணைப் போல ஒண்ணு.

இப்பப் புரிஞ்சிருக்குமே தலைப்பு? ‘உன்னைப் போல் ஒருவன்’:)!

மூணு வருஷம் முன்னே ‘ஜோடி’ன்னு ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். ரெண்டு வேற வேற விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலியாக் கை கோத்துக்கலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சுல வார்த்த மாதிரி இல்லேன்னாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ன்னு சொல்லும்படியா இருக்கணும்.

படத்தில் இரட்டையரே பிரதானமா இருக்கணும்.

ஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோட சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாம இயல்பான இரட்டையரா இருக்க வேண்டியதும் அவசியம்.

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

# 1 ராமலக்ஷ்மி


# 2 ராமலக்ஷ்மி


# 3 ராமலக்ஷ்மி


# 4 ராமலக்ஷ்மி


# 5

# 6 ஜீவ்ஸ்


# 7 சர்வேசன்


# 8 கருவாயன்


கோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்க ஆவலாய்க் காத்திருக்கிறோம்.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.

போட்டி விதிமுறைகள் இங்கே.

[பி.கு: ஒவ்வொரு மாதமும் உங்களில் சிலர் படங்களை மின்னஞ்சலில் சேமிப்பாகியிருக்கும் பழைய போட்டி ஐடிக்கே சமர்ப்பித்து வருகிறீர்கள். ஐடி மாற்றமாகிப் பலமாதங்கள் ஆகிவிட்டன. திருத்தம் செய்து கொள்ளுங்கள்.]
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff